News
பாடசாலை ஆசிரியர்களுக்கு மாத்திரம் கடமையல்ல பெற்றோர்களும் பங்கு வகிக்க வேண்டும்
மன்னாரில் இன்று நடாத்தப்பட்ட பாலர் பாடசாலை மாணவர்களுக்கான விளையாட்டு நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினரும் பிரதம எதிர்க்கட்சி கொறடாவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான றிப்கான் பதியுதீன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள் நிகழ்வில் உரையாற்றிய வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்கள் ” மாணவர்கள் என்பவர்கள் சிறந்த தலைவர்கள் அந்த தலைமைத்துவ பண்பினை மாணவர்களிடையே கொண்டுவருவது ஒவ்வொரு ஆசிரியர்களது கடமையாகும் கல்வியானாலும் சரி ஒழுக்கமானாலும் சரி விளையாட்டு திறனானாலும்…
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் பாதை மற்றும் பாடசாலை மதில் புனரமைப்பு வேலைகள் ஆரம்பம்
மாந்தை பிரதேச சபைக்குட்பட்ட சொர்ணபுரி கிராமத்திற்கு பாதை மற்றும் பாடசாலைக்கான மதில் போன்றவை அமைப்பதற்கான நிதியினை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வழங்கியுள்ளார் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத்தலைவரும் மீள் குடியேற்ற செயலணியின் இணைத்தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்பட்ட பாதை மற்றும் பாடசாலை மதில் போன்றவற்றின் வேலைப்பாடுகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது இதனைத்தொடர்ந்து வேலைத்திட்டங்களை பார்வையிடுவதற்காக அமைச்சரின் பணிப்புரையின் கீழ் மன்னார் மாவட்ட மீள்குடியேற்ற செயலணியின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் முஜீப்…
.அமீர் அலியின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஏறாவூர் டோக்கியோ வீதியை புனரமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது .
கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஏறாவூர் டோக்கியோ வீதியை புனரமைக்கும் பணி வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. பிரதி அமைச்சரின் இணைப்பாளர் லெத்தீப் ஹாஜியார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஏறாவூர் மஸூரா சபை உறுப்பினர்களான தௌபீக், ஷக்கீ, ஊர்பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நாட்டில் முஸ்லிம்களின் இருப்பை, அபிலாசைகளை, உரிமைகளை தக்க வைப்பதற்கு அரசியல் தேவையான விடயமாக காணப்படுகின்றது எம்.எஸ்.எஸ்.அமீர் அலி
இந்நாட்டில் முஸ்லிம்களின் இருப்பை, அபிலாசைகளை, உரிமைகளை தக்க வைப்பதற்கு அரசியல் தேவையான விடயமாக காணப்படுகின்றது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளரும், கிராமிய பொருளாதார பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். குருநாகல் மாவட்டத்தில்; சிறிய ஆடை தொழிற்சாலைகள் திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்! தனது கட்சிக்காரர் வெல்லாவிட்டாலும் பரவாயில்லை வேறு கட்சிக்காரர் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று சில…
சதொச நிறுவனத்துக்கு கொக்கெயின் கொண்டுவரப்பட்டது எவ்வாறு? ஊடகவியலாளர் மாநாட்டில் நிறுவனத் தலைவர் விளக்கம்.
இரத்மலான சதொச களஞ்சியசாலைக்கு ஒருகொடவத்தையிலிருந்து ரஞ்சிதா பல்சஸ் நிறுவனத்தினால் கொண்டுவரப்பட்டிருந்த சீனியடங்கிய கொள்கலனை, இரத்மலான சதொச களஞ்சியசாலைக்கு கொண்டு வந்த பின்னர் களஞ்சியசாலையில் வைத்து அதனை இறக்குவதற்கு முன்னரே வழமையான நடைமுறையின் பிரகாரம் ஊழியர்கள் கொள்கலனைத் திறந்து பார்த்த போது வித்தியாசமான பொதிகள் இருந்ததைக் கண்டனர். அதன் பின்னர் பொலிசாருக்கு சதொச நிறுவனம் இது தொடர்பில் அறிவித்ததாக நிறுவனத்தின் தலைவர் டி.எம்.கே.பி. தென்னக்கோன் தெரிவித்தார். இரத்மலான சதொச களஞ்சியசாலையில் 100 கிலோ கிராமிற்கு மேற்பட்ட கொக்கெயினை பொலிசார்…
ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில் எருக்கலம்பிட்டி கிராமத்திற்கான அபிவிருத்திப்பணிகள்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் மீள்குடியேற்ற செயலணியின் இணைத்தலைவருமான அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மன்னார் எருக்கலம்பிட்டி கிராமத்திற்கான அபிவிருத்திப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றது. சுமார் 10.174 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் நடைபெறும் அபிவிருத்தி பணிகளை அமைச்சரின் இணைப்பாளர் முஜாஹிர் மற்றும் மீள்குடியேற்ற செயலணி மன்னார் மாவட்ட இணைப்பாளர் முஜிபுர் ரகுமான் ஆகியோரும் நேரில் சென்று பார்வையிட்டனர். இதன்போது 01.நூர்டீன் மசூர் பாலர் பாடசாலை 02.தர்கா நகருக்கான அணைக்கட்டு 03.எருக்கலம்பிட்டி மகளீர் பாடசாலைக்கான…
