News
உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்த செயலணி!
உள்நாட்டில் இடம்பெயர்ந்து வேறு இடங்களில் வசித்து வரும் மக்களை மீண்டும் அவர்களது இடத்தில் குடியமர்த்துவதற்காக விசேட செயலணியொன்றினை அமைப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அவ்வகையில் வடக்கில் இடம்பெயர்ந்த சிங்கள முஸ்லிம் மக்களுக்காக 21,663 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதோடு அரசியல் உரிமைகளுடன் அவர்கள் தமது இடங்களில் மீளக் குடியமர்த்தப்படவுள்ளனர்.
வற் வரி தொடர்பில் பிரச்சினைகளை தீர்க்க அதிகாரிகள் நியமனம்!
வற் வரி தொடர்பில் பொது மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் மேலும் 1100 அரச அதிகாரிகள் வேலைக்கு நியமிக்கப்படவுள்ளனர் என அமைச்சரவை பேச்சாளர்களான ராஜித சேனாரத்ன மற்றும் கயந்த கருணாதிலக தெரிவித்தனர். மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களுக்கு விலை குறைப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்ற போதும் சில பிரதேசங்களில் அநீதியான முறையில் விலை அதிகரிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றது. இவற்றினை தவிர்க்க வேண்டும். அத்தியாவசியப் பொருட்கள் எவற்றுக்கும் வற் வரி விதிக்கப்படவில்லை. அவ்வகையில் வற் வரி தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்த…
சாலாவ வெடிப்பு சம்பவத்தில் 1800 வீடுகள் சேதம்
அண்மையில் இடம்பெற்ற சாவாவ இராணுவ முகாம் வெடிப்பு சம்பவத்தினால் சுமார் 1800 வீடுகள் சேதமடைந்திருப்பதாக மதிப்பீட்டு அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளன. இதில் முற்றாக வீடுகள் அழிவடைந்த 401 குடும்பங்களுக்கு 50,000ரூபாய்அடிப்படையில் மாதாந்த வாடகை வழங்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் 150குடும்பங்களுக்கு குறித்த நிவாரண பணம் வழங்கப்படவுள்ளது. மேலும், 850 வீட்டு உரிமையாளர்களுக்கு 50,000ரூபாய் மாதாந்த வாடகை வழங்கதீர்மானித்துள்ளதாகவும், அதற்கு மேலதிகமாக வழங்குவதற்கு அமைச்சரவையின்அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாலித தெவரப்பெருமவுடன் செல்பி எடுத்த பாலித ரங்கே பண்டார
களுத்துறைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரதியமைச்சர் பாலித தெவரப்பெருமவைப் பார்வையிடுவதற்காகச் சென்றிருந்த திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி இராஜங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார, அங்கு அவருடன் செல்பி எடுத்துகொண்டார். மத்துகம, மீகஹாதென்ன கனிஷ்ட வித்தியாலயத்துக்குள் பெற்றோர் சிலருடன், அத்துமீறி நுழைந்து 10 மாணவர்களை பாடசாலையில் இணைத்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே, நீதிமன்றத்தில் ஆஜராகுவதற்காக, அவர், செவ்வாய்க்கிழமை மாலை சென்றிருந்த போது, கைது செய்யப்பட்டு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த பாலித, சரணடைவதற்குச்…
பிஸ்டோரியஸுக்கு ஆறு ஆண்டு சிறைத் தண்டனை
தனது காதலி ரீவா ஸ்டீன்கெம்ப்பை சுட்டுக் கொன்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மாற்றுத்திறனாளி ஒலிம்பிக் தடகள வீரர் ஆஸ்கார் பிஸ்டோரியஸுக்கு தென் ஆபிரிக்கா மேன்முறையீட்டு நீதிமன்றம் 6 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது. தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் தனது குடும்பத்தினரை ஆரத்தழுவிய 29 வயதான பிஸ்டோரியஸ் பின்னர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். தீர்ப்பு வழங்குவதற்கு முன்னர் சமூக அக்கறைகள், பாதிக்கப்பட்ட ஸ்டீன் கேம்ப் குடும்பத்தின ரின் மன உளைச்சல், பெருகி வரும் கொலைக் குற்றங்கள், மற்றும் கொலைக் குற்றவாளிகளுக்கான…
4000 ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்
மின்சார சபையுடன் இணைந்த மற்றும் மனித வலு குத்தகை அடிப்படையில் சேவையாற்றிய சுமார் 4 ஆயிரம் ஊழியர்கள் செம்டெம்பர் 4ஆம் திகதி முதல் நிரந்தர சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். 2014ஆம் ஆண்டு நிறைவடைவதற்கு முன்னர் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட, நீண்ட காலம் சேவையில் இருந்து, மின்மானி வாசிப்பு மற்றும் ஆட்பல வேலைகளில் ஈடுபட்ட சகல ஊழியர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது. செப்டெம்பர் 4ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில்…
ஜம்இய்யத்துல் உலமா, வன்மையாகக் கண்டிக்கிறது..!
