News
All Ceylon Makkal Congress wishes all the best and excellent success for all the students sitting for the Scholarship Examination today!
All Ceylon Makkal Congress wishes all the best and excellent success for all the students sitting for the Scholarship Examination today 11th October 2020 and all those Advice Level students who are going to sit for their Examination tomorrow. Education is the real and long lasting assets that can not be destroyed by any force….
பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு தேசிய அமைப்பாளரின் வாழ்த்துச் செய்தி!
இன்ஷா அல்லாஹ் நடைபெறவிருக்கும் 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவச் செல்வங்களுக்கு எனது வாழ்த்துக்கள். பரீட்சைக்கு இலகுவாக முகம்கொடுத்து சித்தியடைய எனது பிரார்த்தனைகள். அப்துல்லாஹ் மஹ்ரூப் தேசிய அமைப்பாளர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
பரீட்சைக்கு தயாராகவுள்ள மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பு!
இன்று நடைபெறவுள்ள தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையும் அதனைத் தொடர்ந்து நடைபெற உள்ள கல்வி பொது தராதர உயர் தர பரீட்சையையும் எழுதவுள்ள மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று முன்னாள் இராஜாங்க அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளரும் ஆகிய எம்.எஸ்.எஸ்அமீர் அலி தெரிவித்துள்ளார். நடைபெற உள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சை மற்றும் உயர்தர பரிட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர்…
“இறைவனின் அருள்பாலிப்பில் அபிலாஷைகள் நிறைவேறட்டும்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!
அச்சம் நிறைந்த கடினமான சூழலில், நாளை (12) கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவச் செல்வங்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறப் பிரார்த்திப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் மாதம் எழுதவிருந்த இப்பரீட்சை, இப்படியான சுகாதாரக் கெடுபிடிகள் நிலவும் காலத்தில் நடைபெறுகிறது. கொரோனாவின் பீதி நீங்கி, சுதந்திர மனநிலையில் மாணவர்கள் பரீட்சை எழுத வேண்டும் என்பதற்காகவே, ஒக்டோபர் வரை பின்போடப்பட்டது. எனினும், பயம் நிறைந்த சூழலிலே எமது…
கனேடிய தூதுவருடனான சந்திப்பு!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் நேற்று முன்தினம் (05) கொழும்பில் உள்ள கனேடியத் தூதுவரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தினார். நாட்டில் எதிர்நோக்க நேர்ந்துள்ள கொரோனா வைரஸின் புதிய அச்சுறுத்தல்கள், அரசாங்கம் ஏற்படுத்தவுள்ள புதிய அரசியல் கலாசாரம் மற்றும் சிறுபான்மைச் சமூகத்தின் அபிலாஷைகள் தொடர்பிலும் இச்சந்திப்பில் இருவரும் கலந்துரையாடினர்.
குவைத் மன்னர் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பு!
குவைத் மன்னர் ஷேக் சபா அல் அஹமட் அல் ஜாபர் அல் சபாஹ்வின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் இலங்கையில் உள்ள குவைத் தூதரகத்தில் இன்று (06) கையெழுத்திட்டார். இதன் பின்னர் இடம்பெற்ற குவைத் தூதுவருடனான சந்திப்பின் போது, இலங்கை – குவைத் நாடுகளுக்கிடையிலான பரஸ்பர உறவு குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர்களான அலி சப்ரி ரஹீம் மற்றும் முஷாரப் ஆகியோரும் உடனிருந்தனர்.
Clean Puttalam அமைப்பினருடனான சந்திப்பு!
புத்தளம் மாவட்டத்தின் சூழல் பிரச்சினைகளுக்கெதிராக செயற்பட்டுவரும் Clean Puttalam அமைப்பினர், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்றி ரஹீம் தலைமையில், அகில இலங்கை மக்கள் கங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், தவிசாளர் அமீர் அலி ஆகியோரை சந்தித்து, தமது எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடினர்.
