News
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிடம் 24ம் திகதி லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விசாரணை!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விசாரணை நடத்த தீர்மானித்துள்ளது. அதன்படி எதிர்வரும் 24ம் திகதி லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதிக்கு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆறாவது தேசிய ரீதியியலான தகவல் தொழில்நுட்ப போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவர்கள் சாதனை
றம்ஸீன் முஹம்மட் ஆறாவது தேசிய ரீதியியலான தகவல் தொழில்நுட்ப போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளனர். கல்வியமைச்சின் தகவல் தொழில்நுட்ப பிரிவு , ஸ்ரீலங்கா கணணி சம்மேளனம் , இலங்கை தகவல் தொழில்நுட்ப சம்மேளனம் ஆகியன கொழும்பு பல்கலைக்கழக கணணிப்பிரிவுடன் இணைந்து அகில இலங்கை ரீதியில் நடாத்திய தகவல் தொழில்நுட்பப்போட்டியில் தேசிய ரீதியில் வெற்றிபெற்ற கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் க.பொ.த.உயர்தர தொழில்நுட்ப பிரிவில் கல்வி பயிலும் கே.எம்.எம்.அஸாம் ஹுசைன் ,…
ஒரு சமூகத்திற்கு மட்டும் இந்த நியமனத்தை வழங்குவதாக பிரசாரங்களை செய்தனர் -றிஷாத் பதியுதீன்
எமது மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்து அபிவிருத்தி திட்ங்கள் தொடர்பிலும் சகல சமூகங்களின் பிரதி நிதிகளுடன் கலந்துரையாடியே அதனை செய்கின்றோம்.நாம் இவ்வாறான வெளிப்படைத்தன்மையினை பேனுவது எம்மில் இனவாத கொள்கையின்மையே ஆனால் சில அரசியல் கட்சிகள் அவர்கள் சார்ந்த மக்களை மட்டும் அழைத்து கலந்துரையாடுவதையும் எம்மால் அவதானிக்க முடிகின்றது என தெரிவித்துள்ள வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் இந்த அரசாங்கத்தின் உருவாக்கத்தின் பின்னணியில் வடக்கு மக்களின் புரந் தியாகங்கள் இருப்பதாகவும் கூறினார். மன்னார்…
சேவையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு
அகில இலங்கை இன நல்லுறவு ஒன்றியத்தினால் ஏற்பபாடு செய்யப்பட்டிருந்த வடமாகாணத்தில் பல்துறைகளில் மக்கள் சேவையாற்றிய மற்றும் ஆற்றிவரும் பிரமுகர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (2015-04-18) வவுனியா நகர மண்டபத்தில் இடம் பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவருமான அமைச்சர் றிஷாத் பதியுதீன் பிரதம அதிதியாகவும்,வீடமைப்பு,சமுர்த்தி பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டு இந்த கௌரவப்பட்டங்களை வழங்கி வைத்தனர்..
