Main News
இரண்டு தசாப்தத்திற்குப் பின்னரான வர்த்தக உறவைப் புதுப்பிக்க நாளை குவைத்துக்கு விஜயம் செய்கிறார் அமைச்சர் ரிஷாட்!!!
இரண்டு தசாப்த காலத்துக்குப் பின்னர் குவைத்துடனான உறவை இலங்கை புதுப்பிக்கவுள்ளது. இது தொடர்பான பேச்சு வார்த்தைகளுக்காக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் தலைமையிலான பலமான தூதுக்குழுவொன்று நாளை 08 ஆம் திகதி குவைத் பயணமாகிறது. “21 வருடங்களுக்கு பின்னர், மீண்டும் இலங்கை – குவைத் கூட்டுவர்த்தக ஆணைக்குழுவை நாங்கள் புதுப்பிக்கவுள்ளோம். குவைத்துக்கும் இலங்கைக்குமான நீண்டகால உறவில் இது ஒரு சிறந்த திருப்புமுனையாக அமையுமென நம்புகின்றேன்” இவ்வாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன், தன்னைச் சந்தித்த குவைத்…
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் வேண்டுகோளின் பேரில் சஜித் பிரேமதாச அவர்களினால் வழங்கப்பட்ட தாழ்வுபாடு “வளநார்” மாதிரிக் கிராம வீட்டுத்திட்ட அங்குரார்ப்பன நிகழ்வு இடம்பெற்றது..
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் வேண்டுகோளின் பேரில் சஜித் பிரேமதாச அவர்களினால் வழங்கப்பட்ட தாழ்வுபாடு “வளநார்” மாதிரிக் கிராம வீட்டுத்திட்ட அங்குரார்ப்பன நிகழ்வு இன்றையதினம் (06/10/2018) இடம்பெற்றது.. இந் நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் பிரதிநிதியாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் பிரத்தியோக செயலாளரும் முன்னால் மாகாண சபை உறுப்பினரும் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான தேசமான்ய றிப்கான் பதியுதீன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர் மாந்தை…
அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து அமைப்புகளுக்கு 20 இலட்சம் பெறுமதியான பொருட்கள் வழங்கிவைப்பு….
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் அவர்களின் பண்முகப்படுத்தபட்டுள்ள நிதியில் இருந்து மன்னார் பிரதேசத்திற்கான. மக்களின் அனைத்து தேவைகளையும் கேட்டரிந்து WRDS மாதர் சங்கத்தினருக்கும் அதே போன்று பல அமைப்பினருக்கும் அமைச்சரின் நிதியில் இருந்து 20 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை மன்னார் DS OFFICE ஊடாக பல அமைப்பினருக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்விழாவுக்கு வருகை தந்த முன்னால் மாகாண சபை உறுப்பினரும் அமைச்சரின் பிரதியோக செயலாளருமான றிப்கான் பதியுதீன் அவர்களும்…
அ.இ.ம.கா.குளியாப்பிடிய பிரதேசசபை உறுப்பினர் சபீரின் வேண்டுகோளுக்கினங்க ஹஸ்கம்பொல கொளனி நூரானியாகம பாதை அபிவிருத்தி.வேலைத்திட்டம் ஆரம்பம்…
குளியாப்பிடிய பிரதேசசபை உறுப்பினர் சபீரின் வேண்டுகோளுக்கினங்க மிக நீண்ட காலமாக அபிவிருத்தி செய்யப்படாமல் கிடப்பிலேயே கிடந்த ஹஸ்கம்பொல கொளனி பாதையின் அபிவிருத்தி பணிகள் ஆரம்பமாகியது. குருநாகல் மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதான அமைப்பாளரும் சதொச பிரதி தலைவரும் முன்னால் மாகாணசபை உறுப்பினருமான எம்.என்.நஸீர் (MA) அவர்களின் வழிகாட்டளில் ஆரம்பமான இவ்வேலைத்திட்டத்திற்கு குளியாப்பிடிய பிரதேசசபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உப தவிசாளர் எம்.சி. இர்பான் மற்றும் பிரதேசசபை உறுப்பினர் சபீர் ஆகியோர் மூலம் குளியாப்பிடிய…
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வவுனியா மாவட்ட இளைஞர் அமைப்பாளராக அபுதாஹிர் நபீஸ் நியமனம்!!!
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வவுனியா மாவட்ட இளைஞர் அமைப்பாளராக அபூதாஹிர் நபீஸ் என்பவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும், கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சருமான றிசாட் பதியுதீன் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனக் கடிதத்தை அமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கௌரவ அமைச்சரிடமிருந்து பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் கௌரவ அமைச்சர் உட்பட கிராமியப் பொருனாதார அமைச்சரும் கட்சியின் தவிசாளருமான எஸ்.எஸ்.அமீர்அலி மற்றும் கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள் முன்னிலையில் பெற்றுக்கொண்டார். NBC ஊடக வலையமைப்பின் பணிப்பாளரும்…
தேசிய அருங்கலைகள் பேரவையின் பணிப்பாளர் சபை உறுப்பினராக இல்லியாஸ் நியமனம்!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கண்டி மாவட்ட உயர்பீட உறுப்பினரும், அக்குரணை அமைப்பாளருமான ஐ.எம்.இல்லியாஸ், தேசிய அருங்கலைகள் பேரவையின் பணிப்பாளர் சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களினால், அவருக்கான நியமனக் கடிதம், நேற்று (04) வழங்கி வைக்கப்பட்டது.. கல்முனை சாஹிரா கல்லூரியின் பழைய மாணவரான இல்லியாஸ் அவர்கள், நீண்டகாலமாக சமூகத்துக்காக பல்வேறு வழிகளிலும் சேவையாற்றி வருகிறார். இவர் ரோயல் கெயார் வைத்தியசாலையின்…
பொத்துவில் அல்-ஹிஜ்ரா வித்தியாலயத்தின் புதிய வகுப்பறைக் கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், பொத்துவில் அல்/ஹிஜ்ரா வித்தியாலத்திற்கான நவீன வசதிகளுடன் கூடிய புதிய இரண்டு மாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு இன்று (05) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி SMM. இஸ்மாயில் பிரதம அதியாகவும், கெளரவ அதிதிகளாக அக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிப்பாளர் மெளலவி AM.ரஹ்மதுல்லாஹ், உபவலயக் கல்விப் பணிப்பாளர் N. வஹாப், கோட்டக்கல்விப் பணிப்பாளர் MAM. புஹாரி ஆகியோரும், சிறப்பு அதிதிகளாக கட்சியின்…
“வனரோபா” தேசிய மரநடுகை வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு!
