Main News
சுற்றுச்சூழல் பாதிப்புக்கள் குறித்த விழா தொடர்பான கலந்துரையாடல்!
“மன்னார் மாவட்டத்தின் சுற்றுச்சூழல் பாதிப்புக்கள் மற்றும் சவால்கள்” என்ற தொனிப்பொருளில் ஒக்டோபர் 05 ஆம் திகதி இடம்பெறவுள்ள விழா தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், இன்று காலை (28) மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன பிரதம அதிதியாகப் பங்கேற்கும் இந்த விழாவை முன்னிட்டு, மன்னார் அரசாங்க அதிபர் மோகன்ராஜ் தலைமையில் இடம்பெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார். சுற்றாடல் அதிகார சபை உயரதிகாரிகள்,…
“இன, மத, கட்சி பேதமற்ற அபிவிருத்திகள் தொடரும்” அப்துல்லா மஹரூப் எம்.பி
இன, மத, கட்சி பேதமற்ற அரசியல் அபிவிருத்தியை திருகோணமலை மாவட்டத்தில் எனது ஆரம்ப காலம் தொட்டு நடை முறைப் படுத்தி வருகிறேன் இன்றும் அதைத்தான் செய்து வருகிறேன். இனக் குரோதமற்ற சமாதான சூழலினை உருவாக்க திருகோணமலை மாவட்ட மூவின மக்களும் உறுதி பூண்டுள்ளார்கள் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹரூப் தெரிவித்தார். பதவிசிறிபுர பகுதியில் ஐந்து வீதிகளுக்கான கொங்ரீட் இடும் பணிகளின் அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் உரையாற்றுகையில்,…
தேசிய மீலாத் விழாவை முன்னிட்டு முசலிப் பிரதேசத்தில் பாரிய அபிவிருத்தி திட்டங்கள்!
மன்னார், முசலியில் எதிர்வரும் நவம்பர் 20 ஆம் திகதி இடம்பெறவுள்ள தேசிய மீலாத் நபி விழாவை முன்னிட்டு, முசலிப் பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அந்தவகையில், மன்னார் அரசாங்க அதிபர் மோகன் ராஜ் தலைமையில், மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் கலந்துகொண்டு, அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடியதுடன், விழா ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகளுடன்…
சிலாவத்துறை தபால் நிலையத்திற்கு விரைவில் புதிய கட்டடம்!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளின் பேரில் முசலிக்கு விஜயம் செய்த, தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தற்காலிகக் கட்டிடமொன்றில் இயங்கிவரும் சிலாவத்துறை தபால் நிலையத்தைப் பார்வையிட்டதுடன், விரைவில் நிரந்தரக் கட்டிடமொன்றைக் கட்டித்தருவதாக உறுதியளித்தார். -ஊடகப்பிரிவு-
முசலி தேசிய பாடசாலைக்கு அமைச்சர்களான ரிஷாட், ஹலீம் விஜயம்!
மன்னார் முசலி தேசிய பாடசாலையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 20 ஆம் திகதி தேசிய மீலாத் விழா நிகழ்வு இடம்பெறவுள்ள நிலையில், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் மற்றும் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உள்ளடங்கிய உயர்மட்ட அதிகாரிகள் குறித்த பாடசாலைக்கு இன்று (27) விஜயம் செய்து இடத்தைப் பார்வையிட்டதுடன், விழா ஏற்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடினர். -ஊடகப்பிரிவு-
தேசிய மீலாத் நபி விழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம்!
மன்னார் முசலியில் எதிர்வரும் நவம்பர் மாதம் 20ஆம் திகதி இடம்பெறவுள்ள தேசிய மீலாத் நபி விழா தொடர்பான ஆலோசனைக் கூட்டமும், மீலாத் விழாவையொட்டி மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்களை பகிர்ந்தளித்தல் மற்றும் மீலாத் விழாவுக்கான நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்த கலந்துரையாடல் இன்று காலை (27) மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. மன்னார் அரசாங்க அதிபர் மோகன்ராஜ் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம், கைத்தொழில் மற்றும் வர்த்தக…
செங்கலடி பற்று பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக்கூட்டம்!