சொந்த மண்ணுக்கு திரும்பும் விடத்தல்தீவு மக்கள்
சுஐப் எம் காசிம் மன்னாரில் இருந்து பூநகரி ஊடாக யாழ். நகர் செல்லும் கரையோரப் பாதையில் 15வது மைலில் அமைந்துள்ள அழகிய கிராமம் வித்தல்தீவு. கிராமத்தின் கிழக்கில் அமைந்த வன்னி மேட்டு நிலங்களில் பெய்யும் மழை நீர் ஆறாக உருவாகி ‘நாயாறு’ என்னும் பேராறாகப் பெருகிக் கிராமத்தைச் செழிப்படையச் செய்துள்ளது. இந்த ஆறு கிராமத்தின் வட, தென் எல்லைகளில் மேற்கு நோக்கிப் பாய்ந்து கடலில் சங்கமிக்கிறது. ஆற்றின் கழிமுகம் சிறந்த துறைமுகமாக விளங்குகிறது. கிராமத்தின் கிழக்கில் அமைந்த…
முஸ்லிம் காங்கிரசின் கோட்டையான அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செல்வாக்கு அதிகரித்துள்ளது
-கல்முனை சமீம்- நாட்டில் எந்த நேரத்திலும் பொதுத் தேர்தல் நடைபெறலாம் என்ற நம்பிக்கையில் நாட்டின் அனைத்து பாகங்களிலும் உள்ள அரசியல் கட்சிகள் தங்களது கட்சி நடவடிக்கைகளை விரிவுபடு;த்துவதிலும் புதிய கட்டமைப்புகளை ஏற்படுத்துவதிலும் கூடிய கரிசணை காட்டி வருகின்றன. இந்நிலையானது கிழக்கில் சற்று சூடு பிடித்துள்ளது. இம் மாகாணத்தில் செல்வாக்கு செலுத்தி வருகின்ற முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் ஆகிய முஸ்லிம் கட்சிகள் தற்போதிருந்து தங்களது கட்சிகளின் தொகுதி மற்றும் மாவட்ட, பிரதேச மத்திய குழுக்களை…
நர்ஸாக மாறிய பூனை: நோயுற்ற பிராணிகளுக்கு ஆதரவாகவும் உதவியாகவும் இருக்கும் அதிசயம்
நோயுற்ற பிராணிகளுக்கு ஆதரவாகவும் அவற்றின் நோய் குணமாக உதவி செய்யும் அதிசய கருப்பு பூனை ஒன்று போலந்தில் உள்ளது. ராடேமேனேசா என்கிற அந்த கருப்பு பூனை போலந்தில் உள்ள ஒரு விலங்கு தங்குமிடத்தில் உள்ளது. இரண்டு மாத குட்டியாக இருக்கும் போது சுவாச பையில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக இந்த விலங்குகள் தங்குமிடத்திற்கு கொண்டுவரப்பட்டது. நோயிலிருந்து முழுமையாக குணமடைந்த பிறகு, அதற்கு நன்றி செலுத்தும் வகையில் ஒரு நர்ஸை போல செயல்பட தொடங்கியது அந்த பூனை. விலங்கு…
மூக்கில்லாமல் பிறந்த குழந்தையின் படத்தை தவறுதலாக நீக்கிவிட்டதாக ஒப்புக்கொண்டது பேஸ்புக்
அலபாமாவை சேர்ந்த டிமோத்தி எலி தாம்சன் என்ற மூக்கில்லாத குழந்தையின் புகைப்படத்தை தவறுதலாக நீக்கியதை பேஸ்புக் நிறுவனம் ஒப்புக்கொண்டது. தங்களது சமூக தரத்தையோ, விளம்பர கொள்கைகளையோ மீறியதாக அப்புகைப்படம் இல்லை என்று ஒப்புக்கொண்டுள்ள பேஸ்புக் நிறுவனம், அப்புகைப்படத்தை முதலில் ஆய்வு செய்தவர் தவறுதலாக ஆட்சேபித்ததால் அது அகற்றப்பட்டது. எனினும் புகைப்படத்தை வெளியிட்டவர் தரப்பில் ஆட்சேபம் எழுப்பப்பட்டதால் உடனடியாக தவறு சரிசெய்யப்பட்டு மீண்டும் அப்புகைப்படம் பேஸ்புக்கில் வெளியிடப்பட்டது என்று அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். முன்னதாக தனது மகனின்…
குவைத்தில் இன்னல்களை எதிர்நோக்கிய 80 இலங்கை பணிப்பெண்கள் இன்று நாடு திரும்பினர்
குவைத்தில் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கிய 80 இலங்கை பணிப்பெண்கள் இன்று 18-04-2015 நாடு திரும்பியுள்ளனர். தற்காலிக கடவுச்சீட்டுகள் மூலம் அவர்களை நாட்டிற்கு அழைத்துவந்ததாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இந்த பணிப்பெண்கள் குவைத்திற்கான இலங்கை தூதரகத்தில் தஞ்சமடைந்திருந்த நிலையில், அவர்களை நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 80 பணிப்பெண்களும் நாடு திரும்ப வேண்டும் என்ற ஒரே நிலைப்பாட்டில் குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தில் தஞ்சமடைந்திருந்ததாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டது. இதன்பின்னர் இந்தப் பெண்கள் பணிபுரிந்த இடங்களின் எஜமானர்களுடன்…
பின்னவலை திறந்தவெளி மிருகக்காட்சிசாலையை, 30 ஆம் திகதி வரை இலவசமாகப் பார்வையிடலாம்..!
