News
பங்களாதேஷ் தேசிய தின நிகழ்வு கொழும்பில் இடம்பெற்றது.
பங்களாதேஷ் நாட்டின் 49வது சுதந்திர தேசிய தின நிகழ்வு கொழும்பு சின்னமன் லேக்சைட் ஹோட்டலில் நேற்று (26) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் விஷேட அதிதியாக கலந்து கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், கைத்தொழில், வர்த்தகம், நீண்ட கால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சருமான ரிஷாட் பதியுதீனுடன் அரசியல் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துரையாடினர்.
அமைச்சர் ரிஷாத்துக்கு அமைச்சர் ஹக்கீம் உதவ முன்வர வேண்டும் ; பைஸர் முஸ்தபா.
வில்பத்து வன எல்லைக்குள் எந்தவொரு முஸ்லிம் குடும்பமும் குடியமர்த்தப்படவில்லை. சில தீயசக்திகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக சிங்கள மக்களைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறது என, முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான பைஸர் முஸ்தபா தெரிவித்தார். வில்பத்து வனப்பகுதியில் எந்தவித காடழிப்பும் இடம்பெறவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், கட்சி அரசியல் பேதம் பார்க்காது அமைச்சர் ரிஷாத் பதியுத்தீனுக்கு கை கொடுத்து…
வில்பத்து விவகாரம்: ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட வேண்டும் அமைச்சர் ரிசாட் வலியுறுத்து!!!
வில்பத்து வன பாதுகாப்புப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் இடம் பெறுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை. வில்பத்து குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு 2017 இல் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுவின் அறிக்கை உடனடியாக வெளியிடப்பட வேண்டும். பல தடவைகள் கோரிக்கை விடுக்கப்பட்டும் ஆணைக்குழுவின் அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை. இதனாலேயே பல்வேறு சந்தேகங்கள் தொடர்கின்றன என கைத்தொழில், வர்த்தகம் மற்றும் நீண்டகாலமாக இடம் பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றல் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார். வில்பத்து…
வில்பத்தையும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனையும் தொடர்புபடுத்தி ஏன் மீண்டும் மீண்டும் துரத்துகின்றீர்கள்? இராஜாங்க அமைச்சர் மஹ்ரூப் வலியுறுத்து !
வில்பத்து விவகாரத்தையும் அமைச்சர் ரிஷாட்டையும் தொடர்பு படுத்தி மீண்டும் மீண்டும் ஏன் குற்றம் சுமத்தி கொண்டு இருக்கின்றீர்கள் . அந்த பிரதேசத்திற்கு சென்று உண்மை நிலையை கண்டறிந்து வந்த இராஜாங்க அமைச்சர் அஜித் மானப்பெரும பல விடயங்களை தெளிவு படுத்தி இருப்பதாக பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, வில்பத்து வன சரணாலயம் அனுராதபுர,புத்தளம் மாவட்டத்திற்கு சொந்தமானது. முசலி பிரதேசம் மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ளது. வில்பத்தின் எல்லைக்கு மிக…
வில்பத்துவுக்கு வெளியிலேயே முஸ்லிம்கள் மீள்குடியேற்றம் ஓய்வுபெற்ற புவியியற் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நெளபல் தெரிவிப்பு!!!
முஸ்லிம் குடியேற்றங்கள் வில்பத்து வன எல்லைக்கு வெளியிலேயே இடம்பெற்றுள்ளன. அத்துமீறிய குடியேற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை என தெரிவித்துள்ள ஓய்வுபெற்ற புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளரும், முன்னாள் மாகாண சபை தேர்தல் தொகுதி எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் உறுப்பினருமான ஏ.எஸ்.எம்.நௌபல், கடந்த 30 வருட காலமாக வில்பத்து கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் பாரியளவில் காடழிப்புகள் இடம்பெற்றுள்ளன. இது குறித்து சுற்றாடல்துறை அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டுகொள்வதில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன், காடழிப்புகளும் வன ஆக்கிரமிப்பும் மன்னார்…
அமைச்சர்களில் அதிஷ்டம் வாய்ந்த அமைச்சராக றிஷாட் பதியுதீன் திகழ்கிறார். எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும புகழாரம் !!!
அமைச்சரவைக்குள் மிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்த ஒருவராக அமைச்சர் ரிசாட் பதியுதீன் இருக்கின்றார் என எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர் அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு அவர் வகித்த அமைச்சு பதவிக்கு மேலதிகமாக தொழிற் பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது. இது தவறான முன்மாதிரியே. இதேவேளை தற்போதைய அமைச்சரவையில் மிகவும் அதிர்ஷ்டமான அமைச்சர்…
மக்கள் காங்கிரஸின் வழிகாட்டலில் கூட்டுறவு இளைஞர் , வலுவூட்டலுக்கான பதிவு ஆரம்பம்!
