Headlines

கெஹெலிய ரம்புக்வெல்ல யாழ் நீதிமன்றில் ஆஜர்

யாழ்.குடாநாட்டில் அரசியல் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் காணாமல் போன லலித், குகன் வழக்கில் முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல யாழ்.நீதிமன்றில் ஆஜராகி உள்ளார். லலித், குகன் ஆகிய இருவரும் கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ம் திகதி யாழ்.புத்தூர் பகுதியில் வைத்து காணாமல் போயிருந்தனர். இந்நிலையில் லலித், குகன் ஆகியோர் உயிருடன் உள்ளனர் என முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்ம்புக்வெல்ல ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கூறியிருந்தார். இதனையடுத்து லலித், குகன் ஆகியோரின் உறவினர்களால்…

Read More

கடந்த ஆண்டு அரசுக்கு 47.5 மில்லியன் வருவாய்

யாழ். மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் மூலம் கடந்த ஆண்டு அரசிற்கு கிடைத்த வருமானம் 47.5 மில்லியன் ரூபா என மாவட்டச் செயலகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. யாழ். மாவட்ட செயலகத்தில் உள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் மூலம் மட்டும் கடந்த ஆண்டில் சாரதி அனுமதிப் பத்திரம் பெறல், புதுப்பித்தல் நடவடிக்கைகள் மூலம் அரசிற்கு கிடைத்த வருமானத்தின் தொகை 47.5 மில்லியன் ரூபா என மாவட்டச் செயலகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதன்பிரகாரம் மாதம் ஒன்றிற்கு சராசரியாக சுமார் 35…

Read More

போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளால் விசனமடையும் பாதைசாரிகள்!

முல்லைத்தீவு புதுகுடியிருப்பு நகரம் A34பிரதான வீதியில் பாதைசாரிகள் மஞ்சள் கோட்டு கடவையால் கடந்து செல்வதற்கு சில வாகனபோக்குவரத்து சாரதிகள் இடையூரு ஏற்பட்டுத்துவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். சில சாரதிகள் வீதி போக்குவரத்து விதிகளை பின்பற்றத் தவருகின்றனர் கடந்த ஆண்டில் வாகன விபத்ததுகள் காரணமாக பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளது. இந்த வருடமும் அவ்வாறு எற்பட்டு விடுமோ என்று அச்சத்துடனே பயணத்தை தொடர வேண்டியுள்ளதாகவும் பாதைசாரிகள்  மேலும் தெரிவித்துள்ளனர்.

Read More

வடக்கு மற்றும் தலைமன்னார் புகையிரத சேவைகளில் மாற்றம்

வடக்கு மற்றும் தலைமன்னார் நோக்கி புறப்படும் புகையிரதங்களின் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் இன்று  தெரிவித்துள்ளது. அதன்படி புதிய நேர அட்டவணைகள் வருமாறு, கொழும்பு யாழ்பாணம் இடையில் சேவையில் உள்ள யாழ்தேவி கல்கிஸ்ஸையில் இருந்து காலை 05.50 மணிக்கு ஆரம்பமாகி கொழும்பு கோட்டையில் இருந்து காலை 06.35 இற்கு யாழ்ப்பாணம் நோக்கி புறப்படும் இந்த புகையிரதம் பிற்பகல் 02.37 இற்கு யாழ்ப்பாணத்தை சென்றடையவுள்ளதுடன், பிற்பகல் 03.20 ற்கு காங்கேசன்துறையை சென்றடையவுள்ளது. யாழ்தேவி யாழ்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி…

Read More

வித்தியா படுகொலை: சந்தேகநபர்கள் குற்றவாளிகள் இல்லையாம்!

நாங்கள் குற்றவாளிகள் இல்லை. எங்களைப் பழிவாங்கும் நோக்குடன் ஊர்காவற்றுறை பொலிஸார் எங்களை கைது செய்துள்ளனர் என புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு சந்தேகநபர்கள் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தனர். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு தொடர்பான வழக்கு நீதவான் ஏ.எம்.எம்.றியால் முன்னிலையில் இன்று (11) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அறிக்கைகள் இன்றும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாத காரணத்தால், சந்தேகநபர்களை எதிர்வரும் 25ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார். வழக்கு முடிந்து சிறைச்சாலை வாகனத்தில் சந்தேகநபர்கள் ஏறியபோது, ஊடகவியலாளர்களை தமது அருகில்…

Read More

மூத்த ஊடகவியலாளர் கே.கே.இரத்தினசிங்கம் காலமானார்!

‘சுடர்ஒளி’ பத்திரிகையின் முன்னாள் பிரதம, ஸ்தாபக ஆசிரியர் குமாரவேலு கந்தர் இரத்தினசிங்கம் (கே.கே.ஆர்.) (வயது 87) நேற்று (10) யாழ்ப்பாணம் கச்சேரி வீதியில் உள்ள அவரது வீட்டில் காலாமானார். உடுப்பிட்டி இமையாணனைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவராவார். தமிழ்ப் பத்திரிகை உலகில் சுமார் 60 ஆண்டுகள் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த இவர், பல மூத்த தமிழ் ஊடகவியலாளர்களை உருவாக்கியுள்ளார். கண்டிப்புக்கும் கடமைக்கும் முக்கியத்துவம் கொடுத்த கே.கே.ஆர். இலங்கைத் தமிழ்ப் பத்திரிகை வரலாற்றில்…

Read More

வித்தியாவின் படுகொலை: இன்று விசாரணை!

