News
தாமரை கோபுரத்தின் நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பம்
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தாமரை கோபுரத்தின் நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் ஆலோசனைக்கமைய இந்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிர்மாணப் பணிகளின் கண்காணிப்பு பணிகளுக்காக புதிய குழுக்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த அரசாங்கத்தினால் 2012ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த தாமரை கோபுரத்தின் நிர்மாணப் பணிகள் கடந்த 6 மாதங்களாக தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்ற பாதுகாப்பு வீதித்தடைகளை உடைத்த நடிகை..!
பிரபல நடிகை ஒருவர் நாடாளுமன்ற விதியில் அமைக்கப்பட்டள்ள பாதுகாப்பு வீதித்தடைகளை உடைத்துக்கொண்டு வாகனத்தைச் செலுத்திக் சென்றுள்ளார். தொலைக்காட்சி நாடகமொன்றின் படப்பிடிப்பு பூர்த்தியாகி நேற்று அதிகாலை நாடாளுமன்றத்திற்கு செல்லும் பாதை வழியாக குறித்த நடிகை வாகனத்தில் சென்றுள்ளார். அதிக வேகமாக சென்ற குறித்த நடிகை வீதித் தடைகளை உடைத்துக்கொண்டு சென்றுள்ளதுடன், சில பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டிருந்த கோன்களுக்கும் சேதம் விளைவித்துள்ளார். நாடாளுமன்றிற்கு பிரவேசிக்கும் ஜயந்திபுர பிரதான வாயில் பகுதி இரவு நேரத்தில் மூடப்பட்டிருக்கும். குறித்த நடிகை, மோட்டார் வாகனத்தை அதிக…
ராவணா பலயவுக்கு ஆதரவளித்தால் நல்லாட்சி கவிழும்
மஹிந்த ராஜபக்ஷ அரசு பொதுபல சேனா என்ற பாம்பு படம் எடுத்து ஆடுவதற்கு முட்டையும், பாலும் கொ டுத்து அரவணைத்தது. அதன் விளைவை இன்று ராஜபக்ஷ அனுபவிக்கின்றார். இன்று ராவண பலய என்ற பாம்பு படம் எடுத்து ஆட முற்படுகின்றது. இவ் நல் லாட்சியில் ராவண பலய எனும் பாம்பு படம் எடுத்து ஆடுவதற்கு முட்டையும், பாலும் கொடுத்து அரவணைக்க முற்பட் டால் சிறுபான்மை இன மக்களின் வாக்குகளால் ஆட்சிபீடம் ஏறிய நல்லாட்சி அரசாங்கம் நிச்சயம் கவிழ்க்கப்படும்…
அத்தியவசியப் பொருட்களுக்கான விலை குறையவில்லையா?
கடந்த 20ம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் படி 11 அத்தியவசியப் பொருட்களுக்கான விலை குறைவடைந்துள்ளது. அன்றையதினம் நள்ளிரவு முதல் இந்த புதிய விலை மாற்றம் நடைமுறைக்கு வரும் என நிதி அமைச்சு கூறியது. எனினும், இதுவரை வரவு செலவுத் திட்ட சலுகை நுகர்வோரைச் சென்றடையவில்லை என தெரியவந்துள்ளது. இது தொடர்பில் இன்றையதினம் நாடுமுழுவதும் விஷேட சுற்றிவளைப்புக்களை முன்னெடுக்க நுவர்வோர் அதிகார சபை தீர்மானித்துள்ளது. அத்துடன் அதிக விலைக்கு பொருட்களை விற்பவர்கள் குறித்து 1977 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு…
வைத்தியசாலைக்கு தனியாகச் சென்ற ஜனாதிபதி
சிகிச்சைக்காக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ள காணி அமைச்சர் கே.டி.எஸ். குணவர்தனவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பார்வையிடச் சென்றபோது பிடிக்கப் பட்ட படமே இது. இதன்போது அவர் பாதுகாப்பு பிரிவினரை அழைத்துச் செல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அரசாங்கத்துடன் இணையவுள்ள நான்கு ஐ.ம.சு.மு. எம்.பி.க்கள்
தேசிய அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்ட பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்து அரசாங்கத்துடன் இணைந்துகொள்வதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். இந்த நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் அமைச்சருமான மலிக் சமரவிக்கிரமவுடன் இதுதொடர்பாக இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இந்த நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களது தீர்மானம் குறித்து அமைச்சர் மலிக் சமரவிக்கிரம பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் அறிவித்துள்ளார்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அனுமதியின்…