செங்கலடி பற்று பிரதேச செயலக அபிவிருத்தி குழுக் கூட்டம் இன்று 27.09.2018 இணைத்தலைவர்களான கடற்தொழில் நீரியவள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் அமீர் அலி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் வியாழந்திரன் ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான யோகேஸ்வரன் மற்றும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
நெல்லுத்தீவு வாழ் மக்களுடனான கலந்துரையாடல்!
நிந்தவூரின் நெல்லுத்தீவு பிரதேச சமூக, பெளதீக மற்றும் உள்கட்டுமான அபிவிருத்திகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக, நெல்லுத்தீவு வாழ் மக்களுக்கும் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிருக்கும் இடையே கலந்துரையாடலொன்று இன்று(26) நிந்தவூர் பிரதேச சபையில் இடம்பெற்றது. குறித்த பிரதேசத்தில் காணப்படும் பாதை விஸ்தரிப்பு தொடர்பான நடவடிக்கைகளை துரிதகதியில் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு, தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிரினால் ஆலோசனை வழங்கப்பட்டது. இதன்போது நிந்தவூர் பிரதேச சபையின் செயலாளர் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
உடுநுவர அம்பரபொல வீதியின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்!
கண்டி மாவட்டத்தின் உடுநுவர தேர்தல் தொகுதியில், தவுலகல வட்டாரத்தில் அமைந்துள்ள அம்பரபொல டீன் சைட் தோட்டத்து வீதியை கொங்கிரீட் பாதையாக செப்பனிடும் பணிகள் நேற்று (25) ஆரம்பமானது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஊடாக, உடுநுவர பிரதேச சபை உறுப்பினர் நஸார் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூபா 150,000 மூலமாக இந்த அபிவிருத்தித் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. மேலும், உடுநுவர தேர்தல் தொகுதியில் அமைந்திருக்கும் ரகுபெத்த பாதை செப்பனிடுதல் மற்றும் பாலம் அமைத்தல் தொடர்பான கலந்துரையாடலொன்றும் நேற்று உடுநுவர பிரதேச…
“இலங்கை – சவூதி உறவுகள் மேலும் வலுவடைய ஆக்கபூர்வமான செயற்பாடுகளை மேற்கொள்வோம்” சவூதி அரேபியாவின் தேசிய தின நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!
இலங்கையின் பொருளாதார வளர்ச்சியிலும் மக்களின் நலனோம்பு நடவடிக்கைகளிலும் ஆக்கபூர்வமான உதவிகளை மேற்கொண்டு வரும் சவூதி அரேபியாவுடனான உறவுகள், மேலும் வலுவடைய வேண்டுமென கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரித்தார். சவூதி அரேபியா நாட்டின் 88 வது தேசிய தின நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார். இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அப்துல் நாசர் அல்-ஹர்தி தலைமையில், கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் நேற்று மாலை (25)…
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை குழு அங்கத்தவராக கே.எம்.நிலாம் நியமனம்!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக் குழு அங்கத்தவராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம்.நிலாம் நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் வை.எம்.எம்.ஏயின் வேண்டுகோளுக்கிணங்க, சுகாதார போசனை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனத்தை யாழ்ப்பாணம் அகில இலங்கை வை.எம்.எம்.ஏயின் அலுவலகத்தில் வைத்து நேற்றிரவு(25) அதன் தலைவர் எம்.எஸ் றஹீமினால் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன், குறித்த பேரவையின் உதவி செயலாளரான என்.பவாஸ் என்பவரும் இக்குழு அங்கத்தவராக நியமனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின் “100 நாள் 200 வேலைத் திட்டம்” – புல்மோட்டையில் வேலைத்திட்டங்கள் ஆரம்பம்!
25 வது, 26 வது, 27 வது, 28 வது வேலைத்திட்டங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், பாராளுமன்ற உறுப்பினரும், திருமலை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின் திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி திட்டத்தில், குச்சவெளி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஆதம்பாவா தௌபீக், முன்னாள் உறுப்பினர்களான பதுர்தீன், சல்மான் பாரிஸ், வட்டாரக் குழுத்தலைவர் நௌபல் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க, இலங்கை கனிய மணல் கூட்டுத்தாபனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அப்துல்…
