News
சிறுவனை விற்க முயன்றோர் கைது
எட்டு வயதுடைய சிறுவனை 50 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்ததாக கூறப்படும் சிறுவனின் சிறிய தந்தை உட்பட மூன்றுபேரை கட்டுகஸ் தோட்டை பொலிஸார் நேற்று முன்தினம் இரவு சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். கட்டுகஸ்தோட்டை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே, அம்ப தென்னை கஹவத்த பிரதேசத்தைச் சேர்ந்த இம்மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுவனின் தாயின் இரண்டாவது கணவரும் அவருடைய சகோதரர் மற்றும் சகோதரியுமே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். விற்பனை செய்ததாக கூறப்படும் சிறுவன், நான்கு பிள்ளைகள்…
உள்ளக விசாரணை அறிக்கை ஓகஸ்டில்
காணாமற்போனோர் தொடர்பிலும் மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாகவும் விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழு தனது இறுதி விசாரணை அறிக்கையை ஓகஸ்ட் நடுப்பகுதியில் வெளியிடவுள்ளது. இதற்கான பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இந்தத் தகவலை நேற்று உறுதிப்படுத்திய ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம, இடைக்கால அறிக்கையை கையளிப்பதற்குரிய திகதியை ஜனாதிபதி செயலகம் இன்னும் வழங்கவில்லை என்றும் கூறினார். இடைக்கால அறிக்கை கடந்த 18 ஆம்திகதி வெளியிடப்படவிருந்தது. அன்றைய தினம் ஜனாதிபதிக்கு முக்கிய சில வேலைகள் இருந்ததால் அந்நிகழ்வு இடம்பெறவில்லை. இந்நிலையில்,…
சூரிய குடும்பத்துக்கு மிக அருகில் பூமியைப் போன்ற இரு கிரகங்கள்
சூரிய குடும்பத்தில் பூமியைத் தவிர ஏனைய 8 கிரகங்களிலும் பூமியைப் போன்ற சிக்கலான உயிர் வாழ்க்கை இருப்பதற்கான ஆதாரம் மனிதனுக்கு இதுவரை கிடைக்கவில்லை. மேலும் பிரபஞ்சத்தில் வேறு பல நட்சத்திரங்களைச் சுற்றி வரும் பிற கிரகங்கள் ஏதாவது பூமியைப் போன்ற உயிர் வாழ்க்கைக்கு சாதகமான சூழ்நிலைகளுடன் உள்ளனவா எனவும் மனித இனம் பல நூற்றாண்டுகளாகவே ஆராய்ந்து வருகின்றது. இந்நிலையில் நமது சூரிய குடும்பத்துக்கு மிக அருகில் அமைந்துள்ள நட்சத்திரமான ப்ரொக்ஸிமா சென்டௌரி மற்றும் அல்ஃபா சென்டூரி A…
இலங்கையின் படையினர் வலுப்படுத்தப்பட வேண்டும் – பிரதமர் ரணில்
இலங்கையின் படையினர் வலுப்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ வடக்குக்கான விஜயத்தின்போது பலாலியில் வைத்து வலியுறுத்தினார். இந்த அடிப்படையில் தரைப்படை, விமானப்படை மற்றும் கடற்படை என்பன நவீனமயப்படுத்தப்பட வேண்டும் என்று ரணில் குறிப்பிட்டார். ஆசிய பிராந்தியத்தில் 2025ஆம் ஆண்;டளவில் ஏற்படப்போகும் அச்சுறுத்தல்களை சமாளிக்க புதிய திட்டங்கள் முன்னெடுக்கப்படுவது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார். படையினரை வலுப்படுத்தும் அதேநேரம் இலங்கையில் பொருளாதார வளர்ச்சியும் முன்னோக்கிச்செல்லவேண்டும் என்றும் ரணில் கேட்டுக்கொண்டார். எனவே பழையவற்றை பார்க்காமல் எதிர்காலத்தை பற்றி சிந்திக்க…
இன்று தம்பியின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்கிறார் ஜனாதிபதி
சீனாவுக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நாடு திரும்புகிறார். நாடு திரும்பியவிடன், தனது சகோதரர் பிரியந்த சிறிசேனவின் இறுதிக் கிரியைகளில் ஜனாதிபதி பங்கேற்பார் என தெரிவிக்கப்படுகிறது.
இன்று முதல் இலவச வைபை இண்டர்நெட் கிடைக்கும் 26 இடங்களும், பாவனை முறையும்
-Razana Manaf- புதிய அரசின் தேர்தல் வாக்குறுதியின் ஒரு அம்சமான இலவச வை பை இன்டர்நெட் சேவை இன்று முதல் நாட்டில் முக்கிய இடங்களில் அறிமுகப்ப்டுத்தபட உள்ளது. 1. கோட்டை புகையிரத நிலையம் 2. கோட்டை பஸ் நிலையம் (தனியார், அரச) 3. கண்டி தலதா மாளிகை 4. புறக்கோட்டை மிதக்கும் சந்தை 5. கொழும்பு சட்டக்கல்லூரி 6. கொழும்பு பொது நூலகம் 7. லிபர்டி பிளாசா 8. கொழும்பு ரேஸ்கோர்ஸ் 9. போலிஸ் தலைமையகம் 10….
மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதியதில் ஸ்தலத்தில் இருவர் மரணம்- இது மட்டக்களப்பு சோகம்
செய்யித் அப்ஷல் மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிலுள்ள கிரான் சந்தியில் சற்று முன்னர் (ஞாயிறு இரவு 10.30 மணி) இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர். கிரான் பகுதியைச் சேர்ந்த எஸ். ஆதித்தன் (வயது 36) மற்றும் விநாயகம் ஜெயபிரதாப் (வயது 24) ஆகிய இருவருமே பலியாகியுள்ளனர். கொழும்பு மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் வேக கட்டுப்பாட்டை மீறி கிரான் பாடசாலைக்கு எதிரில் வீதி ஓரத்தில் இருந்த…
வௌியானது க.பொ.த சா/த பரீட்சை பெறுபேறுகள்
2014ம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வௌியாகியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். இணையத்தில் வௌியிடப்பட்டுள்ள பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk ஆகிய இணையத்தள முகவரிகளில் பார்வையிடலாம். பரீட்சையில் சித்தியடைந்தோருக்கு வாழ்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
அமைச்சர் றிஷாத் பிரதமரிடம் கோரிக்கை
முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்,தமிழ் மக்களது காணிப் பிரச்சினைகள் தொடர்பில் துரித தீர்வினை பெற்றுக் கொடுக்குமாறும் முஸ்லிம்களது காணிகளை விடுவித்து கொடுக்கும் வகையில் ஒரு வாரகாலத்துக்குள் விசேட அமைச்சரவை பத்திரம் ஒன்றினை சமர்ப்பிக்குமாறும்,துரித கதியில் முஸ்லிம்களது மீள்குடியேற்றத்தை நிறைவு செய்யும் வகையில் முல்லை மாவட்ட முஸ்லிம்களது மீள்குடியேற்றம் தொடர்பிலான அறிக்கையொன்றினை சமர்ப்பிக்குமாறும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமி நாதனுக்கு பிரதமர் ரணில் விகரமசிங்க பணிப்புரை வழங்கினார். முல்லைத்தீவு மாவட்டத்துக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று ஞாயிற்றுக் கிழமை வருகைத்தந்தார் .யுத்தத்தால்…
சிரியாவின் நெஞ்சைப் பிழியும் சோகம்
AHAMED DEEDAT சிரியாவில் புகைப்படம் எடுக்க குறிபார்த்த கேமராவை துப்பாக்கி என கருதிய ஒரு சிறுமி தனது கைகள் இரண்டையும் தலைக்கு மேலே தூக்கி சரணடையும் பாணியில் நிற்கும் புகைப்படம் அந்நாட்டில் குழந்தைகள் பட்டுவரும் துன்பத்தையும், வேதனையையும் தோலுரித்துக் காட்டியுள்ளது. உள்நாட்டுப் போரினால் சிரியா மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மக்களை மொத்த உலகமும் கைவிட்டு விட்டதாக ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி-மூன் வேதனை தெரிவித்துள்ளார். 2011-ல் சிரியாவில் அமைதியான வழியில் அந்நாட்டு அரசுக்கு எதிராக ஆரம்பித்த…
பாயிசுக்கு எதிராக பிரதியமைச்சர் அமீர் அலி குற்றப்பத்திரிகை
அஸ்ரப் ஏ சமத் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான ஏ.ஜே.பாயிசுக்கு எதிராக குற்றப்பத்திரிகை ஒன்றை அனுப்பியுள்ளதாக வீடமைப்பு மற்றும் சமுர்த்தி பிரதியமைச்சர் எம். எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுத்தீனால் மேற்படி பாயிசை விசாரணைசெய்து ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்காக கட்சியினால் பிரதியமைச்சர் அமீர் அலி நியமிகக்ப்பட்டிருந்தார். ஏற்கனவே ஓழுக்காற்று குழுவின் தலைவர் பிரதியமைச்சர் அமீர் அலியினால் 13.03.2015திகதி பாயிசுக்கு எதிரான…
இன்று ஜும்மாவின் பின்னர் புனித இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். நடிகர் கராத்தே ராஜா
தமிழ்நாடு: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த மணலூரை சேர்ந்தவர் கராத்தே ராஜா என அழைக்கப்படும் நடிகர் ராஜா புனித இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டுள்ளதாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் உறுப்பினர் சகோ. யாசர் அரபாத் தம் முகநூலில் சற்றுமுன் தெரிவித்துள்ளார். தமிழ் படங்களில் குணசித்திர, வில்லனாகவும், நடிகராகவும், பாத்திரம் ஏற்று இவர் நடித்துள்ளார். சகோ. யாசர் அரபாத் அவர்களின் முகனுளில் இருந்து.. அல்லாஹ் அக்பர் !! நடிகர் ராஜா இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் !!…