குருநாகள் மாவட்டத்தின் மாகோ பிரதேசத்தில் சிறிய ஆடைதொழிற்சாலை
குருநாகலை மாவட்டத்தின் மாகோ பிரதேசத்தில் சிறிய ஆடைதொழிற்சாலை இன்று (18) இணைப்பாளர் அபுதாலிப் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அ.இ.ம.கா. கட்சியின் தவிசாளரும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். இந்நிகழ்வில் அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற இஷ்ஹாக் றகுமான் , குருணாகல மாவட்ட இணைப்பாளர் டாக்டர் ஷாபி , சத்தொச நிறுவனத்தின் பிரதி தவிசாளர் நஸீர், இளைஞர் அமைப்பாளர் அசார்தீன் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். குருநாகலை மாவட்டத்தின் மாகோ பிரதேசத்தில்…
நவவி எம்.பி.தலைமையில் புத்தளம் தள வைத்தியசாலைக்கு நாற்காலிகள் அன்பளிப்பு
புத்தளம் தள வைத்தியசாலைக்கு நாற்காலிகள் அன்பளிப்பு Puttalam YMMA வின் வேண்டுகோளின் பேரில் Colombo YWMA மகளிர் அணியினர் புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு 17.7.2017 அன்று விஜயம் செய்து சக்கர நாற்காலிகள் (Wheel Chairs) வழங்கினார்கள். இந்த சக்கர நாற்காலிகளை வைத்திய அத்தியட்சர் Dr. நகுலநாதன், வைத்தியசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் ஷபீக் ஆகியோரிடம் அன்பளிப்பு செய்தனர். இதில் புத்தளம் YMMA வின் அழைப்பினை ஏற்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி தலைவரும் , புத்தளம்…
இலங்கைக்கான துருக்கி தூதுவரை சந்தித்த அமைச்சர் றிஷாட் பதியுதீன்
இலங்கைக்கான துருக்கித் தூதுவர் துன்கா ஒஸ்யுஹாதர் தலைமையிலான வர்த்தக குழுவை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் இன்று (19) கூட்டுறவு மொத்த விற்பனை அலுவலகத்தில் சந்தித்த போது எடுத்த படம்.
குருநாகல் தொலம்புகலவில் மினி ஆடைத்தொழிற்சாலை திறந்துவைப்பு
குருநாகலை மாவட்டத்தின் தொலம்புகல பிரதேசத்தில் சிறிய ஆடைதொழிற்சாலை இன்று (18) இணைப்பாளர் அஸ்ஹர் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அ.இ.ம.கா. கட்சியின் தவிசாளரும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். இந்நிகழ்வில் அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற இஷ்ஹாக் றகுமான் , குருணாகல மாவட்ட இணைப்பாளர் டாக்டர் ஷாபி , சத்தொச நிறுவனத்தின் பிரதி தவிசாளர் நஸீர், ரிதிகம பிரதேச செயலக உதவி திட்டப்பணிப்பாளர் ஜெயரத்ன மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
பிரதியமைச்சர் அமீர் அலி தலைமையில் மாதிரிக்கிரமத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சூடுபத்தினசேனை மஜ்மா கிராமத்தில் செமட்ட செவன மாதிரிக் கிராம வேலைத் திட்டத்தில் ஐம்பது வீடுகளுக்கு அடிக்கல் நடும் நிகழ்வு திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது. ஓட்டமாவடி பதில் பிரதேச செயலாளர் திருமதி.எஸ்.சில்மியா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டதுடன் அதிதிகளாக ஓட்டமாவடி பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத், கிராம சேவை அதிகாரிகள், பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்….
தாய்லாந்திலிருந்தும் ஒரு லட்சம் நாட்டரிசி இறக்குமதி அரிசி தட்டுப்பாடு ஏற்பட இடமில்லையென அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு
தாய்லாந்து 1லட்சம் மெற்றிக்தொன் நாட்டரிசியை இலங்கைக்கு வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக இது தொடர்பான புரிந்துணர்வுக் கடிதமும், கொள்வனவு சம்பந்தமான ஆவணங்களும் ஒரு வாரத்திற்குள்ளே தாய்லாந்து அரசுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்,; கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். 1மெற்றிக்தொன் நாட்டரிசியை 425டொலருக்கு வழங்குவதற்கு தாய்லாந்து அரசு இணக்கம் தெரிவித்துள்ளது. தாய்லாந்திலிருந்து அரிசி இலங்கைக்கு ஏற்றுமதி செய்வதற்கு முன்னர் இலங்கை ரூபாவில் இந்த விலை 65.31ஆகும். இலங்கைக்கு ஏற்கனவே மியன்மார் அரசு 30ஆயிரம் வெள்ளைப்பச்சை…
