News
உடல் முழுமையாக ஊனமுற்ற நிலையிலும் திருகுர்ஆனின் தொடர்ப்பில் இருக்கும் இளைஞன்!
உடல் முழுமையாக ஊனமுற்ற நிலையிலும் திருகுர்ஆனின் தொடர்ப்பில் இருக்கும் இளைஞன்! உடல் ஊனமுற்ற நிலையிலும் திருமறை குர்ஆனை ஓதி கொண்டிருக்கும் ஒரு இளைஞனின் படத்தை தான் பார்க்கின்றீர்கள் அவரது தோற்றத்தை உற்று நோக்குங்கள் அந்த நிலையிலும் அவர் படைத்தவனையும் அவனது வேதத்தையும் மறக்காமல் மதிக்கும் செயல் உண்மையிலேயே அவரது உயர்ந்த இறையச்சத்திர்கு சான்றாக நிர்கிறது ஆரோக்கியம் பெற்றவர்களே சிந்தியுங்கள் வேகமாக திருமறையை நோக்கி திரும்புங்கள் கிருபையுள்ள ரஹ்மானே யா அல்லாஹ் நாங்கள் உயிருடன் இருக்கும் காலம் வரை…
நோன்பாளிகளின் கனிவான கவனத்திற்க்கு!
“மறுமைக்கு மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்திற்கும்” “உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும்” நுரையீரல் அதிகபடியாக இயங்கும் நேரம் காலை 3-5. ஸஹர் நேரத்தில் நாம் நோன்பு வைப்பதற்காக அதிக நேரம் விழித்திருப்பதால் நமது நுரையீரல் மிகுந்த புத்துணர்வு பெற்று சிறப்பாக செயல்படுகின்றது.இதன் மூலம் மற்ற உறுபுக்கள் புத்துணர்வு பெறுகின்றன. காலை மதியம் இரவு வழக்கமாக சாப்பிட்டு பழகி போன நமது வயிறு, மண்ணீரல், கல்லீரல், சிறுகுடல், பெருங்குடல் போன்றவை 1 மாத காலம் இந்த நேரம் மாறி…
மஹிந்தவும், திருடர்களும் வெற்றி பெற்றால் புதிய அரசாங்கம் அமையாது
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அடிப்படைவாதிகளும் திருடர்களும் புதிய பாராளுமன்றத்திற்கு தெரிவானால் தேசிய அரசாங்கம் அமைக்கும் எமது திட்டம் ஒரு போதும் சாத்தியமாகாது. தேர்தலில் மஹிந்த போட்டியிட்டு வெற்றியிட்டினாலும் எதிர்கட்சி ஆசனத்திலேயே அவர் அமர்வார் என நிதி அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார். மஹிந்தவிற்கு வேட்புமனு வழங்குவது தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இன்னும் தீரமானம் எடுக்கவில்லை. இவ்வாறான சதிதிட்டங்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு போதும்…
தேர்தலில் களமிறங்கமாட்டேன், அமைப்பாளர் பதவியையும் இராஜினாமா
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என பிரதியமைச்சர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். மேலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தறை மாவட்ட அமைப்பாளர் பதவியையும் இராஜினாமா செய்வதாகவும் இதுதொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவம் தெரிவித்துள்ளார்.vk
சவூதி வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பெண்கள் பலி!
நேற்று சவூதி அரேபியா அல்கஸீமில் நடைபெற்ற வாகண விபத்தில் யேமன் நாட்டைச் சேர்ந்த 7 பெண்கள் மரணமடைந்துள்ளதுடன் இன்னும் 5 பேருக்கு கடுமையான காயம் பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் அரச வீசா பெற்று நேற்றுதான் சவூதிக்குள் நுழைந்தார்கள் என்பது குறிப்பிததக்கது .
ஹெட் செட்டால் ஏற்பட்ட மரணம்!
இந்த இளம் ஏழை பெண் தூங்கும்போது அவளது ஹெட் செட்டாலேயே கொல்லப்பட்டு இருக்கிறாள். ஒரு இளம் பிலிப்பைன் பென் தனது இரண்டு காதுகளிலும் ஹெட்செட்டை வைத்து ரீசார்ஜ் செய்து கொண்டே தூங்கிவிட்டாள்.அவள் தூங்கி கொண்டு இருக்கும் போது, அந்த போன் அதிகமாக வெப்பமடைந்து , வெடித்து , மின்சாரம் ஹெட் செட் வழியாக சென்று , மின்சாரம் தாக்கி தூக்கத்திலேயே இறந்து போனாள். இது 2015, ஜீன் 10ம் தேதி இரவு 11மணியளவில் நடந்த சம்பவம். இந்த…
நான்கு கட்சிகளின் பெயர் சின்னங்களில் மாற்றம்
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவத ற்காக நான்கு கட்சிகள் தமது பெயர் மற்றும் சின்னங்களில் மாற்றங்களைச் செய்திருப்பதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்தது. இதற்கமைய அகில இலங்கை தமிழர் மகாசபை தமது தோடம்பழ சின்னத்தை கப்பல் சின்னமாக மாற்றியுள்ளது. ஐக்கிய மக்கள் கட்சி மீன் சின்னத்தை கையடக்க தொலைபேசி சின்னமாக மாற்றியுள்ளது. ஜாதிக்க ஹெல உருமய கட்சி, நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி என தனது கட்சியின் பெயரை மாற்றி யுள்ளது. அத்துடன் கட்சியின் சங்கு சின்னமும் ‘வைரம்’மாக மாற்றப்பட்டுள்ளது….
