News
முஹமட் சதாம் மலேசியாவில் வபாத்
மலேசியாவில் தொழில் புரிந்துவந்த கஹட்டோவிட்ட பகுதியை சேர்ந்த முஹமட் சதாம் எனும் 21 வயது முஸ்லிம் இளைஞர் ஒருவர் கடுமையான காய்ச்சல் காரணமாக சற்றுமுன் மலேசியாவில் உயிரிழந்துள்ளார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன். தகவல்-A.K.முஹமட் கஹட்டோவிட்ட
நான் இஸ்லாமியன் என்ற போதும், எனது பணி சகல சமூகத்திற்குமுரியது – அமைச்சர் றிஷாத்
– அபூ அஸ்ஜத் – “தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் மீது கொண்டுள்ள பற்றினை விட நான் அம்மக்கள் மீது கொண்டுள்ள பற்று பன்மடங்கானது. மார்க்கத்தால் இஸ்லாமியனாக இருந்த போதும், எனது பதவியினை கொண்டு சகல மக்களுக்கும் பணியாற்றிவருகின்றேன்”. என்று தெரிவித்துள்ள கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிஷாத் பதியுதீன், இந்த சபையில் சில தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் இனவாத கருத்துக்களை கூறிவருகின்றனர். அதனை பேசுவதற்கு முன்னர் புத்திசாதுாரியமாக அவர்கள் சிந்திக்க வேண்டும் என்றும் கேட்டுக்…
வடமாகாண அபிவிருத்திக்குழு தலைவராக அமைச்சர் றிஷாத் மீண்டும் நியமனம்
வடமாகாண அபிவிருத்திக்குழு தலைவராக மீண்டும் அமைச்சர் றிஷாத் பதியுதீன் ஐனாதிபதியினால் மீண்டும் நியமிக்கப் பட்டுள்ளார். சிறுபான்மை மக்களுக்காக குரல் கொடுக்கும் அமைச்சர் றிஷாத் பதியுதீன் கடந்த அரசாங்கத்திலும் வட மாகாண அபிவிருத்திக்குழு தலைவராக இருந்ததுடன் பல அபிவிருத்தித்திட்டங்களையும் வெற்றிகரமாக செய்து முடித்தார். நல்லாட்சி அரசாங்கத்திலும் 100 நாள் திட்டத்திலும் வடமாகாண அபிவிருத்திக்குழு தலைவராக செயற்பட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான றிஷாத் பதியுதீன் மீண்டும் ஐனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களினால்…
களுத்துறை அரபுக் கல்லூரி மாணவருக்கு பாராட்டு விழா
– களுத்துறை செய்தியாளர் – மக்கா, ஹரத்தில் மறைந்த மர்ஹூம் சவூதி மன்னர் அப்துல் அஸீஸ் ஞாபகார்த்தமாக நடைபெற்ற 66 நாடுகளிலிருந்து 224 மாணவர்கள் பங்கு கொண்ட உலகளாவிய ரீதியில் நடைபெற்ற கிராத் போட்டியில் 4ஆம் இடத்தைப் பெற்ற களுத்துறை ஹில்ரியா அரபுக் கல்லூரியின் 17 வயது மாணவர் அல்-ஹாபிழ் முஹம்மத் நஸ்லின் நவாஸ் இற்கு கடந்த 20/11 அன்று களுத்துறை ஹிலிர் ஜும்மா பள்ளிவாயலில் ஜும்மா தொழுகையின் பின் பாராட்டு விழா இடம்பெற்றது. மக்காவில் நடைபெற்ற இப்போட்டியில் இலங்கையிலிருந்து 3 பேர் தெரிவு…
திருக்குர்ஆன் படிக்கும் ரஜினி!
