Headlines

நேதாஜி மரணம் குறித்த மர்மங்களை வெளியிடலாமா? ஆய்வுக் குழுவை நியமித்தது இந்திய அரசாங்கம்

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மரணம் குறித்த மர்மங்களை வெளியிடலாமா என்று ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க மத்திய அரசு புதிய அதிகாரிகள் கொண்ட குழுவை நியமித்துள்ளது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மர்மங்களை வெளியிட வேண்டும் என்று நேதாஜியின் குடும்பத்தாரும் ஆர்வலர்களும் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர். இருப்பினும் பிரதமர் அலுவலகம் வெளி நாடுகளுடனான உறவு பாதிக்கப்படக் கூடும் என்று மறுத்து வந்தது. இந்நிலையில் ஜெர்மனில் நேதாஜியின் கொள்ளுப் பேரன் சூரியக் குமார் போஸ், பிரதமரை…

Read More

இலங்கையின் சிறிய நடுத்தர கைத்தொழில்களை ஊக்குவிப்பதில் தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் பங்களிப்பு அளப்பரியது

இலங்கையின் சிறிய நடுத்தர கைத்தொழில்களை ஊக்குவிப்பதில் தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் பங்களிப்பு அளப்பரியது. – தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் முஹ்லிஸ் வஹாப்தீன் இலங்கையின் சிறிய, நடுத்தர அளவிலான கைத்தொழில்களை ஊக்குவிப்பதில் தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை நாடளாவிய ரீதியில் பல ஊக்குவிப்புகள், செயலமர்வுகள் கருத்தரங்குகள், கண்காட்சி மூலம் சிறு உற்பத்திகளுக்குரிய உலக சந்தை வாய்ப்பினை பெற்றுக் கொடுத்தல் போன்ற பல வேலைத்திட்டங்களை செயற்படுத்துகிறது. சந்தைக்கு தேவையான பொருட்களை உற்பத்தி…

Read More

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பப்படிவம் விரைவில்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பதற்கான விண்ணப்பப்படிவம் அடங்கிய கைநூல் அடுத்த மாதம் வெளியிடப்படவுள்ளது. புதிய பாடநெறிகள் மற்றும் ஏனைய பாடநெறிகள் தொடர்பான அனைத்து விபரங்களும் உள்ளடக்கப்பட்டு இந்த கைநூல் விநியோகிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த வருடம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை எதிர்வரும் ஒகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்க உத்தேசித்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் பீ.ஏச்.எம் குணரத்ன கூறியுள்ளார்

Read More

நேபாளத்தின் முன்னாள் பிரதமர் சூர்யா பஹடுர் தப்பா காலமானார்!

நேபாளத்தின் முன்னாள் பிரதமர் சூர்யா பஹடுர் தப்பா தனது 87 ஆவது வயதில் நேற்று (15) காலமானார். இவர் நேபாளத்தின் அரசியல் வாழ்வில் கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு மேல் இருந்தவராவார். அத்துடன் பிரதமர் பதவியில் சுமார் 05 முறைகள் பதவி வகித்துள்ளார். புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த  மார்ச் 29 ஆம் திகதி இந்தியாவின் ஜேகார்ன் மாநிலத்திலுள்ள மெடன்ரா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் அந்த வைத்தியசாலையிலேயே நேற்று (15) இவர் உயிரிழந்துள்ளார். ஆயினும்…

Read More

சவுதியின் ஒரு விமானி வானில் பறந்து போர் செய்ய புறப்படும் முன்பு தனது குல கொழுந்துகளான தனது குழந்தைகளை கட்டிபிடித்து முத்தமிட்டு விடை பெறும் உருக்கமான காட்சி!

