News
உங்களது வாழ்க்கை வளம் பெற வேண்டும் – அமைச்சர் றிஷாத்
இர்ஷாத் றஹ்மத்துல்லா வடக்கில் நலிவுற்றிருக்கும் யுவதிகளின் வாழ்வாதார மேம்பாட்டுகளுக்காக எமது அமைச்சின் கீழ் இலவச தையல் பயிற்சிகளை வழங்குவதாக தெரிவித்துள்ள கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் இவ்வாறான பயிற்சிகளை கற்பதற்கு பெறும் தொகை பணத்தினை செலவழித்து செல்வதை காணமுடிவதாகவும் கூறினார். மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பெரியமடு கிராமத்த்தில் யுவதிகளுக்கான தையல் தையல் பயிற்சி நிலையத்தினை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார். இந்த…
போர் வெற்றியைக் காட்டி குற்றமிழைத்தவர்கள் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது: சோபித தேரர்
இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் உண்மை நிலை கண்டறியப்பட வேண்டியது அவசியம். போர் வெற்றிகளைக் காரணம் காட்டி குற்றமிழைத்தவர்கள் எவரும் தண்டனைகளிலிருந்து தப்பிப்பதற்கு இடமளிக்கக் கூடாது என்று சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும், கோட்டை நாக விகாரையின் விகாராதிபதியுமான மாதுளுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார். பாப்பரசர் முதற்கொண்டு உலகத் தலைவர்கள் பலரும் உண்மையைக் கண்டறிய வேண்டும் என தெரிவித்த கருத்துடன் தான் உடன்படுவதாகத் கூறிய சோபித தேரர், மறைப்பதற்கு இவ்விடயத்தில் ஏதுமில்லையல்லவா? என்று…
ஒபாமா எந்த மதம்?- ஆய்வால் அமெரிக்க அரசியலில் சலசலப்பு
அமெரிக்க அதிபர் ஒபாமா எந்த மதத்தைச் சேர்ந்தவர்? என்று கேள்வியை எழுப்பிய ஆய்வின் முடிவால் அமெரிக்க அரசியலில் பெரும் சலசலப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையில் வெளிவந்த செய்தியின் விவரம்: அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அலெக்ஸ் தியோடாரிடிஸ் தனது முனைவர் பட்டத்துக்காக, அமெரிக்க செனட்சபை தேர்தல் குறித்த ஆய்வை தொடங்கினார். அதில் ஒரு கட்டமாக அமெரிக்க அதிபர் ஒபாமா எந்த மதத்தைச் சேர்ந்தவர்? என்ற கேள்வியை பலதரப்பட்ட அமெரிக்கர்களிடம்…
குப்பை பிரச்சினையை தீர்த்து கொழும்பை அழகுபடுத்திய கோத்தபாயவிற்கு நன்றி: ஏ.ஜே.எம் முஸம்மில்
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு கொழும்பு நகர அபிவிருத்திக்காக வழங்கிய ஆதரவிற்காக அவருக்கு நகரசபை சார்பில் அவருக்கு பாராட்டுக்கள் வழங்க வேண்டும் என கொழும்பு நகர முதல்வர் ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற நகரசபையின் மாதாந்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். கொழும்பு நகரத்தில் காணப்பட்ட மெட்ரிக்டொன் அளவான குப்பைகளை அகற்றி குப்பை பிரச்சினையை முழுமையாக தீர்த்து வைத்ததன் காரணமாக இன்று கொழும்பு நகரம் அழகுடன் காணப்படுகின்றது. அது நகர…
