News
ஹெம்மாதகம பொலிஸ் நிலைய பொருப்பதிகாரிக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் SLTJ புகார்
ஹெம்மாதகம பகுதியில் கடந்த 06.09.2015 ம் திகதி ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்திருந்த மற்றுமத அன்பர்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சியில் அத்து மீறி நுழைந்து நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தி ஜமாஅத்தின் செயலாளர் சகோ. அப்துர் ராஸிக்கை தாக்க முயற்சி செய்து கொலை மிரட்டல் விடுத்து, அங்கிருந்த சகோதரர்களையும் தாக்க முயற்சி செய்து விற்பனைக்காக வைத்திருந்த மார்க்க புத்தகங்களையும் பலவந்தமாக பறித்து சென்ற பொது பல சேனா (BBS) அமைப்பினருக்கு எதிராக ஹெம்மாதகம பொலிஸ் நிலையத்தில்…
மரண தண்டனை இலங்கையில் அமுல்படுத்தப்படாது – மங்கள சமரவீர
மரண தண்டனை இலங்கையில் அமுல்படுத்தப்படாது என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஜெனீவாவில் கூறியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கொட்டாதெனிய சேயா என்ற சிறுமி படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை தூக்கிலிடுமாறு பல்வேறு தரப்பினரும் கோரி வரும் நிலையில், வெளிவிவகார அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். மரண தண்டனை சட்டப் புத்தகத்திலிருந்து நீக்கப்படும். மரண தண்டனைக்கு எதிராக ஜெனீவாவில் சர்வதேச நாடுகள் முன்வைத்த யோசனைக்கு அமைச்சர் மங்கள சமரவீரவும் இணங்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, உலகின் பல நாடுகளில்…
உலகம் முழுவதும் ஒரே நாளில் ஹஜ்ஜூப் பெருநாள்
சென்னை மேடவாக்கம் காயிதே மில்லத் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் ராஜாக்கனி, யுனிவர்சல் பதிப்பகத்தின் உரிமையாளர் ஷாஜகான் ஆகியோர் கூறியதாவது:இஸ்லாமிய ஆண்டின் துல்கஜ் மாதத்தின் 10–ம் நாளில் ஹஜ்ஜூப் பெருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. வானில் தெரியும் பிறையை பொறுறுத்து ஹஜ்ஜூப் பெருனாள் தினம் முடிவு செய்யப்படும்.இந்த ஆண்டுக்கான பிறை கடந்த 15–ந்தேதி தொடங்கியது. அதாவது 14–ந்தேதி இரவு தெரிந்த பிறையின் அடிப்படையில் மறுநாள் தீர்மானிக்கப்பட்டது. வழக்கமாக வளைகுடா நாடுகளில் முதலிலும், அதை தொடர்ந்து ஆசிய, ஐரோப்பிய நாடுகளிலும்…
ஐ.நா. அறிக்கைக்கு நாமல் கண்டனம்
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கெதிரான குற்றங்கள் தொடர்பில் விசேட கலப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் வலியுறுத்தியிருப்பதை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கண்டித்துள்ளார். ஐ.நா. அறிக்கை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு அவர் கண்டனம் வெளியிட்டுள்ளார். அறிக்கை தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது; ஐ.நா. அறிக்கையில் கலப்பு விசேட நீதி மன்றத்தை அமைத்து இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்பட்ட குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் சர்வதேச நீதி…
கட்டாரில் இலங்கை முஸ்லிம்களின், ஹஜ் பெருநாள் ஏற்பாடு
வழமை போன்று இம்முறையும் கட்டாரில் வசிக்கும் இலங்கையருக்கான ஈதுல் அல்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையும், தமிழ் மொழியிலான கொத்பாப் பிரசங்கமும் கட்டாரில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை கட்டாரில் இயங்கி வரும் இலங்கை முஸ்லிம் அமைப்புக்களின் தாய் அமைப்பாக செயற்பட்டு வரும் ஸ்ரீ லங்கா மஜ்லிஸ் கதார் அமைப்பு (SLMQ) செய்துள்ளது. இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 24 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 5.45 மணிக்கு பெருநாள் தொழுகை தொழுவிக்கப்பட இருப்பதால் கட்டார் வாழ் இலங்கை…
கோத்தபாயவுக்கு தொடரும் சோகம்
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிடம், இன்று மீண்டும் விசாரணை நடத்தப்படவுள்ளது. பாரிய மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் கோத்தபாய இன்றைய தினம் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கையில், சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை சீருடைகளை மாற்றி ஈடுபடுத்தியமை தொடர்பாகவே இந்த விசாரணை நடத்தப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் அதிகரி ஒருவர் தெரிவித்துள்ளார். அத்துடன், ரக்ன லங்கா பாதுகாப்பு ஊழியர்களை தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தியமை தொடர்பாகவும், இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இச்சம்பவம் குறித்து கோத்தபாயவிடம் ஏற்கனவே…