“கோப்யேஸ் ” கூட்டுறவு இளைஞர் வலுவூட்டல் தாபனத்தினூடாக அங்கத்தவர் பதிவை உறுதிப்படுத்தும் நிகழ்வு கண்டி பதியுதீன் மஹ்மூத் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. கண்டி மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அமைப்பாளரும் காரியவள கூட்டுத்தாபனத்தின் தலைவரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான அம்ஜாட் மற்றும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களின் கண்டி மாவட்ட இணைப்பாளர் றியாஸ் இஸ்ஸத்தீன் ஆகியோரின் அயராத முயற்சியால் கண்டி மாவட்டத்தில் இந் நிகழ்வு இரண்டாவது தடவையாகவும் சிறப்பாக நடந்து முடிந்தது. கண்டி மாவட்ட அகில இலங்கை…
இனமொன்றின் மீள் இருப்பை மறுக்கும் கடும்போக்கு வாதம்!
பருவ காலம் போன்று வில்பத்து விவகாரமும் வேளைக்கு வந்து போவதால் மீண்டும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பெயர் அரசியல் பரப்பில் அனல் பறக்கிறது. இதனால் அவரது வேகம் தணியுமெனச் சில எதிரிகள் எதிர்பார்க்கின்றனர். சாகத்துணிந்தவனுக்கு தூக்கு மேடை ஒரு பஞ்சு மெத்தையாயிற்று. அமைச்சர் ரிஷாதுக்கு வில்பத்து ஒரு தூக்கு மேடையாக வந்தாலும் அவர் சளைக்கப் போவதில்லை. 2012 ஆம் ஆண்டிலிருந்து அடிக்கடி அவர் எதிர் கொள்ளும் சவாலும் இதுதான்.மக்கள் காங்கிரஸின் அரசியலை அடியோடு வீழத்த அவிழ்க்கப்படும் இந்த…
சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்திற்கான கட்டிட திறப்பு விழா நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் S.M.M இஸ்மாயில் கலந்துகொண்டார்..
“அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” எனும் கருத்திட்டத்தின் அடிப்படையில் நாடுபூராகவும் பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட்டு இன்று பௌதீக அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்படுகிறது. சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்திற்கான கட்டிட திறப்பு விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர். S.M.M இஸ்மாயில் அவர்கள் தெரிவிப்பு. உலகில் அநேகமான நாடுகளின் அவர்களுடைய மொத்த தேசிய உற்பத்தியில் கல்விக்கு 6% ஒதுக்கீடு செய்யப்படுவதனை காணமுடிகிறது. அதுவே யுனெஸ்கோ ஐக்கிய ஸ்தாணங்களின் இலக்காகவும் உள்ளது. அதே போன்றுதான் அண்மைக்காலங்களில் எமது நாட்டில் ஐக்கிய தேசிய…
ஹம்பாந்தோட்டையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் பிரதமர் தலைமையில் அடிக்கல் நாட்டு நிகழ்வு!!!
சில்வர் பார்க் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் சீமெந்து தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு ஹம்பாந்தோட்டை மிறிஜ்ஜாவில முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் இடம்பெற்ற போது பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க (24) கலந்து கொண்டார். ஓமான் நாட்டின் எரிசக்தி அமைச்சர் டாக்டர் மொகம்மட் ஹமத் அல் ரூஹ்மி விஷேட அதிதியாக கலந்து கொண்ட இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், கைத்தொழில், வர்த்தகம், நீண்ட கால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, திறன்…
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாவடிப்பள்ளி இளைஞரணி ஒன்று கூடல்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளரும், சிரேஷ்ட ஊடகவியலாளரும், சட்டத்தரணியுமான முஷர்ரப் முதுநபீன் அவர்கள் இன்று (2019-03-23) மாவடிப்பள்ளியில் இடம்பெற்ற அ.இ.ம.காங்கிரஸின் இளைஞர் ஒன்று கூடலில் கலந்து சிறப்பித்ததுடன், மாவடிப்பள்ளி கமு/அல் அஸ்ரப் மகா வித்தியாலயத்திற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அங்கு கடந்த வாரம் ஊருக்குள் உட்புகுந்த காட்டு யானை பாடசாலை மதில்களை தாக்கிய சேதங்களைப் பார்வையிட்டதுடன், பாடசாலையில் நிலவும் தளபாடப் பற்றாக்குறை, மற்றும் ஏனைய குறைபாடுகள் தொடர்பாக பாடசாலை அதிபர்…
ஆவணங்கள் துரிதமாக பதிவு செய்யும் ஒருநாள் வேலைத்திட்ட அங்குராப்பண நிகழ்வு மன்னாரிலும் இடம்பெற்றது.
ஆவணங்கள் துரிதமாக பதிவு செய்யும் ஒருநாள் வேலைத்திட்ட அங்குராப்பண நிகழ்வு மன்னார் மாவட்ட செயலகத்திலும் இடம்பெற்றது. ஐனாதிபதிஇ பிரதமர் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி உள்ளக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் வஜிர அபேவர்த்தன திடசங்கற்பத்திற்கமைய நேற்று சனிக்கிழமை (16.03.2019) நாடு பூராகவும் இவ் நிகழ்வு நடைபெற்றபொழுது மன்னார் மாவட்டத்திலும் இவ் நிகழ்வு இடம்பெற்றது. மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இவ் நிகழ்வில் அமைச்சர் றிசாட் பதியுதீயின் பிரதிநிதியாக முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் அமைச்சர் றிசாட்டின்…