பின்னவலை திறந்தவெளி மிருகக்காட்சிசாலையை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை இலவசமாகப் பார்வையிட மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய மிருகக்காட்சிசாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் முதலாவது திறந்தவெளி மிருகக்காட்சிசாலை பின்னவலையில் நேற்று (17) திறந்துவைக்கப்பட்டது. முதல் நாளிலேயே சுமார் இருபதாயிரத்துக்கும் அதிகமானவர்கள் திறந்தவெளி மிருகக்காட்சிசாலையைப் பார்வையிட்டுள்ளதாக தேசிய மிருகக்காட்சிசாலைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனுர டி சில்வா குறிப்பிட்டார். குறிப்பாக பின்னவலை யானைகள் சரணாலயத்தைப் பார்வையிடச் செல்கின்றவர்கள், அதன் அருகாமையிலுள்ள திறந்தவெளி மிருகக்காட்சிசாலைக்கும் சென்று மிருகங்களைப் பார்வையிடுவார்கள்…
இரண்டு கண்களின் பார்வையையும் இழந்த நிலையிலும் திருமறை அல் குர்ஆனை முழுமையாக மனனம் செய்து சாதனை படைத்த சாதனையாளர்
படத்தில் இருப்பவர் தனது .இரு கண்களின் பார்வையையும் முழுமையாக .இழந்தவர் ஆயினும் அதை காரணமாக வைத்து சோம்பேறியாகி முடங்கி விடாமல் தனது அயராத தொடர் முயர்ச்சியினால் திருமறை குர்ஆனின் 30 பகுதிகளையும் திறம்பட மனனம் செய்துள்ள ஹாபிழாக தன்னை மாற்றி சாதனை படைத்துள்ளார் புற வெளிச்சம் இல்லை என்றாலும் அருள்மறை அல்குர்ஆன் என்னும் பேரொளியை தமது உள்ளத்தில் ஏற்றி வைத்த இறைவனுக்கு தாம் நன்றி சொல்வதாகவும் குர்ஆனை முழுமையாக மனனம் செய்யும் ஆற்றலையும் திறனையும் தமக்கு வழங்கி…
நெஞ்சம் நெகிழ வைக்கும் ஒரு சம்பவம்….!!
சாலையில் ஒரு பூனை விபத்தில் அடிப்பட்டு விடுகிறது. உடனே அந்த பூனையை சக பூனை ஒன்று ஓரமாக கொண்டு சென்று அந்த பூனைக்கு உயிர் கொடுக்க எவ்வளவோ முயற்சி செய்கிறது, பின்னர் அந்த பூனை இறந்து விட்டதை உறுதி செய்து கொண்ட பின் காவல்காத்து இருக்கிறது…. சாலைகளில் மனிதர்கள் விபத்தில் பாதிக்கப்பட்டால் அங்கே உதவி செய்ய சென்றால் தம்முடைய அலுவல் பாதிக்கப்படும் என்று ஈவு இரக்கம் இல்லாமல் இருக்கும் மனிதர்களுக்கு இப்படம் சமர்ப்பணம். மேலும், சில இடங்களில் சாலை விபத்து…
