News
“மு.கா ஒரு வர்த்தக நிறுவனமாக தற்போது மாறியுள்ளது” ஹசன் அலி!
-ஊடகப்பிரிவு- இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பது ஒரு வர்த்தக நிறுவனமாக மாறியுள்ளது. அதற்கு றவூப் ஹக்கீம் அந்த நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளராக காணப்படுகின்றார் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் செயலாளரும், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவருமான எம்.ரீ.ஹசன் அலி தெரிவித்தார். ஓட்டமாவடி பிரதேச சபை மற்றும் கோறளைப்பற்று பிரதேச சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய தேசிய முன்னனியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம்…
வட்டார முறைத் தேர்தல் பிழையான தேர்தல் முறை பிரதியமைச்சர் அமீர் அலி!
-எஸ்.எம்.எம்.முர்ஷித்- வட்டார முறைத் தேர்தல் பிழையான தேர்தல் முறை என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், கிராமியப் பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஓட்டமாவடி பிரதேச சபை மற்றும் கோறளைப்பற்று பிரதேச சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய தேசிய முன்னனியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவு சங்க வளாகத்தில் இடம்பெற்ற போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு…
‘தேயிலை தடை நீக்கப்பட்டதை தொடர்ந்து இலங்கையுடனான உறவுகள் மேலும் வலுப்பெறும்’ ரஷ்ய கூட்டமைப்பின் தூதுவர் தெரிவிப்பு!
-ஊடகப்பிரிவு- இலங்கை தேயிலையை நாம் தடைக்கு உட்படுத்தியிருந்தோம். ஆனால், இது எங்கள் அஸ்பெஸ்டஸ் ஏற்றுமதிக்கும் இந்த விவகாரத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இலங்கையிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட தேயிலைத் தொகுதியில் காணப்பட்ட ஒரு பூச்சியினாலேயே இந்த சிறிய விவகாரம் ஏற்பட்டது என ரஷ்ய கூட்டமைப்பின் தூதுவர் யூரி மேட்டீரிட்டி தெரிவித்தார். நேற்று முன்தினம் (09) கொழும்பு 03 இல் அமைந்துள்ள கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில், அமைச்சர் ரிஷாட் பதியுதீனை அவரது அலுவலகத்தில் சந்தித்த போதே தூதுவர் யூரி…
ஐதேக முன்னணியுடன் இணைந்து போட்டியிட்டாலும் அஇமகா தனித்துவத்தை இழக்காது!
-ஊடகப்பிரிவு- வன்னி, புத்தளம், அநுராதபுரம், கொழும்பு, மட்டு மாவட்டங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து யானைச்சின்னத்தில் போட்டியிடுவதானது, எமது ஆசனங்களை உறுதிப்படுத்திக் கொள்ளவென கைத்தொழில், வணிகத் துறை அமைச்சரின் இணைப்பு செயலாளருமான இர்ஷாத் றஹ்மத்துல்லாஹ் தெரிவித்தார். களுத்துறை பிரதேசத்தில் நேற்று முன்தினம் (09) இடம் பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து இடம் பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு கூறினார். அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்…
“உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் சமூகத்தின் உண்மையான தலைவனை அடையாளங்காணும்” காத்தான்குடியில் ரீ.எல்.ஜவ்பர்கான்!
-ஊடகப்பிரிவு- மர்ஹூம் அஷ்ரபின் குணாம்சங்களை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனில் தாங்கள் காண்பதாக காத்தான்குடி நகரசபையின் மக்கள் காங்கிரஸின் முதன்மை வேட்பாளரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான ரீ.எல்.ஜவ்பர்கான் தெரிவித்தார். காத்தன்குடி மக்களின் அரசியலையும், முஸ்லிம் காங்கிரஸின் அரசியலையும் நாங்கள் வேறுபடுத்திப் பார்க்க முடியாது. முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால வளர்ச்சியில் காத்தன்குடியே மையப்புள்ளியாக இருந்தது என்ற உண்மை பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். மர்ஹூம் அஷ்ரபுடன் இணைந்து காத்தான்குடி பிரதேசத்தில் அரசியலை மேற்கொண்டவர்களில், இன்னும் உயிருடன் இருப்பவர்கள் நானும் இராஜாங்க…
அக்கரைப்பற்று மாநகர சபை வேட்புமனு நிராகரிப்பை எதிர்த்து மக்கள் காங்கிரஸ் வழக்கு தாக்கல்!
-ஊடகப்பிரிவு- அக்கரைப்பற்று மாநகர சபைக்கான வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மேன்முறையிட்டு நீதிமன்றத்தில் நேற்று 10.02.2018 வழக்கு தாக்கல் செய்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அக்கரைப்பற்று மாநகர சபையில் போட்டியிடுவதற்காக சமர்ப்பித்திருந்த வேட்புமனு, அம்பாறை தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரினால் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்தே, அக்கட்சியின் செயலாளர் எஸ். சுபைர்தீன் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேட்புமனு பட்டியலின் முதன்மை வேட்பாளர் அக்கரைப்பற்று மாநகரசபை…
தீர்வுத் திட்ட ஆபத்துக்களை தடுத்திட தேர்தலின் மூலம் மக்கள் ஆணையைக் கோருகின்றோம்” அமைச்சர் ரிஷாட் அறைகூவல்!
