News
விபத்துக்களற்ற நாடு ; நாடளாவிய வேலைத்திட்டம்
பழுலுல்லாஹ் பர்ஹான் வீதிப் பாதுகாப்புத் தொடர்பான தேசிய சபையும் இலங்கை பொலிஸூம் இணைந்து விபத்துக்களற்ற நாடொன்று எனும் தொனிப்பொருளில் துவிச்சக்கரவண்டிகளில் எதிரொளி விளக்குப் பாதுகாப்பு ஸ்ரிக்கரினை ஒட்டும் நாடளாவிய வேலைத்திட்டம் 26 இன்று வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி பிரதேசத்தில் இடம்பெற்றது. காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ் வேலைத்திட்டத்தை காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆரியபந்து வெதகெதர மற்றும் காத்தான்குடி பொலிஸ் நிலைய…
சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவரானால் முஸ்லிம் காங்கிரஸ் பூரண ஆதரவை வழங்கும் -ஹசன் அலி
கூட்டுக் கட்சிகளின் தேசிய அரசாங்கத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியே பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக வேண்டும். நிலவி வரும் அரசியல் சூழ்நிலைக்கு அமைய சம்பந்தன் மட்டுமே எதிர்க்கட்சி தலைவருக்கு மிகப்பொருத்தமானவர் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. சம்பந்தனை எதிர்க்கட்சி தலைவராக்கினால் பூரண ஒத்துழைப்பினை வழங்கி ஆதரிப்பதற்கு தயாராக உள்ளதாகவும் அந்தக் கட்சி அறிவித்துள்ளது.தேசிய அரசாங்கத்தின் கூட்டணி ஆட்சியில் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் யார் என்ற கேள்வி எழுப்பப்பட்டிருக்கும் நிலையில் இது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாட்டினை வினவிய போதே…
அஸ்ரப் விட்டுச் சென்றதை அமைச்சர் றிஷாத் பதியுதீன் செய்துவருகின்றார் -சுபைர்
இந்த நாட்டு முஸ்லிம் மக்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் 2 அல்லது 3 காதி நீதிமன்றங்களை மட்டுமே பெற்றுக்கொடுத்துள்ளது தவிர வேறு எதனையும் சாதிக்கவில்லை என தெரிவித்துள்ள கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர்,கிழக்கில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பக்கம் மக்கள் சாரி சாரியாக இன்று இணைந்து கொண்டிருப்பது மறைந்த மாமனிதர் மர்ஹூம் அஷ்ரப் சேர் அவர்களின் அரசியல் விழுதாக செயற்படும் அமைச்சரும்,எமது கட்சியின் தேசிய தலைவருமான றிசாத் பதியுதீனின் அரசியல் செயற்பாடுகளை கண்டு…
திங்கள் முதல் இலவச WI-FI அமுல்
எதிர்வரும் திங்கட்கிழமை மு தல் இலவச WiFi திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் முதலாவது WiFi வலயம் திறந்து வைக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். அலரி மாளிகையில் ஊடக நிறுவன பிரதானிகளை இன்று வியாழக்கிமை சந்தித்தபோதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்
ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையினை மீண்டும் இலங்கைக்கு பெற்றுக்கொள்வோம் -அமைச்சர் றிஷாத்
இலங்கைக்குக் கிடைக்காமல் போன ஜீ.எஸ்.பி வரிச்சலுகையினை மீண்டும் இலங்கை பெற்றுக்கொள்ளவுள்ளதாக கைத்தொழில், வணிகத்துறை அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். இந்தச் சலுகையினை இலங்கைக்கு பெற்றுக்கொடுப்பது தொடர்பில் ஆராயும் உயர் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதி நிதிகள் குழுவினர் நேற்று அமைச்சர் றிஷாத் பதியுதீனை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார். ஒன்றியத்தின் இலங்கைக்கான தலைவர் டேவிட் ஒளி அவர்கள் அமைச்சரை சந்தித்து இது தொடர்பில் விளக்கமளித்துள்ளார். மேலும், ஒன்றியத்தின் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீனிடத்தில் கருத்துரைக்கும்…
பல்கலை மாணவர்கள் மீண்டும் போராட்டம்?
