News
அரச ஊழியர்களின் பண்டிகை முற்பணத்தை அதிகரிக்க கோரிக்கை
அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முற்பணத்தை 10 ஆயிரம் ரூபாயால் அதிகரிக்குமாறு, அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை தேசிய தொழிற்சங்க மத்தியநிலையம் முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இது தொடர்பில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு கோரிக்கை கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் வாழ்க்கை செலவால், அரசாங்க ஊழியர்களுக்கு தற்போது வழங்கப்படும் பண்டிகை முற்பணமானது போதாது எனவும் தற்போது வழங்கப்படும் முற்பணத்தை 10 ஆயிரம் ரூபாயால் அதிகரித்து வழங்க வேண்டுமென்று அந்த கோரிக்கை கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
தூக்கு தண்டனையை நிறுத்துங்கள் பாகிஸ்தான் தூதரை அழைத்து ஜெர்மனி கண்டனம்
பாகிஸ்தானில் பெஷாவர் பள்ளிக்கூட தாக்குதலுக்கு பின்னர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மரண தண்டனை மீதான தடை ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து தொடர்ந்து குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த செவ்வாய்க்கிழமை உச்சகட்டமாக ஒரே நாளில் 12 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஜெர்மனி மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் உலக நாடுகளில் தூக்கு தண்டனை நிறைவேற்றக்கூடாது என்று வலியுறுத்தி வருகின்றன. பாகிஸ்தானில் தொடர்ந்து தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதை கருத்தில் கொண்ட ஜெர்மனி, அந்நாட்டிற்கான பாகிஸ்தான் தூதரை…
2030-ல் உலகம் 40 சதவிகித தண்ணீர் பற்றாக்குறையை எதிர்நோக்கும் – ஐ.நா.
பாவனையாளர்கள் நீர்வளத்தின் பாவனையில் வியத்தகு முறையில் மாற்றங்களை ஏற்படுத்தாவிடில் 2030-ம் ஆண்டளவில் உலகம் பூராகவும் 40-சதவிகித தண்ணீர் பற்றாக்குறையினால் துன்புற வேண்டிய நிலை ஏற்படுமென ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் எச்சரித்துள்ளது. காலநிலை மாற்றத்துடன் மழைவீழ்ச்சி படிவங்கள் ஒழுங்கு முறையற்றதாக காணக்கூடியதாக இருப்பதால் நிலத்தடி நீர் இருப்புக்கள் ஏற்கனவே குறைந்து கொண்டு செல்கின்றன. 2050 அளவில் உலகத்தின் சனத்தொகை 9-பில்லியன்களாக உயரலாம் என எதிர்பார்க்கப்படுவதும், விவசாயம், தொழில் மற்றும் தனிப்பட்ட நுகர்வு போன்ற தேவைகளிற்கு அதிக நிலத்தடிநீர் பாவிக்கப்படுவதும்…
‘தாயையும், பிள்ளையையும் மந்த போசனையிலிருந்து பாதுகாப்பதே ஒரு அரசாங்கத்தின் கடமை’ மைத்திரி
தாயையும், பிள்ளையையும் மந்த போசனையிலிருந்து பாதுகாப்பதே ஒரு அரசாங்கத்தின் கடமை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கர்ப்பிணி தாய்மார்களுக்கு போஸாக்கு பொதி வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். அரசாங்கம் எனும் வகையில் நாம் தாய்மாரையும், பிள்ளைகளையும் பாதுகாக்க வேண்டும் எனும் நோக்கிலேயே கர்ப்பிணி தாய்மார்களுக்கு உணவு பொதியை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது என தெரிவித்த ஜனாதிபதி, போசனை பொதியின் ஊடாக ஒரு தாய்க்கு சுமார் 20 ஆயிரம்…
தாதியர் பயிற்சிகளை நிறைவு செய்து கொண்ட வடமாகாணத்தை சேர்ந்த 75 யுவதிகளுக்கான தாதியர் அங்கீகாரத்தை வழங்கும் நிகழ்வு
சர்வதேச தொழில் பயிற்சி நிறுவகத்தில் (International vocational academy) தாதியர் பயிற்சிகளை நிறைவு செய்து கொண்ட வடமாகாணத்தை சேர்ந்த 75 யுவதிகளுக்கான தாதியர் அங்கீகாரத்தை வழங்கும் நிகழ்வு இன்று வவுனியா வைரவபுளியங்குளம் முத்தையா கலாசார மண்டபத்தில் இடம் பெற்றது. சர்வதேச தொழில் பயிற்சி நிறுவகத்தின் தலைவர் லயண் சித்தீக் நதீர் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிஷாத் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்த…
கலேபோகஸ்வெவ மக்கள் அமைச்சர் றிஷாத் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைவு
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான றிஷாத் பதியுதீன் நேற்று வவுனியா மாவட்டத்தின் பல பிரதேசங்களுக்கும், கிராமங்களுக்கும் விஐயம் செய்து மக்களின் தேவைகளைக் கேட்டறிந்து கொண்டதுடன் பலபிரச்சினைகளை சுமூகமாக தீர்த்துவைத்ததுடன், கடந்த அரசாங்கத்தின் மீள்குடியேற்ற சிங்கள கிராமமான கலேபோகஸ்வெவ கிராம மக்கள் பல பிரச்சினைகளை முன்வைத்ததுடன் தாம் அனைவரும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைவதாக கூறி இணைந்துகொண்டனர்.
