News
பாடசாலை அரசியலுக்கான களம் அல்ல வடமாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்
வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து எருக்கலம்பிட்டி மகளிர் மகா வித்தியாலயத்திற்கான தளபாடங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டது எருக்கலம்பிட்டி கிராமத்தில் அமையப்பெற்ற பாரம்பரிய பாடசாலைகளில் ஒன்றான இப் பாடசாலைக்கு பல அபிவிருத்தி பணிகளை மேட்கொண்டுவரும் வடமாகாண சபை உறுப்பினரும் பிரதம எதிர்க்கட்சி கொறடாவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான றிப்கான் பதியுதீன் அவர்களின் மற்றுமொரு உதவியாக தளபாடங்களை தனது பன்முக நிதியிலிருந்து பாடசாலை அதிபர் அவர்களிடம் கையளித்தார் மேலும்…
பல்கலைகழகத்திற்கு தெரிவான மற்றும் விளையாட்டு துறையில் சாதனை புரிந்த மாணவர்கள் கௌரவிப்பு
திரு/கிண்/ முள்ளிபொத்தானை கோட்ட கல்வி பிரிவில் 2015,2016 ஆண்டுகளில் பல்கலைகலகத்திற்கு தெரிவான மாணவர்கள் மற்றும் விளையாட்டு துறையில் அகில இலங்கை , மாகாண மட்டங்களில் சாதனை புரிந்த மாணவர்கள் கௌரவித்து பரிசளிக்கும் நிகழ்வு இன்ற முள்ளிபொத்தானை அல் இ ஹிஜ்ரா மத்திய கலூரியில் இடம்பெற்றது. இக்கௌரவிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் திருகோணமலை மாவட்ட அபிவிருத்திகுழு இணைத்தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களை கௌரவித்து பரிசில்களை…
அபிவிருத்தி திட்டங்களுக்கு நிதிபெறுவது இலகுவான விடயமல்ல அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவிப்பு
ஒரு பிரதேசத்தின் அபிவிருத்தி முயற்சிகள் கைகூடி, கனிவடைந்த நிலைக்கு வந்த பின்னர், அரசியல் உள்நோக்கங்களுக்காக சிலர் அந்த முயற்சிகளை மழுங்கடிக்க நினைப்பது ஆரோக்கியமானதல்லவென்று மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் அதன் இணைத்தலைவர்களான அமைச்சர் ரிஷாட் பதியுதீன், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், காதர் மஸ்தான் எம்.பி., ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். மன்னார் பிரதேச செயலாளர் மரியதாசன்…
Dr ஹில்மி தலைமையில் டெங்கு ஒழிப்பு விழிப்புனர்வு ஊர்வளம்
தம்பலகாமம் பிரதேச சபைக்குற்பட்ட முள்ளிப்பொத்தானை பாலர் பாடசாலைகளினால் ஏற்பாடு செய்யப்பட்ட டெங்கு ஒழிப்பு விழிப்புனர்வு சிரமதான பணியில் அ.இ.ம.கா இன் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் Dr ஹில்மி மஹ்ரூப் அவர்கள் கலந்து கொண்டார்கள். இவ்விழிப்புணர்வானது அண்மைக்காலமாக மக்கள் மத்தியில் பெரும் சவாலாக அமைந்திருக்கும் டெங்கு நோயைத எவ்வாறு தடுப்பது என்பது பற்றி மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் அமைந்தது சிறப்பம்சமாகும். இந்நிகழ்வில் தம்பலகாமம் பிரதேச சபை செயலாளர் திருமதி யாழினி, சுகாதார உத்தியோகத்தர்கள் பொலிஸ் உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர்…
கிழக்கு மாகாண பட்டதாரி அரச நியமனங்களின் வயதெல்லையை 45 ஆக அதிகரிப்பதற்கான அனுமதி
கிழக்கு மாகாண ஆளுனர் Rohitha Bogollagama அவர்களை சந்தித்து விடுத்து வேண்டுகோளிற்கினங்க, இதுவரை கிழக்கு மாகாண பட்டதாரி நியமனங்களில் உள்வாங்குவதற்கான வயதெல்லை 40 ஆக மட்டுப்படுத்தபட்டிருந்த நிலையில், கலந்துரையாடலின் பின்னர் அதனை 45 ஆக அதிகரிப்பதற்குறிய ( ஆசிரியர் நியமனம் தவிர்ந்த ) வாய்மூல அனுமதியை வழங்கயுள்ளதுடன், இனிவரும் காலங்களில் பத்திரிகை விளம்பரங்களில் 45 ஆக ஆக்கப்படும் எனும் உறுதி மொழியையும் அளித்தார். எனவே, கிழக்குமாகாண பட்டதாரிகள் சார்பாக எமது மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கின்றேன்.
