News
”பாராளுமன்ற தெரிவுக்குழு அமைத்து வில்பத்து புரளிகளுக்கு முடிவுகட்டுங்கள், ரிஷாத் பாராளுமன்றில் கோரிக்கை” ஊடகங்கள் மோசமான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக சபையில் குற்றச்சாட்டு :
வில்பத்துவில் ஓரங்குல நிலத்தையேனும் நானோ அல்லது நான் சார்ந்த சமூகமோ அழித்திருந்தால் எந்தத் தண்டனையையும் ஏற்பதற்கு தயாரெனவும் இந்த பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுவின் அறிக்கையை வெளியிடச் செய்ய சபாநாயகர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, இதன் உண்மையை நிலையை மக்களுக்கு தெளிவு படுத்த உதவ வேண்டுமென அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பாராளுமன்றில் இன்று (22) தெரிவித்தார். மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸ்ஸநாயக்கவின் வாய் மூல வினா ஒன்றிற்கு பதிலளிக்கையில், தற்போது மீண்டும் பூதாகரப்படுத்தப்படும் வில்பத்து விவகாரம்…
அரச ஹஜ் குழு உறுப்பினர்களை அமைச்சர் நியமிப்பது ஏற்கத்தக்கதல்ல சட்ட வரைபை திருத்த வலியுறுத்து
அரச ஹஜ் குழுவுக்கு நியமிக்கப்படும் 9 உறுப்பினர்களில் 7 பேர் முஸ்லிம் சமய விவகார அமைச்சரினால் நியமிக்கப்படுவார்கள் என்ற ஹஜ் சட்ட வரைபு திருத்தியமைக்கப்படவேண்டும். ஹஜ் குழுவுக்கு 7 பேரே நியமிக்கப்படவேண்டும். 7 பேரில் இருவரே அமைச்சரினால் நியமிக்கப்பட வேண்டும் என்ற திருத்தம் நேற்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஹஜ் சட்ட வரைவு தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் நேற்று மாலை பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெற்றது. அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர்…
வில்பத்து தொடர்பாக அமைச்சர் ரிஷாட் பதியுதீனை தொடர்பு படுத்தி ஊடகங்கள் போலிப் பிரச்சாரம் அரசாங்கம் நடவடிக்கையொடுக்க வேண்டும் – முன்னால் வடமேல் மாகாணசபை உறுப்பினர் என்.எம்.நஸீர்
வில்பத்து தொடர்பில் சிங்கள மக்களுக்கு பரப்பட்டுள்ள தவறான கருத்துக்களை நீக்கி, அவர்களுக்கு உண்மை நிலைகளை தெளிவுபடுத்த வேண்டிய ஊடகங்கள் இன்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்தி மக்களை தூண்டிவிடும் வேலையை செய்கின்றது அரசாங்கம் இதற்க்கு வெகுவிரைவில் நடவடிக்கையெடுக்க வேண்டும் என முன்னால் வடமேல் மாகாணசபை உறுப்பினரும் சதொச பிரதி தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குருநாகல் மாவட்டத்தலைவருமான என்.எம். நஸீர் (MA) தெரிவித்தார். அன்மையில் பிங்கிரிய தேர்தல் தொகுதி கிணியம பிரதேசத்தில்…
அமைச்சர் றிஷாட் பதியுதீன் மூலம் ஒதுக்கப்பட்ட கம்பெரலிய வேலைத்திட்டம் மன்னார் பிரதேசபைக்குட்பட்ட கிராமங்களில் தவிசாளர் முஜாஹிரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது…
அமைச்சர் றிஷாட் பதியுதீன் மூலம் ஒதுக்கப்பட்ட கம்பெரலிய வேலைத்திட்டம் மன்னார் பிரதேசபைக்குட்பட்ட கிராமங்களில் தவிசாளர் முஜாஹிரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது… இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய தவிசாளர் அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களின் எண்ணக்கருவில் உருவாக்கப்பட்ட விடயங்கள் இந்த பிரதேச மக்களுக்கு செய்து கொடுக்கப்படும் அதேபோல் இந்த பிரதேசத்தில் வாழும் இளைஞ்சர் யுவதிகளின் பிரச்சினைகள் அதேபோல் இந்த பிரதேசத்தில் இருக்கும் 83 கிராமங்கள் உள்ளது அதேபோல் 34 கிராம சேவையாளர் பிரிவுகளில் வாழும் மக்களின் பிரச்சினைகள் இந்த பிரதேசபை…
ஜனநாயக நாட்டில் உரிமைக்காக போராடும் சிறுபான்மை மக்களின் நிலை பரிதாபத்திற்குரியது- றிப்கான் பதியுதீன்
இலங்கை நாடானது ஒரு ஜனநாயக நாடாக இருக்கின்ற போதும் இன்று சிறுபான்மை மக்கள் உரிமைக்காக போராடும் துர்பாக்கிய நிலை காணப்படுகின்றது. என கைத்தொழில் வர்த்தகம் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் திறன் அபிவிருத்தி தொழில் பயிற்சி அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் பிரத்தியோக செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான றிப்கான் பதியுதீன் அவர்கள் தன் அனுதாபத்தினை இவ்வாறு தெரிவித்தார். உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் தமிழ் மற்றும் முஸ்லீம் சிறுபான்மை சமூகம் தனது உரிமைக்காக…
அகில இலங்கை மக்கள் காங்கிரஸால் கண்டி மாவட்டத்தில் பல அபிவிருத்திகள் ஆரம்பித்து வைக்கபட்டது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் அமைச்சர் ரிசாட் பதியுத்தீன் அவர்களது நிதி ஒதிகீட்டினால் கண்டி மாவட்டத்தில் பல அபிவிருத்திகள் ஆரம்பித்து வைக்கபட்டது. உடுநுவர பிரதேச்சபையின் நிவ் எல்பிடிய கிராமத்தில் பாலர் பாடசாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் அமைச்சர் ரிசாட் பதியுத்தீன் அவர்களது நிதி ஒதிகீட்டினால் உடுநுவர பிரதேச சபையின் தவுலகல அமரபொல தாய் சேய் கிளினிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு படங்கள். …
