News
ஓவன் மேல் சார்ஜில் போடப்பட்டிருந்த தொலைபேசி தொடர்பிலான அதிர்ச்சி தகவல்
– எம்.எப்.எம்.பஸீர் – தெஹிவளை, கவுடான வீதியில் உள்ள மூன்று மாடிகளைக் கொண்ட வீடொன்றின் கீழ் மாடியில் இருந்து, கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் அவரது குடும்பத்தார் சகிதம் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தெஹிவளை பொலிஸ் நிலையத்தின் சிறப்புக் குழுவினர் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். வீட்டின் ஒரு பகுதியை மட்டும் தீ எப்படி ஆக்கிரமித்தது, அதற்கான காரணம் என்ன போன்ற கேள்விகளுக்கு விடையை அறியவும் மரணமடைந்த நால்வரின் மரணத்துக்கு காரணம் என்ன என்பதை உருதி செய்துகொள்ளவுமே மேலதிக விசாரணைகள்…
ஒவைசியின் தலையை எடுப்பவருக்கு, ஒரு கோடி ரூபாய் பரிசு
பாரத் மாதாகி ஜே சொல்ல மறுக்கும் ஒவைசியின் தலையை எடுப்பவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு – உ.பி.பாஜக தலைவர் ஷ்யாம் பிரகாஷ் திவேதி-
இன்னும் இரண்டு மாதங்களில் மினி பட்ஜெட்
நடப்பாண்டு வரவு செலவுத்திட்டத்தில் திருத்தம் செய்து மினி பட்ஜெட் இன்னும் இரண்டு மாதங்களில் சமர்ப்பிக்கவுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். அரசாங்கத்தினால் எந்தநேரமும் சலுகைகளை வழங்க முடியாது. சலுகை வழங்குவது மாத்திரமே அரசாங்கத்தி வேலை கிடையாது. சர்வதேச நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள தருவாயில் பல்வேறுபட்ட திருத்தம் செய்யவுள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சாரதிகளே ஜாக்கிரதை : வருகிறது புதிய கருவி
போக்குவரத்து விதிகளை அலட்சியம் செய்யும் நீண்ட தூர பஸ் சாரதிகள், கஞ்சா மற்றும் போதைப்பொருட்களை நுகர்ந்துள்ளனரா எனக் கண்டுபிடிப்பதற்காக உடனடி போதைப்பொருள் சோதனைக் கருவிகளை இறக்குமதி செய்யவுள்ளதாக வாகனப் போக்குவரத்துப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அமரசிரி சேனரத்ன கூறியுள்ளார். மதுபானம் அருந்தும் சாரதிகளை மட்டுமே உடனடியாக அறியக் கூடிய கருவிகள் தற்போது நாட்டில் பயன்பாட்டில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நளினி மருத்துவமனையில் அனுமதி
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி உட்பட நால்வர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நளினி மத்திய பெண்கள் தனிச்சிறையிலும், அவரது கணவர் முருகன் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவுப்படி கணவன் – மனைவி இருவரும் 15 தினங்களுக்கு ஒருமுறை சந்தித்து பேசிக்கொள்வார்கள். இந்தநிலையில் இந்த மாதம் தொடக்கத்தில் நளினி அப்பா இறந்ததை தொடர்ந்து 12 மணி நேர பரோல் வழங்கப்பட்டு இறுதி அஞ்சலிக்கு சென்று வந்தார்….