கிண்ணியா குரங்குபாஞ்சான் மஜீத் நகர் வித்தியாலயத்தின் காட்டிட நிர்மானத்திட்குமேலதிக நிதி உதவி ,
இன்று கிண்ணியா பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட குரங்கு பாஞ்சான் மஜீத் நகர் வித்தியாலதிட்கு இன்று அரசாங்க அதிபர் காரியாலய பொறியியலாளர் சகிதம் விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினரர் அப்துல்லா மஹ்ரூப் அவர்கள் பாடசாலையில் அமைக்கப்டவிருக்கின்ர 20’ X 60’ கட்டிடம் அமைப்பிற்கு தேவையான மேலதிக ஐந்து இலட்சம் ரூபா நிதியினை மீள் குடியேற்ற அமைச்சை தொடர்பு கொண்டு பெற்றுகொடுக்கபட்டது. மேலும்ஆசிரியர்கள் , பெற்ரோர்களுடன் பாடசாலை அபிவிருத்தி குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் பாடசாலைக்கு அருகிலுள்ள காணியினை பாடசாலை மைதான விஸ்தரிப்புக்கு…
நல்லாட்சி அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து பொறுமை கொண்டால் எங்களுடைய எதிர்பார்ப்புக்கள் எல்லாம் வெற்றி பெறும் என .எம்.எஸ்.எஸ்.அமீர் அலி
இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து பொறுமை கொண்டால் எங்களுடைய எதிர்பார்ப்புக்கள் எல்லாம் வெற்றி பெறும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பிரதேசத்திற்கான பொலிஸ் நிலைய நிரந்தர கட்டிடம் திறந்து வைக்கப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்- இந்த நல்லாட்சி அரசாங்கம் சிறுபான்மை சமூகம் நுகரக்கூடிய அளவுக்கு பொலிஸ் நிலையம் மற்றும் காணி விடுவிப்பை கொண்டு…
சிகை அலங்காரத்தை தொழிலாக செய்பவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் என எம்.எஸ்.எஸ்.அமீர் அலி
கல்குடா பிரதேசத்தில் உல்லாசப் பயணிகள் அதிகம் வருகின்ற பிரதேசம் என்பதால் நவீன முறையில் சிகை அலங்காரத்தை தொழிலாக செய்பவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சிகை அலங்கார சங்கத்திற்கு நவீன வசதிகள் கொண்ட அலங்கார பொருட்கள் கையளிக்கும் நிகழ்வு ஓட்டமாவடி பிரதேச சபை கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர்…
சீனாவின் ஒரு பட்டை ஒரு பாதை திட்டத்திற்கு இலங்கை முழு ஒத்துழைப்பு முதலீட்டு மாநாட்டில் அமைச்சர் றிஷாட் தெரிவிப்பு
”சீனாவின் ஒரு பட்டை ஒரு பாதை ’”(one belt one road)திட்டத்தில் இலங்கையும் முக்கிய கேந்திரமாக கருத்திற்கொடுக்கப்பட்டிருப்பதால் இந்தத் திட்டத்துக்கு தமது நாடு முழு ஆதரவையும் வழங்குமென அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். சீன- இலங்கை உட்கட்டமைப்பு முதலீட்டு கூட்டுறவு மன்றத்தின் மகாநாடு கொழும்பில் இன்று காலை (01/08/2017)இடம்பெற்ற போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இந்த மகாநாட்டில் பங்கேற்றிருந்த சீனக் கம்பனிகளுக்கு தலைமை தாங்கி சீன- சர்வதேச ஒப்பந்த அமைப்பின் தலைவர் பேங் கிச்சன் பங்கேற்றிருந்தார். அமைச்சர்…
பெரும்பான்மையினச் சமூகம் தமிழ்ச் சமூகத்திற்கு செய்வதாகக்கூறும் தவறையே தமிழ்ச் சமூகமும் செய்வதாக கூறப்படும் குற்றச்சாட்டு ஆராயப்படவேண்டும் தமிழ்மிரர் ஆசிரியர் தலையங்கத்தில், (01.08.2017) சுட்டிக்காட்டுகின்றது
கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அண்மையில் புதிதாக முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள், நிச்சயமாக அலசப்பட வேண்டியனவாக இருக்கின்றன. வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் சம்பந்தமாகவே, அவர் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். வடக்கு முதலமைச்சர் உட்பட, முல்லைத்தீவு மாவட்டத்தின் அரசியல்வாதிகள் அனைவரும், அப்பிரதேச மக்களுக்கு ஆற்றிய சேவைகளை விட, தான் ஆற்றிய சேவைகள் அதிகம் எனக்குறிப்பிட்ட அமைச்சர், வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்களை, சில அரசியவாதிகள், எட்டி உதைப்பதாகக் குற்றஞ்சாட்டியிருக்கின்றார். காலாகாலமாக, இவ்வாறான குற்றச்சாட்டுகள் எழுவது வழக்கமாகிப் போனாலும்,…
வெளிநாடுகளிலிருந்து அரிசி இறக்குமதிக்கான செயன்முறை ஆரம்பம்.
நாட்டின் அரிசித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் மியன்மாரிலிருந்தும் தாய்லாந்திலிருந்தும் அரிசியை இறக்குமதி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் பூரணப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான ஆவணங்கள் இரண்டு நாடுகளுக்கும் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். தாய்லாந்திருந்து 1 இலட்சம் மெற்றிக் தொன் நாட்டரிசியும் 25000 மெற்றிக் தொன் வெள்ளைப் பச்சை அரிசியும் இறக்குமதி செய்யப்படவுள்ளதுடன் மியன்மாரிலிருந்து 30000 மெற்றிக் தொன் வெள்ளைப் பச்சை அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்….
தனியார் பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்குவதே அடுத்த இலக்கு – கலாநிதி ஜெமில்
தென்கிழக்குப் பல்கலைக்கழகம் இப்பிராத்தியத்தில் உருவாக்கப்பட்டதன் காரணமாக கல்வியின் அடிப்படையில் இப்பிராந்தியம் எவ்வாறு கல்வியில் உயர்வுற்றதோ அதேபோன்று தனியார் பல்கலைக்கழகம் ஒன்றையும் நிறுவி இன்னும் கல்வியாளர்களை உருவாக்கி பிராந்தியத்தை அபிவிருத்தி செய்வதே தங்களது இலக்கு என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும் அரச வர்த்தககூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றிஷாத் பதியூதீனனுடைய பூரண அனுசரணையுடன் கலாநிதி ஏ.எம்.ஜெமீலினால் நடைமுறைப்படுத்தப்படும் 1000 மூக்குக்கண்ணாடிகள் வழங்கும் திட்டத்தின் ஒரு…
