News
குறிஞ்சிப்பிட்டிய – நூர் பாலர் பாடசாலை அபிவிருத்திக்கு அமைச்சர் ரிஷாட் நிதியொதுக்கீடு!
-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி நகர அமைப்பாளர் ஏ.ஆர்.எம்.முஸம்மிலின் வேண்டுகோளுக்கிணங்க, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நவவி மற்றும் கல்பிட்டி பிராந்திய அமைப்பாளர் ஆப்தீன் எஹியா ஆகியோரின் சிபாரிசில், அமைச்சர் ரிஷாட் பதியுதீனினால் கல்பிட்டி, குறுஞ்சிப்பிட்டி நூர் பாலர் பாடசாலைக்கு 02 இலட்சம் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது. நேற்று (18) நூர் பாலர் பாடசாலைக்கு சமூகமளித்த அமைப்பாளர் முஸம்மில், பாடசாலையின் அபிவிருத்திப் பணிகளை பார்வையிட்டதுடன், ஆசிரியர்களுடனும் கலந்துரையாடினார்.
மாந்தை கிழக்குப் பிரதேச சபையை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியமைக்கான காரணத்தை கூறுகின்றார் தவிசாளர் தயானந்தன்!
-சைபுதீன் எம்.முகம்மட்- மாந்தை கிழக்குப் பிரதேச சபையைக் கைப்பற்றியமைக்கு கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு அமைச்சர் றிஷாட் ஆற்றிய பணிகளே காரணமாகுமென்று புதிய தவிசாளராக தெரிவுசெய்யப்பட்ட மகாலிங்கம் தயானந்தன் தெரிவித்தார். சபையின் முதலாவது அமர்வு நேற்று (18) முடிவடைந்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், மாந்தை கிழக்கு பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டிருக்கும் நான், இந்த சந்தர்ப்பத்தில், இந்த நிகழ்வில் தவிர்க்க முடியாது கலந்துகொள்ளாது வெளிநாடு…
தொழில் முயற்சியாளர்களுக்கு கைத்தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு!
-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில் – வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் விவகாரப் பணிப்பாளரும், கிண்ணியா முன்னாள் மேயருமான டாக்டர். ஹில்மி மஹ்ரூபின் வேண்டுகோளுக்கிணங்க, தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தொழில் முயற்சியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், பல்துறை சார்ந்த கைத்தொழில் உபரணங்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் டாக்டர். ஹில்மி மஹ்ரூப், பிரதேச செயலாளர் திருமதி. ஸ்ரீபதி, உதவித் திட்டமிடல்…
“மக்கள் சேவையில் ஈடுபடும் நாம் எமது கடமைகளை உணர்ந்து செயற்பட வேண்டும்” தவிசாளர் தாஹிர்!
-முர்ஷித்- மக்கள் சேவையில் ஈடுபடும் நாம் நமது கடமை, பொறுப்பு என்பனவற்றை உணர்ந்து செயற்பட வேண்டும் என நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர் கூறினார். நிந்தவூர் பிரதம தபாலக தபால் அதிபராக கடமையாற்றி இடமாற்றம் பெற்றுச்செல்லவுள்ள ஏ.எம்.ஏ றசீதுக்கான பிரியாவிடை வைபவமும் புதிய தபாலதிபர் யூ.எல்.எம். பைசரை வரவேற்கும் நிகழ்வும் நிந்தவூர் தபாலக மண்டபத்தில் நடைபெற்றுது. இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், நிந்தவூர்…
07 சபைகள், 166 உறுப்பினர்கள், 05 பிரதித் தவிசாளர்கள்!!! வெற்றிக் கொடி கட்டும் மக்கள் காங்கிரஸ்!!!
–சுஐப் எம்.காசிம்– அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தோற்றம் பெற்று, குறுகிய காலமாக இருந்த போதும், இக்குறுகிய காலத்தில் வடக்கு, கிழக்கில் நீண்ட காலமாக அரசியல் செய்துவரும் பாரம்பரிய தமிழ், முஸ்லிம் கட்சிகளை விஞ்சுமளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளதையே அக்கட்சி கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் பெற்ற அபார வெற்றி எடுத்துக் காட்டுகின்றது. கைப்பற்றிய சபைகள் வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் 15 மாவட்டங்களில் போட்டியிட்டு, மொத்தமாக 166 உறுப்பினர்களை பெற்றுக் கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், உள்ளூராட்சி…
வன்னி மாவட்டத்தில் மக்கள் காங்கிரஸின் உதவியுடன் சுதந்திரக் கட்சிக்கு தவிசாளர், பிரதித் தவிசாளர் பதவிகள்!! வவுனியா நகரசபையை கூட்டணி கைப்பற்ற மக்கள் காங்கிரஸ் முழு ஆதரவு!
-வவுனியா நகர சபை உறுப்பினர் அப்துல் பாரி- வன்னி மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அதிகாரங்களைப் பெறுவதற்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பூரண ஒத்துழைப்பை நல்கியதாக வவுனியா நகர சபை உறுப்பினர் அப்துல் பாரி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். வவுனியா நகரசபையில், தமிழர் விடுதலைக் கூட்டணி தவிசாளர் பதவியைப் பெறுவதற்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரதித் தவிசாளர் பதவியைப் பெறுவதற்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூன்று…
கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக்கின் அறிவிப்புக்கு மக்கள் பாராட்டு!
