News
மோசடி செய்யும் ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை.!
இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பணத்தினை மோசடி செய்யும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். அநுராதபுரம் சி.டி.சி. வரவேற்பு மண்டபத்தில் போக்குவரத்துச் சபை ஊழியர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
எமிரேட்ஸ் முன்வந்தால் அனுமதி வழங்குவோம்: அரசாங்கம்
– எம்.எம்.மின்ஹாஜ் – ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் மற்றும் மிஹின் லங்கா ஆகிய விமான சேவைகளை தரமான வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மாத்திரமே வழங்குவோம். எமிரேட்ஸ் முன்வந்தால் அனுமதி வழங்குவோம். இது தொடர்பில் ஆலோசனை சபையே தீர்மானிக்கும் என்று மின்சக்தி மற்றும் புதுபிக்கத்தக்க சக்தி பிரதி அமைச்சர் அஜித் பீ.பெரேரா தெரிவித்தார். இரு விமான சேவைகளின் கடன் மற்றும் நஷ்டங்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே பிரதான காரணமாவார். தனது சுய நலனுக்காகவே அவர் குறித்த நிறுவனங்களை அரச…
பேஸ்புக்கில் ஜனாதிபதியை அச்சுறுத்தியவர் கைது
பேஸ்புக் சமூக வலைத்தளத்தினூடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அச்சுறுத்திய சந்தேக நபர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் வீசா இல்லாமல் மலேசியாவிற்குச் சென்று அங்கிருந்து நாடுகடத்தப்பட்ட நிலையில் நேற்று இலங்கை வந்த போது கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த சந்தேக நபர் யக்கலை பிரதேசத்தைச் சேர்ந்தவராவர். சந்தேக நபர் இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டை கூறுபோட இடமளியோம் : ஜனாதிபதி
இலங்கையை இரண்டாகப் பிளவுபடுத்துவதற்கோ, தேசத்தின் இறையாண்மையைப் பாதிக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கோ அரசு ஒருபோதும் இடமளிக்காது. இதனை மீறும் எந்தவொரு வரைவுக்கும் – தீர்மானத்திற்கும் அரசு ஆதரவு வழங்கவே மாட்டாது இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாகத் தெரிவித்தார். இனப்பிரச்சினைக்கு தீர்வாக வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்த சுயாட்சியுடன் கூடிய சமஷ்டி முறைமையே அவசியம் என்று வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை தொடர்பாக எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே ஜனாதிபதி இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். இந்தக் கேள்வி தொடர்பில்…
ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்?
ஒலிம்பிக் அல்லது பொதுநலவாய விளையாட்டு விழாக்களில் கிரிக்கெட் போட்டிகளை இணைப்பதா? இல்லையா? என்பது குறித்தான முகாமைத்துவக் குழுவின் பரிந்தரைகளை சர்வதேச கிரிக்கட் பேரவை திங்களன்று ஆராய்ந்தது. இதன் போது இந்த விடயம் குறித்து இறுதித் தீர்மானம் எடுப்பதற்கு முன்னர், உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள், சர்வதேச ஒலிம்பிக் குழுவினர், பொதுநலவாய விளையாட்டுத்துறை சமமேளன உறுப்பினர்கள் ஆகியோருடன் கலந்துரையாட வேண்டும் எனவும் பேரவையின் நிருவாக சபை தீர்மானித்தது. சீனாவில் கிரிக்கெட் விளையாட்டுத்துறை வியாபித்து வருவது தொடர்பான அறிக்கை ஒன்று சர்வதேச…
எவரையும் வீழ்த்தி அரசியல் ஆதாயம் தேடும் நோக்கம் எமக்கில்லை
– சுஐப் எம் காசிம் – முஸ்லிம் சமூகத்தின் ஒட்டுமொத்த அபிலாஷைகளையும் உள்ளடக்கும் வகையில் அந்த சமூகத்தின் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் உள்வாங்கி பொருத்தமான அரசியல் திட்ட வரைபொன்றை உருவாக்குவதே அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் எண்ணமாகுமென்று அக்கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் நேற்று மாலை தெரிவித்தார். மக்கள் காங்கிரஸ் தயாரித்துள்ள அரசியல் திட்ட வரைவை மேலும் மெருகூட்டி அதனை முழுமைப்படுத்துவதற்காக முன்னாள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கட்சியின் அரசியல் மறுசீரமைப்பு ஆலோசனைக்குழு நடத்திய…