நிலத்தில் நின்று போர் செய்தது அந்த காலம் வானில் பறந்தது போர் செய்வது இந்த காலம் வலுவான தரைபடையை கொண்டிருந்தாலும் வான்படையின் வலுவில்லாமல் போரில் வெல்ல முடியாது இந்த காலம் வலுவான வான்படை மேலைய நாடுகளிடம் தான் இருக்கிறது என்ற நிலையை மாற்றி வலுவான வான் தாக்குதலை எங்களாலும் நடத்த முடியும் என்பதை சவுதி அரேபியாவின் விமான படை விமானிகள் உறுதி செய்துள்ளனர் அவர்கள் வானில் பறந்து நடத்திய போரினால் வெற்றி முகத்தை நெருங்கி விட்டனர் ஹவுத்திகள்…

Read More

சவூதியில் தனது அன்றாட செலவுக்கு கிடைத்த பணத்தை சேமித்து இறந்து விட்ட தனது தந்தைக்கு நிரந்தர நண்மையை சேர்த்து வைப்பதர்காக ஏழைகளுக்கு கிணறு அமைத்து கொடுக்கும் சிறுவன்

படத்தில் நீங்கள் பார்க்கும் சிறுவன் சவுதி அரேபியாவை சார்ந்தவன் இவனது தந்தை மரணம் அடைந்து விட்டார் மரணடைந்த தனது தந்தைக்கு நிரந்தர நன்மைகளை சேர்த்து வைக்கும் விதத்தில் எதாவது நண்மைகளை செய்ய வேண்டும் என்று எண்ணிய அந்த சிறுவன் அவனுக்கு அவனது வீட்டில் செலவுக்காக வழங்கும் காசுகளை சேமிக்க துவங்கினான் சில மாதங்களாக தொடர்ந்து சேமித்த அந்த தொகையை ஒரு தொண்டு நிறுவனித்திடம் ஒப்படைத்து ஏழை முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் அவர்களின் தண்ணீர் தேவைகளை நிவர்த்தி செய்யும்…

Read More

ஒரு ஊரே இஸ்லாத்தை ஏற்ற நிகழ்ச்சி. பொலிஸார் ஊருக்கே சீல் வைத்ததால் பரபரப்பு

-Fahad Ahmed PM- தடையை மீறி இஸ்லாத்தை ஏற்ற ‘வால்மீகி’ மக்கள் ! ஊர் எல்லைக்கு ‘சீல்’ வைத்த போலீசின் திட்டம் தூள் தூள் ! ராம்பூரின் அனைத்து எல்லைகளுக்கும் ‘சீல்’ வைத்து போலீஸ் கட்டுப்பாட்டில் சுற்றிவளைக்கப்பட்ட நிலையிலும், தடைகளை தகர்த்தெறிந்து ‘வால்மீகி’ கிராம மக்கள் இஸ்லாத்தை ஏற்றனர். தங்கள் குடியிருப்புக்களை ஊரைவிட்டு அப்புறப்படுத்தும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், தீண்டாமை கொடுமையிலிருந்து விடுதலை பெறும் நோக்கத்தில், ஒட்டுமொத்த ‘வால்மீகி’ கிராம மக்களும் இஸ்லாத்தை ஏற்பதாக அறிவிப்பு செய்ததால்பெரும்…

Read More

அப்பாவின் ஆபரேஷனுக்கு 46 லட்சம் நிதி திரட்டிக்கொடுத்த இன்டர்நெட்டின் செல்லக் குழந்தை

இன்டர்நெட் உபயோகிக்கும் அனைவருமே நிச்சயம் வாழ்வில் ஒருமுறையாவது வெற்றிக்குறி காட்டும் சம்மியின் புகைப்படத்தை பார்த்திருப்பார்கள். 2007-ம் ஆண்டு இன்டர்நெட்டில் வலம் வந்த ‘தி சக்சஸ் கிட்’ என்ற ‘மேமே’ வைரல் ஹிட்டானது. அந்த புகைப்படத்தில் இருந்த கொழு கொழு குழந்தை சம்மியை அனைவரும் ரசித்தார்கள். இந்த சக்சஸ் கிட்டின் அப்பா ஜஸ்டினுக்கு கடந்த மாதம் உடல் நலம் குன்றியது. மருத்துவர்கள் அவரது சிறுநீரகம் செயலிழந்திருப்பதாக தெரிவித்தனர். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலைமை உருவானது….

