Main News
காலிக்கு வந்ததில் 1/4 பங்கினரே கிருளப்பனைக்கு சென்றனர்
காலியில் இடம்பெற்ற மேதின ஊர்வலங்களுக்கு வந்தவர்களில் 1/4 பங்கினரே கிருளப்பனைக்கு சென்றிருந்ததாக, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர், எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று (3) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இம்முறை தமக்கு ஒரு சவால் இருந்ததாக குறிப்பிட்ட அவர், கிருளப்பனையில் மேதினம் ஏற்பாடு செய்யப்பட்டது தமக்கு சவாலாகவே எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். கட்சியின் பொருளாளர் என்ற ரீதியில் 2100 பஸ்களுக்கு கட்டணம் செலுத்தியதாகவும் ஆனால் காலிக்கு 3000க்கும் அதிகமான பஸ்கள் வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்….
பொழுதுபோக்கு பூங்காவாக மாற்றமடையும் தெஹிவளை மிருகக்காட்சி சாலை
தெஹிவளை மிருகக்காட்சி சாலையானது அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியவாறு சிறந்த பொழுது போக்கு பூங்காவாக மாற்றப்படவுள்ளதாக நிலையான வளர்ச்சி மற்றும் வனவிலங்குகள் அமைச்சு காமின ஜயவிக்கிரம பெரேரா தெரிவித்துள்ளார். இதற்கமைய இதற்கான ஆரம்பக்கட்ட பகுப்பாய்வுகளை சரியான முறையில் மேற்கொள்ள விசேட குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையை அபிவிருத்தி செய்வது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்றைய தினம் (2) ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அனுமதிப்பத்திரம் இன்றி தொலைபேசிகள் விற்பனைசெய்யத் தடை
அனுமதிப்பத்திரம் இன்றி தொலைபேசிகள் மற்றும் அதன் பாகங்களை விற்பனை செய்யும் நிலையங்களை சுற்றிவளைத்து முற்றுகையிட, தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சுற்றிவளைப்பானது அடுத்த மாதம் முதல் முன்னெடுக்கப்படும் என, அந்த ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை கையடக்கத்தொலைபேசி மற்றும் அதன் பாகங்களை விற்பனை செய்யும் இடங்களை தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவில் பதிவு செய்ய வேண்டும் எனவும், சில இடங்கள் அனுமதிப் பத்திரம் இன்றி விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழு…
வெசாக்கை முன்னிட்டு தலைகள் வெளியீடு
வெசாக் தினத்தை முன்னிட்டு 3 விசேட தபால் தலைகள் வெளியிடப்படவுள்ளதாக தபால் சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. வெவ்வேறு வகையான மூன்று தூபிகள் அம்முத்திரைகளில் பிரசுரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான முன்மொழிவுகளை பௌத்த சாசன அமைச்சு முன் வைத்துள்ளது. இது தொடாபான கலந்துரையாடலில் தபால்துறை முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம், பௌத்த சாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, உள்நாட்டமைச்சர் வஜிர அபேவர்தன ஆகியோர் கலந்து கொண்டதாக தபால் துறை அமைச்சின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
மஹிந்தவின் தோல்விக்கு காரணமாவர்கள் இவர்களா?
ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவின் தோல்விக்கு மேர்வின் சில்வா, சஜின் வாஸ் குணவர்த்தன மற்றும் முத்துஹெட்டிகம ஆகியோரின் செயல்பாடுகளே காரணம் என்று பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கமன்பில தெரிவித்தார். 2015 ஆம் ஆண்டு நடைப்பெற்ற ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்ததன் பின்னர், சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும், ராஜித சேனரத்னவும் மற்றும் துசித்த ஹல்லோளுவவும் மஹிந்த ராஜபக்ஷவின் தோல்வி இரண்டு வருடங்களாக இரகசியமாக திட்டமிட்டு செயற்பட்டதன் விளைவாகவே நடைபெற்றது என தெரிவித்திருந்தனர். இதற்கு அமைய மேர்வின் சில்வா,…
தம்புள்ளை பள்ளியை புதிய இடத்தில் நிர்மாணிக்க வக்பு சபை அனுமதி
தம்புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசலை தற்போதுள்ள இடத்திலிருந்து அகற்றி நகர அபிவிருத்தி அதிகாரசபை தம்புள்ளை நகருக்கு அண்மையில் வழங்கவுள்ள காணியில் புதிதாக நிர்மாணித்துக் கொள்வதற்கு வக்பு சபை பள்ளிவாசல் நிர்வாகத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது. வக்பு சபை அங்கத்தவர்களுக்கும் பள்ளிவாசல் நிர்வாக சபை பிரதிநிதிகளுக்குமிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்தே வக்புசபை இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. ‘தம்புள்ளை நகருக்கு அண்மையில் பள்ளிவாசலுக்கு நகர அபிவிருத்தி அதிகாரசபை காணி வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதால் வசதியான ஒரு பள்ளிவாசலை நிர்மாணித்துக் கொள்ளமுடியும். தற்போது பள்ளிவாசல்…
நாடு முழுவதும் அரச வைத்திய அதிகாரிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
நாடு முழுவதும் அரச வைத்தியசாலைகளில் பணிபுரியும் வைத்திய அதிகாரிகள் இன்று ஒரு மணி நேர எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மாலபே தனியார் வைத்திய கல்லூரியை ரத்து செய்ய வேண்டுகோள் விடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், மேலும் குறித்த மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டமானது இன்று நண்பகல் உணவு இடைவேளையின் போது அரச வைத்தியர்களால்…
மஹிந்தவின் பாதுகாப்பு ஏன் நீக்கப்பட்டது?
முன்னாள் ஜனதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இராணுவப் பாதுகாப்பு முற்றாக நீக்கப்பட்டுள்ளது. இராணுவ பாதுகாப்பிற்கு பதிலாக பொலிஸ் பாதுகாப்பை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பாதுகாப்பு விதிமுறைகளுக்கு முரணாக எவருக்கும் பாதுகாப்பு வழங்க அனுமதி இல்லை என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவிக்கையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு 103 இராணுவமும் 103 பொலிஸ் உள்ளிட்ட 256 பாதுகாப்பு தரப்பினர் இப்போதுவரையில் அவரின் பாதுகாப்பிற்காக…
மஹிந்தவின் உயிருக்கு அச்சுறுத்தல் – நாமல்
அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டமை குறித்து நாமல் ராஜபக்ச அறிக்கை ஒன்றின் மூலம் கருத்து வெளியிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் அந்த அறிக்கையில், ஏனைய அதிகாரிகளுக்கு இராணுவப் பாதுகாப்பு வழங்கப்படாத காரணத்தினால் மஹிந்த ராஜபக்சவின் இராணுவப் பாதுகாப்பை நீக்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். எனினும் இலங்கையில் பயங்கரவாதத்தை இல்லாதொழித்த ஒரே தலைவர் மஹிந்த ராஜபக்ச என்பதனை…
நாமலின் விதி சில தினங்களில் தெரியும் – ரவி கருணாநாயக்க
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் விதியினை நாளை அல்லது மறுநாள் வரும் போது பார்க்க முடியும் என ஐக்கிய தேசிய கட்சியின் மேதின பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். தற்போது இடம்பெற்று வருகின்ற விசாரணைகளின்படி நாமல் ராஜபக்ஷ பணம் மறைக்கப்பட்ட இடம் மற்றும் அவருடை அரண்மனை பற்றிய தகவல்கள் தெரியவந்துள்ளதாகவும் கடந்த ஆட்சியின் போது ஊழல், மோசடியில் ஈடுபட்ட அனைவரையும் மக்கள் முன்னிலையில் முழங்கால் இடச்செய்யவுள்ளதாக அமைச்சர் ரவி கருணாநாயக்க…
மைத்திரி வீடு செல்ல வேண்டும் : உதய கம்மன்பில
எமது நாட்டில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளின் ஆலோசணைகளின் பேரிலேயே வற் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே அவர்களை உடனடியாக பதவி நீக்க வேண்டும் இல்லாவிட்டால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விலகிச்செல்ல வேண்டும் என்று பாராளுமன்ற உருப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். தூய்மையான ஹெல உருமயவின் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பொலிஸ் ஊடகப் பிரிவு இடைநீக்கம்
பொலிஸ் மா அதிபரின் ஆலோசனையின் கீழ் பொலிஸ் ஊடகப் பிரிவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநீக்கம் செய்ய சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சகம் நேற்று (2) தீர்மானித்துள்ளது. (vk)