“வனரோபா” தேசிய மரநடுகை வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு மன்னார், மடு, தம்மனைக்குளத்தில் இன்று (05) இடம்பெற்ற போது பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டு, வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். இதன்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் மரக்கன்றுகளை நாட்டி வைத்தார். மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மோகன்ராஜ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அமைச்சர்களான மகிந்த சமரசிங்க, மகிந்த அமரவீர, கயந்த கருணாதிலக, பிரதியமைச்சர்களான அங்கஜன் இராமநாதன், காதர் மஸ்தான், ஸ்ரீயானி…
“ஜனநாயக உரிமையை தந்த நல்லாட்சி அரசு புத்தளம் மக்களின் உரிமையில் கைவைக்க முற்படக்கூடாது” நகர சபை அமர்வில் அலி சப்ரி ரஹீம் வேண்டுகோள்!
புத்தளம் நகர சபையின் மாதாந்த அமர்வு நேற்று (04) புத்தளம் நகர சபைத்தலைவர் அப்துல் பாயிஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது கொழும்பிலிருந்து புத்தளத்திற்கு கொண்டுவரப்படவுள்ள கழிவகற்றல் திட்டத்திற்கு எதிரான பிரேரனை முன்வைக்கப்பட்டு விவாதம் இடம்பெற்றது. நகர சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாவட்ட அமைப்பாளருமான அலி சப்ரி ரஹீம் இங்கு உறையாற்றுகையில், 1963 தொடக்கம் ஆரம்பிக்கப்பட்ட அருவைக்கல்லு சீமெந்து தொழிற்சாலை வேலைத்திட்டம், 1969க்கு பிறகு பெரும் காடாக காணப்பட்ட அருவைக்கல்லு பிரதேசத்தில்…
“வில்பத்துவில் ஓர் அங்குலமேனும் அபகரிக்கப்படவில்லை” மன்னாரில் ஜனாதிபதி முன்னிலையில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!
வில்பத்துவை அழிப்பதாக தன்மீது தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்களும், அபாண்டங்களும் சுமத்தப்படுவதாகவும், வில்பத்துக் காட்டில் ஓரங்குல நிலமேனும் அழிக்கப்படவோ அபகரிக்கப்படவோ இல்லை எனவும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் நகரசபை மைதானத்தில் இன்று காலை (05) மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட வனரோபா தேசிய நிகழ்ச்சித் திட்டமும் சுற்றாடல் மாநாடும் இடம்பெற்ற போதே அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இவ்வாறு தெரிவித்தார். ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இந்த…
நல்லாட்சி அரசில் ஊடகங்களுக்கு சுதந்தரம் வழங்கப்பட்டுள்ளமையால் ஊடகவியலாளர்கள் மௌனித்திருக்க வேண்டிய அவசியமில்லை” அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி!
நல்லாட்சி அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டிய பாரிய பொறுப்பு ஊடகங்களுக்கு இருக்கிறது. இன்றைய கால கட்டத்தில் ஊடக சுதந்திரம் காணப்படுகிறது. ஊடகவியலாளர்களே சுதந்திரமாக செயற்பட முடியும் மௌனித்து இருக்க வேண்டிய அவசியமில்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹரூப் தெரிவித்தார். கிழக்கு மாகாண இலங்கை வங்கிக்கான காரியாலயமும் திருகோணமலை மேற்தரக் கிளையின் புதிய மூன்று மாடிக் கட்டிடத்தையும் நேற்று முன்தினம் (03) திருகோணமலையில் திறந்து வைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்….
“15 வருட கால அரசியலில் செய்யமுடியாத அபிவிருத்திப் பணிகளை அமைச்சர் ரிஷாட் அவர்களோடு கைகோர்த்த 07 மாதங்களுக்குள் செய்ய முடிந்துள்ளது”- தவிசாளர் தாஹிர்!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் நாம் கைகோர்த்து 07 மாதங்கள் கூட ஆகவில்லை. அதற்குள் நமது ஊர்மக்களுக்காக கோடி ரூபாய் மதிப்புள்ள வாழ்வாதார உதவிகளை செய்தது மட்டுமல்லாமல், பலகோடி பெறுமதியான அபிவிருத்தித் திடங்களுக்கான முன்மொழிவுகளை எம்மிடமிருந்து கேட்டுப்பெற்று அதற்கான நிதிஒதுக்கீடுகளையும் செய்து தந்திருக்கின்றார் எனவும் அத்துடன் 02வது கட்டமாக சுமார் 1000 க்கும் அதிகமான தேவையுடைய மக்களுக்காக, வாழ்வாதார உதவிகளையும் வழங்குவதற்கான ஏற்பாடுகள் அமைச்சரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர்…
