News
சவூதி அரேபியாவின் போக்குவரத்து விதிகளின் படி சிகப்பு விளக்கு எரியும் போது…!
சவூதி அரேபியாவின் போக்குவரத்து விதிகளின் படி சிகப்பு விளக்கு எரியும் போது…! சவூதி அரேபியாவின் போக்குவரத்து விதிகளின் படி சிகப்பு விளக்கு எரியும் போது வலது புறம் திரும்புபவர்கள் மட்டும் சில வினாடிகள் நின்று விட்டு வலது புறம் திரும்பினால் சிக்னலுக்கான கேமரா படம் பிடிக்காது. அவ்வாறு சில வினாடிகள் நிற்காமல் அப்படியே வலது புறம் திரும்பினால் கேமரா படம் பிடித்து அவராதம் விதிக்கப்பட்டது. ஆனால் இன்று முதல் வலது புறம் திரும்புவதாக இருந்தாலும் பச்சை விளக்கு…
(விபரங்கள் இணைப்பு) காது கேட்பதன் மூலம் வாய் பேச உதவுவீர்களா?
– ஏறாவூர் அபூ பயாஸ் – அன்பின் சகோதரர்களே, ஏறாவூர்,மிச் நகரை சேர்ந்த காது கேட்காத,வாய் பேச முடியாதிருந்த நான்கு வயது சகோதரன் ரிப்தி ,உங்கள் மேலான உதவிகளைக்கொண்டு செய்யப்பட்ட 16-11-2013 அன்று செய்த சத்திர சிகிச்சை மூலம் “இன்று ஒரு குழந்தை எவ்வாறு தன் பேசும் திறனை வெளிப்படுத்துமோ அவ்வாறு இன்று பேச ஆரம்பித்திருக்கிறான்”. அல்ஹம்துலில்லாஹ். சகோதரன் ரிப்தியை பேச வைப்பதற்காக நீங்கள் எல்லாம் எடுத்துக் கொண்ட முயற்சிகள் வார்த்தைகளால் சொல்ல முடியாதவை. இதனால் கிடைக்கின்ற…
O Level Result.. கல்முனையில் இரு முஸ்லிம் பாடசாலைகளின் மாணவ, மாணவிகள் வரலாற்று சாதனை படைத்தனர்
– அஸ்ஹர் இப்றாஹிம் – அண்மையில் வெளியிடப்பட்ட க.பொ.த. சாதாரணதரப் பரீ்ட்சை முடிவுகளின்படி கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மற்றும் கல்முனை மஹ்முத் மகளிர் கல்லூரி ஆகியவற்றிலிருந்து 415 மாணவ மாணவிகள் க.பொ.த. உயர்தரப் பிரிவில் விஞ்ஞான , வர்த்தக , கலை மற்றும் தொழில்நுட்பவியல் துறைகளில் கல்வி கற்க தகுதி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர். கல்முனை வலயத்திலுள்ள பாடசாலைகளுள்ளும் , அம்பாறை மாவட்டத்திலுள்ள பாடசாலைகளள்ளும் , அகில இலங்கையிலுமுள்ள முஸ்லிம் பாடசாலைகளுள்ளும் இவ்விரு கல்லூரிகளிலுமிருந்து பெரும்…
மனைவியை மீட்டுத்தரும்படி கணவன், குழந்தை, வெட்டுக்கத்தி மற்றும் விஷ போத்தலுடன்..
சேவைக்காலம் நிறைவடைந்தும் சவுதி அரேபியாவில் பணியாற்றி வரும் தனது மனைவியை இலங்கைக்கு அழைத்து வரும் படி கூறி நபரொருவர் வேலைவாய்பு பணியகமொன்றின் முன் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். குருநாகலையில் உள்ள வேலைவாய்ப்பு பணியகமொன்றின் முன்னாலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தனது பிள்ளையுடனேயே குறித்த கணவர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். வெட்டுக்கத்தி மற்றும் விஷ போத்தல் ஆகியவற்றையும் அவர் தன் வசம் வைத்திருந்துள்ளார். பின்னர் அவ்விடத்துக்கு வந்த பொலிஸார் அவரை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பியுள்ளனர்.
ஜேர்மன் விமான விபத்து: துணை விமானியின் கடைசி வார்த்தைகள்…மலையில் மோதும் வரை திக் திக் நிமிடங்கள்
ஜேர்மன் விமானம் விபத்துக்குள்ளாவதற்கு சில நிமிடங்களுக்கு முன் துணை விமானி பேசிய கடைசி வார்த்தைகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 24ம் திகதி பிரான்ஸ் ஆல்ப்ஸ் மலையில் மோதி விபத்துக்குள்ளான விமானத்தில் முதன்மை விமானியும், துணை விமானியும் பேசிக்கொண்ட உரையாடல்களை கருப்பு பெட்டியிலிருந்து அதிகாரிகள் சேகரித்துள்ளனர். அதில், முதன்மை விமானியான Patrick Sondenheimer(34) என்பவர் பயணிகளை நோக்கி பார்சிலோனாவிலிருந்து விமானம் 26 நிமிடங்கள் தாமதமாக கிளம்புவதற்கு தான் மன்னிப்பு கோருவதாகவும், ஆனால், டஸல்டார்ஃப் (Dusseldorf) விமான நிலையத்திற்கு…
பிறந்த குழந்தைகளின் செவிப்புலனை பரிசோதிக்கும் இயந்திரம் அறிமுகம்!
