News
அரசியல் சித்து விளையாட்டில், மாமனை வீழ்த்திய மருமகன்!
நிறைவேற்று அதிகாரத்தின் தொடுவாயிலிருந்து சில சந்தர்ப்பங்களை மீட்டிப்பார்க்கும் நிர்ப்பந்தங்களை இரண்டு மாத அரசியல் இழுபறி எனக்குள் ஏற்படுத்திற்று. இதனால் ஒப்பீட்டு ஆய்வுக்குள் நான் திணிக்கப்பட்டுள்ளேன். 1978 பெப்ரவரி 04 இல் நடைமுறைக்கு வந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை யாரைப் பாதுகாக்கும்? எவரைப் பாதுகாத்தது? ஏன் தேவைப்பட்டது? சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு வியாக்கியானம் வழங்கும் சட்டாம்பிள்ளைகளுக்கு சத்திய வாக்காகப் பதிலுரைக்க இதற்குத் தெளிவு தேவை. ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், புத்திஜீவிகளும் நிறைவேற்று அதிகாரத்தின் நிஜம் என்ன, நிழல்…
சர் ஜோன் கொத்தலவல மாவத்தை வீதியின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாநகரசபை உறுப்பினரும் குருநாகல் மாவட்ட இளைஞர் அமைப்பாளருமான அஷார்தீன் மொய்னுதீனின் நிதி ஒதுக்கீட்டில், சமூக சேவையாளர் கனீ பாயின் வேண்டுக்கோளுக்கிணங்க, குருநாகல், சர் ஜோன் கொத்தலாவல வீதியின் புனரமைப்புப் பணிகள் நேற்று (17) ஆரம்பித்து வைக்கப்பட்டன. மாநகர சபை உறுப்பினர் அஷார்தீன் இந்தப் பணிகளை இன்று நேரில் சென்று பார்வையிட்டதுடன், புனரமைப்பு வேலைகளை துரிதகதியில் பூர்த்தி செய்து, விரைவில் மக்கள் பாவனைக்காக வீதியை கையளிக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார். (ன)
“ஜனநாயக வழிப் போராட்டமே எமக்கு கிடைத்த பாரிய வெற்றி” – அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி!
நாட்டின் அரசியல் நிலை சீர்குலைவுக்கு எமது ஜனநாயக ரீதியான போராட்டமே எமது வெற்றிக்கு காரணமாக அமைந்தது. நீதித் துறை நீதியை நிலை நாட்டியுள்ளது என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹரூப் தெரிவித்துள்ளார். அண்மைக் காலமாக நாட்டின் அரசியல் குழப்பங்கள் தொடர்பில் அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே (17), அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் தற்போதைய ஜனாதிபதியை ஐந்துக்கும் மேற்பட்ட சிறுபான்மை கட்சிகள் 60…
நிந்தவூர் பிரதேச சபையின் 2019 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று நிறைவேறியது!
நிந்தவூர் பிரதேச சபையின் 9ஆவது கூட்டம் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் அவர்களின் தலைமையில் நிந்தவூர் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் இன்று (17) இடம்பெற்றது இக்கூட்டத்தில் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தவிசாளர் அவர்களால் சமர்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதன்போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 6 உறுப்பினர்களும் சமூகமளித்திருக்கவில்லை. ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினரும் சபையின் உப.தவிசாளருமான வை.எல். சுலைமான் லெப்பை அவர்கள் வரவு செலவுத் திட்டம் தொடர்பாக பேசும்போது தவிசாளரால் முன்வைக்கப்பட்டுள்ள…
நிந்தவூர் பாடசாலை சமூகத்துடனான சந்திப்பு!!!
நிந்தவூரிலுள்ள பாடசாலைச் சமூகத்திற்கும் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று(14) நிந்தவூரிலுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாரை மாவட்ட காரியாலயத்தில் இடம்பெற்றது. இதன்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில் இடம்பெறும், முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கான அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது. இதன்போது தவிசாளர், நிந்தவூரை பொருத்தமட்டில் கடல், வயல் சார்ந்த தொழில் துறைகளுக்கு அப்பால் கல்வி என்பது பாரிய…
காவத்தமுனை புதிய வீட்டுத்திட்டத்திற்கு குடிநீர் தாங்கி!!!
முன்னாள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்களிடம் வட்டாரக் குழு மற்றும் கௌரவ பிரதேச சபை உறுப்பினர் எம்.பி.எம்.ஜௌபர் விடுத்த வேண்கோளுக்கு அமைவாக, அவரது நிதியொதிக்கீட்டில் காவத்தமுனை புதிய விட்டுத்திட்டத்திற்கு குடிநீர் தாங்கி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. பிரதேச சபை உறுப்பினர் எம்.பி.எம்.ஜௌபர் தலமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், தவிசாளர் ஐ.டி.அஸ்மி, முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும் வட்டாரக் குழுத் தலைவருமான ஆதம்பாவா, கிராம சேவகர் அஸ்வர் மற்றும் வட்டாரக் குழு உறுப்பினர்களும்…
வட்டக்கண்டல் வட்டாரத்தின் ஆலய வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!
