News
வவுனியா மதவுவைத்தகுளத் தேர்தல் காரியாலயத் திறப்பு விழா மற்றும் வேட்பாளர்களை ஆதரித்த கூட்டம்!
-ஊடகப்பிரிவு- எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வவுனியா கந்தபுரம் இரட்டை வட்டாரத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடுகின்ற வரதராஜ் துரைராஜ் மற்றும் வே. ஜீவராஜ் ஆகியோரை ஆதரித்து, மதவுவைத்தகுளத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் தேர்தல் காரியாலயமும் திறந்து வைக்கப்பட்டது. வேட்பாளர்கள் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் முன்னாள் மாகாணசபை உறுப்பினரும், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளருமான றிப்கான் பதியுதீன், மக்கள் காங்கிரசின் உயர்பீட உறுப்பினரும், அமைச்சரின் இணைப்புச் செயலாளருமான முத்து முஹம்மட், பாஸ்டர்…
‘முஸ்லிம்களின் இருப்பைக் கருத்திற்கொண்டு மு.கா இத்தேர்தலில் வாபஸ் வாங்கி விலகுவதே, இதுவரை காலமும் அக்கட்சி செய்த அநியாயங்களுக்கு பிராயச்சித்தமாகும்’ – முபாறக் அப்துல் மஜீத்!
-முபாறக் அப்துல் மஜீத்- கல்முனை உள்ளூராட்சி சபையை 94ம் ஆண்டு முதல் ஆட்சி செய்தும் இன்று வரை கல்முனையையும் நாசமாக்கி கல்முனை சாய்ந்தமருது பிரதேசங்களையும் பிரித்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், கல்முனையின் எதிர் கால நன்மையையும், முஸ்லிம்களின் இருப்பையும் கருத்திற்கொண்டு இத்தேர்தலில் வாபஸ் வாங்கி புதிய முஸ்லிம் கட்சியொன்றுக்கு அனைத்து முஸ்லிம்களும் வாக்களிக்க வழி விடுவதே இது வரை காலமும் அக்கட்சி கல்முனைக்கு செய்த அநியாயங்களுக்கு பிரயச்சித்தமாகும். இன்றுள்ள நிலையில் கல்முனை மாநகர சபையை முஸ்லிம்…
‘முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை ஆள்பவர்கள் சம்பந்தன், சுமந்திரன்’ கே.எம்.ஜவாத்!
-முர்ஷிட் கல்குடா- ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை ஆள்பவர்கள், தீர்மானிப்பவர்கள் நாங்கள் அல்ல. இதனை தீர்மானிப்பவர்கள் சம்பந்தனும், சுமந்திரனும் தான் என முன்னாள் முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கே.எம்.ஜவாத் தெரிவித்தார். வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய தேசிய முன்னனியில் போட்டியிடும் செம்மண்ணோடை வேட்பாளர் எம்.எச்.எம்.ஹக்கீமினை ஆதரித்து செம்மண்ணோடையில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்….
‘முஸ்லிம்களின் உரிமைகளுக்கு குரல்கொடுக்காத முஸ்லிம் காங்கிரஸும், அதன் தலைமையும்’ அட்டாளைசேனையின் அன்ஸில்!
-ஊடகப்பிரிவு- புதிய அரசியலைப்பில் ஒன்று இத்தேர்தலில் பின் வரப்போகின்றது. இதில் எவ்வாறான விடயங்கள் உள்வாங்கப்படவேண்டும் என்பது தொடர்பில் 06உபகுழுக்கள் உருவாக்கப்பட்டது அதில் முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடக்கிய இன்னும் பல மு.கா முக்கியஸ்தர்களும் இருந்தார்கள். இச்சீர்திருத்தம் தொடர்பில் 70க்கும் மேற்பட்ட கூட்டங்கள் இடம்பெற்றது எமது நாட்டின் அடிப்படை சட்டங்கள் மாறும் இவ் அரசியலைப்பு திருத்த சட்டத்தில் முஸ்லிம்களின் உரிமைகள் தொடர்பில் பேச இந்த முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த ஒரு நபரும் கலந்துகொள்ளவில்லை கலந்துகொண்டாலும் எதையும் இவர்கள் பேச மாட்டார்கள். என முன்னாள்…
‘அரச நெல் களஞ்சியத்தில் நிர்ணய விலையை வழங்குங்கள்’ பிரதி அமைச்சர் அமீர் அலி!
-முர்ஷிட் கல்குடா- மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் அரசாங்கத்தின் நெல் கொள்வனவு நிலையத்தில் நெல்லை வழங்கி, நியாயமான பணத்தினை பெற்றுக் கொள்ள முடியும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் பிரதியமைச்ச௫மான அமீர் அலி தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட நெல் கொள்வனவு செய்யும் நிகழ்வை வவுணதீவில் (29) ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், 2017, 2018ம் ஆண்டுக்கான பெரும்போக நெல் அறுவடையை முன்னிட்டு அரசாங்கத்தினால் நெல் கொள்வனவு…
அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பணிப்புரைக்கமைய அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு!
-ஊடகப்பிரிவு- 70 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு லங்கா சதொச நிறுவனம், இன்று முதல் (01) அமுலுக்கு வரும் வகையில் ௦7 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது. கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பணிப்புரைக்கமைய இந்த விலைகள் குறைக்கப்பட்டுள்ளது. பாவனையாளர்களுக்கு நன்மை பயக்கும் விதமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனத்தின் தலைவர் தெரிவித்தார். மேலும் இந்த விஷேட விலைக்கழிவு இம்மாதம் 07ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்குமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்….