இலங்கையில் பிறக்கும் சிசுக்களின் செவிப்புலன் நிலமையைப் பரீட்சிப்பது தொடர்பான முதலாவது இரண்டு நாள் செயலமர்வு (30.03.2015) நேற்று கண்டி, பேராதனை, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா சிறுவர் ஆஸ்பத்திரியில் ஆரம்பமாகியது. இலங்கை நாட்டில் முதல் முறையாக பிறந்த குழந்தைகளுக்கு உடனடியாக செவிப்புலன் பரீட்சிக்கும் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இச்செயலமர்வின் இரண்டாம் நாளான இன்று (31ம் திகதி) முற்பகல் 11.00 மணிக்கு பிறந்த சிசுவின் செவிப்புலன் நிலமையைச் செயல் ரீதியாகப் பரீட்சிக்கும் நிகழ்வு பேராதனை போதனா வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர்…
வடக்கு- கிழக்கு ரயில் போக்குவரத்து கால அட்டவணையில் மாற்றம்
வடக்கு- கிழக்கு ரயில் போக்குவரத்து கால அட்டவணையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் இம்மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும் பல புதிய ரயில்களை போக்குவரத்தில் இணைத்துக்கொள்ளும் நோக்கில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம்- மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கான ரயில் போக்குவரத்து கால அட்டவணையில் இம்மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
மத்திய மாகாண சபை தவிசாளருக்கு இரண்டரை வருட சிறைத்தண்டனை
தேர்தல் வன்முறை, வாக்கு மோசடி, தேர்தல் பணியாளர்களுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் ஆயுதத்தைக் காட்டி அச்சுறுத்தல் விடுத்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ள மத்திய மாகாண சபை தவிசாளர் மஹிந்த அபயக்கோனுக்கு கண்டி மேல் நீதிமன்றம் இரண்டரை வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இவர் மீது சுமத்தப்பட்டிருந்த மூன்று குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டிருந்ததன் பேரில் ஆறு மாத கால சிறைத் தண்டனையும் ஏனைய இரு குற்றச்சாட்டுக்களுக்கும் தலா ஒருவருடம் என்ற ரீதியில் இரண்டரை வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 2001…
‘எம்மிடமே பெரும்பான்மை பலம் உள்ளது பதவியை விட்டுக்கொடுக்க மாட்டோம்’
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெறுவதற்கான பெரும்பான்மை பலம் எங்களிடமே இருக்கின்றது. எனவே, எதிர்வரும் ஏழாம் திகதி சபாநாயகர் வெளியிடும் அறிவிப்புக்காக நாங்கள் காத்திருக்கின்றோம் என்று மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். பெரும்பான்மை பலமில்லாத ஒருவரை எதிர்க்கட்சித் தலைவராக சபாநாயகர் அறிவிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் குறித்து குறிப்பிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஐக்கிய தேசிய கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து தேசிய…
ஆராயும் விஷேட அபிவிருத்தி குழு கூட்டம்
கோறளைப்பற்று மேற்கு, கோறளைப்பற்று மத்தி ஆகிய இரு பிரதேச செயலாளா் பிரிவில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அரச அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பில் ஆராயும் விஷேட அபிவிருத்தி குழு கூட்டம் நேற்று (30) பிரதேச செயலகங்களின் கேட்போர் கூடத்தில் பிரதியமைச்சா் எம்.எஸ்.எஸ்.அமீா் அலி தலைமையில் நடைபெற்றது. இதன் போது கோறளைப்பற்று பிரதேச செயலாளா் எம்.எம்.நௌபா், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளா் திருமதி நிஹாரா மௌஜூத்,பிரதேச சபை தவிசாளா் கே.பீ.எஸ்.ஹமீட்,பிரதி தவிசாளா் ஏ.எம்.நௌபா், செயலகத்தின் உதவித்திட்டமிடல் அதிகாரிகளான எஸ்.ஏ.றியாஸ், எச்.எம்.எம்.றுவைத்…
GSP Plus work commences
Lanka commences GSP+ process with EU Discussions get wider, includes trade call Bilateral trade now almost at $5Bn As bilateral trade between EU and Sri Lanka edged to $5Bn mark, Sri Lanka has commenced its talks on the recovery of the GSP Plus from EU on 24 March in Colombo, strengthened by previous positive vibes…
First European R&D breakthrough for Lankan apparels
Within a day after Sri Lanka and EU successfully joining in Colombo for the redux of the sought after GSP Plus to boost its apparel exports, comes yet another coveted technical breakthrough extended through a surging EU economy –and this support stream connects not only to Lanka’s finished apparels but even its manufacturing core itself-opening…
