Headlines

அமைச்சர் றிஷாட் பதியுதீன் முயற்சியினால் மன்னார் மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் மக்களிடம் கையளிப்பு..

மன்னார் மாவட்டத்தின் உப்புக்குள கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்து புத்தளம் கற்பிட்டியில் சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வரும் உப்புக்குள மக்களின் மீள்குடியேற்றத்திற்கென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், கைத்தொழில் மற்றும் வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளை ஏற்று ஐக்கிய அரபு அமீரகத்தின்  UAE AID – Emirates Red Crescent தொண்டு நிறுவனத்தினூடாக நிர்மாணிக்கப்பட்ட வீடமைப்புத் தொகுதி இன்று (11) ஐக்கிய அரபு அமீரக தனவந்தர்கள் மற்றும்…

Read More

பிரதியமைச்சராக அப்துல்லா மஹ்ரூப் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்….

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை பிரதியமைச்சராக இன்று காலை (11/01/2018) முன் ஜனாதிபதி முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.

Read More

பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீசி இஸ்மாயில் அவர்களின் முயற்சியால் தேசிய பாடசாலையாக அல்மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி

கடந்த 2 வருடங்களாக இழுபறியில் இருந்த அல்மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரியின் தேசிய பாடசாலை விவகாரம் இன்று முடிவுக்கு வந்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் சம்மாந்துறை அமைப்பாளர் ஹசனலி சேர் அவர்களினால் முதல் முதலாக கொண்டு செல்லப்பட்ட தேசிய பாடசாலையாக தரம் உயர்த்தும் செயற்திட்டங்கள் இதுவரை காலமும் தட்டிகளிக்கப்பட்ட நிலையில் கடந்த தினங்களில் முன்னாள் கௌரவ. ஆளுனர் ரோகித போகல்லாகம அவரக்ளும் , சம்மாந்துறை பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீசி இஸ்மாயில் அவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில்…

Read More

சிறிய அரிசி உரிமையாளர் சங்கத்தினருக்கும், அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கும் இடையில் சந்திப்பு.

சிறிய அரிசி உரிமையாளர் சங்கத்தினர் தமது தொழிலில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கைத்தொழில், வணிகத்துறை, நீண்டகால இடம்பெயர்வுக்குள்ளான மக்களின் மீள்குடியற்றம், மற்றும்  கூட்டுறவுத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களுடன் இன்று (09) காலை நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். கொழும்பு யூனியன் வீதியில் உள்ள கூட்டுறவு ஆணையாளரின்  அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக, கூட்டுறவு ஆணையாளர் நசீர், அகில இலங்கை விவசாயிகள் கூட்டுறவுச் சங்கத்தி தேசிய அமைப்பாளரும் வட மேல்…

Read More

யாழ் மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், கைத்தொழில் மற்றும் வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் 01.யாழ்/நாவாந்துறை ரோமன் கத்தோலிக்க பாடசாலை 02.யாழ் ஒஸ்மானியா கல்லூரி  03. யாழ் கொட்டாடி நமசிவாய பாடசாலை  04.யாழ் வைத்தீஸ்வர வித்தியாலயம் 05.யாழ் வண்ணை நாவலர் மகா வித்தியாலயம்  06.யாழ் கதீஜா பெண்கள் அரபுக்கல்லூரி ஆகிய பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் நேற்று (02) வழங்கி வைக்கப்பட்டது. மக்கள் காங்கிரஸின் யாழ் மாநகர சபை உறுப்பினர்…

Read More

பாயிஸ் பவுண்டேசனின் மற்றுமொரு சேவை!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளரும் மேல்மாகாண சபை உறுப்பினருமான முஹம்மத் பாயிஸ் அவர்களின் நிதியொதுக்கீட்டில், கொழும்பு மாவட்டத்தில் பாடசாலை செல்லும் சுமார் 1500 மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள்  வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. மக்கள் காங்கிரஸின் கொழும்பு காரியாலயத்தில் அண்மையில் (30)  இடம்பெற்ற இந்த நிகழ்வில், மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு மாணவர்களுக்கான உபகரணங்களை வழங்கி வைத்தார்.   

Read More

“பெருந்தலைவர் அஷ்ரபின் தேசிய ஐக்கிய முன்னணியின் மறுவடிவம் தான் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்” – சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜவ்பர்கான் உரை!