பாறுக் சிகான் யாழ் பல்கலைக்கழக மருதனார்மட நுண்கலைப் பீடத்தின் வரைதலும் வடிவமைத்தலும் மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று வியாழக்கிழமை (26) வகுப்புக்களைப் புறக்கணித்து போராட்டம் நடத்தினர். முகங்களில் பல்வேறு வரைபடங்களை வரைந்து கோஷங்களை எழுப்பியவாறு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருதனார்மடத்தில் உள்ள நுண்கலைப் பீடத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான பரீட்சைகள் கடந்த காலத்தில் சீராக நடைபெறவில்லைஇ ஏனைய பீடங்களுக்கு பரீட்சைகள் முடிவுற்றுள்ள போதிலும் நுண்கலைப் பீடத்தில் வரைதலும் வடிவமைத்தலும் துறைக்கு பரீட்சைகள் நடைபெறவில்லைஇ மற்றும் தமது…
உயர் கல்வி- ஆராய்ச்சி அமைச்சின் அதிகாரிகளை சந்தித்தார் அமைச்சர் அமுனுகம
உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம நேற்று (25) அமைச்சின் அதிகாரிகளை சந்தித்து எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடினார். இதன்போது ஆராய்ச்சி அமைச்சின் கீழியங்கும் நெனோ தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆராய்ச்சி விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதுடன் ஆராய்ச்சி மற்று அபிவிருத்தி விடயங்கள் தொடர்பிலும் அமைச்சர் கலந்துரையாடினார். இந்நிகழ்வில் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் செயலாளர் பீ. ரணேபுர- மேலதிக செயலாளர் எஸ்.எச். ஹரிஸ்சந்திர- அமைச்சின் ஆலோசகர் தாரா விஜயதிலக்க- இலங்கை நெனோ…
கோத்தபாயவின் வங்கி கணக்குகளை சோதனை செய்ய உத்தரவு
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் வங்கிக் கணக்குகளை சோதனை செய்ய காலி நீதிமன்றம் குற்றத் தடுப்பு பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளது. எவன்கார்ட் வழக்கு தொடர்பிலேயே காலி நீதிமன்றம் பொலிஸாருக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
யெமன் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி வான் தாக்குதல்!
யெமனின் ஈரானிய ஆதரவு ஹுதி கிளர்ச்சிப் படைக்கெதிராக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டணி தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது. வளைகுடா கூட்டுறவுக்கான அமைப்பின் உறுப்பு நாடுகளான குவைத், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தான், ஜோர்தான், மொரோக்கோ உட்பட பத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் நாடுகள் இத்தாக்குதலில் சவுதியுடன் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யெமன் ஜனாதிபதிக்கெதிரான குறித்த அமைப்பின் நடவடிக்கைகளுக்கே சவுதி தலைமையிலான கூட்டணி பதிலடி வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை இது பிராந்திய ரீதியான யுத்தமாக மாறும் என ஹுதி அமைப்பு…
திருமண பதிவுக் கட்டணக் குறைப்பு அமுல்; ஆயிரம் ரூபா கட்டணம்
– வி.தபேந்திரன் – அரசாங்கத்தால் வரவு செலவுத் திட்டத்தினூடாக அறிவிக்கப்பட்ட திருமணப் பதிவு கட்டணக் குறைப்பு உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளதாக வட மாகாண உதவிப் பதிவாளர் செல்வி ஆனந்தி ஜெயரட்ணம் புதன்கிழமை (25) தெரிவித்துள்ளார். முன்பு வீட்டுக்கு வந்து திருமணப் பதிவு செய்ய 3,500 ரூபாய் கட்டணம் அறவிடப்பட்டது. தற்போது அக்கட்டணம் 50 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. திருமணப் பதிவாளருக்கு 1500 ரூபாய் கட்டணம் வழங்க வேண்டிய நடைமுறை தற்போது 750 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. அதேவேளை, திருமணப் பதிவு…
19ஆவது திருத்தத்தை எதிர்த்து 3 மனுக்கள் தாக்கல்
– லக்மால் சூரியகொட – அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்துக்கான திருத்த சட்டமூலம்; விசேட சட்டமூலமாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த திருத்த சட்டமூலத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மூன்று மனுக்கள் நேற்று புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பிரபல சட்டவுரைஞர் கொமின் தயாசிரி, பிவிதுரு ஹெல உறுமய செயலாளர் உதய கம்பன்பில மற்றும் நுகேகொடையைச்சேர்ந்த எல்.பி.ஐ பெரேரா ஆகியோரை இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். ஜனாதிபதியின் அதிகாரங்கள், அரசாங்கத்தின் அதிகாரங்கள், அடிப்படை உரிமைகள் என்பன திருத்தப்படவுள்ள இந்த 19ஆவது திருத்தத்துக்கு…
‘ஜேர்மன்விங்கஸ்’ விபத்து: வெளியான அதிர்ச்சி தகவல்
விபத்துக்குள்ளான ஜேர்மன் நாட்டு விமானத்தின் குரல் பதிவு பெட்டியில் இருந்து பயன்படுத்தக்கூடிய தகவல்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் அதிலிருந்து தெரிய வந்ததாகக் கூறப்படும் சில முக்கிய விடயங்கள் ஊடகங்களில் கசிந்துள்ளன. ‘ஜேர்மன்விங்ஸ்’ விமானம் பிரான்சில் விபத்துக்குள்ளான நாளில் வானிலை சீராகவே இருந்தது. இதனால் விபத்துக்கான பிரதான காரணி வானிலையாக இருக்க முடியாது என்பது ஓரளவுக்கு உறுதியாகியது. மேலும் வேறு எந்த காரணத்தால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் அல்லது இது வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்டதொன்றா என்பது தொடர்பிலும் பல்வேறு கருத்துக்கள் வெளியாகிய வண்ணமுள்ளன. இந்நிலையில்…