இனவாத கருத்துக்களை வெளியிடுபவர்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கவும் ! பிரதமரிடம் பைரூஸ் ஹாஜியார்
அஸ்ரப் ஏ சமத் கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள தொடர்பாக முறையான விசாரணை ஒன்றை அரசு நடந்த வேண்டும் என மேல் மாகாண சபை உறுப்பினர் மற்றும் மத்திய கொழும்பு ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளருமான பைரூஸ் ஹாஜியார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களிடத்தில் கடிதம் ஒன்றின் மூலம் விஷேட வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். குறிப்பாக அளுத்கம பேருவளை சம்பவங்களின் போது முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றின் மூலம்…
அமைச்சர் சஜித் பிரேமதாசாவிடம் செல்லுங்கள் – ஹக்கீம் ; அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் செல்லுங்கள் -சஜித்
அஸ்ரப் ஏ சமத் கொழும்பில் வாழும் ஆயிரக்கணக்கான தமிழ் முஸ்லீம் பெண்கள் ஒவ்வொரு புதன்கிழமையிலும் அமைச்சுக்களின் படிகளேறி சீரழிகின்றனர் கொழும்பில் அரசாங்கத்தினால் வழங்கும் வீடொன்றை பெற்றுக்கொள்வதற்காகவும், அல்லது தனது பிள்ளையை அரச பாடசாலையில் சேர்த்துக்கொள்வதற்காக அமைச்சுக்களின் படிகள் ஏறி ஏறி வரிசையில் காத்து நின்கின்றனர். ஆனால் இந்தப் பெண்களின் கனவன்மார்கள் தமது மனைவிமார்களை அமைச்சுக்களுக்கு அனுப்பி சீரழியவைத்து விட்டு அவர்கள் வீடுகளில் அல்லது வியாபாரத்தில் தங்கி நிற்கின்றனர். இந்தப்பெண்கள், வரிசையில் மணித்தியாலயக்ககணக்கில் சிலர் காத்துநிற்கின்றனர். சிலர் கைக்குழந்தைகளுடன்…
படையினர் வசம் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் வடக்கு கிழக்கு, மாவட்ட அபிவிருத்திக் கூட்டங்களில் ஜனாதிபதி
அஸ்ரப் ஏ சமத் எதிர்வரும் மார்ச் 3ஆம் திகதி யாழ்ப்பாண கச்சேரி மற்றும் 9ஆம் திகதி திருகோணமலையில் நடைபெறவுள்ள மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தலைமையில் நடைபெறவுள்ளது. கடந்த ஜனாதிதபதித் தேர்தலின்போது 70 வீதமான வடகிழக்கு மக்கள் மைத்திரிபால சிறிசேனாவுக்கு வாக்களித்திருந்ததாகவும் அரசின் ஊடகப் பேச்சாளர் அமைச்சர் ராஜித்த சேனாரத்தின தெரிவித்தார். வட கிழக்குபிரதேசங்களில் வாழும் மக்களது தனியார் காணிகளை அங்கு நிலை கொண்டுள்ள படையினர் வசம் இருக்கும் காணிகளை விடுவிப்பது சம்பந்தமாகவும்…
மன்னார் பெரியகரிசலுக்கான மின் விநியோகத்தை கைத்தொழில்.,வணிகத் துறை அமைச்சர் றிஷாத் பதியுதீன் ஆரம்பித்து வைத்தார்….