பாலியல் துன்புறுத்தலுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை தொடர்பான வழக்கு விசாரணை இன்று ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. புதிதாக இடமாற்றம் பெற்று வந்துள்ள நீதிவான் ஏ.எம்.எம்.றியால் முன்னிலையில் விசாரணை நடைபெறவுள்ளது. கடந்த வருடம் மே மாதம் குறித்த மாணவி கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார். இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் முதலில் 9 பேர் கைது செய்யப்பட்டிருந்ததுடன் கடந்த மாதம் ஆரம்ப பகுதியில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் இவ் வழக்கு…

Read More

வடக்கு புகையிரத பாதைகளில் குறைபாடுகள்: கொடுப்பனவுகள் இடைநிறுத்தம்

– ப.பன்னீர்செல்வம், ஆர்.ராம் – வடக்கு புகையிரதபாதை அமைப்பில் குறைபாடுகள் காணப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ள நிலையில் அவற்றுக்கான கொடுப்பனவுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். போக்குவரத்து அமைச்சு பாரிய கடன் சுமைகளைக் கொண்டிருப்பதாகவும் அவற்றை எவ்வாறு செலுத்த போகின்றோம் என்ற சவால்களுடன் பயணத்தை ஆரம்பித்ததாகவும் அமைச்சர் சபையில் குறிப்பிட்டார். இன்று புதன்கிழமை பாராளுமன்றில் கடற்றொழில் நீர்வளத்துறை போக்குவரத்து சிவில் விமான மற்றும் கப்பற்துறை அமைச்சர்கள் மீதான குழுநிலை விவாதத்தின் போது உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு…

Read More

வாகன விபத்தில் சிறுமி பலி : யாழில் சம்பவம்

யாழ். – வேலணை பகுதியில் கடற்படையினர் கெப் ரக வாகனத்தில்  மோதி சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்தில் 10 வயது சிறுமி ஒருவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக  யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

கிடங்கிற்குள் இறங்கியவர்கள் மர்மமாய் உயிரிழப்பு

யாழ்ப்பாணம், உடுப்பிட்டி பகுதியிலுள்ள வீடொன்றின் குழாய்க் கிணறு அருகிலிருந்த கிடங்கிற்குள் பூட்டப்பட்டிருந்த மோட்டாரை பழுதுபார்க்க நேற்று புதன்கிழமை (02) மாலை குறித்த கிடங்கினுள் இறங்கிய இருவர் மர்மான முறையில் இறந்துள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். புலோலி பகுதியைச் சேர்ந்த எஸ்.மகாநாயகம் (வயது 56), பருத்தித்துறையைச் சேர்ந்த என்.கிருஸ்ணமூர்த்தி (வயது 61) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். மேற்படி பள்ளத்தில் பொருத்தப்பட்டிருந்த மோட்டார் பழுதடைந்ததையடுத்து, அதைத் திருத்துவதற்காக ஒருவர் கிடங்கினுள் இறங்கியுள்ளார். இறங்கியவர் எவ்வித சத்தமும் இல்லாமல் இருப்பதை அவதானித்த…

Read More

இஸ்லாத்தை கொச்சைப்படுத்தியமையை மன்னிக் முடியாது ; அமைச்சர் றிஷாத் காட்டம்

வடமாகாணத்தின் முல்லைத்தீவு மற்றும் மன்னார் வலயக்கல்வி அலுவலகங்களுக்குட்பட்ட பாடசாலைகளில் நடைபெற்ற மூன்றாம் தவணைப் பரீட்சை வினாத்தாள்களில் இஸ்லாத்தை கொச்சைப்படுத்தியும், முஸ்லிம்களின் மனதை புண்படுத்தியும் உள்ளமை குறித்து அமைச்சர் றிசாத் பதியுதீன் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசத்திடம் நேரடியாக முறைப்பாடு செய்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறியதாவது, பரீட்சை வினாத்தாளில் திட்டமிடப்பட்ட முறையில் இஸ்லாம் அவமதிக்கப்பட்டு, முஸ்லிம்களை புண்படுத்தியிருந்தால் அது மன்னிக்கப்பட முடியாத குற்றமாகும். இங்கு தவறு செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய வேண்டும். அதற்கான பொறுப்புதாரிகள் யார்…

Read More

மாணவன் தற்கொலை: வட மாகாண பாடசாலைகள் மூடப்பட்டது!

வட மாகாண பாடசாலைகளுக்கு இன்று (27) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வட மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா தெரிவித்தார். யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டமைக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் இவ்வாறு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More