News
3 கிலோ கஞ்சா போதைப் பொருட்களுடன் இருவர் கைது
கஞ்சா போதைப் பொருட்களுடன் நேற்று இரவு கிளிநொச்சியில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவுக்கு கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பிலே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். உருத்திரபுரம் எள்ளுக்காடு பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்றில் அவர்கள் 3 கிலோ வரையிலான போதைப் பொருட்களை இரண்டு பொதிகளில் கடத்திச் செல்ல முயன்றுள்ளனர். கைதானவர்கள் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதோடு அதேநேரம் கிளிநொச்சி நேற்று…
ஸ்ரீலங்கன் விமானம் சிங்கப்பூரில் திடீர் சோதனை
யு.எல்.309 என்ற ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் நேற்றுமுன்தினம் சிங்கப்பூர் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சற்று நேரத்தில் தரையிறக்கப்பட்டது. விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் வழங்கிய பாதுகாப்பு தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பை அடுத்தே விமானம் தரையிறக்கப்பட்டது. விமானம் தரையிறக்கப்பட்ட பின்னர்இ சில பயணிகளிடம் சிங்கப்பூர் பொலிஸாரும்இ விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளும் விரிவான விசாரணைகளை நடத்தியுள்ளனர். இவர்களில் 5 பேர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் கூறியுள்ளது….
பொலிஸ் நிலையத்தில் திருடப்பட்ட துப்பாக்கிகள் விகாரையில் மீட்பு
மாத்தளை – லக்கல பொலிஸ் நிலையத்தில் திருடப்பட்ட துப்பாக்கிகள் இன்று காலை லக்கல – வெலேலெவெல சந்தகல விகாரையில் மீட்கப்பட்டுள்ளன.
பிறந்து 45 நாளான சிசுவை தாக்கிய தந்தை
பிறந்த 45 நாட்களான சிசுவை தாக்கிவிட்டு தந்தை தலைமறைவாகிய சம்பவம் ஒன்று பொகவந்தலாவ மேற்பிரிவு தோட்டத்தில் இடம் பெற்றுள்ளதாக பொவந்தலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முறுகலாக மாறி கோபமடைந்த கணவன் பிறந்து 45 நாட்கள் நிறம்பிய தனது குழந்தையின் தலைபகுதியில் தாக்கி விட்டு தலைமறைவாகி உள்ளதாக மனைவி பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைபாடொன்றை பதிவு செய்துள்ளார். நேற்று இரவு மது அருந்திவிட்டு வந்த கணவன் தன்னை கெட்டவார்த்தைகளால் ஏசியதாகவும் தன்னையும் தனது…
ஜனாதிபதி– வடக்கு முதல்வர் திங்களில் சந்திப்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனுக்கும் இடையிலான விசேட சந்திப்பு எதிர்வரும் 18 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது.
நேபாளம்- இலங்கை நேரடி விமானச்சேவை ஆரம்பம்
நேபாளத்தின் ஹிமாலயய விமான சேவை இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பித்துள்ளது. இந்த விமான பயணத்தின் ஆரம்பமாக நேபாளத்தின் காத்மண்டு நகரில் இருந்து கடந்த 12ம் திகதி முதலாவது விமானம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. இரு நாடுகளுக்கு இடையிலான சுற்றுலாத்துறையை விருத்தி செய்யும் நோக்கில் இந்த விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹிமாலயய விமான சேவை நிறுவனமானது சாதாரண வகுப்பு விமான டிக்கட்டுக்கு 35,000 இல் இருந்து 55,000 வரை கட்டணம் அறவிடப்படுவதாக தெரிவித்துள்ளது.
சுஜாதா, டீர் மற்றும் வருண கொழும்பு துறைமுகத்தில்
இந்திய கடற்படைக்குச் சொந்தமான மூன்று கப்பல்கள் பயிற்சி சுற்றுலாப் பயணமாக கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. குறித்த 3 கப்பல்களும் இன்று வெள்ளிக்கிழமை காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இந்திய கடற்படைக்கு சொந்தமான 3 கப்பல்களையும் இலங்கை கடற்படையினர் சம்பிரதாயபூர்வமாக வரவேற்றுள்ளனர். இந்திய கடற்படைக்கு சொந்தமான சுஜாதா, டீர் மற்றும் இந்திய கடலோர காவற்படையினருக்கு சொந்தமான வருண ஆகிய 3 கப்பல்களு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. இரு நாடுகளுக்குமிடையிலான கூட்டு…
கொழும்பில் டெங்கு அபாயம்
டெங்கு நுளம்பு கொழும்பு மாவட்டத்தில் பரவும் அபாயம் இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தற்போதுள்ள நிலவிவரும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக டெங்கு நுளம்பு பரவும் அபாயம் அதிகரித்திருப்பதாக கொழும்பு மாநகர சபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி கூறினார்.
VAT நடைமுறைப்படுத்தப்படும் – நிதியமைச்சு
திருத்தம் செய்யப்பட்ட வற்வரி எதிர்வரும் மே மாதம் 2 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படுமென நிதியமைச்சு அறிவித்துள்ளது. இந்நிலையில் 15 வீதமாக திருத்தம் செய்யப்பட்ட வற்வரியே எதிர்வரும் மே மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யானை தாக்கி இருவர் பலி
அனுராதபுரம் தெப்பன்குளம் பகுதியில் இன்று (15) அதிகாலை காட்டு யானை தாக்கி இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த பகுதி விவசாயிகள் இரண்டு பேரே காட்டு யானை தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் குறித்த சம்பவத்தில் 55 வயது மற்றும் 52 வயதானவர்களே உயிரிழந்துள்ளனர்.
இந்திய கடற்படையால் இலங்கை படகு பறிமுதல்
இலங்கைக்கு சொந்தமான படகு ஒன்று இந்தியாவின் தமிழ் நாட்டு பிராந்தியத்தில் தனுஷ்கோட் பிரதேசத்தில் வைத்து கடலோரக் பொலிஸ் படையினர் கைப்பற்றியுள்ளனர். நேற்று (14) குறித்த படகில் இரண்டு பேர் சென்றுள்ளதுடன், அவர்கள் கடலோரக் பொலிஸ் படையினரை கண்டவுடன் கடலில் குதித்து தப்பிச் சென்றுள்ளதாகவும் குறித்த நபர்களை தேடுதல் பணியில் கடலோர பொலிஸ் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
தொடரும் வாகன நெரிசல்
தெற்கு அதிவேக வீதியின் மாத்தறை – கொடகம வெளியேரும் வழியிற்கு அருகில் கொழும்பில் இருந்து மாத்தறை வழியாக கதிர்காமம் செல்லும் வாகனங்களால் ஏற்பட்டிருந்த வாகன நெரிசல் தொடர்ந்து இதுவரையும் காணப்படுகின்றது. மேலும் , தெற்கு அதிவேக வீதியை பயன்படுத்துபவர்கள் குறித்த வீதியில் பயணிப்பதற்கு தேவையான அனுமதி பத்திரங்களையும் , கட்டணத்தையும் தயார் நிலையில் கொண்டு வருமாறு அதிகாரிகள் சாரதிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