5 பில்லியன் டொலர் செலவில் தலைமன்னாருக்குப் பாலம்
5 பில்லியன் டொலர் செலவில், தலைமன்னாரையும் – இராமேஸ்வரத்தையும் இணைக்கும் பாலத்தை அமைப்பது தொடர்பில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இந்தியாவின் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி நேற்று முன்தினம் பேச்சு நடத்தியுள்ளார். இந்தியாவுக்கு மூன்று நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர்ரணில் விக்கிரமசிங்கவுடன், நேற்று முன்தினம் செவ்வாய்க் கிழமைமாலை சந்தித்துப் பேச்சு நடத்தினார். 5.19 பில்லியன் டொலர் செலவில், தலை மன்னாரையும் இராமேஸ்வரத்தையும் இணைக்கும் தரைவழிப் பாலத்தை அமைக்கும் திட்டத்தை இந்திய மத்திய அரசு முன்மொழிந்துள்ளது. 22 கிலோ…
புலனாய்வு துறை அதிகாரி மரணம்
கம்பஹா, கொட்டதெனியாவில் படுகொலை செய்யப்பட்ட 5வயது சிறுமியான செயா சந்தவமியின் படுகொலையுடன் தொடர்புடையவர்களை கைதுசெய்யுமாறு கோரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன் போது கடமைக்காக சென்றிருந்த பொலிஸ் விசேட பணியகத்தின் (புலனாய்வு பிரிவு) கான்ஸ்டபிள், மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து மரணமடைந்துள்ளார். நெஞ்சு வலி காரணமாகவே அவர், மரணமடைந்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், அவருடைய சடலம் திவுலுப்பிட்டிய ஹோரகஹமுல்ல வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
மஹிந்த ராஜபக்ஷ அநியாயம் செய்திருந்தால் நடவடிக்கை: ராஜித்த
யுத்தக் காலத்தில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பிலான நீதிமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரை பின்பற்றியவர்கள் அந்த நீதிமன்றத்தின் முன்னால் சாட்சியளிக்கவேண்டும் என்று அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி, கட்டளையிடும் அதிகாரி மற்றும் பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்ட யாரோ அநியாயம் செய்திருந்தால் அவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார். என்னுடைய அனுபவத்தின் பிரகாரம் யுத்தம் ஒரு குற்றமாகும். அதன் பிரகாரம் யுத்தத்துக்காக யாராவது ஒருவர் கட்டளையிட்டிருந்தால்…
முன்னாள் பிரதமரின் மகன் பதவிப் பிரமாணம் – மு.பிரதமர் மற்றும் மைத்திரி பங்கேற்பு
– ஜே.எம்.ஹபீஸ் – மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் பிரதி அமைச்சராக முன்னாள் பிரதமரின் மகன் அனுராதா ஜயரத்தன பதவிப் பிரமாணம் செய்த பின் (17.9.2015) மகாவலி மற்றும் சுற்றாடல் அமைச்சிற்கு விஜயம் செய்து கடமைகளைப் பொறுப்பேற்றார். இவ்வைபவத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனா, முன்னாள் பிரதமர் தி.மு. ஜயரத்ன, விவசாய அமைச்சர் துமிந்த திசாநாயக்கா, கடற்றெதழில் நிரியல் வள அமைச்சர் மகிந்த அமரவீர, அமைச்சின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன, ஆகியோர் கலந்து கொண்டனர். பிரதி அமைச்சரின் துணைவியார்…
ராஜித + கயந்த அமைச்சரவை, பேச்சாளர்களாக நியமனம்
சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக ஆகிய இருவரும் அமைச்சரவை பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது (17) நடைபெற்றுக் கொண்டிருக்கும் அமைச்சரவை கூட்டத்தின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
14 வயது இலங்கை மாணவன், விமானத்தை கண்டுபிடித்து சாதனை (படங்கள்)
பானந்துகம – அகுரஸ்ஸ பகுதியைச் சேர்ந்த திஸல் இன்துல (14 வயது) விமானம் ஒன்றை அமைத்து சாதனை படைத்துள்ளான். கொடபிடிய தேசிய பாடசாலையில் தரம் 9 இல் கல்வி பயிலும் மாணவனாகும். இவரது முயற்சியால் ரிமோட்டினால் பறக்கும் ஆகாய விமானம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். மேலும் தற்போது ஒருவர் அமர்ந்து செல்லக்கூடிய விமானம் ஒன்றை உருவாக்கி வருவதாக குறிப்பிட்டார். குறித்த மாணவன் எதிர்காலத்தில் பொறியியலாளராக வரவேண்டும் என ஆசைப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