மின்னல் தாக்கம் : வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை
நாட்டில் இன்று ஆகக் கூடிய பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் மின்னல் தாக்கும் என வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. மேலும், நாட்டில் சகல பகுதிகளிலும் வாழ்கின்ற பொதுமக்களை விழிப்பாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
பாடசாலை மாணவர்களே புகைப் பரிசோதனை கட்டணத்தை செலுத்த வேண்டும்
புகைப் பரிசோதனை கட்டணம் அதிகரிக்கப்பட்டால் அக்கட்டணத்தை பாடசாலை மாணவர்களிடமிருந்தே அறவிடுவோம் என்று மாவட்டங்களுக்கு இடையிலான அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சங்கம் அறிவித்துள்ளது. மூன்று வருடகளுக்கு பழைமையான வாகனங்களுக்காக வருடாந்த வாகன அனுமதிபத்திரத்தை பெற்றுக்கொள்ளும்போது புகைப் பரிசோதனை கட்டமாக வருடாந்தம் 5,000 ரூபாய் அறவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறானதொரு நிலைமை ஏற்படுமான அக்கட்டணத்தை பாடசாலை மாணவர்களிடமிருந்தே அறவிடுவோம் என்றும் அச்சங்கம் அறிவித்துள்ளது.
அமீர்கானின் கருத்துக்கு அரவிந்த் கெஜ்ரிவால் வரவேற்பு
மதத்தின் பெயரால் நடைபெறும் வன்முறை சம்பங்களை கண்டித்து பாலிவுட் நடிகர் அமீர்கான் தெரிவித்திருந்த கருத்திற்கு டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு கூறியுள்ளார். டுவிட்டர் வலைதளத்தில் இது குறித்து கருத்து தெரிவித்திருந்த அரவிந்த் கெஜ்ரிவால், “அமீர்கான் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் உண்மை. இப்படி பேசியதற்காக நான் அவரை பாராட்டுகிறேன்.” என்று குறிப்பிட்டிருந்தார். முன்னதாக, நாட்டில் மதத்தின் பெயரால் நிலவி வரும் வன்முறை சம்பவங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திவுள்ளதாகவும், ஒரு இந்திய குடிமகனாக என்னால் அதனை மறுக்க முடியாது…
அப்பாவிகளை கொல்பவன் முஸ்லிமே அல்ல: அமிர் கான் கடும் கண்டனம்
மதத்தின் பெயரால் நடத்தப்படும் வன்முறை வெறியாட்டங்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாலிவுட் நடிகர் அமிர் கான், அப்பாவி மக்களை கொல்பவன் யாரும் முஸ்லிமாக இருக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில், பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் 130 உயிர்களை பலிவாங்கிய ஐ.எஸ். களின் வெறியாட்டம் தொடர்பாக தலைநகர் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமிர் கான் கூறியதாவது:- இதுபோன்ற சம்பவங்களை எல்லாம் நினைத்துப் பார்க்கையில் இது இஸ்லாம் சார்ந்த நடவடிக்கைகளாக எனக்குத் தோன்றவில்லை. குர்ஆனை கையிலேந்திய ஒருவன் மக்களை கொல்வதை…
இலங்கை விவகாரத்தில் ஒபாமா அக்கறை
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இலங்கை விவகாரத்தில் அதீத அக்கறை செலுத்துவதாக தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர், இலங்கையில் தற்போதுவரையில் நல்லிணக்கம் முழுமையாக கட்டியெழுப்பப்படவில்லையெனவும் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகளுக்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதி சமந்தா பவர் மூன்று நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்துள்ள நிலையில் அவரது விஜயத்தின் இறுதி தினமான நேற்று இலங்கையின் எதிர்காலத்தின் தூண்களாக காணப்படும் இளைஞ சமுதாயத்தினருடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார். கொழும்பில் ஒருமணி நேரமாக இடம்பெற்ற…
