News
முஸ்லிம் தனியார் சட்டமும்; பிறர் தலையீடும்; உரிமைப் போராட்டமும்!
03.11.2016 இலங்கையில், “முஸ்லிம் தனியார் சட்டம்” என்று டச்சுக்காரர்கள் காலத்தில் முன்னெடுக்கப்பட்டாலும் ஆங்கிலேயர் காலத்தில் 1806 ஆம் ஆண்டு அது சட்டக் கோவையாக அமுல்படுத்தப்பட்டது. அதன்பின், சிறு சிறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு 1951 ஆம் ஆண்டு முஸ்லிம் மார்க்க மற்றும் அரசியல் அறிஞர்களை கொண்ட சபை மூலம் பரிந்துக்கப்பட்டு 1954 ஆம் ஆண்டு வலுவூட்டப்பட்ட சட்டமாக பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. எனவே, “முஸ்லிம் தனியார் சட்டம்” என்பது எமது முன்னோர்களின் தொடர்ச்சியான போராட்டத்தின் மூலம் பெறப்பட்ட உரிமைகளில் ஒன்றாகும்….
இடம்பெயர்ந்தலைந்த சோகம் எண்ணக்கண் கலங்குதையா!
-சுஐப் எம்.காசிம் – இலங்கையின் சரித்திரத்தில் இனச்சுத்திகரிப்பாய் அன்று வடபுல முஸ்லிம் மக்கள் எழுபத்தை யாயிரம் பேர் இடம்பெயர்ந்தலைந்த சோகம் எண்ணக்கண் கலங்குதையா பாசிசப் புலிகள் செய்த பயங்கர கொடுமை அந்தோ சொந்தமண் வீடிழந்தோம் சொகுசான வாழ்விழந்தோம் அந்தரித்தலைந்து சொத்து நகைபணம் தொழில் இழந்தோம் தங்கிய கல்வியோடு கடைகண்ணிப் பொருள் இழந்தோம் கப்பமும் பெற்றார் எம்மைக் கைதியாய்ப் பணயம் வைத்தார் புத்தளம் குருநாகலில் அனுபுரம் கொழும்பு மண்ணில் பித்தராய் அலைந்த எம்மைப் பேணினார் முஸ்லிம் சான்றோர் பசிக்குணவளித்தார்…
அஷ்ஷேக் எ.சி.ஆகார் முஹம்மத் அவர்களின் துணைவியாரின் மரணம் குறித்த அனுதாபச் செய்தி
01.11.2016 அகில இலங்கை ஜமிய்யதுல் உலாமா சபையின் பிரதித் தலைவரும் ஜாமியா நளீமியாவின் பிரதிப் பணிப்பாளருமான அஷ்ஷேக் எ.சி.ஆகார் முஹம்மத் அவர்களின் துணைவியாரின் அகால மரணம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகமான என்னையும் எமது கட்சியின் உறுப்பினர்களையும் பெரும் வருத்தத்திற்கும் கவலைக்கும் உள்ளாக்கியுள்ளது. கடந்த பல தசாப்தங்களாக இலங்கை திரு நாட்டிலே தஃவா பணியில் தன்னை அர்பணித்த அஷ்ஷேக் எ.சி.ஆகார் முஹம்மத் அவர்களின் பின்னால் நின்று அவரின் தஃவா விருட்சத்தின் வேராக இருந்து பெரும்…
அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாப்பதில் புத்தளமே ஏனைய முஸ்லிம் பிரதேசங்களுக்கு வழிகாட்ட வேண்டும்
முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் புத்தளம் மாவட்டம் ஏனைய முஸ்லிம் பிரதேசங்களுக்கு வழிகாட்டியாக அமைய வேண்டுமெனவும், மக்களின் ஒற்றுமையான செயற்பாடுகளின் மூலமே இதனை சாதிக்க முடியுமெனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும், அனுராதபுர மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான இஷாக் ரஹ்மான் தெரிவித்தார். மக்கள் காங்கிரஸின் உதவியின் மூலம் புத்தளத்தில் செயற்படுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை மக்களிடம் கையளித்த பின்னர், அங்கு இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் இஷாக் எம்.பி உரையாற்றினார். 1947 – 1989 ஆம்…
ரவினாத் பன்டுகாபய ஆரியசிங்க – அமைச்சர் றிஷாத் சந்திப்பு
ஜெனீவாவின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவினாத் பன்டுகாபய ஆரியசிங்கவை சுவீட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் அமைச்சர் றிஷாத் சந்தித்துக் கலந்துரையாடியபோது.
