News
இழுபறி நிலையை முடிவுக்குக் கொண்டுவர ஜனாதிபதியும், சபாநாயகரும் பங்களித்தார்கள் – ரணில்
நிறைவேற்று ஜனாதிபதியாக தெரிவாகும் எவரும் தமது அதிகாரத்தை கைவிடுவதில்லை. அந்த கருத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாற்றியுள்ளார். பாராளுமன்றத்தை பலப்படுத்துவதற்காக வரலாற்று முக்கியமான நடவடிக்கையை அவர் எடுத்திருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 19ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் பதிலளித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 1978ஆம் ஆண்டின் அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்ட பின்னர் 5 பேர் இந்த பாராளுமன்றத்தில் இருக்கின்றனர். இதில் சம்பந்தன் எம்.பி தவிர நாம் மூவர் நிறைவேற்று…
19ஆவது திருத்தச்சட்டமூலம் சற்றுமுன்னர் நிறைவேற்றப்பட்டது
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டமூலம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளினால் நாடாளுமன்றத்தில் சற்றுமுன்னர் நிறைவேற்றப்பட்டது. இரண்டாம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பின்போது இதற்கு ஆதரவாக 215 வாக்குகளும், எதிராக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டன. ஒரு உறுப்பினர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. எதிராக வாக்களித்தவர் சரத்வீரசேகர எம்பியாக இருக்கலாம் என்று பாராளுமன்ற வட்டார தகவல்கள் தெரிவிப்பதாக எமது கொழும்பு செய்தியாளர் குறிபிட்டார். இன்றைய வாக்கெடுப்பின் போது ஜானக பண்டார, ஜகத் பாலசூரிய, எல்லாவல மேதானந்த தேரர், கெஹலிய ரம்புக்வெல்ல, பசில் ராஜபக்ஷ, விநாயகமூர்த்தி, பிரேமலால் ஜயசேகர ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள்…
(படங்கள் இணைப்பு) பற்றி எரிகிறது அமெரிக்காவின் பால்டிமோர் நகரம். கடைகள், நிறுவனங்கள் கொள்ளை
அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கறுப்பின இளைஞர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து மிகப் பெரிய அளவிலான போராட்டங்களும் வன்முறைகளும் தொடர்கின்றன. கறுப்பினத்தவரின் கோபத்தால் பால்டிமோர் நகரமே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது… அமெரிக்காவில் போலீசாரின் தாக்குதலில் கறுப்பின இளைஞர்கள் படுகொலையாவதும் இதற்கு எதிரான போராட்டங்கள் வெடிப்பதும் தொடர் கதையாகி வருகிறது. அண்மையில் பால்டிமோர் நகரில் ப்ரெட்டி கிரே என்ற கறுப்பின இளைஞர் ஒருவரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்று மிகக் கொடூரமாக தாக்கியுள்ளனர். இந்நிலையில்…
இலங்கைக்கு வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவினர் வந்திருப்பதால், கள்ளர் கூட்டம் அதிர்ந்து போயுள்ளது – ரணில்
நிதி மோசடி தொடர்பில் வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் சிலருக்கு வயிற்றோட்டம் ஆரம்பித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் இன்று காலை 9 மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடியது. 19வது திருத்தச் சட்டமூலம் நேற்று சபையில் சமர்ப்பிக்கப்பட்டதோடு, சட்டமூலம் மீதான இரண்டாம் நாள் விவாதம் தஇன்று நடைபெறுகின்றது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சியின்போது இடம்பெற்ற நிதி மோசடி மற்றும் வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள…
நிலநடுக்கத்தால் காத்மாண்டு நகரம் 10 அடி தூரம் தெற்காக நகர்ந்துள்ளது: வல்லுனர்கள் தகவல்
நேபாளத்தை புரட்டி போட்ட நிலநடுக்கத்தால் அந்நாட்டின் தலைநகர் காத்மாண்டு 10 அடி தூரம் தெற்காக நகர்ந்துள்ளதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் இமயமலையின் உயரத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்று கூறியுள்ளனர். கடந்த சனிக்கிழமையன்று நிகழ்ந்த 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் இதுவரை 4300-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதுடன், 8000-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக அதிக அளவில் நிகழ்ந்த இந்த நிலநடுக்கத்திற்கு பின் ஏற்பட்ட ஒலி அலைகள் மூலம் பெறப்பட்ட நிலஅதிர்வு தரவின்…
நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பம் 20 அணுகுண்டு வெடித்ததற்கு சமம்: அதிர்ச்சி தகவல்
நேபாளத்தில் கடந்த 25–ஆம் திகதி (சனிக்கிழமை) 7.9 ரிக்டரில் பூகம்பம் ஏற்பட்டது. அதில் காத்மாண்டு, போக்ரா, தீர்த்திநகர் உள்ளிட்ட பெரும் பாலான இடங்களில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள், ஓட்டல்கள் இடிந்து தரை மட்டமாயின. இடிபாடுகளுக்குள் சிக்கி ஏராளமானவர்கள் பலியாகினர். இதுவரை 4,310 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இடிபாடுகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. இடிபாடுகளுக்குள் இன்னும் பிணங்கள் கிடக்கின்றன. எனவே பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டும் என அஞ்சப்படுகிறது. மேலும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம்…
நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் 80 லட்சம் மக்கள் பாதிப்பு: ஐ.நா.சபை தகவல்
பூகம்பத்தால் சின்னா பின்னமான நேபாளத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த பூகம்ப சேதம் குறித்து ஐ.நா.சபை கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. இந்த பூகம்பத்தில் 39 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதில் 11 மாவட்டங்கள் மிக கடுமையான பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. சுமார் 80 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்படுவதால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். தெருக்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கூடாரங்களில் குடும்பத்துடன் தங்கியுள்ளனர். அவை போதுமான…
இலங்கையிலிருந்து சவூதி அரேபியாவுக்கு சென்றவர், 3 நாட்களின் பின் விபத்தில் வபாத்
-அனா- சவுதிஅரேபியாவின் ரியாத் நகரில் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம் பெற்ற வாகண விபத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தந்தை இஸ்தலத்திலயே மரணமடைந்துள்ளார். ஓட்டமாவடி முதலாம் வட்டாரம் ஐ.எம்.எல். ஐஸ்வாடி வீதியைச் சேர்ந்த புஹாரி முஹம்மது முஹம்மது பாஸில் (வயது – 28) எனும் இரண்டு வயது குழந்தையின் தந்தையே இவ்வாறு மரணமடைந்தவராவார். மரணமடைந்தவர் வெளிநாட்டுக்கு தொழில் நிமித்தம் கடந்த 23.04.2015ம் திகதி இலங்கையில் இருந்து சென்றுள்ள வேளையில் 26.04.2015ம் திகதி நல்லிறவு…
அசைவப்பிரியர்களே…. இது உங்களுக்கான டிப்ஸ்!
