News
சட்டம் மற்றும் ஒழுங்குகளால் அரசாங்கத்துக்கு வருமானமிழப்பு
கெலும்பண்டார, யொஹான்பெரேரா தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் ஒழுங்குகள் காரணமாக, அரசாங்கம் வருமானத்தை இழந்து வருகின்றது என்று, பொதுக்கணக்கு குழுவின் நாடாளுமன்ற கண்காணிப்புகுழு அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளது. குறித்த அறிக்கை, குழுவின் தலைவர் பிரதியமைச்சர் லசந்த அலகியவண்ணவால் சமர்ப்பிக்கப்பட்டள்ளது. ஒரு கணினி தரவு முறைமையைக் கொண்டு வந்து, இந்தக்குறைப்பாடுகளை நிவர்த்தி செய்ய முடியும் என்று பொதுக்கணக்கு குழு பரிந்துரை செய்துள்ளது. அரசாங்கத் திணைக்களம், உள்ளூராட்சி சபை உள்ளிட்ட அமைச்சுக்கள் அடங்களாக மொத்தம் 41 அரச நிறுவனங்களை உள்ளடக்கி இந்த ஆய்வு…
அரச பாடசாலைகளில் உள்வாங்கும்போது லஞ்சம் கோரினால் உடன் 1954க்கு அழையுங்கள்
பிள்ளைகளை அரச பாடசாலைகளில் உள்வாங்கும்போது நிதி மற்றும் பாலியல் ரீதியில் லஞ்சம் கோரும் அதிபர்கள் தொடர்பில் தாமதிக்காமல் 1954 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பிரியந்த சந்திரசிறி அறிவித்துள்ளார். குறிப்பாக இக்காலப் பகுதியில் 2017 ஆம் ஆண்டுக்கு புதிய மாணவர்களை தரம் 01 இற்கு சேர்த்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சைகள் இடம்பெற்று வருகின்றன. இதன்போது, எந்தவொரு அதிபராவது இவ்வாறு லஞ்சம்…
க.பொ.த.சாதாரணதர பரீட்சைக்கு 715,000 விண்ணப்பங்கள்
இந்த ஆண்டிற்கான கல்வி பொதுத்தரா தர சாதாரணதர பரீட்சைக்கு 7 இலட்சத்து 15 ஆயிரம் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பரீட்சைகள் அணையாளர் நாயகம் டபுள்யு.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு இணைவதை முஸ்லிம்கள் விரும்பவில்லை – அமைச்சர் சரத் அமுனுகம
முஸ்லிம் ஒருபோதும் வடக்கும் கிழக்கும் இணைவதை விரும்பவில்லை. கிழக்கு பிரிந்திருக்க வேண்டும் என்பதே அவர்களது அபிலாசையாகும். இன்று பல்லின மக்கள் வாழும் எமது நாட்டில் நாம் பேதங்களை மறந்து எமது சமய அடையாளங்களை பேணிக்கொண்டு இலங்கையர் என்ற பொதுவான அடையாளத்துடன் வாழ வேண்டும் என விசேட திட்டங்களுக்கன அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார். நேற்றுமுன்தினம் மாலை கொழும்பிலுள்ள லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் நடைபெற்ற, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் பாராளுமன்ற உரை உள்ளடங்கிய ‘முஸ்லிம்களின் பிரச்சினைகளை…
“அளுத்கம தீக்கிரை சம்பவம் குறித்து உடன் விசாரணை செய்யுங்கள்” றிஷாத் அவசர வேண்டுகோள்
-ஊடகப்பிரிவு – அளுத்கமையில் தர்ஹா நகர் ஒருவருக்குச் சொந்தமான கடையொன்று தீப்பிடித்து தீக்கிரையாகிய சம்பவம் குறித்து உடன் விசாரணை செய்து அது தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தச்சம்பவம் குறித்து இரசாயனப்பகுப்பாய்வு மேற்கொண்டு சதிமுயற்சியா? அல்லது தற்செயலாக நடந்ததா? என்ற உண்மையை கண்டறியுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார். தர்ஹா நகர், அளுத்கம போன்ற இடங்களில் இவ்வாறான கடை எரிந்த சம்பவங்கள் இடம்பெற்றமை இது முதற்தடவையல்ல. ஏற்கனவே இந்தப்பிரதேசங்களில் திட்டமிட்டு முஸ்லிம்களுக்கு…
இலங்கைக்கான புதிய இந்திய தூதுவர் நியமனம்
இலங்கைக்கான புதிய இந்திய தூதுவராக தரன்ஜிட் சிங் சந்து நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த தகவலை இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. தரன்ஜிட் சிங் உக்ரைன், ஜேர்மனி, ரஷ்யா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் சேவையினை புரிந்துள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிக்காக்கும் குழுவின் இந்திய பிரதிநிதியாக செயற்பட்டுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
‘இலங்கையில் மீண்டும் யுத்தம் ஏற்படாது’