இந்திய சினிமாத்துறையில் நம்பர் 1 ஆக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்களுக்கு இறைவனின் வேதமான திருக்குர்ஆன் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டுள்ளது. உஸ்தாத் இசத் அவர்கள் கபாலி படப்பிடிப்பிற்கு சென்ற ரஜினி காந்த் அவர்களுக்கு நேரில் சந்தித்து தமிழ் மொழிப்பெயர்ப்பு குரான் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து இறைவனின் வேதமான திருக்குர்ஆனை படிக்க தொடங்கி விட்டார் ஆன்மீகவாதியான சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த். இந்திய சுதந்திர போராட்ட மாவீரன் திப்பு சுல்தான் வேடத்தில் ரஜினி காந்த் நடிக்கக்கூடாது என்று…
மோல்டா எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் இரண்டு முக்கியஸ்தர்கள்
நான்கரை லட்சத்துக்கும் குறைவான சனத்தொகையை கொண்ட அழகிய தீவே மோல்டா. இந்த மோல்டா தீவிலேயே இம்முறை பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாடு வெகு கோலாகலமாக நடைபெறவுள்ளது. பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வருகை தந்துள்ள பிரதிநிதிகள் மாத்திரமன்றி, பொதுநலவாய அமைப்பில் அங்கத்துவம் வகிக்கின்ற 53 நாடுகளைச் சேர்ந்த ஊடகவியலாளர்களும் முக்கிய இரண்டு பிரதிநிதிகளின் வருகைக்காக காத்திருக்கின்றனர். இந்த மாநாடு மோல்டா தீவில் நாளை ஆரம்பமாகவுள்ளது. மோல்டா தீவை எதிர்பார்த்து காத்திருக்கும் இரண்டு முக்கியஸ்தர்கள்…
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய நடைபயணம் தொடர்கிறது
இலவசக் கல்வியை தனியார் மயப்படுத்தி விற்பனை செய்ய வேண்டாம் என்பதை வலியுறுத்தி அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முன்னெடுத்துள்ள நடைபயணம் நிட்டம்புவ நகரிலிருந்து இன்று தொடர்கின்றது. இந்த நடைபயணம் கண்டியில் ஆரம்பமாகியதோடு, தொடர்ச்சியாக 5 நாட்களாக கொழும்பு நோக்கி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பல்கலைக்கழக மாணவர்களின் அனுமதி எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், பாடசாலைகளில் மாணவர்களிடம் நிதிதிரட்டும் நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும், மாலபே SAITM என்ற பட்டத்தை விற்பனை செய்யக்கூடாது போன்ற 6 கோரிக்கைகள் மாணவர்களால் முன்வைக்கப்பட்டு இந்த நடைபயணம்…
அநுராதபுரம் கராத்தே வீரர் கொலை! 35 பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு
அநுராதபுரம் நகரில் உள்ள இரவு நேர களியாட்ட விடுதியின் உரிமையாளரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 35 பேர் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. வசந்த சொய்சா என்ற என்ற களியாட்ட விடுதியின் உரிமையாளரை கொலை செய்ததாக கூறப்படும் இராணுவத்தின் விசேட படைப்பிரிவின் முன்னாள் சிப்பாய் உட்பட 35 பேருக்கு எதிராக காவற்துறையினர் குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்துள்ளனர். அநுராதபுரம் பிரதான நீதவான் உமேஷ் ஷானக்க கலங்சூரிய முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே காவற்துறையினர்…
கைதிகள் விடுதலையால் பாதுகாப்பிற்கு பிரச்சினையில்லை
பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மேலும் சில தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவது தேசிய பாதுகாப்பிற்கு பிரச்சினையல்லவென நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று முற்பகல் இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார். இந்தநிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மேலும் 20 தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணைகள் நிறைவுறுத்தப்பட்டு விடுவிக்க தீர்மானித்துள்ளதாக நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
வாகன புகை பரிசோதனைக்கு கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது
புகை பரிசோதனை பத்திரம் வழங்குவதற்காக அறவிடப்படும் தொகை அதிகரிக்கப்படவில்லை என லாப் நிறுவனம் தெரிவித்துள்ளது. வரவு செலவு திட்டத்தில் அதிகரிக்கபட்ட தொகை புகை பரிசோதனையின் போது அறவிடப்பட மாட்டாது என அந்த நிறுவனம் தெரிவித்திருந்தது.
சிங்களவர்களை பற்றி நல்லாட்சி அரசு எதனையும் பேசுவதில்லை: ஞானசார தேரர்
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவையில் இருக்கும் பலருக்கு சிறுபான்மை இனத்தவரின் பிரச்சினைகளை தீர்ப்பதில் பாரிய தேவை இருப்பதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இது மிகவும் துரதிஷ்டவசமானது எனவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். பிரச்சினைகள் என்பது சிறுபான்மை இனத்தவருக்கு மாத்திரம் இருப்பதில்லை சிங்கள பௌத்தர்களின் பிரச்சினைகள் பற்றி நல்லாட்சி அரசாங்கம் எதனையும் பேசுவதில்லை. புத்தசாசனத்திற்கு அமைச்சர்கள் இல்லை. பொறுப்பான…
இஸ்லாத்தை அவமதிக்கும் செயற்பாடு: ஏ.எச் .எம். அஸ்வர் கடும் அதிருப்தி
நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் மூன்றாம் தவணைப் பரீட்சை நடைபெற்று வரும் நிலையில் மன்னார் கல்வி வலயத்தினால் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தரம் 2 மற்றும் 3 க்கான இஸ்லாம் பாட பரீட்சைக்குரிய வினாத்தாள்களில் பாரதூரமான எழுத்துப் பிழைகள் இடம்பெற்றிருந்ததாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச் .எம். அஸ்வர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். குறித்த வினாத்தாளில் ‘நபி’க்கு ‘நரி’ என்றும் ‘தாய்’க்கு ‘நாய்’ என்றும் அச்சு பிழைகள் ஏற்பட்டிருந்ததாகவும் இது இஸ்லாத்தை அவமதிக்கும் வகையில் அமைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ள…