கபீர் ஹாஷிம் உள்ளிட்ட எழுவருக்கு அழைப்பாணை
ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் கபீர் ஹாஷிம், தேர்தல் ஆணையகத்தின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய உள்ளிட்ட பிரதிவாதிகள் 7 பேரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உயர் நீதிமன்றம் இன்று(27) அழைப்பாணை விடுத்தது. அது , அமைச்சர் சரத்பொன்சேகா ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டதை ரத்து செய்யுமாறு கோரி தென் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி அஜித் பிரசன்ன தாக்கல் செய்திருந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதாகும். குறித்த மனு மீதான விசாரணை மீண்டும்…
ரணில் – சம்பந்தன் சந்திப்பு
எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அலரிமாளிகையில் இன்று (27) புதன்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின்போது, கிளிநொச்சியில் மக்கள் காணிகளை இராணுவத்தினர் பலவந்தமாக ஆக்கிரமித்துள்ளமை தொடர்பில், பிரதமரிடம் அவர் முறையிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் தமிழன் என்பதால் முகாம்களுக்குள் செல்லத் தடையா?
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஒரு தமிழன் என்பதால் தான் இராணுவ முகாம்களுக்குள் செல்லத் தடையா? அவ்வாறு தடை விதித்தது யார்? என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன கேள்வி எழுப்பியுள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். மற்றைய நாட்களில் நாங்கள் படை முகாம்களுக்குள் சென்றுள்ளோம், உறங்கியும் இருக்கின்றோம், அப்பொழுது எல்லாம் மௌனம் காத்த இவர்கள் சம்பந்தன் சென்றதை மட்டும் ஏன் இவ்வாறு பெரிதுபடுத்துகிறார்கள் என தெரிவித்தார். கடந்த 16ம் திகதி நடந்த இந்த சம்பவத்தை…
அமைச்சர் சம்பிக்க கைது செய்யப்படுவாரா?
இராஜகிரிய பிரதேசத்தில் அமைச்சர் பாட்டலி சம்பிக்கவின் வாகனத்தில் இளைஞர்ஒருவர் மோதி காயமடைந்த சம்பவத்தில் பதிவான சீ.சீ.டி.வி காணொளிகளையும், 5இறுவட்டுக்களையும் பரிசோதனையின் பொருட்டு மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்குஅனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை கொழும்பு நீதிமன்ற நீதவான் சந்தன கலங்சூரிய இன்றைய தினம்விடுத்துள்ளார். இந்த பரிசோதனையின் அறிக்கைகள் மொரட்டுவ பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்டபின்னர் அமைச்சர் சம்பிக்கவை கைது செய்வதா?இல்லையா? என நீதிமன்றம் முடிவுஎடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த விபத்துடன் தொடர்புடைய ஜீப் வண்டியினை சோதனை செய்த போது அதில்கையடக்கத் தொலைபேசி ஒன்று…
தொடரும் அதிரடி கைது நடவடிக்கை
தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் கலையரசன் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் (27) திருக்கோவில் பகுதியில் வைத்து முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் ராம் கைது செய்யப்பட்டதை தொடர்ந்தே திருகோணமலை அரசடிப் பகுதில் வைத்து கலையரசன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அல் ஆகில் புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பிக்க கோரிக்கை.!
2014 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளின்படி இலங்கை பல்கலைக்கழகங்களில் மருத்துவம், பொறியியல், கணினி, விஞ்ஞானம் ஆகிய துறைகளுக்கு தெரிவான வருவாய் குன்றிய மாணவர்களிடமிருந்து அல்-ஆகில் புலமைப் பரிசில்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. குறித்த தகைமைகளைக் கொண்ட மாணவர்கள் எழுத்துமூல வேண்டுகோள், பல்கலைக்கழக மாணவ தகைமையை உறுதிப்படுத்தும் ஆவணத்தின் போட்டோ பிரதி மற்றும் தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரி என்பவற்றை இணைத்து 2016 மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் அல் ஆகில் புலமைப்பரிசில் நிதியம், 23/3,…