சாய்ந்தமருது அரசியல் செயற்பாட்டுக் குழு ஒன்றுகூடல்!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சாய்ந்தமருது அரசியல் செயற்பாட்டுக் குழு நேற்று (02) ஒன்று கூடியது. மாவட்ட மத்தியகுழு உறுப்பினர் முபாறக் தலைமையில் இடம்பெற்ற இந்த ஒன்றுகூடலில் கட்சியின் தேசிய கொள்கைபரப்புச் செயலாளர் ஜவாத், மாவட்ட செயற்குழுவின் தலைவர் அன்ஸில், மாவட்ட கொள்கைபரப்புச் செயலாளரும் மாவட்ட செயற்குழு செயலாளருமான ஜுனைடீன் மான்குட்டி மற்றும் வட்டாரப் பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர். இக் கலந்துரையாடலின் போது, சாய்ந்தமருது பிரதேச 17 குறிச்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு, சாய்ந்தமருது மத்தியகுழுவை உடனடியாக அமைப்பது சம்பந்தமாகவும்,…
“நிரபராதி என்பதாலேயே சகோதரர் ரியாஜ் விடுவிக்கப்பட்டார்” – வவுனியாவில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட வர்த்தகர் இன்ஷாப் இப்ராஹீம், தனது சகோதரர் ரியாஜ் பதியுதீனுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டிருந்தார் என்ற காரணத்துக்காகவே, குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டதாகவும், தற்போது விசாரணைகளின் பின்னர், நிரபராதியாக இருந்தமையினாலேயே விடுவிக்கப்பட்டுள்ளார் என்றும் மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரவித்தார். வவுனியாவில் இன்று காலை (01) ஊடகவியலாளரின் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, “ஒரு சம்பவத்தில் ஒருவர் குற்றவாளியாக இருந்தால்தான்…
வவுனியா மாவட்ட செயலகத்தின் கேட்போர்கூட அங்குரார்ப்பண நிகழ்வு!
வவுனியா மாவட்ட செயலகத்தின் புதிய கேட்போர்கூட அங்குரார்ப்பண நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் இன்று (௦1) கலந்துகொண்டார். இந்நிகழ்வில் பிரதம அதிதியாக உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சரும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான சமல் ராஜபக்ஷ கலந்துகொண்டதுடன், வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், காதர் மஸ்தான், திலீபன், மாகாண ஆளுனர்களான திருமதி சார்ள்ஸ், மஹிபால ஹேரத், அநுராதா யகம்பத் மற்றும் அமைச்சின் செயலாளரான கமல் குணரட்ன உட்பட…
மாடு அறுப்பதற்கான தடையை மீள்பரிசீலனை செய்யவும் – நிந்தவூர் பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!
அரசாங்கம் மாடு அறுப்பவதற்கு தடை விதிக்க இருப்பதனை மீள்பரிசீலனை செய்யுமாறு நிந்தவூர் பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றம். நிந்தவூர் பிரதே சபையின் செப்டம்பர் மாதக் கூட்டம் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹீர் தலைமையில் இன்று (30.9.2020) காலை 10 மணியளவில் நடைபெற்றது. இன்றைய அமர்வின் போது தவிசாளர் தாஹீர் உரையாற்றுகையில், மாடு அறுப்பதற்கு அரசாங்கம் தடையை ஏற்படுத்துவதற்கு அமைச்சரவையின் அங்கிகாரத்தைப் பெற்றுள்ளது. பசு வதைக்கு எதிராகவே இத்தடையை கொண்டு வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும், இத்தடை முயற்சியின் பின்னணியில்…
நிந்தவூரில் டெங்குவை கட்டுப்படுத்த பிரதேச சபை – பொதுச் சுகாதார பணிமனை கூட்டு நடவடிக்கை!
நிந்தவூர் பிரதேசத்தில் டெங்கு நோய் பரவல் தீவிரமடைந்து கொண்டிருப்பதனை தடுப்பதற்கு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு அங்கமாக, நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் தலைமையில், இன்று (28) நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் அலுவலகத்தில் கலந்துரையாடலொன்று நடைபெற்றது. நிந்தவூர் பிரதேச பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள், நிந்தவூர் பிரதேச சபை செயலாளர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர். இதன் போது, வடிகான்களை துப்புரவு செய்வது பற்றியும், ஏனைய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. டெங்குவை…