மாபெரும் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் 2000ஆம் ஆண்டு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கதவுகளை மூடிவிட்டு, தேசிய ஐக்கிய முன்னணியை ஸ்தாபித்துவிட்டு சொன்ன விடயம், 2012ஆம் ஆண்டு தேசிய ஐக்கிய முன்னணி தமிழர்களும் முஸ்லிம்களும் சிங்களவர்களுமாய் 40 பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெறும். அதனூடாக அரசியலமைப்பு மாற்றப்பட்டு சிறுபான்மை சமூகத்தவர் ஒருவர் பிரதமராய் வருவார் என்பதாகும். ஆனால் அவற்றை நிறைவேற்ற தலைவர் இருக்கவில்லை. இதன் அர்த்தம் இன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸினூடாக தேசிய தலைவர் ரிஷாட் பதியுதீனினூடாக நிறைவேறுகிறது என்று அகில…

Read More

முல்லைத்தீவு பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொதிகள் வழங்கி வைப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில்   துணுக்காய், மாந்தை கிழக்கு, ஓட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு பிரதேச செயலகங்களுக்குட்பட்ட கிராமங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 1500 குடும்பங்களுக்கான நிவாரணப் பொதிகள், வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான றிப்கான் பதியுதீன் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது. 

Read More

யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த நடவடிக்கை!

நீண்டகாலமாக இடம்பெயர்ந்த யாழ் முஸ்லீம்   மக்களை விரைவாக மீள்குடியேற்ற பொறிமுறை ஒன்றினை தயாரித்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்  யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம் நிலாம் தெரிவித்துள்ளார். யாழ் மாநகர சபை எல்லைக்குட்பட்ட   ஜே   86, ஜே 87 மற்றும் ஜே 88  கிராம சேவையாளர் பிரிவுகளில் இடம்பெற்று வரும் அபிவிருத்தி திட்டங்களை பார்வையிட்டதன் பின்னர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது, 2010ம் ஆண்டு முதல் இன்று வரை சுமார் 8வருடங்களாக நான் எமது மக்களின்…

Read More

யாழ் ஒஸ்மானியா மைதானத்தில் சிறுவர் பூங்கா அமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில் மற்றும் வர்த்தகம், நீண்ட கால அகதிகளின் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் விசேட நிதியொதுக்கீட்டில், இருபது இலட்சம் ரூபா செலவில் யாழ் / ஒஸ்மானியா மைதானத்தில் சிறுவர் பூங்கா அமைப்பதற்கான வேலைத்திட்டம் நடைபெறுகின்றது. மேற்படி வேலைத்திட்டங்களை இன்று (01)அகில இலங்கை மக்கள் காங்கிரசின் யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம்.நியாஸ் நிலாம் மற்றும் அமைச்சரின் செயற்திட்ட இணைப்பாளர் முஜாஹித் நிசார் ஆகியோர் பார்வையிட்டனர்.

Read More

“சம்மாந்துறை கல்வி வரலாற்றில் மற்றுமொரு சாதனை” – இஸ்மாயில் எம்.பி!

இலங்கை முஸ்லிம்களின் கல்வி வரலாற்றில் நமது பாடசாலை சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகாவித்தியாலயம் பல்வேறு சாதனைகளை நிலைநாட்டியுள்ளது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் தெரிவித்தார். 1975 ஆம் ஆண்டு முதன்முதலாக நான்கு மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றதுடன் அடுத்த ஆண்டு ஒரே வகுப்பில் கல்வி கற்ற ஒரு மாணவனைத் தவிர இருபத்தி நான்கு மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்று வரலாற்று சாதனையை நிலைனாட்டியுள்ளனர். அன்று முதல் தொடர்ச்சியாக ஒவ்வொருவருடமும் நமது…

Read More

“கல்குடாத் தொகுதியில் போதையை ஒழிக்க அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றோம்”- இராஜாங்க அமைச்சர் அமீர் அலி!

கல்குடாத் தொகுதியில் போதையை ஒழிக்க அதிரடிப் படையினரை கொண்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றோம் என விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சு பெற்றுக் கொண்டமைக்காக ஏற்பாடு செய்யப்பட்ட வரவேற்பு நிகழ்வும், பொதுக் கூட்டமும் ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவுச் சங்க முன்றலில் இடம்பெற்ற போது கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், எமது போராட்டமானது மட்டக்களப்பு மாவட்டத்தில்…

Read More