News
யார் இந்த Dr.சாகீர் நாயக்?
– வை.எம்.பைரூஸ் வாழைச்சேனை – உலகத்தின் சனத்தொகை அடிப்படையில் இரண்டாவது இடத்திலிருக்கும் மிகப்பெரும் ஜனநாயக நாடான இந்தியாவிலே பல்சார் துறைகளில் அதிகமான பிரபலங்கள் மக்களின் மனதில் நீ்ங்காத இடம் பிடித்துள்ளார்கள். அது அரசியல் சார்ந்த துறையோ அல்லது சினிமா, விளையாட்டு, பொருளாதாரம் போன்ற எத்துறையாகவும் இருக்கலாம். இவ்வாறான பிரபலங்களுக்கு மத்தியில் இந்திய சமூகத்தால் மறந்து போய் விட்டாலும், அனைத்துலக நாடுகளாலும் கௌரவிக்கப்பட்ட ஓர் இஸ்லாமிய அழைப்பாளர் தான் டாக்டர் சாகீர் நாயக் ஆவார். இவருடைய ஆரம்ப கால…
அவுஸ்திரேலியா நீதிமன்றத்திற்கு இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் பெண் நீதிபதியாக நியமனம்
அவுஸ்திரேலியா நீதிமன்றத்திற்கு கல்ஹின்னயைச் சேர்ந்த முஸ்லிம் பெண் நீதிபதியாக நியமனம் அவுஸ்திரேலிய விக்டோரியா மஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் நீதிபதியாக இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் பெண் நியமிக்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலிய சட்டமா அதிபர் மார்ட்டீன் பகுலா இவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதை அறிவித்துள்ளார். உர்பா மசூத் என்னும் இலங்கைப் பெண்ணே இவ்வாறு நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கண்டி மாவட்டம் கல்ஹின்ன, பாடசாலை வீதியைச் சேர்ந்த மசூத் – சித்தி சாஹிரா தம்பதியின் புதல்வி ஆவார். இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து ஐக்கிய இராச்சியத்தில் வாழ்ந்த…
குர்ஆன் – சுன்னாவை உறுதியாக பிடித்தபடி சவூதியை முன்னேற்றுவோம் – சல்மான் சூளுரை
குர்ஆனிலும் சுன்னாவிலும் உறுதியோடு உள்ள நிலையில் சவுதி அரேபியாவை முன்னேற்ற பாதையை நோக்கி அழைத்து செல்வோம் – சவுதி மன்னர் சல்மான் சூழுரை கனவு 2030 என்றொரு திட்டத்தை சவூதி அரேபிய நடைமுறை படுத்த திட்டமிட்டு இருக்கிறது. 2030 ஆம் ஆண்டில் சவூதி அரேபியா எப்படி இருக்க வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டு வரையபட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ் பல மாற்றங்களை சவூதி அரேபியா கொண்டு வர இருக்கிறது. முன்னேற்றங்களுக்கு மாற்றங்கள் தான் அடிப்படை என்பதை உணர்ந்துள்ள…
அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்ய வேண்டாம் : ஜனாதிபதி
இம்முறை நடைப்பெறவிருக்கும் மே தின ஊர்வலங்களுக்காக அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்ய வேண்டாம் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். இது தொடர்பில் தமக்கும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருக்கும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார். மேலும், காலி சமனல விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ள மே தினப் பேரணியில் கலந்து கொள்பவர்களை…
புதிய பொருளாதார வலயம் அறிவிப்பு
ஐரோப்பா, சீனா, சிங்கப்பூர் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளை ஒன்றிணைத்து, ஒரே பொருளாதார வலயத்தை அறிவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறியமுடிகின்றது. இந்தப் புதிய பொருளாதார வலயம் தொடர்பிலான அரசாங்கத்தின் தீர்மானத்தை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜூன் மாதத்தில் நாடாளுமன்றத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என்றும் அறியமுடிகின்றது. புதிய பொருளாதார வலயம் அறிவிக்கப்பட்டதன் பின்னர், உலகத்தில் இரண்டாவது பாரிய சந்தைக்குள் இலங்கைக்கு நுழைய முடியுமென அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம…
வாகனங்களின் விலையில் ஏற்படும் பாரிய மாற்றங்கள்.!