அமிலமான(Fatty Acid) ஒமேகா-3 இயல்பான வளர்ச்சிக்கும், உடல்நலத்திற்கும் மிகவும் இன்றியமையாதது. ஒமேகா 3 உள்ள உணவுகள் ஒமேகா 3 உள்ள உணவுகளில் முதன்மையானவவை மீன்கள். அதுவும் சால்மன், துனா, சார்டின், ஹெர்ரிங், நெத்திலி போன்றவற்றில் அதிகம் அளவு ஒமேகா 3 உள்ளது. இந்த வகை மீன்களை வறுக்காமல் உண்டால் இதயத்திற்கு மிகவும் நல்லது. வாரம் ஒருமுறை இந்த மீன்களை உண்டால் மாரடைப்பு வரும் சாத்தியக்கூறு 44% குறைகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வால்நட் போன்ற கொட்டைகளிலும், ஆலிவ்…
ஓமன்:(மஸ்கட்டில்) வெளிநாட்டவருக்கு பொது மன்னிப்பு அறிவிப்பு!
ஓமனில் உள்ள ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. ஓமனில் பொது மன்னிப்பு வழங்க முடிவு செய்துள்ளது. மன்னர் நோய்வாய் பட்டு அதில் இருந்தது புரணகுணம் அடைந்த நிலையில் இதை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றன. இதனை முன்னிட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அங்கிருந்து வரும் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. இதை முடிந்த அளவு பயன்படுத்தி கொள்ள அங்குள்ள தூதரக அதிகாரியும் செய்தி வெளியிட்டுள்ளது. இது வருகிறது ஜூன் 1 முதல 30 வரை இருக்கும் என்று…
அரேபிய சட்டங்களை அறியாதவர்களாக நாம்..!
நாளுக்குநாள் வேலைத்தேடி அரேபிய தீபகற்பத்திற்கு படையெடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. தகைமைக்கு தகுந்த தொழில், கூடிய ஊதியம் என உழைப்பு ஒன்றை நோக்காக கொண்டே இந்த படையெடுப்புகள் நடந்தேறுகின்றன. இவ்வாறானதொரு சூழலில் நமது சொந்தபந்தங்கள், நண்பர்கள் தமது குடும்ப உறுப்பினர்களுக்கு பாசத்தின் விளைவாக பண்டங்களை பரிமாறிக்கொள்வது வழமை. கத்தார், சவூதி அரேபியா, குவைத், ஓமான், பஹ்ரைன் என எந்த நாடுகளை எடுத்தாலும் குறைந்தபட்சம் இரண்டு வருட பணி ஒப்பந்தம் செய்தாக வேண்டும். என்னத்தான் தொழிற்நுட்பங்கள்…
A/C-ஆல் ஏற்படும் விபரீத விளைவுகள் – எச்சரிக்கும் மருத்துவர்கள்!li
‘ராத்திரி முழுக்க ஒரே புழுக்கம்… தாங்கவும் முடியல… தூங்கவும் முடியல… எவ்வளவு செலவானாலும் புது ஏசி வாங்கி வீட்ல மாட்டப்போறேன்!’’ இப்படி அங்கலாய்த்துக் கொள்பவரா நீங்கள்? அப்போது நீங்கள்தான் முதலில் இதைப் படிக்க வேண்டும்! ஒரு காலத்தில் ஏர்கண்டிஷனர் சாதனம் ஆடம்பரப் பொருளாக இருந்தது. காலத் தின் தேவையில் அலுவலகங்கள் குளிர் சாதன வசதிக்கு மாறிவிட்டன. இதனால் ஏசியின் குளுமைக்கு பெரும்பாலான மக் கள் பழகிப்போனார்கள். வீட்டிலும் ஏசி பயன்படுத்துவது அதிகரித்தது. இங்குதா ன் பிரச்னையே ஆரம்பம்….