“இலங்கையின் தேசிய நல்லிணக்கத்தை வலுவடையச் செய்யும் போதுஇ சுமார் 30 ஆண்டுகள் நிலவிய கொடூர யுத்தத்தை எதிர்கொண்ட ஒரு நாடு என்ற ரீதியில் எமக்கு கிடைத்த அனுபவங்களினூடாக மீண்டும் ஒரு முறை எச்சந்தர்ப்பத்திலும் யுத்தம் உருவாவதைத் தடுத்தல்இ நாட்டின் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை உறுதிசெய்தல், தேசிய நல்லிணக்கத்தினூடாக இனங்களுக்கிடையே பலமான ஒற்றுமையை ஏற்படுத்தல் ஆகியவற்றினூடாக முன்னிலை வகிக்கும் ஒரு நாடாக இலங்கையை மாற்றுவதற்கு முன்னுரிமையளிக்கிறோம்” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஐக்கிய நாடுகளின் 71ஆவது பொதுச்சபைக்…
பாலஸ்தீன பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் – ஐ.நா.வில் கட்டார் அமீர்
அப்பாவிகளின் இரத்தம் எங்கு சிந்தப்பட்டாலும் பிரித்து பார்க்காமல் இருக்க வேண்டும் : பாலஸ்தீன் குறித்து ஐநாவில் கட்டார் அமீர் பேச்சு….!! ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டுத்தொடர் தொடங்கி விட்டது. அதில் பங்கேற்று பேசிய கத்தார் அமீர் தமீம் பேசுகையில்…. அப்பாவிகளின் இரத்தம் எங்கு சிந்தப்பட்டாலும் பிரித்து பார்க்காமல் இருக்க வேண்டும் பாலஸ்தீன் பிரச்சினை 70 ஆண்டுகளுக்கு மேலாக அப்படியே இருக்கிறது. இஸ்ரேல் மேலும் மேலும் பாலஸ்தீன் மீது தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கிறது. இஸ்ரேல் மேற்கு கூரையிலும், குத்சிலும் குடியிருப்புகளை…
இன்று சவூதி அரேபியாவின் தேசிய தினம்
உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதி அரேபியாவின் தேசிய தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 23 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் 23 வெள்ளிக்கிழமை வருகிறது. சவூதி அரேபியாவில் பொதுவாகவே வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை அரசு விடுமுறை தினம் என்பதால், தேசிய தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 22 வியாழன் கிழமையும் அரசு விடுமுறை தினம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சவூதி அரேபியாவில் பணிப்புரிபவர்களுக்கு இந்த ஆண்டு செப்டம்பர் 22, 23,…
20ஆயிரம் மில்லியன் முதலீட்டில் டெக்னோ சிட்டி ஆரம்பம்
-அஷ்ரப் ஏ சமத் – ”டெக்னோ சிட்டி” (விஞ்ஞான தொழில்நுட்ப நகரம் ) நேற்று (22) கொழும்பு – ஹோமகமவில் பிரதம மந்திரியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதற்கான முதலாம் கட்டத்திற்காக 20ஆயிரம் மில்லியன் ரூபாய் முதலிடப்பட்டுள்ளது. மேல்மாகண மெகா பொலிசி அமைச்சா் சம்பிக்க ரணவக்கவும், விஞ்ஞான கைத்தொழில் ஆராய்ச்சி அமைச்சா் சுசில் பிரேம் ஜயந்த, உயா்கல்வி அமைச்சும் இணைந்தே இத் திட்டத்தினை முன்னெடுத்துள்ளது. இத்திட்டத்திற்காக தேசிய விஞ்ஞான நிலையம் 3ஆயிரம் மில்லியன் ருபா, ஆர் த சி…
ராம்குமார் தற்கொலை செய்தார் என்பதை நம்ப முடியாது! ஓய்வுபெற்ற நீதிபதி
ராம்குமார் புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்டார் என்று சொல்வதை நம்ப முடியாது” என்கிறார் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு. அவரிடம் சில கேள்விகளை எழுப்பினோம். ராம்குமார் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருந்த நிலையில், இந்த சம்பவம் நிகழ்வதற்கு எந்தளவுக்கு சாத்தியம் உள்ளது? நான் நீதிபதியாக இருந்தபோது, தமிழக சிறைகளில் கைதிகளின் நிலைமைகளைப் பரிசீலித்து சிறை சீர்திருத்தங்களுக்கு உத்தரவிட்டேன். கைதிகளின் அறைகளில் மின்விசிறி வைக்கச் சொன்னேன். அதற்கு, சிறை நிர்வாகமும் அரசும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். மின்கம்பிகள் கைதிகளின் அறைக்குள்…
வரட்சி நிலை தொடர்பில் அரசு அதிக அவதானம் செலுத்த வேண்டும்
நாட்டின் பல பிரதேசங்களிலும் காணப்படுகின்ற வரட்சியினை கருத்திற்கொண்டுஅவசரகால நிலையினை பிரகடனப்படுத்துமாறு கூட்டு எதிர்க்கட்சி அரசிடம் கோரிக்கைவிடுத்துள்ளது. இந்த வரட்சி நிலை தொடர்பில் அரசு அதிக அவதானம் செலுத்த வேண்டும் எனவும்கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார். கடும் வரட்சியினால் மக்கள் குடிநீர் இன்றி அவதியுறுவதாகவும் அவர்சுட்டிக்காட்டியுள்ளார். இதன் காரணமாக விவசாயிகள் அதிகம் இன்னல்களை எதிர்கொண்டுள்ளதாகவும், எனவேவிவசாயிகளுக்கு நிவாரண நிவர்த்திக்காக அவசரகால நிலையினை பிரகடனப்படுத்துமாறும்பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