-ஊடகப்பிரிவு- கற்பிட்டி பிரதேச சபையின் முதலாவது அமர்வு நேற்று (17) இடம்பெற்றது. இதன்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கற்பிட்டி பிரதேச சபையின் உறுப்பினர் ஆஷிக் தனக்குக் கிடைத்த முதல்மாத சம்பளத்தினை பள்ளிவாசலுக்கு வழங்கி வைத்தார். அத்துடன், எதிர்வரும் 04 வருட சேவைக்காலங்களிலும் கிடைக்கப்போகும் தனது சம்பளப் பணத்தை மத்ரஸா ஒன்றிற்கு வழங்கப் போவதாக, அந்த விடயத்தினை எழுத்து மூலமாக சபைக்கு அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். கற்பிட்டி பிரதேச சபை, விருதோடை வட்டாரத்தின் உறுப்பினராகிய ஆசிக் மேற்கொண்ட இந்த நல்ல…
மீராவோடை அல்/ஹிதாயா மகா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழாவும், “ஹிதாயா” மலர் வெளியீடும்!
-முர்ஷிட் கல்குடா- முகநூலில் எழுதும் விமர்சனத்தின் மூலம் உங்களுடைய பாடசாலையின் பெயருக்கு அபகீர்த்தி வரும் அளவிற்கு நடந்து கொள்ள வேண்டாம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட மீராவோடை அல் – ஹிதாயா மகா வித்தியாலயத்தின் 11வது பரிசளிப்பு விழாவும், “ஹிதாயா” மலர் வெளியீடும் அண்மையில் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்ற போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்- வெறும் விமர்சனங்களுக்கு மாத்திரம்…
”இலங்கைக்கான ஜி.எஸ்.பி வரிச்சலுகை இம்மாதம் 22ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்” அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!
-ஊடகப்பிரிவு- இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு அமெரிக்காவினால் வழங்கப்படுகின்ற ஜி.எஸ்.பி வரிச்சலுகை எதிர்வரும் 22ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்மென கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு ஜீ.எஸ்.பி வரிச் சலுகையை 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையில் நீடிக்கும் ஒப்பந்தத்தில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அண்மையில் கையொப்பமிட்டிருந்தார். அதன்படி இந்த வரிச் சலுகை இம்மாதம் 22ம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக அமைச்சர்…
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வசம்!
-ஊடகப்பிரிவு- தவிசாளராக தயானந்தன்! பிரதித் தவிசாளராக சுதந்திரக் கட்சியின் ஆர்.சிந்துஜன்! முல்லைத்தீவு மாவட்டத்தில், மாந்தை கிழக்கு (பாண்டியன் குளம்) பிரதேச சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளராக போட்டியிட்ட மகாலிங்கம் தயானந்தன் (நந்தன்) 07 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். இவருக்கு ஆதரவாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 04 வாக்குகளும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 02 வாக்குகளும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் 01 வாக்கும் கிடைக்கப் பெற்றன….
அரசியல் நாகரீகத்தின் புதிய கதவுகளை அகலத் திறக்கும் அஇமகா! வியக்க வைக்கும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வெளிப்படையான இயக்கங்கள்!
-எஸ். ஹமீத்- பன்னெடுங்காலங்கள் பறந்துவிடவில்லை. பதின்மூன்றே பதின்மூன்று வருடங்கள்தான். இலங்கையில் ஓர் அரசியற் கட்சி உதயமாகி உச்சம் நோக்கியதோர் உன்னதப் பாதையின் வழியே ஓங்கிய புகழோடு உத்வேகமாய்ச் சென்று கொண்டிருக்கிறது. வியாபித்துக் கொண்டிருக்கும் அதன் மகிமையின் வீச்சம் வியக்க வைக்கிறது. கண்பட்டுவிடுமோ என்று அதனை நேசிப்போர் கவலைப்படுமளவிற்கு அதன் வளர்ச்சி காணப்படுகிறது. இலங்கையின் நீண்ட வரலாற்றில் தோன்றியவையும், தோன்றிய வேகத்திலேயே மறைந்து போனவையுமான நூற்றுக் கணக்கான அரசியற் கட்சிகள் இருக்கின்றன. இலங்கை சுதந்திரமடைந்த இந்த எழுபது வருடங்களில்…
மக்கள் காங்கிரஸின் கற்பிட்டி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!
-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கற்பிட்டிக்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று முன்தினம் (15) இடம்பெற்றது. மக்கள் காங்கிரஸின் பிரதித்தலைவரும், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நவவி மற்றும் கற்பிட்டிப் பிராந்திய அமைப்பாளர் ஆப்தீன் எஹியா ஆகியோரின் தலைமையில், நவவி எம்.பி யின் இல்லத்தில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட இளைஞர் அமைப்பாளர் இப்லால் அமீன், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் காங்கிரஸில் போட்டியிட்ட வேற்பாளர்கள் மற்றும் அமைப்பாளர்கள் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும்…