மாந்தை மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட, வட்டக்கண்டல் வட்டாரத்தில் அமைந்துள்ள ஆலங்குளம் குழந்தை யேசு ஆலய உள்ளக வீதியை கொங்கிறீட் வீதியாக புனர்நிர்மாணிக்கும் வேலைத்திட்டம், மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் ஆசீர்வாதம் சந்தியோகு தலைமையில் ஆரம்பமாகியது. இந்த நிகழ்வில், மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் முஜாஹிர் கலந்து சிறப்பித்ததுடன், மாந்தை மேற்கு பிரதேச சபை வட்டக்கண்டல் வட்டார உறுப்பினர்களான நைசர், செளந்தரராசா, ஆள்காட்டிவெளி வட்டார உறுப்பினர் பா.பிரபாநந்தன் மற்றும் உள்ளூர் அமைப்புகளின் பிரதிநிதிகளும் பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்….
“இஸ்லாத்தைப் பற்றிய தவறான எண்ணங்களை இல்லாதொழிப்பது காலத்தின் தேவையாக மாறியுள்ளது” மக்கா மாநாட்டில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் அறைகூவல்!!!
இஸ்லாத்தை பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் உலக நாடுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள பிழையான எண்ணங்களை இல்லாதொழிப்பதற்கு இதுவே தக்க தருணம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். “உலகளாவிய இஸ்லாமிய மையம்” (World Muslim league) ஏற்பாட்டில் மக்கா, அல் முகர்ரமாஹ்வில் இடம்பெற்ற, சர்வதேச இஸ்லாமிய ஒருங்கிணைப்பு மாநாட்டில் (The International Conference on Islamic Unity)அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் இலங்கை சார்பில் நேற்று (13) விஷேட விருந்தினராகப்…
“சட்டம் கடமையை மிகச்சரியாக செய்துள்ளது” மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாத் தெரிவித்தார்!!
நாட்டில் எந்தவொரு பிரஜையும் , அரசியலமைப்பை மீறமுடியாது என்பதை இன்றைய வரலாற்று முக்கியத்துவமிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பு நிரூபித்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். அரசியலமைப்புக்கு மாற்றமான முறையில் ஜனாதிபதி செயற்பட தொடங்கியதிலிருந்து, அது பிழையென நிரூபிக்கும் வகையில், நாங்கள் நீதிமன்றத்தின் ஊடாக மேற்கொண்ட முயற்சிகளுக்கு இன்று உரிய பலன் கிடைத்துள்ளது. சட்டம் தனது கடமையை மிகச் சரியாக செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்; கடந்த நவம்பர்….
பேருவளை சீனாவத்தை மஸ்ஜித் வீதியின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்!
பேருவளை பிரதேச சபை, சீனாவத்தை வட்டார அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர் ஸமீர் ஸாஹிபின் வேண்டுகோளிற்கிணங்க, பேருவளை பிரதேச சபை உறுப்பினர் ஹஸீப் மரிக்காரின் பிரதேச சபை நிதி ஒதுக்கீட்டில், அழுத்கம சீனாவத்தை மஸ்ஜித் வீதியை செப்பனிடும் பணிகள் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. சீனாவத்தை மஸ்ஜித் ஒழுங்கை வீதியின் புனர்நிர்மாணப் பணிகளை, பிரதேச சபை உறுப்பினர் ஹஸீப் மரிக்கார் நேரில் சென்று பார்வையிட்டதுடன், பாதை செப்பனிடல் பணிகளை துரிதகதியில் பூர்த்தி செய்து வீதியை மக்கள் பாவனைக்கு…
மாந்தை மேற்கு வரவு செலவு திட்டம் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது!!!
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச சபை தவிசாளர் சந்தியோகு (செல்லத்தம்பு) அவர்களினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட 2019ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏக மனதாக இன்று நிறைவேற்றப்பட்டது.(2018.12.12) 25 உறுப்பினர்களை கொண்ட மாந்தை மேற்கு பிரதேச சபையில் இன்றைய அமர்வில் பங்கு கொண்ட அணைத்து உறுப்பினர்களும் சபை தவிசாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட முதலாவது வரவு செலவு திட்டத்திற்கு ஒருமித்து ஆதரவு வழங்கியமை சிறப்பம்சமாகும். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வசம் உள்ள மாந்தை மேற்கு பிரதேச சபையில் முஸ்லீம்…
புலவர் திருநாவுக்கரசின் மறைவு மன்னார் மக்களுக்கு பாரிய இழப்பாகும்.
மன்னார் மாவட்டத்தின் திருக்கேதீஸ்வர ஆலய அறங்காவலர் சபை இணைச்செயலாளர் புலவர் அம்பலவாணர் திருநாவுக்கரசு (சமாதான நீதவான்) மறைவு இந்துக்களுக்கு மாத்திரமன்றி அந்த மாவட்டத்தில் வாழும் ஏனைய இன மக்களுக்கும் கவலை தருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். தமிழிலே நன்கு புலமையும், பாண்டித்தியமும் பெற்ற அமரர் திருநாவுக்கரசு சைவத்தின் மேன்மைக்காக தன்னை அர்ப்பணித்து வாழ்ந்தார். மன்னார் மாவட்டத்தில் இந்து, இஸ்லாமிய கிரிஸ்தவ மக்களின் இன நல்லுறவை வலுவாக்கும் வகையில் அவரது செயற்பாடுகள்…