நாளாந்தம் கண்னீர் சிந்துகின்றேன் – அமைச்சர் அத்துக்கோரல
அஸ்ரப் ஏ சமத் நான் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராக பதவியேற்று அந்தக் கதிரையில் அமர்ந்தது முதல் இன்று வரை நான் நேரடியாக சந்தித்த மற்றும் அவதானித்த மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்ற அல்லது அங்கு வாழுகின்ற, செல்ல இருக்கின்ற பணிப் பெண்களது அவல நிலைகளை கேட்டு, கேட்டு நான் எனது அமைச்சில் இருந்து கொண்டு நாளாந்தம் கண்னீர் சிந்துகின்றேன்.. ஆனால் எனது ஆசை அடுத்த ஆண்டின் சர்வதேச பெண்கள் தினத்தை இந்த நாட்டில் கொண்டாடமால் இருக்க வேண்டும்….
ஷீஆக்களின் ஊடுருவல் ;கல்குடா முஸ்லிம் சமூகத்திற்கு ஓர் எச்சரிக்கை!!
எம்.ரீ.எம்.பாரிஸ் இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு கல்குடா தொகுதியில் அதிகளவான முஸ்லிம் மக்கள் செரித்து வாழும் தொகுதியாகும் இங்கு அன்மைகாலமாக ஷீஆக்களின் ஊடுருவல் அதிவேகமாக பரவி வருகின்றது. என்பதனை அவதானிக்க முடிகின்றது. இதனை தடுத்து தூய்ய இஸ்லாத்தினை கூட்டல் குறைத்தல் இன்றி மக்கள் மன்றத்துக்கு கொண்டு செல்லும் நோக்கில் கல்குடா தொகுதியின் அனைத்து தஃவா அமைப்புக்களும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் கல்குடா கிளை கீழ் ஒன்றினைத்து தஃவா நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதுடன் ஷீஆக்கள் பற்றிய…
வவுனியா மாவட்ட கிராமங்களுக்கு அமைச்சர் றிஷாத் விஜயம்
வவுனியா மாவட்டத்தில் உள்ள சிங்கள பிரதேச செயலகப் பிரிவில் உள்ள கிராமங்களுக்கு கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிஷாத் பதியுதீன் நேற்று வெள்ளிக்கிழமை விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார். வடமாகாண சபை உறுப்பினர் வீ.ஜயதிலகவின் அழைப்பின் பேரில் அடமஸ்கட, கலுக்குன்னாமடம், நெடுங்குளம், அவரந்துலாவ,மருதமடு,நெலுக்குளம் உள்ளிட்ட பல கிராமங்களில் அமைச்சரின்நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வும்,பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட உபகரணங்களும் இன்றைய விஜயத்தின் போது அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டது. வவுனியா மாவட்டத்தில் வாழும் சிங்கள…
ஜனாதிபதி அடுத்தவாரம் சீனா விஜயம் ஆசிய வருடாந்த மாநாட்டில் பங்கேற்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நான்கு நாள் உத்தியோகபூர்வ அரச விஜயம் ஒன்றை மேற்கொண்டு அடுத்தவாரம் சீனாவுக்கு பயணமாகின்றார். சீன ஜனாதிபதியின் அழைப்பையேற்று எதிர்வரும் 25 ஆம் திகதி சீனா செல்லவுள்ள ஜனாதிபதி 28 ஆம் திகதி வரை சீனாவில் தங்கியிருப்பதுடன் சீன ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். மேலும் சீனாவில் நடைபெறும் ஆசிய வருடாந்த மாநாட்டிலும் ஜனாதிபதி சிறிசேன மற்றும் சீன ஜனாதிபதி ஷி. ஜின்பின் உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள்…
இலங்கையின் முதலாவது பீல்ட் மார்ஷலாக ஜெனரல் சரத் பொன்சேகா நாளை பதவியேற்கிறார்!
சுதந்திர இலங்கையின் முதலாவது பீல்ட் மார்ஷலாக முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா நாளை ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்கவுள்ளார். முப்படையின் அதி உயர் பதவியான பீல்ட் மார்ஷல் பதவி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சருக்கு ஒத்ததாக கருதப்படுகிறது. புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் சரத் பொன்சேகாவின் பறிக்கப்பட்ட சகல உரிமைகளும் மீள வழங்கப்பட்டது. இதேவேளை, பீல்ட் மார்ஷலாக நியமிக்கப்பட்ட ஒருவரால் அரசியலில் ஈடுபடமுடியாது என மனித உரிமை ஆணைக்குழு தலைவர் சட்டத்தரணி…
இலங்கையில் சீனாவின் இராணுவ முகாம்கள் இல்லை: இந்தியா
இந்திய நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இலங்கை, பாகிஸ்தான், மியான்மார் ஆகிய நாடுகளில், சீனா மூலோபாய இராணுவத் தளங்களை அமைப்பது தொடர்பான எந்த தகவல்களும் இல்லை. எனினும் குறித்த நாடுகளில், துறைமுக அபிவிருத்தி, எண்ணெய், எரிவாயு குழாய் கட்டுமானம், நெடுஞ்சாலைகளை நிர்மாணித்தல் உள்ளிட்ட வர்த்தக உட்கட்டமைப்பு திட்டங்களில் சீனாவின் தலையீடுகள் உள்ளன. தேசிய பாதுகாப்பு கரிசனைகள், மற்றும் வர்த்தக நலன்கள் தொடர்பான எல்லா முன்னேற்றங்கள் குறித்தும், இந்திய அரசாங்கம் நிரந்தமான கண்காணிப்பை…