சிராஜியா வீதிக்கான கொங்கிரீட்டு வேலைகள் பூர்த்தி
கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலியின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் சிராஜியா வீதிக்கான கொங்கிரீட்டு வேலைகள் பூர்த்தி அடைந்துள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கான போதை ஒழிப்பு
கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலியின் பன்முகப் படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் கோ.ப.மேற்கு பிரதேச செயலக ஏற்பாட்டில் கோறளைப்பற்று மேற்கு பாடசாலை மாணவர்களுக்கான போதை ஒழிப்பு கருத்தரங்கு கோ.ப.மேற்கு பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நேற்று (31.10.2016) இடம்பெற்றது.
கலாவெவ முஸ்லிம் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்த நிகழ்வில் பா.உ. இஸ்ஹாக் ரஹுமான்
அ/கலாவெவ முஸ்லிம் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் (OBA) ஏற்பாடு செய்த பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய மாணவர்களையும் , இம்முறை தரம் 05 புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் கௌரவிக்கும் விதமாக அண்மையில் இடம்பெற்ற நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்கள் கலந்துகொண்ட போது.
முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் விக்னேஸ்வரன் தொடர்ந்தும் எதிர்ப்பலைகளையே வெளிப்படுத்துகிறார்
வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் தமிழ்த் தலைவர்களான சம்பந்தன் ஐயா, மாவை சேனாதிராஜா, சுமந்திரன், டெனீஸ்வரன், சத்தியலிங்கம் ஆகியோர் அக்கறையும், உணர்வும் கொண்டுள்ள போதும், வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் எதிர்ப்பலைகளையே வெளிப்படுத்துவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். நிரந்தர அரசியல் தீர்வை எதிர்பார்க்கும் தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்குக் குறுக்காக, முஸ்லிம் சமூகம் ஒருபோதும் நிற்காதெனவும் அவர் தெரிவித்தார். வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 26 வருடங்கள் முடிவடைந்த நிலையில், சர்வதேச யாழ்ப்பாண முஸ்லிம்…
தமிழ் – முஸ்லிம் பிரதேசத்தில் புத்தர் சிலையின் தோற்றம்
நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ், முன்னைய அரசாங்கத்தில் நடந்த இனவிரோதச் செயல்களோ, மதத்தை அடிப்படையாகக் கொண்ட கெடுபிடிகளோ நடக்கக் கூடாதென்றே மக்கள் விரும்பி இருந்தனர். எனினும், சிறுபான்மையினரின் மத உரிமைகளை மீறும் விதத்தில், சிங்கள – பௌத்த குடியாட்டங்கள் ஏதும் இல்லாத, முஸ்லிம்களும் தமிழர்களும் செறிந்து வாழும் பிரதேசங்களில் பலவந்தமாக புத்த சிலைகளை அமைப்பது இனங்களுக்கிடையிலான நல்லுறவுகளுக்கு இடையூறாக இருப்பது மாத்திரமன்றி மதக்கலவரங்களுக்கும் வழிவகுக்கும் சந்தர்பங்களை ஏற்படுத்துவதாகவும் அமையும். இத்தகைய ஒரு நிகழ்ச்சி தமன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, “இறக்காமத்துக்கு”…
ஏமாற்ற வருபவர்களுக்கு பாடம் புகட்டும் சமூகமாக இருப்போம் – A.R.M.ஜிப்ரி
எதிர்காலங்களில் பாட்டுக்கும் ரோட்டுக்கும் வோட்டு போடுகின்ற சமூகமாக, குட்டக் குட்டக் குனிகின்ற சமூகமாக இருக்காது எங்களை ஏமாற்ற வருபவர்களுக்கு தகுந்த பாடத்தை புகட்டுகின்ற சமூகமாக நாங்கள் இருக்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனைத் தொகுதி அமைப்பாளரும் கைத்தொழில், வர்த்தக அமைச்சரின் பாராளுமன்ற அலுவல்கள் செயலாளருமான ஏ.ஆர்.எம்.ஜிப்ரி தெரிவித்தார். அண்மையில் சாய்ந்தமருதில் அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் 8ஆவது புதிய கிளையைத் திறந்து வைக்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் மேற்கண்டவாறு…
புத்தளம் மாவட்டத்தில் 1000 மாணவர்களுக்கு 100 நாள் திட்டம்
புத்தளம் மாவட்டத்தில் இயங்கி வரும் Navavi Foundation For Puttalam Development (NFPD) புத்தளம் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் கல்வித்துறை தொடர்பாக 1000 மாணவர்களுக்கு 100 நாள் திட்டம் என்ற ஆய்வை செய்து, மாணவர்கள் நிலை அறிந்து புதிய திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது. கணிதத் துறை அதி முக்கிய பாடப்பகுதியாகும். இத்துறையில் மாணவர்கள் பெரும் பாலானோர் பின்தாங்கிய நிலையில் உள்ளனர். இத்துறையில் மாணவர்களை அபிவிருத்தி செய்ய நவவி பௌண்டேசன் புதிய திட்டம் வரைபு ஒன்றை நடத்திக்கொண்டு இருக்கின்றது.