வரித்திருத்ததுடன் வாகனங்களின் விலை பாரிய மாற்றங்கள் ஏற்படும் என வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் மே மாதம் 2 ஆம் திகதி முதல் இடம்பெறும் வரித்திருத்ததுடன் வாகனங்களின் விலை அதிகரிக்கப்படலாம் எனவும் நுகர்வோர் இந்த காலகட்டத்தில் வாகனங்களை கொள்வனவு செய்தால் பொருத்தமாக இருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அமெரிக்க டொலரின் மாற்றம் மற்றும் தற்போது ஜப்பானில் காணப்படும் பொருளாதரா நிலைமையினால் வாகன சந்தை உறுதியற்று காணப்படுவதாக அவர், மேலும் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா ஏயார்லைன்ஸ் தனியார் நிறுவனத்துடன் இணைய அமைச்சரவை அங்கீகாரம்!
ஸ்ரீலங்கா ஏயார்லைன்ஸ் நிறுவனத்தை தனியார் நிறுவனம் ஒன்றுடன் இணைத்துஎதிர்காலத்தில் செயற்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக விசேடதிட்டமிடல் அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். பிரதமர் அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கருத்துதெரிவிக்கும் போதே சரத் அமுனுகம இவ்வாறு தெரிவித்திருந்தார். இந்த ஊடக சந்திப்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கலந்துகொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊவா மாகாணத்தில் மற்றுமொரு விமான நிலையம்
ஊவா மாகாணத்தில் எளிமையான விமான நிலையம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். நேற்று (25) பதுளை மாவட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பண்டாரவளை நகரத்திற்கு அருகில் மகாஉல்பத்த மற்றும் தென் கெபில்லவெல கிராம சேவகர் பிரிவிற்கான மகாஉல்பத்த – நாயபெத்தவத்தை வரையிலான இடமொன்றிலே இந்த நிர்மாணிப்பு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் விமான நிலையம் ஒன்றை நிர்மாணிப்பதற்காக ஹப்புத்தளை தொடலாகலவத்தை…
களனி பல்கலைக்கழகத்துக்கு பூட்டு!
களனி பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தைத் தவிர்ந்த அனைத்து பீடங்களும், எதிர்வரும் மே மாதம் 04 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளது. ஈக்களினால் ஏற்பட்டுள்ள தொற்று காரணமாகவே, இவ் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
யாழ் முஸ்லிம்களின் பிரச்சினைகளை ஆராய்ந்த அமைச்சர் றிஷாத்
– பாரூக் ஷிஹான் – யாழ்ப்பாண முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை நேற்றையை (25) யாழ் விஜயத்தின்போது ஆராய்துள்ளார் அமைச்சர் றிஷாத் பதியுதீன். நேற்று திங்கட்கிழமை சுபஹ் தொழுகையின் பின்னர் மோட்டார் சைக்கிள் ஒன்றினை பெற்று யாழ் முஸ்லிம்கள் வாழும் பகுதிக்கு சென்று பார்வையிட்ட அவர்; தொடர்ந்து அங்கு சென்று மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக நேரில் கேட்டறிந்து கொண்டார். மக்களை சந்திக்க சென்ற அமைச்சர் தலைக்கவசத்துடன் இருந்தமையினால் அநேகமானவர்கள் அவரை அடையாளம் காணவில்லை. இந்நிலையில் தலைக்கவசத்தை கழற்றியவுடன்…
புலனாய்வு பொலிஸார் இருவர் கைது
மட்டக்களப்பு, காத்தான்குடிப் பொலிஸ் பிரிவில் பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் புலனாய்வு உத்தியோகஸ்தர்கள் இருவரை திங்கட்கிழமை (25) இரவு கைதுசெய்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சந்தேக நபர்கள், 38 வயதுடைய குறித்த பெண்ணை முச்சக்கரவண்டி ஒன்றில் காத்தான்குடிப் பிரதேசத்திலுள்ள வீடொன்றுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக விசாரணையிலிருந்து தெரியவருகின்றது. பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளான பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் காத்தான்குடியைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்….
இந்திய வெளி.அமைச்சர் சுஷ்மா வைத்தியசாலையில்
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், நெஞ்சு வலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இன்று (26) பாகிஸ்தான் நாட்டு வெளிவிகார அமைச்சரை சந்தித்து பேச சுஷ்மா திட்டமிட்டிருந்த நிலையில் நேற்றிரவு, சுஷ்மாவுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். சில பரிசோதனைகள் செய்து பார்க்கப்பட்டதாகவும், தற்போது சுஷ்மா சுவராஜ் உடல் நலம் சீராக இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
