News
மஹிந்த ஆட்சியில் 27 சர்வதேச பிரகடனங்கள் மீறப்பட்டுள்ளன
கடந்த மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் 27 சர்வதேச பிரகடனங்கள் மீறப்பட்டுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நிதி அமைச்சில் நேற்று (10) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கலிபோர்னியாவில் புதிய சட்டம் : ஆண் பெண் இருபாலரும் ஒரே கழிவறை
அமெரிக்க கலிபோர்னியாவில் ஆண் பெண் என இருபாலரும் ஒரே கழிவறையை பயன்படுத்தலாம் என புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நியூயோர்க்கில் உள்ள கலிபோர்னியாவில் கழிவறைகளில் ஆண், பெண் என பேதம் பார்க்கக்கூடாது என குறித்த மகாண சட்டசபையில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, அங்கு கழிவறைகள் பொதுவாக்கப்பட்டு ஆண், பெண் என இருபாலரும் பயன்படுத்தி கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தை பலர் வரவேற்றுள்ளதுடன் சிலர் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.
பாடசாலை சேவை வாகனங்களில் பிரேக்கில் குறைபாடுகள்
– திலக்கரத்ண திஸாநாயக்க – பாடசாலை மாணவர்களை ஏற்றிச்செல்லும் 32 வான்கள் மற்றும் பஸ்களின் வாகன நிறுத்தும் கருவியில் (பிரேக்) குறைப்பாடுகள் இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. கம்பஹா மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது சுமார் 100 வாகனங்கள் இவ்வாறு வாகன நிறுத்தும் கருவிகளில் குறைபாடுகளுடன் இயங்கி வந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றுள் அநேகமான வாகனங்கள் பாடசாலை மாணவர்களுக்கான சேவையில் ஈடுபடும் வாகனங்கள் என்றும் இவையனைத்தும் கம்பஹா மாவட்டத்துக்குள் இயங்குபவை என்றும்…
வாள், கத்தி உற்பத்தி செய்ய தடை
– எம்.றொசாந்த் – வாள்கள், ஆபத்தான கத்திகள் என்பவற்றை தொழிற்சாலைகள் உற்பத்தி செய்வதற்குத் தடையுத்தரவு பிறப்பித்துள்ள யாழ். மேல் நீதிமன்றம், அவற்றை வைத்திருப்பவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் உடனடியாகக் கையளிக்க வேண்டும் உத்தரவிட்டுள்ளது.
‘திருமணமாகாமலே 1,000 பேர் கருக்கலைத்து கொள்கின்றனர்’
5-20 சதவீதமானவர்கள் உயிரிழப்பு 240,170 பேர் கலைத்துக்கொள்கின்றனர் ஊவாவிலேயே அதிகமான கருக்கலைப்பு கவிதா சுப்ரமணியம் – திருமணம் முடிக்காமலே, நாளொன்றுக்கு 1,000 பேர் சட்டவிரோதமான முறையில் கருவைக் கலைத்துக்கொள்கின்றனர் என்று ஜயவர்தனபுர பல்கலைக்கழக பிரதம மருத்துவ அதிகாரி வைத்தியர் ஷாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்தார். ‘133 வருடங்களுக்கு முன்னரான சட்டத்தை, இன்னும் நாம் கடைப்பிடித்து வருகின்றோம். அச்சட்டத்தில், கர்ப்பம் தரித்த தாயொருவரின் உயிரைக் காப்பாற்றுவதற்காக மாத்திரமே கருக்;கலைப்புச் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது’ என்றும் அவர் கூறினார். கருக்கலைப்பினால் ஏற்படும்…
ஐவேளை தொழாத கணவரை, விவாகரத்து செய்த சகோதரி
சவூதி அரேபியாவை சேர்ந்த பெண்மனி ஒருவர் தனது கணவர் ஐவேளை தொழாததால் விவாகரத்து பெற்றுள்ளார். May 7, 2016 Five days after getting married, a woman in Saudi Arabia has found that her husband was not religiously-committed man, therefore divorced him. As per Saudi news site Al Marsad, the woman was so annoyed with her husband who was not…
இலங்கைக்கான துருக்கி தூதுவர் – அமைச்சர் றிஷாத் சந்திப்பு
இலங்கைக்கான துருக்கி தூதுவர் துன்காசுஹதார் தலைமையிலான வர்த்தக குழுவை அமைச்சர் றிஷாத் இன்று (10) சந்தித்தபோது.
ஐ.நா பொதுசபை விஷேட அமர்வு ஆரம்பம்!
முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஜக்கிய மற்றும் நல்லிணக்க தலைவர்களின் தலைவியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஐ.நா பொதுச்சபை விஷேட அமர்வில் உரையாற்றவுள்ளார். இந்த விஷேட அமர்வு இன்றும் (10) நாளையும் நியூயோர்க்கில் இடம்பெறவுள்ளது. இதன் தொனிப்பொருள் சர்வதேச பாதுகாப்பும் சமாதானமும் என்பதாகும். இதன்போது இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் நல்லிணக்க நடைமுறை பற்றி அவர் உரையாற்றவுள்ளார். புதிய தொடர்புகள் மற்றும் பதிலளிப்புக்களுக்கூடாக முன்னோடியான தலைமைத்துவம் என்பது இந்த விசேட அமர்வின் தொனிப்பொருளாகும். ஐ.நா பொதுச்சபையின் தலைவர் விஷேட அமர்வை ஏற்பாடு…
சிறுத்தையின் மரணத்திற்கு விஷம் கலந்த உணவே காரணம்
அக்கரபத்தனை பகுதியில் நேற்று (9) உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுத்தை விஷம் கலந்த உணவை உட்கொண்டதன் காரணமாகவே உயிரிழந்துள்ளதாக வன ஜீவராசிகள் திணைக்களத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சுமித் பிலப்பிட்டிய தெரிவித்துள்ளார். குறித்த சிறுத்தை உயிரிழந்த இடத்திற்கு அண்மையில் நாய்கள் இரண்டும் உயிரிழந்து கிடந்தமை குறிப்பிடத்தக்கது. அந்த நாய்களுக்கு விஷம் கலந்த உணவை வழங்கி சிறுத்தையை கொலை செய்திருக்கலாம் என திணைக்களத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இவ்வாறான…
றிஷாத்தைப்போன்று எவரும் பணியாற்றியதில்லை – சட்டத்தரணி மில்ஹான்
மன்னார் மாவட்டத்தின் அரசியல் வரலாற்றிலே அமைச்சர் றிசாத் பதியுதீனைப் போன்று, எந்த ஓர் அரசியல்வாதியும் பணியாற்றியது இல்லை என்று தேசிய வடிவமைப்பு நிறுவனத் தலைவர், சட்டத்தரணி மில்ஹான் தெரிவித்தார். மன்னார், அளக்கட்டு மாதிரிக் கிராமத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலேயே சட்டத்தரணி மில்ஹான் இவ்வாறு குறிப்பிட்டார். மன்னாரில் கடந்த காலங்களில் எத்தனையோ அரசியல்வாதிகள் பாராளுமன்ற உறுப்பினர்களாக பணியாற்றி இருக்கின்றனர். அவர்கள் மக்கள் பணியாற்றியுள்ள போதும், அமைச்சர் றிசாத் பதியுதீனைப் போன்று செயற்பட்டதில்லை. அமைச்சர் றிசாத் ஒரு சாணக்கியமிக்கத் தலைவர். மக்களோடு…
அபிவிருத்தி நடவடிக்கைகளை சிலர் கறுப்புக் கண் கொண்டு பார்க்கின்றனர்
சுஐப் எம் காசிம் – வவுனியா மாவட்டத்தின் தமிழ் பிரதேசங்களான அண்ணா நகர், தெற்கிலுப்பைக்குளம், பாரதிபுரம், சமயபுரம், சுந்தரபுரம், ஈஸ்வரிபுரம், கல்மடு போன்ற தமிழ் கிராமங்களுக்கு அமைச்சர் ரிஷாட் கடந்த சனிக்கிழமை (7) விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். அந்தக் கிராம மக்களை அவரவர் இடங்களில் சந்தித்து அவர்களின் குறைநிறைகளை கேட்டறிந்த அமைச்சர் அங்கு நடைபெற்ற கூட்டங்களிலும் உரையாற்றினார். அமைச்சர் கூறியதாவது, கடந்த காலங்களில் நான் இந்தப் பிரதேச மக்களுக்கு முடிந்த வரையில் உதவியுள்ளேன். என்னாலான பணிகளை மேற்கொண்டுள்ளேன். யுத்த…
சம்பந்தனின் பதவியை பறிக்க இடமளிக்கமாட்டோம் – ஜே.வி.பி.
ஜனாதிபதி, பிரதமர் கனவுகள் கலைந்துள்ள நிலையில் சம்பந்தனின் எதிர்க்கட்சி ஆசனத்தையேனும் பறிக்கும் நோக்கத்திலேயே மஹிந்த அணியினர் செயற்பட்டு வருகின்றனர். பாராளுமன்றத்தில் குழப்பங்களை மேற்கொள்ளவும், பயங்கரவாத கதைகளை பரப்பவும் இதுவே காரணம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். எம்மீது பொய்க்குற்றம் சுமத்தி எதிரணி பலத்தினை குறைக்க முயற்சிக்கின்றனர். ஆனால் நாம் இருக்கும் வரையில் அதற்கு இடமளிக்க மாட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டார். எதிர்க்கட்சி பதவிக்காக தொடர்ச்சியாக மஹிந்த அணியினர் போராடிவரும் நிலையிலும், மக்கள்…
