Main News
O/L பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு தலைவர் ரிஷாட் வாழ்த்து!
“இன்றைய தினம் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவச் செல்வங்களை வாழ்த்துவதுடன், நம்பிக்கையுடன் பரீட்சையில் தோற்றி, சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்..!”
2025 உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டது!
நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக அம்பாறை, வவுனியா, திருகோணமலை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் உள்ள போட்டியிடும் சபைகளுக்கான கட்டுப்பணம், கட்சியின் மாவட்ட பிரதிநிதிகளினால் செலுத்தப்பட்டது. அந்தவகையில், அம்பாரை மாவட்டத்தில் உள்ள ஒன்பது சபைகளுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அஸ்ரப் தாஹிர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், முன்னாள் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர். அதேபோன்று, வவுனியா…
VIDEO-‘வடக்கு, கிழக்கில் சிதைவடைந்துள்ள பாதைகள், பாலங்களை புனரமைக்க நடவடிக்கை எடுங்கள்’
வடக்கு, கிழக்கில் சிதைவடைந்துள்ள பாதைகள், பாலங்களை புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (07) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சு ஆகியவற்றின் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தனது உரையில், “ஒலுவில் துறைமுகம் தொடர்பில் இந்த வரவுசெலவுத்…
VIDEO-“அஸ்வெசும திட்டத்தில் அதிகமானவர்களை உள்வாங்க நடவடிக்கை எடுங்கள்”
தலைவர் ரிஷாட் சபையில் கோரிக்கை! ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் அம்பாறை மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (05) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு, கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு ஆகியவற்றின் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே…
“முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்களை வெற்றிகொள்ள ரமழானை பயன்படுத்துவோம்” –
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்! ரமழானின் அருட்கொடைகள் சகலருக்கும் கிடைப்பதுடன், நோன்பு கால அமல்களில் சிறப்பாக ஈடுபடுவதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ்! அருள்பாலிக்க பிரார்த்திப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். புனித ரமழானை வரவேற்று, அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “அல்லாஹுத்தஆலா ரமழான் மாத அமல்களுக்கு சிறப்புக் கூலி தருவதாக வாக்களித்துள்ளான். நமது முன்னோர்களும் இந்த சங்கை மிகுந்த ரமழானின் சிறப்பால் உயர்வடைந்ததாகவும் புனித…
கல்குடா, இன்டர்நெஷெனல் பாலர் பாடசாலையின் விடுகை விழா!
மட்டக்களப்பு, கல்குடா, இன்டர்நெஷெனல் பாலர் பாடசாலையின் 18வது விடுகை விழா, கடந்த 12ஆம் திகதி, ஓட்டமாவடி தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான M.S.S.அமீர் அலி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன், குறித்த பாடசாலையின் மாணவர்கள் நலன் கருதி Interactive Flat Panel Display (smart board) ஒன்றினையும் அன்பளிப்பாக வழங்கி வைத்தார்.
தோப்பூர் தாருள் ஹிக்மா பாலர் பாடசாலை பரிசளிப்பு விழா!
தோப்பூர், தாருள் ஹிக்மா பாலர் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும், கிண்ணியா நகர சபையின் முன்னாள் மேயருமான Dr.ஹில்மி மஹ்ரூப் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
பண்பாட்டுப் பொங்கல் பெருவிழா -2025
வவுனியா, நெளுக்குளம் ஸ்ரீ முருகன் ஆலயத்தின் ஏற்பாட்டில், பண்பாட்டுப் பொங்கல் பெருவிழா -2025 ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்றது. இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான முத்து முஹம்மட் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தார்.
நிந்தவூர் பர்சானா பாலர் பாடசாலை விடுகை விழா!
நிந்தவூர் பர்சானா பாலர் பாடசாலை விடுகை விழா நிகழ்வில் (18) அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தார்.
முசலி பிரதேசத்தில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பு!
இன்றைய தினம் (16) மன்னார், முசலி பிரதேசத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது வாக்களித்த பாலைக்குளி, முள்ளிக்குளம், மரிச்சிக்கட்டி, கரடிக்குழி மற்றும் கொண்டச்சி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்புக்களில் கலந்துகொண்டார். இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் முத்து முஹம்மட், கட்சியின் உயர்பீட உறுப்பினர் Dr.மிக்றா, முசலி பிரதேச சபையின் முன்னாள் பிரதித் தவிசாளர் பைறூஸ் மற்றும் கட்சியின்…
05 கோடி ரூபா பெறுமதியான வேலைத்திட்டங்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் கேள்வியெழுப்பினார் தாஹிர் எம்.பி!
அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் ஒருங்கிணைப்புக்குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா தலைமையில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் (16) பிரதேச செயலாளர் PTM இர்பானின் நெறிப்படுத்தலின் கீழ் இடம்பெற்றது. இதன்போதே, அகில இலங்கை மக்கள் காங்கிஸின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிரினால் அட்டாளைச்சேனை பிரதேச வீதிகள், வடிகான்கள் அபிவிருத்திகள் சம்பந்தமாக முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்ததுடன், கடந்த 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர், விஷேட நிதி ஒதுக்கீட்டில் ரணில் விக்ரமசிங்கவினால் நடைமுறைப்படுத்துப்பட்ட ஒலுவில்…
முருங்கன், சிலாவத்துறை பிரதேச வைத்தியசாலைகளுக்கான விஜயம்!
மன்னார் மாவட்டத்தின் முருங்கன் மற்றும் சிலாவத்துறை பிரதேச வைத்தியசாலைகளுக்கு வியாழக்கிழமை (16) விஜயமொன்றை மேற்கொண்டிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், வைத்தியசாலைகளுக்கு தேவையான சில அத்தியாவசியப் பொருட்களையும் கையளித்தார். இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் முத்து முஹம்மட், கட்சியின் உயர்பீட உறுப்பினர் Dr.மிக்றா மற்றும் Dr. ஒஸ்மன், Dr. கியாஸ், கட்சியின் முக்கியஸ்தர்களானா பைறூஸ், சாஹிர், ஞானராஜ், சந்திரிக்கா, ராபி மௌலவி, ஜௌசி, ஹலீம் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
