News
எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல் இது : பிரிவினையை தோற்கடியுங்கள் – ஜனாதிபதி
செல்வநாயகம் நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டங்களை தொடர்ந்து எதிர்காலத்திலும் முன்னெடுப்பதே எமது திட்டம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். அரசாங்கத்தை ஸ்திரமற்ற நிலைக்குத் தள்ளி நாட்டின் அமைதியை சீர்குலைக்க முயல்வோரிடமிருந்து நாட்டைப் பாதுகாக்க எதிர்வரும் 8ம் திகதி வெற்றிலைக்கு மக்கள் வாக்களித்து முழுமையான ஆதரவினை வழங்குவது முக்கியம் என்றும் அவர் தெரிவித்தார். 8ம் திகதி வெற்றிலைக்கு வாக்களித்து அமோக வெற்றியை உறுதி செய்து 9ம் திகதி நாம்…
பிரதான கட்சிகளை பலவீனப்படுத்தி நாட்டை குழப்பும் சூழ்ச்சிகளில் சர்வதேசம்
கே. அசோக்குமார் பிரதான அரசியல் கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளையும் பலவீனமடையச் செய்யும் முயற்சிகளில் சர்வதேச ரீதியில் சூழ்ச்சிகள் இடம்பெற்று வருவதாக அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று தெரிவித்தார். இது தொடர்பாக மக்கள் மிகவும் விளிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அமைச்சர் யாப்பா கேட்டுக்கொண்டார். ஐ.ம.சு. முன்னணியின் செய்தியாளர் மாநாடு நேற்று ஸ்ரீல.சு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பொது வேட்பாளர் ஒருவரை நியமித்து ஐ.தே.க.வினரை ஓரங்கட்டி ஐ.தே.க. முழுமையாக பலமிழக்கச்…
ஷார்ஜாவில் பால்கனியில் துணி காய போட்ட 6,500 வீடுகளுக்கு ₹ 5.63 கோடி அபராதம் !
மிகப்பெரிய நகரங்களில் குடியிருப்பு வீடுகளில், வீட்டு பால்கனியில் துணிகளை சலவை செய்து உலர்த்துவதற்காக தொங்க விட்டு இருப்பது வாடிக்கை. ஆனால் அமீரகம் ஷார்ஜாவில் இவ்வாறு துணிகளை சலவை கடைபோல் தொங்கவிடுவது நகரின் அழகு மற்றும் தூய்மை பாதிக்கின்றது என கூறி இதற்கு தடை விதித்து உள்ளது. இவ்வாறு தொங்கவிடப்படும் வீடுகளூக்கு 500 திராம் அபராதம் விதிக்க உத்தரவிட்டு உள்ளது. தரற்போது இதையும் மீறி ஷார்ஜா நகரில் பால்கனிகளில் துணிகள் உலர்த்தப்படுகின்றன. அவ்வாறு பால்கனியில் துணிகள் உலர்த்தும் வீடுகளூக்கு…
யெமன் நாட்டில் வெடிகுண்டு தாக்குதல்: 20 குழந்தைகள் உள்பட 31 பேர் பலி
யெமன் நாட்டில் 2 கார்களில் குண்டு வைத்திருந்தனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் இந்த கார் குண்டு வெடித்ததில் 31 பேர் பலியானார்கள். இதில் 20 பேர் குழந்தைகள் ஆவார்கள். அவர்கள் 12 வயதுக்குட்பட்டவர்கள் ஆவார்கள். மேலும், இந்த சம்பவத்தில் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த வருடம் கூகுளில் அதிகம் தேடப்பட்ட 10 விடயங்கள் எவை
கூகுள் தேடுபொறியில் இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட வார்த்தைகளில் புகழ்பெற்ற நடிகர் ”ரொபின் வில்லியம்ஸ்” (Robin Williams) முதலிடம் பிடித்துள்ளார். பல்வேறு ஹொலிவுட் வெற்றிப் படங்களில் நடித்துள்ள இவர் இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் ”வேர்ல்ட் கப்” (World Cup) என்ற வார்த்தை இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. மூன்றாவது இடத்தில் உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ”இபோலா” (Ebola) இடம்பெற்றுள்ளது. அதிகமாக தேடப்பட்ட முதல் பத்து வார்த்தைகள் 01. Robin Williams 02….
உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சின் விஷேட ஆலோசகராக கலாநிதி சிராஸ் மீராசாஹிப் நியமனம்
பழுலுல்லாஹ் பர்ஹான் / அகமட் எஸ். முகைடீன் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சின் விஷேட ஆலோசகராக கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் மெட்ரோபொலிடன் கல்லூரியின் ஸ்தாபக தலைவருமாகிய கலாநிதி சிராஸ் மீராசாஹிப் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லாவினால் நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த அமைச்சில் கடந்த வாரம் உத்தியோகபூர்வமாக சிராஸ் மீராசாஹிப் தனது கடமைகளை பொறுப்பேற்றார். நாட்டு மக்களுடன் நேரடித் தொடர்பு கொண்டு சேவைகளை வழங்கி வருகின்ற உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகளை அதிமேதகு ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக…
கருமலையூற்று மஸ்ஜித் இருந்த இடத்தில் ஜும்ஆத் தொழுகை!
இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்து கையேற்கப்பட்ட கருமலையூற்று ஜும்ஆ பள்ளிவாசலில் எதிர்வரும் 2014.12.19ஆம் திகதியன்று மீண்டும் ஜும்ஆத் தொழுகை இடம்பெறவுள்ளது. நீண்ட காலத்தின் பின்பு இடம்பெறும் ஜும்ஆத் தொழுகையில் பெருந்தொகையான மக்கள் வருகை தரவுள்ளதாக பள்ளிவாசல் நிருவாக சபைச் செயலாளர் எம்.ஐ.சுபைர் தெரிவித்தார். தொன்மையான பள்ளிவாசல் உடைத்தழிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளி வளாகத்தில் தற்காலிகமாக அமைக்கப்படவுள்ள கூடாரத்திலேயே ஜும்ஆ தொழுகை இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். -Lankamuslim-
“கட்டுநாயக்க மூடப்பட்டால் எங்களுக்கு செல்ல மத்தள விமான நிலையம் இருக்கிறது”; நாமல்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ, தேர்தல் பிரசார கூட்டங்கள் சிலவற்றில் நேற்றைய தினம் கலந்துகொண்டார். கொலன்ன பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கருத்து வெளியிட்டார். “எதிர்வரும் 8ஆம் திகதி மைத்திரியின் ஆட்சி, நல்லாட்சியை ஏற்படுத்துவதாக கூறுகின்றனர். 8ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தை மூடப்போகின்றார்களாம். ஒவ்வொரு வரையும் செல்வதற்கு இடமளிக்க மாட்டார்களாம். அவர்களுக்குத் தேவையான நபர்கள் மாத்திரமே செல்ல அனுமதிக்கப்படுமாம். எந்தவொரு நபரும் செல்வதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என கூறுகின்றனர். அதுவா…
உலகநாடுகள் அதிகளவான தேர்தல் கண்காணிப்பாளர்களை அனுப்பவேண்டும்!- சந்திரிகா
ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு தினத்தன்று அரசாங்கம் பெரும் வன்முறைகளில் ஈடுபடலாம், எதிரணியினரை அச்சுறுத்தலாம். முன்னர் இடம்பெற்ற தேர்தல்களிலும் இது இடம்பெற்றுள்ளது, அதிகளவான தேர்தல் கண்காணிப்பாளர்களை அனுப்பி தேர்தல் நீதியாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதை மாத்திரமே உலகநாடுகளால் செய்ய முடியும். அரசாங்கத்திற்கு அவர்கள் நீதியான சுதந்திரமான தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தலாம். ஆனால் அவை செவிடன் காதில் ஊதிய சங்காகவே அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடக சுதந்திரத்தை பாதுகாப்பேன்: மைத்திரிபால சிறிசேன
கடந்த காலங்களில் ஊடகவியலாளர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட துன்புறுத்தல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவேன் என்று பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சுதந்திர ஊடக இயக்கத்துக்கும், மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போது, ஊடக சுதந்திரம், தடை நீக்கம், மற்றும் சமூக பொறுப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் அடங்கிய கோவை ஒன்றை சுதந்திர ஊடக இயக்கத்தின் ஏற்பாட்டாளர் சுனில் ஜயசேகர, மைத்திரிபால…
பிரதமர் பதவி வழங்கினால் ஏற்றுக் கொள்வேன்!- எஸ்.பி. நாவின்ன
பிரதமர் பதவியை வகிக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்தால் அதனை ஏற்றுக்கொள்ளத் தயார். வடமத்திய மாகாண ஊடகவியலாளர்களை ஜனாதிபதி செயலகத்தில் நேற்று சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். என்னை விடவும் ஆறு அமைச்சர்கள் பிரதமர் பதவியைப் பெற்றுக்கொள்ளக்கூடிய சேவை மூப்பைக் கொண்டுள்ளனர். பிரதமர் பதவியை வகிக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்தால் அதனை ஏற்றுக்கொள்வதில் பிரச்சினையில்லை. திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு சுகாதார அமைச்சர் பதவி வழங்கப்பட்டமை குறித்து எவ்வித கவலையும் கிடையாது. நாட்டின் அரசியல் சூழ்நிலைகளின் அடிப்படையில் எடுக்கப்படும் தீர்மானங்களை…
தேர்தல் மேடைகளில் தெரிவிக்கப்படும் கருத்துக்களை சிலர் திரிவுபடுத்துகின்றனர் – மைத்திரிபால
தேர்தல் மேடைகளில் தெரிவிக்கப்படும் கருத்துக்களை திரிவுபடுத்த சிலர் முயற்சி செய்வதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.சம்பிக்க ரணவக்க எழுதிய ”பாழடைந்த பொருளாதாரம்” எனும் தலைப்பிலான நூல் வெளியீட்டு விழா நேற்று பிட்டகோட்டையில் நடைபெற்றது.இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே மைத்திரிபால சிறிசேன இதனைக் கூறினார். அவர் தெரிவித்ததாவது; நாம் ஆட்சிக்கு வந்ததும், இந்த நாட்டில் பாரிய ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு நாட்டை விட்டு வெளியேற இடமளிப்பதில்லையென நான் கூட்டமொன்றில் கூறியிருந்தேன். எனினும், தற்போது அந்தக்…