சுஐப் எம்.காசிம் “அரசியல் தீர்வு முயற்சி, தேர்தல் முறை மாற்றம், நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிப்பு ஆகியவற்றினால் நமது சமூகத்துக்கு நேரிடப்போகும் ஆபத்துக்களையும், பாதிப்புக்களையும் தடுத்து நிறுத்துவதற்கான மக்கள் ஆணையை உள்ளூராட்சித் தேர்தலின் மூலம் எமது கட்சிக்கு வழங்கி, அதற்கான அங்கீகாரத்தை தாருங்கள்” இவ்வாறு மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பகிரங்க அறைகூவல் விடுத்தார். கிண்ணியாவில் நேற்று முன்தினம் (08) அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேர்தல் பிரசாரக் கூட்டம் இடம்பெற்ற…
“சமூக உணர்வு உங்களிடம் இருந்தால் மயில் சின்னத்துக்கு வாக்களியுங்கள்” எம்.என்.நஸீர்!
-ஊடகப்பிரிவு- நமது சமூகம் இன்று ஒரு போட்டிமிக்க தேர்தலை எதிர்கொண்டுள்ளது. இதை நாம் நமக்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டிய பொறுப்புடைமை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனைப் போன்று, சமூகத்தை நேசிக்கும் அனைவருக்கும் உள்ள மிகப்பெரியா கடமையாகும் என முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், சதொச நிறுவனத்தின் பிரதித் தலைவருமான எம்.என்.நஸீர் தனது ஊடக அறிக்கையில் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், இன்றைக்கு 71 வருட வரலாற்றை ஐக்கிய தேசிய கட்சி எழுதி…
முசலி பிரதேச சபை வேட்பாளரை ஆதரித்து இடம்பெற்ற கூட்டம்!
-ஊடகப்பிரிவு- முசலி பிரதேச சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் யானைச் சின்னத்தில் போட்டியிடும் வேப்பங்குள வட்டார வேட்பாளரான முன்னாள் உப தவிசாளர் எஸ்.எம்.எம்.பைறூசின் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்று இடம்பெற்றது. பிச்சைவாணிப நெடுங்குளம் அளக்கட்டில் நேற்று (09) இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் ஊர்ப்பிரமுகர்களும், பிரதேசவாசிகளும் பங்கேற்றிருந்தனர்.
“ஆட்சியாளரிடம் ஒரு கதை மக்களிடம் வேறொரு கதை ஏமாற்று அரசியல் கலாசாரத்துக்கு முடிவு கட்டுங்கள்” சம்மாந்துறையில் அமைச்சர் ரிஷாட்!
-ஊடகப்பிரிவு- அம்பாறை மாவட்டத்தில் யானைச் சின்னத்திற்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும், எமது எதிர்கால சந்ததியினரை அடிமைப்படுத்தி, நமது சமூகத்தின் குரல்வளையினை நசுக்கும் சக்தியாக அமைந்துவிடும் என வர்த்தக கைத்தொழில் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் சம்மாந்துறைப் பிரதேச வேட்பாளர்களை ஆதரித்து சம்மாந்துறையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்….
வவுனியா சிப்பிக்குளத்தில் வேட்பாளரை ஆதரித்த கூட்டம்!
-ஊடகப்பிரிவு- எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வவுனியாமாவட்ட, சிப்பிக்குளம் வட்டாரத்தில், அகில இலங்கை மக்கள் சார்பில் யானை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரான தொழிலதிபர் இம்தியாஸ் அவர்களை ஆதரித்த கூட்டம் நேற்று (07) சிப்பிக்குளத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாகாணசபை உறுப்பினர் அலிகான் ஷரீப், அமைச்சரின் பிரத்தியேக செயலாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் முத்து முஹம்மட் மற்றும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள உட்பட ஊர்ப்பிரமுகர்களும் கலந்துகொண்டனர். …
ஓட்டமாவடியில் இடம்பெற்ற வேட்பாளர் ஆதரவு கூட்டம்!
-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய முன்ணனியின் யானை சின்னத்தில் கோரளைப்பற்று மேற்கு மற்றும் கோரளைப்பற்று ஆகிய பிரதேச சபைகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வும், முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டமும் நேற்று முந்தினம் (07) ஒட்டமாவடி பலநோக்கு கூட்டுறவுச் சங்க கட்டிடத்தில் இடம்பெற்றது இந்நிகழ்வில் விசேட அதிதியாக ஐக்கி மக்கள் கூட்டமைப்பின் தலைவர் ஹஸன் அலி மற்றும் மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான அமீர் அலி உட்பட பலர் கலந்துகொண்டனர். …
