News
கல்முனை மக்கள் இனி ஏமாற மாட்டார்கள்: ARM ஜிப்ரி
கடந்த 16 வருடங்களாக கல்முனைத் தொகுதி மக்களை ஏமாற்றி வருகின்ற அரசியல் தலைமையையும் அதன் உறுப்பினர்களையும் புறந்தள்ளும் காலம் நெருங்கி விட்டது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வருகையால் வெருண்டு போயுள்ள அவர்களையும் இவர்களது ஏமாற்று வித்தைகளையும் மக்கள் இப்போது புரிந்து விட்டனர். இவர்களுக்குத் தகுந்த பாடத்தைப் புகட்ட அனைவரும் அணிதிரள வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனைத் தொகுதி அமைப்பாளரும் கைத்தொழில், வர்த்தக அமைச்சரின் பாராளுமன்ற விவகாரச் செயலாளருமான ஏ.ஆர்.எம். ஜிப்ரி தெரிவித்தார்….
இஸ்மாயில் ஹாஜியாரின் மறைவு குறித்து அமைச்சர் றிஷாத் விடுத்துள்ள அனுதாபச் செய்தி
“மன்னார், கொண்டச்சி இஸ்மாயில் ஹாஜியாரின் மரணச் செய்தி மன்னார் மக்களுக்கே ஒரு பாரிய இழப்பாகும். எப்பொழுதுமே சிரித்த முகத்துடன் புன்னகைத்தவராகவும், அன்பாகவும் பணிவாகவும் மக்களுடன் பழகும் சுபாவமுடையவர். சிறந்த மார்க்கப்பற்றும், நல்லொழுக்கம் மிக்கவராகவும் திகழ்ந்துடன், இடம் பெயர்ந்து புத்தளத்தில் வாழ்ந்தபோதும் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி வந்தார். அன்னாரின் பாவங்களை மன்னித்து ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் உயரிய சுவர்க்கத்தை வழங்க வேண்டும் என இறைவனைப்பிராத்திக்கின்றேன்.” என இஸ்மாயில் ஹாஜியாரின் மறைவு குறித்து அமைச்சர் றிஷாத் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
2015/2016 ஆண்டு பல்கலைக்கழக அனுமதி மற்றும் சிறந்த பெறுபேறுகளை பெற்றவர்களை கௌரவிக்கும் நிகழ்வு
2015/2016 ஆண்டு பல்கலைக்கழக அனுமதி மற்றும் சிறந்தபெறுபேருகளைப்பெற்றவர்களை கௌரவிக்கும் நிகழ்வு புத்தளம் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.
புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞான கல்லூரியின் சுற்றுமதிலுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு
புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞான கல்லூரியின் சுற்றுமதிலுக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்துகொண்டதுடன் கல்லூரின் எதிர்கால அபிவிருத்தித்திட்டங்களும் பழைய மாணவர்களினால் தெளிவுபடுத்தப்பட்டது.இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நவவி கட்சி இணைப்பாளர்களான அலி சப்ரி, எஹ்யா ஆப்தீன் பாடசாலை அதிபர் ,ஆசியர்கள்,பெற்றோர்கள், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.
வெள்ளம்பிட்டி, பொல்வத்தபகுதி வீதி காபட் இட்டு மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கும் நிகழ்வு
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் உறுப்பினர் பாயிஸ் அவர்களின் நிதியொதிக்கீட்டில் வெள்ளம்பிட்டி, பொல்வத்தபகுதி வீதி காபட் இட்டு மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாத் பதியுதீன் அண்மையில் கலந்துகொண்டபோது.
மாஞ்சோலை Fakhru village 2 திறப்பு விழா பிரதி அமைச்சர் அமீர் அலி
மாஞ்சோலை Fakhru village 2 திறப்பு விழாவில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்வில் வருகைதந்த Fakhru Familyயினருக்கு பிரதி அமைச்சர் அமீர் அலி நினைவு சின்னம் வழங்கி கொளரவித்தார். இந்நிகழ்வில் Hamad bin Muhammed al shah waning , as shiek Nasrallah hassan kaleel diector Mercy Lanka , as shik Azad Abdul Mubeed , முன்னாள் பிரதேச சபை உதவி…
புத்தளத் தொகுதியில் போட்டியிடும் எண்ணம் தனக்கு இல்லை – அமைச்சர் றிஷாத்
புத்தளம் தொகுதியில் தான் தேர்தலில் குதிப்பதற்காகவே மக்கள் காங்கிரஸ் தேசிய பட்டியலை புத்தளத்தின் மைந்தன் நவவிக்கு வழங்கியதாக பரப்பப்பட்டுவரும் விஷமத்தனமான பிரசாரங்களில் எந்தவிதமான உண்மையும் இல்லை எனவும் உயிருள்ளவரை புத்தளத் தொகுதியில் போட்டியிடும் எண்ணம் தனக்கு இல்லை எனவும் அமைச்சர் றிஷாட் தெரிவித்தார். புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரியின் சுற்று மதிலுக்கான அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதம விருந்தினராக அமைச்சர் றிஷாட் கலந்து கொண்டு உரையாற்றினார். மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளரும் தொழில் அதிபருமான அலி…
கட்டுக்கடங்காதவர்களுடன் பேசிப்பயனில்லை!
இனவாத நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் கட்டுப்படுத்தாவிட்டால் நல்லாடசி மீதான நம்பிக்கை சிறுபான்மை மக்களிடமிருந்து அற்றுப்போகக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டு வருவதாக மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். நேத்ரா தொலைக்காட்சியில் அதன் நடப்பு விவகார பணிப்பாளர் யூ.எல்.யாக்கூபினால் நெறிப்படுத்தப்பட்ட வெளிச்சம் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பிலும் சிறுபான்மை மக்களின் மன எழுச்சி தொடர்பிலும் பல்வேறு கருத்துக்களை ஆணித்தரமாக முன்வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஜனநாயக தேசிய முன்னனியின் தலைவர் அமைச்சர் மனோ…
சுயதொழில் முயற்சியாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க தயாராக இருக்கின்றேன்
தலைமன்னார் நடுக்குடாவில் பனை மரத்தினை அடிப்படையாகக் கொண்டு சுயதொழில் மேற்கொள்ளும் பெண்களுக்கான உபாகரணங்கள் கையளிக்கும் நிகழ்வொன்று நடைபெற்றது பனை அபிவிருத்தி சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினரும் பிரதம எதிர்க்கட்சி கொறடாவுமான றிப்கான் பதியுதீன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். மேலும் இந்த நிகழ்வில் உரையாற்றிய றிப்கான் பதியுதீன் ” எமது மன்னார் மாவட்டமானது உண்மையில் வளம் நிறைந்த ஒரு மாவட்டம் அந்தவகையில் பனை உற்பத்தியும் அதிலடங்குகிறது ஆனால் எமது மக்கள்…