‘மன்னார் மாவட்ட அபிவிருத்தியில் அமைச்சர் ரிஷாட் திறம்படச் செயற்படுகின்றார்’ மன்னாரில் பிரதமர் புகழாரம்!
–ஊடகப்பிரிவு- நாட்டின் ஆட்சியை நாங்கள் வென்றெடுத்ததைப் போன்று, கிராமங்களின் ஆட்சியையும் கைப்பற்றுவதற்கு உதவுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்தார். மன்னார் மாவட்ட உள்ளூராட்சி சபைகளில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, மன்னார் பஸ்தரிப்பு நிலையத்தில் நேற்று (31) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன், மாகாணசபை உறுப்பினர் அலிக்கான் சரீப், முன்னாள் மாகாணசபை…
மக்கள் காங்கிரஸ் மகளிர் அணியின் விழிப்பூட்டல் கருத்தரங்கு!
-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மகளிரணியூடாக பெண்களுக்கான மருத்துவக் கருத்தரங்கு மற்றும் விழிப்புணர்வூட்டல் நிகழ்வு நீா்கொழும்பு சய்பா காடின் ஹொட்டலில் நேற்று முன்தினம் (30) இடம்பெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மகளிரணி தேசிய தலைவி டாக்டர். ஹஸ்மியா உதுமாலெப்பை, நீா்கொழும்பு மகளிரணி மற்றும் நீா்கொழும்பு மாநகர சபைத்தோ்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
‘முஸ்லிம் சமூகத்தைப் பாதிக்கும் எந்தவொரு தீர்வுக்கும் ஒருபோதும் இடமளியோம்’ ஓட்டமாவடியில் பிரதமர் முன்னிலையில் அமைச்சர் ரிஷாட் சூளுரை!
-சுஐப் எம்.காசிம்- மைத்திரிபால சிரிசேனவை ஜனாதிபதியாக்குவதற்கு முழுப்பங்களிப்பு நல்கிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், வலுவான உடன்படிக்கை ஒன்றை மேற்கொண்ட பின்னரே நாங்களும் நல்லாட்சிக்கு ஆதரவளித்து, புதிய அரசைக் கொண்டு வந்தோம். யுத்தத்தின் கோரப்பிடிக்குள் அகப்பட்டு, பல்வேறு துன்பங்களை அனுபவித்த சமூகங்களில், நாங்களும் உள்ளடங்குவோம். எனவே அரசாங்கம் கொண்டுவருகின்ற எந்தவொரு தீர்வும் எங்களை பாதிக்கவும் கூடாது, எங்கள் விருப்புக்கு மாற்றமாகவும் அமையக் கூடாது. அவ்வாறான தீர்வுக்கு நாங்கள் ஆதரவளிக்கமாட்டோம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமும், அவரது தலைமையிலான அரசியலமைப்பு…
பள்ளிக்குடியிருப்பு தமிழ் சகோதரர்கள் மக்கள் காங்கிரஸில் இணைவு!
-ஊடகப்பிரிவு- கனிய மணல் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் அப்துல் றஸாக் நளீமி தலைமையில், பள்ளிக்குடியிருப்பு தமிழ் சகோதரர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டனர். இதண்போது, பள்ளிக்குடியிருப்பு பிரதேசத்தில் பாரிய அபிவிருத்திப் பணிகள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது என்றுஅப்துல் றஸாக் நளீமி தெரிவித்தார்.
வவுனியா ஹிஜ்ராபுரத்தில் வேட்பாளர்களை ஆதரித்த கூட்டம்!
–ஊடகப்பிரிவு- வவுனியா மாவட்டத்தின் சாளம்பைக்குளம், இரட்டை வட்டாரத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களான கே.எம்.ரஹீம், என்.பி.ஜவாஹிர் ஆகியோரை ஆதரித்து, ஹிஜ்ராபுரத்தில் கூட்டமொன்று இடம்பெற்றது. ஹிஜ்ராபுரம், ஆசியன் ஜிப்ஸம் மோல்டிங் தொழிற்சாலையின் உரிமையாளர் மன்சூர் ஆப்தின் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளருமான றிப்கான் பதியுதீன், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் முத்து முஹம்மத், ஓய்வுபெற்ற கிராம சேவையாளர் நசார், அயல் வட்டார…
‘மரச்சின்னத்துக்கு அளிக்கும் வாக்குகள் கடலில் கொட்டப்படுவது போன்றதாகும்’ முல்லைத்தீவில் அமைச்சர் ரிஷாட்!
-ஊடகப்பிரிவு- பதினேழு வருடகாலமாக துன்பங்களிலும், துயரங்களிலும் பங்குபற்றாத, எந்தவிதமான அக்கறையும் கொள்ளாத மு.காவின் மரச் சின்னத்துக்கு அளிக்கப்படும் வாக்குகள், கடலில் கொட்டப்படுவது போன்றதென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கரைதுரைப்பற்று பிரதேச சபையில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேட்பாளர்களை ஆதரித்து, முல்லைத்தீவில் நேற்று மாலை (30) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் மேலும் கூறியதாவது,…