G7 மாநாடு: இலங்கை ஜனாதிபதிக்கு முதன்முறையாக அழைப்பு
G7 மாநாட்டில் பங்கேற்பதற்கு இலங்கை ஜனாதிபதி ஒருவருக்கு முதன்முறையாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜேர்மனியில் எதிர்வரும் ஜுன் மாதம் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்கவுள்ளதாக பிரதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (17) கொழும்பு அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே G7 மாநாட்டில் பங்கேற்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் சஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
நடு வீதியில் திடீரென தடம்புரண்ட கண்டெய்னர்
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி மதுபான போத்தல்களை ஏற்றிச் சென்ற கண்டெய்னர், பதுளை போகாமடித்தை என்ற இடத்தில் நடுவீதியில் திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ் விபத்தில் சாரதியும் நடத்துனரும் மட்டுமே பயணித்தனர். இருவரும் காயங்களுக்குள்ளாகிய போதிலும் சாரதி ஆபத்தான நிலையில் பதுளை அரசினர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பதுளை பொலிசார் விபத்து குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
குதிரை பந்தய திடலில் ஆர்ப்பாட்டம்
நுவரெலியா குதிரை பந்தய திடலில் பராமரிப்பை நடைமுறையில் உள்ள தனியார் கம்பனியிடம் இருந்து இதற்கு முன்னர் பராமரிப்பை மேற்கொண்ட குறித்த ஒரு நிறுவனத்தின் மேற்பார்வைக்கு ஒப்படைப்பதை எதிர்த்து இன்று 200ற்கும் மேற்பட்ட குதிரை பந்தய திடல் சேவையாளர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இவ் ஆர்ப்பாட்டம் நுவரெலியா குதிரை பந்தய திடலின் அருகில் உள்ள மத்திய வங்கி கட்டிடத்திற்கு முன்னால் இடம்பெற்றது. இதன்போது, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தற்பொழுது நடைமுறையில் உள்ள ரோயல் தனியார் நிறுவனத்தின் கீழ் நிர்வகிக்க…
வெளிச்ச வீட்டில் ஏறி பார்வையிடுவதற்கு தடை
– பழுலுல்லாஹ் பர்ஹான் – மட்டக்களப்பு மாநகர சபையினால் பராமரிக்கப்பட்டுவரும் மட்டக்களப்பு வெளிச்ச வீட்டில் (லைட் ஹவுஸில்) சுற்றுலா பயணிகள், பொது மக்கள் ஏறி பார்வையிடுவதற்கு மட்டக்களப்பு மாநகர சபையினால் சுமார் கடந்த ஒரு வருடங்களாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கான காரணம் கடந்ந காலங்களில் மேற்படி வெளிச்ச வீட்டில் ஏறும் பொது மக்களில் சிலரும், இளைஞர்களும் வெளிச்ச வீட்டு உச்சியில் ஏறி கொண்டு தான் தற்கொலை செய்யப்போவதாக மிரட்டுவதாகவும், சிலர் குடிபோதையில் வெளிச்ச வீட்டில் ஏறி…
ஐ.ம.சு.முன்னணியை மகிந்த அமரவீர பலப்படுத்துவார்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினை சக்திமிக்க கட்சியாக மாற்றுவதற்கு செயலாளர் மகிந்த அமரவீர அர்ப்பணிப்புடன் செயற்படுவார் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க நம்பிக்கை வெளியிட்டார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட அமைச்சர் மகிந்த அமரவீர, நேற்று (16) தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இதனைத் தெரிவித்ததார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், எமது முன்னாள் செயலாளர் விஷ்வ வர்ணபால…
பாடசாலை மாணவர்களைக் குறிவைக்கும் பாபுல்கள் : சுகாதார அமைச்சு
பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக கொண்டுவரப்பட்ட பெருந்தொகை பாபுல்கள், கடந்த இரண்டு மாதங்களில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, கைப்பற்றப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மாலைதீவு, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் இருந்து இவை இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கொண்டுவரப்பட்ட சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான பாபுல் தொகை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பாலித்த மஹிபாலவால் நேற்று பரிசீலனைக்குட்படுத்தப்பட்டது. குறித்த போதைப் பொருள் அடங்கிய பாபுல் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து…
வெளிநாடு செல்லும் பணிப்பெண்களின் வயதெல்லையில் திருத்தம்
வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு செல்லும் இலங்கைப் பணிப்பெண்களின் வயதெல்லையில் திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது. இதற்கான வேலைத்திட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆரம்பமாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வயதெல்லையானது மத்திய கிழக்கு நாடுகளுக்கும், மத்திய கிழக்கு நாடுகள் அல்லாத நாடுகளுக்கும் செல்லும் பணிப்பெண்களுக்காக நடைமுறைப்படுத்தபடவுள்ளது. இதேவேளை, சவுதி அரேபியாவிற்கு செல்லும் பணிப்பெண்களுக்கான வயதெல்லை 25 குவைட், ஜோர்தான், டுபாய், லெபனான், கட்டார், பஹரேன் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளுக்கான வயதெல்லை 23 இவையே தற்போது நடைமுறையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், மத்திய…