மின்சாரமற்ற அனைவருக்கும் மின்சாரத்தை வழங்கும் அரசின் திட்டத்தின் கீழ் மன்னார் பெரியகரிசலுக்கான மின் விநியோகத்தை கைத்தொழில்.,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் ஆரம்பித்து வைத்தார். மன்னார் –தலைமன்னார் பிரதான வீதி அருகில் அமைந்துள்ள கரிசல் கிராம மக்களின் நலன் கருதி இந்த மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முழு நாடும் ஒளி பெறுகிறது என்ற வேலைத்திட்டத்தின் கீழ் ,வடக்கின் வசந்தம் மின்சார திட்டத்தின் மூலம் இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. தற்போது மன்னார் மாவட்டத்தில்…
இரண்டு மணி நேரத்துக்கு மேலாக TV பார்த்தால் ரத்த கொதிப்பு அதிகரிக்கும் -ஆய்வில் தகவல்
குழந்தைகள் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக டி.வி பார்த்தால் ரத்தகொதிப்பு அதிகரிக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. இது குறித்து பிரேசில் ஆய்வாளர் அகஸ்டோ சீஸர் எப்.டி. மோராயஸ் நடத்திய ஆய்வில், ஸ்பெயின், ஜெர்மனி, ஹங்கேரி, இத்தாலி, சைப்ரஸ், ஸ்வீடன் மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளில் இருந்து 2 முதல் 10 வயது குழந்தைகளான 5 ஆயிரத்து 221 பேர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதற்காக குழந்தைகளை அவர்களுக்கு பிடித்த சேனல்களை பார்க்க வைத்து சோதனை நடத்தப்பட்டது. இதில்…
தமது பிள்ளைகளுக்கு தங்கு தடையின்றி கல்வியினை பெற்றுக் கொடுக்க வேண்டும் – றிஷாத் பதியுதீன்
ஊடகப் பிரிவு எமது மக்கள் அதிகமான தேவையுள்ளவர்களாக இருக்கின்றனர்.இவ்வாறானதொரு நிலையிலும் தமது பிள்ளைகளுக்கு தங்கு தடையின்றி கல்வியினை பெற்றுக் கொடுக்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் முசலி பிரதேசத்தில் அமைந்துள்ள பொற்கேணியில் தெரிவித்தார். முஸ்லிம் எய்ட் நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்ட 31 வீடுகளை உரியவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். முஸ்லிம் நிறுவனத்தின் பணிப்பாளர் பைஸர்கான் தொழிலதிபர் அல்-ஹாஜ் நவாஸ்,முசலி பிரதேச…
சஜீத் பிரேமதாசாவின் பிரதியமைச்சராக கிடைத்தமை எனக்கு கிடைத்த பாக்கியம் – அமீர் அலி
அஸ்ரப் ஏ சமத் சமுர்த்தி முகாமையாளர்கள் சங்கத்தின் 18வது மாநாடு நேற்று கொழும்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு நாடுபூராவும் உள்ள 2000 சமுர்த்தி,திவிநகும, சமுர்ததி வங்கி முகாமையாளர்கள் கலந்து கொண்டனர். இந் நிகழ்வுக்கு சமுர்த்தி வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாசவும் பிரதியமைச்சர் எம்.எம். எஸ் அமீர் அலியும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் போது இந்த சங்கத்திற்காக தனது சொந்த நிதியில் ஒர் இலட்சம் ருபாவை அமைச்சர் சஜித் அன்பளிப்புச் செய்தார். இங்கு உரையாற்றிய…
ரவுப் ஹக்கீமே, பிரதமரே, ஜனாதிபதியே -எமது பிரச்சினைகளை தீருங்கள்
அஸ்ரப் ஏ சமத் இன்று பத்தரமுல்லையில் உள்ள செத்சிரிபாய கட்டிடத்திற்குள் புறக்கோட்டை சிறு வியாபாரிகளினால் ஆர்ப்பாட்டம். முன் கதவின் கண்னாடிகளையும் உடைத்து சேதப்படுத்தினர். செத்சிரிபாயக் கட்டிடத்திற்குள் ஊழியர்கள் உள்ளே வெளியில் செல்லமுடியாதவாறு 1 மணித்தியாலயமாக இருந்தனர். கொழும்பு புறக்கோட்டை தனியார் பஸ் நிலையத்திற்கு அருகில் சொந்தமாக கடைகளை வைத்து வியாபாரம் செய்தவர்களது கடைகளை கடந்த வருடம் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ச பலவந்தமாக வெளியேற்றி கடைகளை அகற்றினார். அதன் பின் மிதக்கும் கடைகளை நிர்மாணித்தார். ஆனால்…