மதீனாவில் நபிகள் நாயகம் (ஸல்) நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள மஸ்ஜிதுந் நபவி பள்ளிவாசலுக்கு அருகாமையில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை வன்மையாகக் கண்டித்துள்ளது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘ரமழான் மாதத்தின் இறுதி நாளில் முஸ்லிம்களின் புனித இடமான முஸ்ஜிதுல் நபவி பள்ளிவாசலுக்கு முன்பு அப்பாவி மக்களை இலக்குவைத்து தீவிரவாதிகள் மேற்கொண்ட தற்கொலை குண்டு தாக்குதலில் 5…
ஆரையம்பதியில் சிறுத்தையின் உடலம்
-ஏ.எச்.ஏ.ஹுஸைன் மட்டக்களப்பு, ஆரையம்பதி பிரதேசத்தின் பிரதான வீதியை அண்டி அமைந்துள்ள பெரிய சந்தைக்கு முன்பாக புதன்கிழமை (06) இரவு சிறுத்தை ஒன்று உயிரிழந்த நிலையில் காணப்பட்டது. இந்தச் சிறுத்தை எங்கிருந்து வந்தது என்பதுடன், எதனால் இறந்துள்ளது என்பது பற்றிய தகவல்கள் தெரியவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர். மட்டக்களப்பு மற்றும் அம்பாறை வனவளத் திணைக்களத்திடம் இந்தச் சிறுத்தையின் உடலத்தை பொலிஸார் ஒப்படைத்துள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். உணவு தேடி இந்தச் சிறுத்தை நகருக்குள் வந்திருக்கலாம் எனவும்…
பேலியகொடையில் ஆர்ப்பாட்டம்
களனி – பியகம வீதியை மறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதால் அப்பகுதியில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு வெள்ள நிவாரணத்தை வழங்குமாறு கோரியே இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மீரிகம புகையிரத விபத்து : இருவர் காயம்
வில்வத்த மீரிகம பகுதியில் புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புகையிரதத்தின் பின்னால் புகையிரத இயந்திரம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்தினால் மீரிகம அம்பேபுஸ்ஸ பகுதிகளுக்கான புகையிரத போக்குவரத்து தாமதப்பட்டுள்ளதாக புகையிரத சேவை தகவல்கள் தெரிவிக்கின்றன.
என்னையும் எனது குடும்பத்தையும் சிறையடையுங்கள்
என்னுடன் குரோதம் இருந்தால் என்னையும் என் குடும்பத்தையும் சிறையில் அடையுங்கள். அதைவிடுத்து எனது பிரதேச கிராம மக்களை பழிவாங்க வேண்டாம் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எமது ஆட்சிக் காலத்தில் குடிசைகள் ஏற்படுத்தப்படவில்லை. அதற்கு மாறாக வசதியான வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பட்டன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஹுங்கம அத்புடுவ விஹாரையில் இடம்பெற்ற மத வைபவத்தில் உரையாற்றுகையிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சுயாதீனமாக செயற்படுவேன் : இந்திரஜித் குமாரசுவாமி
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பில் எனக்கு தெளிவுபடுத்தினார். அதற்கேற்பவே எனது செயற்பாடுகளும் தொடரும். நான் பெற்றுள்ள அனுபவத்தைக் கொண்டு பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு உங்களது ஒத்துழைப்பினை வழங்குவீர்கள் என எதிர்பார்க்கிறேன் என்று மத்திய வங்கியின் புதிய ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்திருக்கிறார்.