புத்தளம் போராட்டத்தை திசைதிருப்ப முயற்சி: அறுவைக்காட்டுக்கும், வில்பத்துவுக்கும் முடிச்சுப்போட இனவாதிகள் சூழ்ச்சி
அறுவைக்காட்டு குப்பைக்கெதிரான புத்தளம் மக்களின் நியாயமான போராட்டத்தை மழுங்கடித்து, திசை திருப்புவதற்காக மெளனித்து கிடந்த வில்பத்து புரளியை மீண்டும் கிளறிவிட்டு இரண்டையும் ஒன்றுடன் ஒன்று முடிச்சுப் போட்டு போராட்டத்தை திசை திருப்பும் வகை சூத்திரதாரிகள் சிலர் செயற்பட்டு வருவதாக கைத்தொழில், வர்த்தகம்,நீண்ட காலம் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி, திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் குற்றஞ்சாட்டினார். கலைவாதி கலீலின் பவள விழாவும் “என் வில்பத்து டயரி” நூல் வெளியீடும் கொழும்பு…
தெம்பிரியத்தேவல முஸ்லிம் வித்தியாலயத்தில் வகுப்பறைகான அடிக்கல் நாட்டும் நிகழ்வு
அனுராதபுர மாவட்ட பராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் வேண்டுகோளுக்கு இணங்க அல்-ஹிமா சமூக சேவைகள் அமைப்பின் செயலாளர் அல் ஹாஜ் நூறுல்லாஹ் அவர்களின் ஊடாக குவைட் நாட்டு அரசின் நிதியொதுக்கீட்டில் ஹொரொவ்பொத்தான பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தெம்பிரியத்தேவல முஸ்லிம் வித்தியாலயத்தில் சகல வசதிகளுடனும் கூடிய வகுப்பறை கட்டிடமொன்றை அமைப்பதற்கான அடிக்கல் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானினால் நடப்பட்டது.
தோப்பூருக்கான தனி பிரதேச செயலகத்தை தடுப்பது இரா.சம்மந்தனே
இன்றைய காலத்தில் பேசுபொருளாக மாறிவருகிறது தோப்பூர் பிரதேச செயலகத்துக்கான தனியான செயலகம் இதனை தடுப்பதற்கும் மூக்கை நுழைத்து செயற்படுவது அநியாயமாகும் இதற்கான தடைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் அவர்களே மேற்கொண்டு வருகிறார் என துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதி அமைச்சரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார். தோப்பூரில் இன்று (20) இடம் பெற்ற பள்ளிவாயல் நிருவாகிகளுடனான விசேட சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்….
பாணந்துறையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வட்டாரக் கிளைகளை வலுப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டம்
களுத்துறை மாவட்ட, பாணந்துறை பிரதேசத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வட்டாரக் கிளைகளை வலுப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டம், பாணந்துறை மல்சரா மண்டபத்தில் இன்று புதன் (20) மாலை பள்ளிமுல்லை பிரதேசத்தை மையமாகக்கொண்ட அமைப்பாளர் ரிஸ்வி தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கட்சியின் தவிசாளர் விவசாய, மீன்பிடி, நீரியல்வள இராஜாங்க அமைச்சர் கெளரவ அமீர் அலி கலந்து கொண்டு பிரதான உரையை நிகழ்த்தினார். சிறப்பதிதிகளாக கட்சியின் செயலாளர் நாயகம் சுபைதீன், பாணத்துறை ஜீலான் மத்திய…
பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் முயற்சியினால் ஒலுவில் கரையோர காணிகளை இழந்தவர்களுக்கு நஷ்ட ஈட்டுத் தொகை வழங்கலும் மீனவர்களுக்கான தொழிலை மேற்கொள்ள மண்களை அகற்ற துரித நடவடிக்கை!!!
மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களால் நிர்மாணிக்கப்பட்ட துறைமுகத்தினால் காணிகளை இழந்தவர்களுக்கான நஷ்ட ஈட்டுத் தொகை வழங்கப்படவுள்ளதாக துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார். அமைச்சர் சாகல அவர்களை இன்று (19) அமைச்சில் வைத்து சந்தித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் தெரிவிக்கையில் துறை முகங்கள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க , துறை முக அதிகார சபையின் தலைவர் காவன் ரத்நாயக்க ,முகாமைத்துவப்…
காங்கேசன் துறை முகத்திலிருந்து இந்தியாவுக்கு கப்பல் சேவை ஆரம்பம்
யாழ்ப்பாணம் காங்கேசன் துறை முகத்திலிருந்து இந்தியா காரைக்கல் பகுதிக்கான கடல் வழி மார்க்கமான கப்பல் சேவை ஆரம்பிக்கப்படுவது தொடர்பான கலந்துரையாடல் துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தலைமையில் இடம் பெற்றது. துறை முக அதிகார சபையின் தலைவர் அலுவலகத்தில் இன்று (19) இடம் பெற்ற குறித்த சந்திப்பில் கடல் வழி மார்க்கமான கப்பல் சேவை ஊடாக பல்வேறு வர்த்தக நடவடிக்கைகள், இலகு சேவை கட்டணங்கள், சுற்றுலாத் துறையின் வளர்ச்சி உள்ளிட்ட…
