News
தெஹிவளையில் 6 மாடி புதிய பள்ளிவாசல்
-Mujeeb Ibrahim- கடந்த பல வருடங்களாக ஒரு பழமையான கட்டடத்தில் இயங்கிவந்த தெஹிவளை எபனீசர் வீதி பள்ளிவாயல் இப்போது விசாலிக்கப்பட்டு ஆறு மாடிகளை கொண்ட அழகிய அமைப்பில் இயங்க தொடங்கியுள்ளது. கடந்த நான்கு வருடங்களாக இதன் நிர்மாணப்பணிகள் இடம்பெற்றன. இதன்போது அருகில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கொட்டகையொன்றில்தான் ஐவேளை தொழுகையும், வாராந்த ஜும்ஆ நிகழ்வும் நடைபெற்றுவந்தன. இந்த புதிய கட்டடத்தின் நிர்மாண செலவுகள் அனைத்தையும் தனி நபர் ஒருவரே பொறுப்பேற்றிருந்தார்! இதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் நடந்துகொண்டிருக்கும் போது இந்த…
ஜனாதிபதி மாளிகை வனப்பை 40 ஆயிரம் பேர் பார்வை
கொழும்பு, கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையின் வனப்பை இதுவரையிலும் (11.06.2016) 40ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர் என்று ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
இராணுவ தளபதி அனுதாபம்
சாலாவ இராணுவ முகாமில் இடம்பெற்ற வெடிப்பால் பாதிக்கப்பட்ட இராணுவத்தினர் மற்றும் பொதுமக்களுக்கு தனதுஅனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த டி.சில்வா தெரிவித்துள்ளார்.
‘மக்கள் வசிக்கும் இடத்தில் ஆயுத களஞ்சியசாலை இனி இல்லை’
மக்கள் வசிக்கும் இடங்களில் பாதுகாப்பு படைகளுக்காக ஆயுத களஞ்சியசாலைகளை அமைப்பதை தவிர்த்துக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அத்துடன், சேதமடைந்த வீடுகள் தொடர்பில் முழுமையான விவரங்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்றிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சட்டம் மற்றுமு; ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார். சீதாவாக்க பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இலங்கையில் நில அதிர்வு எச்சரிக்கை
இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் 1000 கிலோ மீற்றர் தொலைவில் கண்டதத்தட்டு இயக்கவியல் செயற்பாட்டின் விளைவாக இலங்கையில் நில அதிர்வு ஏற்றபடக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பேராதனிய பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியரும், முன்னாள் உப வேந்தருமான அத்துல சேனாரத்ன தெரிவித்துள்ளார். இதேவேளை நாட்டில் மண்சரிவு அச்சுறுத்தல் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் நிலவுவதாகவும் தெரிவித்துள்ளார்.
சாலாவ சம்பவம்: 80 சதவீதமான வெடிபொருட்கள் மீட்பு
கொஸ்கம சாலாவ பகுதியில் 80 சதவீதாமான வெடிபொருட்கள் மற்றும் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப். கேர்ணல் கிரிசாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
அதிக விலைக்கு விற்றால் சட்ட நடவடிக்கை
அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு சீமெந்தை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் ஹசித்த திலகரட்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் மாணவர்களின் பாரிய ஆர்ப்பாட்டம்
தனியார் பல்கலைக்கழக கல்வியை அரசாங்கம் ஊக்குவிப்பதற்கு எதிராக கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை அடுத்த கிழமையில் நடத்தப்போவதாகவும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் எச்சரித்துள்ளது.
ஹிலாரியைவிட தகுதியானவர் யாரும் இல்லை: ஒபாமா ஆதரவு
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் களம்காண உள்ள குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான பிரைமரி தேர்தல்கள் பல்வேறு மாகாணங்களில் நடந்து வந்தன. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக, முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவியும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான ஹிலாரி கிளிண்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது குடியரசு கட்சியை சேர்ந்த…
பொலிஸ் மா அதிபர் ஏற்பாடு செய்துள்ள இப்தார்
பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு எதிர்வரும் 13 ஆம் திகதி, பொலிஸ் திணைக்களத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் பேரவையின் 32வது கூட்டத்தொடர்
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பின் 32வது அமர்வுகள் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 13ம் திகதி ஆரம்பமாகும் குறித்த அமர்வுகளானது ஜுலை மாதம் முதலாம் திகதி வரை நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. உலக நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பாக இங்கு ஆராயப்படவுள்ளதோடு, இலங்கை தொடர்பிலும் மிகுந்த அவதானம் செலுத்தப்படும் என நம்பப்படுகின்றது. இதேவேளை ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஆணையாளர் செய்ட் அல் ஹுசைன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் அண்மையில் இலங்கைக்கு வருகை தந்திருந்தமை…
இறைவரித் திணைக்களத்தில் கடந்த காலத்தில் பாரியமோசடிகள்
வரி அறவீடுகள் தொடர்பில் இறைவரித் திணைக்களத்தில் பாரிய மோசடிகள் இடம்பெற்றுள்ளன. அவை தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென அமைச்சர் ரவூப் ஹக்கீம் சபையில் கோரிக்கை விடுத்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்; கடந்த காலங்களில் பல நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் இந்த சபையில் கொண்டுவரப்பட்டுள்ளன. 1994 ஆம் ஆண்டு நானும் நிதி அமைச்சர்…