Read More

குழந்தைகளுக்காக சிறுநீரகத்தை விற்கும் தந்தை

இந்தியாவின் , குஜராத்தில் தந்தையொருவர் தனது குழந்தைகள் மூவரை குணப்படுத்தும் பொருட்டு , அவரது சிறுநீரகமொன்றை விற்பனை செய்ய முன்வந்துள்ளார். குறித்த தந்தையின் 2 பெண் குழந்தைகளும் , ஒரு ஆண் குழந்தையும் அதீத உடற்பருமனால் அவதிப்பட்டு வருகின்றனர். இவர்களைக் குணப்படுத்தும் பொருளாதார வசதியை குறித்த தந்தை கொண்டிருக்காமையாலேயே இம்முடிவை அவர் எடுத்துள்ளார். யோகித்தா ரமேஷ்பாய் நந்வானா (வயது 5 ), அனிஷா (வயது 3), ஹர்ஷ் (18 மாதங்கள்) ஆகியோரே இவ்வாறு அதீத எடையால் பாதிக்கப்பட்டுள்ளனர்….

Read More

ரோஹித்த அபேகுணவர்தனவும் நீக்கப்பட்டார்

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவில் இருந்து தன்னை நீக்கியுள்ளதாக முன்னாள் அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். இதற்கான கடிதம் தனக்கு இன்று கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதேபோல ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவில் இருந்து தம்மை விலக்கியுள்ளதாக முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். இது தொடர்பான கடிதம் ஜனாதிபதியின் கையெழுத்துடன் தமக்கு கிடைக்க பெற்றதாக அவர் எமக்கு தெரிவித்திருந்தார். கட்சியின் மத்திய செயற்குழு மேற்கொண்ட தீர்மானத்திற்கு…

Read More

இராணுவத்தினருக்கான பொது மன்னிப்புக் காலம் 25ஆம் திகதி வரை நீடிப்பு

இராணுவத்தில் இருந்து தப்பியோடிய இராணுவத்தினரை சட்ட ரீதியாக விலக அவகாசம் வழங்கும் பொது மன்னிப்புக் காலம் எதிர்வரும் 25ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இக்25ம் திகதி வரை இவ்வாறு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டரீதியாக விலகும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை தமது படையணிக்கு அறிவிக்காமல் விடுமுறையில் இருப்பவர்கள் உடனடியாக ஆஜர் ஆகவும் என இராணுவ ஊடகப் பேச்சாளர் மேலும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏப்ரல்…

Read More

ஈராக்கின் முக்கிய நகரான ராமாடி ISIS வசம் இன்னும் சில மணி நேரங்களில் விழும். சதாம் உசைனின் படை என கூறப்படும் ISIS இற்கு அப்பகுதி மக்கள் அமோக ஆதரவு!

ஈராக் தலைநகர் பக்தாத்தில் இருந்து 113 கிலோமீட்டர் தொலைவில் அன்பார் மாகாணத்தில் அமைந்துள்ள அம்மாகாணத்தின் தலைநகரும் ஈராக் சுனி முஸ்லிம்களின் முக்கிய நகருமான ‘ராமாடி’ இன்னும் சில மணி நேரங்களுக்குள் ISIS வசம் வீழ்ந்து விட உள்ளதாகவும் குறித்த பகுதியில் ஈராக் இராணுவத்துக்கும் ISIS போராளிகளுக்கும் இடையே கடும் சண்டை நிகழ்ந்து வருவதாகவும் ஈராக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து மேற்குலக ஊடகத்துக்குத் தகவல் அளித்த அன்பார் மாகாண கவுன்சிலின் பிரதித் தலைவர் ஃபலிஹ் எஸ்ஸாவி ஒரு…

Read More