அல்லாஹ்வின் துணையால் அச்சம் கொள்ளத் தேவையில்லை..
சனாஸ் முஹம்மத் கடந்த ஜனவரி மாதம் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக கொண்டுவந்ததினால் தான் இன்று 3000 யுவதிகளுக்கு இந்த தையல் இயந்திரங்களை வழங்க முடிந்தது என தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன்,முன்னாs; ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி மாற்றத்தின் தேவையுணர்ந்து எமது சமூகத்தின் நன்மைக்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி அனைத்து மக்கள் பிரதி நிதிகளுடன் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க தீர்மானித்த போது இந்த தையல் இயந்திரங்கைளை வறிய…
‘வழிபாட்டு தலங்களில் அரசியல் உரை நிகழ்த்தத் தடை’
பொதுத் தேர்தல் கால எல்லைக்குள் ஆலயம் விகாரை, தேவாலயம், பள்ளிவாசல் போன்ற சமய ஸ்தாபனங்களில் அரசியல் கூட்டங்கள் நடாத்துவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. தேர்தல் விதி முறைகள் இம்மாதம் 6ம் திகதியிலிருந்து செயற்படுத்தப்படவுள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசபிரிய தெரிவித்துள்ளார். அரச உற்சவங்களின்போது தேசியக் கொடி, மாகாணக் கொடி போன்றவைகளை ஏற்றுவதல் லமால் ஏனையவைகளைத் தேர்தல் காலத்தில் முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும். பாடசாலை உற்சவங்களிலும் கூட அரசியல் உரை நிகழ்த்துவது தவிர்க்கப்பட வேண்டு மென்பதுடன் அரசாங்க அபிவிருத்தி…
ஜனாதிபதி சிங்கம் போன்று செயற்பட வேண்டும் – சோபித தேரர்
நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் எவருக்கும் அடிபணியாமல் நாட்டில் நீதியையும் சட்டத்தையும் நிலைநாட்ட நடவடிக்கை எடுப்பது அவசியமென மாதுலுவாவே சோபித தேரர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கேட்டுக்கொண்டார். நாட்டின் சட்டத்தில் எவரும் தலையிடாதவாறு நாட்டின் நலனுக்காக சகலதையும் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்ட மாதுலுவாவே தேரர், எவருக்கும் தலைவணங்க வேண்டிய அவசியமில்லையெனினும் ஜனாதிபதி அவர்கள் சிங்கம் போன்று தலைநிமிர்ந்து செயற்பட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். மாக்கும்புரவில் நேற்று ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே தேரர் இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதியுடன்…
10 இலட்சம் பேருக்கு தொழில் வாய்ப்புகள் வழங்கப்படும் -ரணில்
எதிர்வரும் 05 ஆண்டுகளுக்குள் 10 இலட்சம் தொழில் வாய்ப்பு வழங்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டத்தின் கீழ் குளியாப்பிட்டியவில் ஜேர்மன் வொக்ஸ்வேகன் வாகன உற்பத்தி தொழிற்சாலையொன்று நிறுவப்படும். இந்த தொழிற்சாலையில் வாகனங்கள் உற்பத்தி செய்யப்படும் அதேநேரம், இதன் மூலம் 10 இலட்சம் பேருக்கு தொழில் வாய்ப்புகள் வழங்கப்படும். மேற்படி வெளிநாட்டு முதலீட்டுக்காக அரசாங்கத்தின் பொரு ளாதாரக் குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் இத்தொழிற்சாலையை ஆரம்பிப்பதற்கான சாத்தியம் இருப்பதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த…
மஹிந்தவுக்கு வேட்புமனு வழங்கியது மிகப் பெரிய துரோகம்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்புமனு வழங்குவது என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட தீர்மானமானது, அண்மையில் செய்த மிகப் பெரிய துரோகம் என, மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அந்தக் கட்சியின் பிரதம செயலாளர் டில்வில் சில்வா இதனைக் கூறியுள்ளார். ஜனவரி 8ம் திகதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்த மக்களின் நோக்கம் மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிப்பது மட்டுமே என இதன்போது அவர் சுட்டிக்காட்டினார். எனினும்,…
