Main News
புறக்கோட்டை அரிசிச் சந்தைக்கு அமைச்சர் றிஷாட் திடீர்ப் பாய்ச்சல்
-அமைச்சின் ஊடகப் பிரிவு மொத்தத வியாபாரச் சந்தையில் போதியளவு அரிசி கையிருப்பில் இருந்த போதும் தட்டுப்பாடு என்று கூறி அதிக விலைக்கு விற்கும் வியாபாரிகளுக்கெதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் றிசாட் பதியுதீன் எச்சரித்தார். புறக்கோட்டை 5ம் குருக்குத்தெருவில் உள்ள மொத்த வியாபார அரிசிக் கடைகளுக்கு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைத் தலைவர் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து திடீரென விஜயம் செய்த அமைச்சர் அரிசி நிலவரங்கள் மற்றும் விலைகள் தொடர்பில் கேட்டறிந்தார். புறக்கோட்டை மொத்த…
சுவீடனுக்கான ஏற்றுமதியில் மற்றுமொரு பரிமாணம். ஏற்றுமதியாளர்களுக்கான கொழும்பின் முன்னோடி அமர்வில் ரிஷாட் பெருமிதம்.
சுஐப் எம் காசிம் இலங்கைக்கும் சுவீடனுக்கும் இடையிலான வர்த்தக சந்தை ஐரோப்பிய ஒன்றிய ஜி எஸ் பி பிளஸ் வரிச்சலுகையை விரைவில் இலகுபடுத்துவதற்கு பெரிதும் உதவும் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நம்பிக்கை தெரிவித்தார். இலங்கை வணிகத் திணைக்களத்தினால் உலக வர்த்தக மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுவீடனுக்கான ஏற்றுமதி என்ற தொனிப் பொருளிலான முன்னோடி அமர்வை நேற்று (15) அங்குரார்ப்பணம் செய்து வைத்த பின்னர் உரையாற்றிய போதே அமைச்சர் இந்தக் கருத்தை தெரிவித்தார். இந்த நிகழ்வில்…
நுகர்வோர் அதிகாரசபையின் பெயரை பயன்படுத்தி ”பெண்ட்ரைவ்” வழங்கியவர்களுக்கெதிராக முறைப்பாடு
கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் பெயரைப் பொறித்து இனவாதச் சூழலியலாளர்களுக்கு தலைமை தாங்கி அவர்களை போஷித்து வரும் ஒடாரா குணவர்த்தன, ஆனந்த தேரர், சஜீவ சமிக்கர தலைமையிலான “சுரகிமு ஸ்ரீலங்கா” என்ற வடக்கு முஸ்லிம்களின் குடியேற்றத்திற்கெதிரான முஸ்லிம் விரோத இனவாத அமைப்பு ஜனவரி மாதம் 18 ஆம் திகதி வடக்கு முஸிம்களின் மீள்குடியேற்றத்திற்கெதிராக ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட ஊடகவியலாளர் அனைவருக்கும் வழங்கிய ’பெண்ட்ரைவ்’ இல் நுகர்வோர் பாதுகாப்பு…
சுவீடனுக்கான ஏற்றுமதியில் மற்றுமொரு பரிமாணம்; அமைச்சர் றிஷாத் பெருமிதம்
-சுஐப் எம் காசிம் இலங்கைக்கும் சுவீடனுக்கும் இடையிலான வர்த்தக சந்தை ஐரோப்பிய ஒன்றிய ஜி எஸ் பி பிளஸ் வரிச்சலுகையை விரைவில் இலகுபடுத்துவதற்கு பெரிதும் உதவும் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நம்பிக்கை தெரிவித்தார். இலங்கை வணிகத் திணைக்களத்தினால் உலக வர்த்தக மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுவீடனுக்கான ஏற்றுமதி என்ற தொனிப் பொருளிலான முன்னோடி அமர்வை நேற்று (15) அங்குரார்ப்பணம் செய்து வைத்த பின்னர் உரையாற்றிய போதே அமைச்சர் இந்தக் கருத்தை தெரிவித்தார். இந்த நிகழ்வில் புது…
மண்முனை தென் எருவில்பற்று களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்
மண்முனை தென் எருவில்பற்று களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இணைத் தலைவர்களான கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதேச செயலக செயலாளர் கோபாலரட்ணம் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இக் கூட்டத்தில் மாகாண விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம், மாகாண சபை உறுப்பினர்களான துரைரெட்னம், வெள்ளிமலை, கருணாகரன், மற்றும் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இலங்கை முஸ்லிம்களின் பாதுகாப்பு கவசம் கிழக்கு மாகாணம் – அமைச்சர் றிஷாத்
இலங்கை முஸ்லிம்களின் பாதுகாப்பு கவசம் கிழக்கு மாகாணம். ஒற்றுமையின் மூலமே அதிகாரத்தை வசப்படுத்த முடியும் மூதூர் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் றிஷாத் தெரிவிப்பு…. -சுஐப் எம் காசீம் – முஸ்லிம்களின் அபிலாஷைகளை வென்ரெடுப்பதற்கான பாதுகாப்புக்கவசமாகவும் முக்கிய கேந்திரமாகவும் விளங்கும் கிழக்குமாகாண ஆட்சி நமது கைகளுக்குள் வருவதற்கு சமூக ஒற்றுமையே அத்தியாவசியமானது என்று அமைச்சர் றிஷாட் பதியுதீன் வலியுறுத்தினார். மூதூரில் சதொச கிளயை திறந்து வைத்தபின்னர் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் றிஷாட் உரையாற்றினார். பாரளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூபின் தலைமையில்…
அமைச்சர் றிஷாத் சதொச நிறுவனத்திற்கு விஜயம்!
வவுனியாவுக்கு நேற்று (13) விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீன், வவுனியா லங்கா சதொச நிறுவனத்திற்கும் திடீர் விஜயம் செய்திருந்தார். வாடிக்கையாளர்களுக்கு எந்தத் தட்டுப்பாடுமின்றி அரிசியையும் மற்றும் ஏனைய பொருட்களையும் விநியோகிப்பது தொடர்பில் அங்குள்ள ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார். அரசாங்கம் அரிசிக்கு நிர்ணயித்த விலையை விட அதிகமாக விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரிகளுக்கு விளக்கம்- பிரதேச செயலாளருக்கு றிஷாட் பணிப்பு.
பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களில் கலந்துகொள்ளாத அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் விளக்கம் கோருமாறு அமைச்சர் றிஷாட் பதியுதீன் உத்தரவிட்டுள்ளார். செட்டிகுளப் பிரதெச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று காலை நடைபெற்ற போது உதவிப் பிரதேச செயலாளர் முகுந்தனுக்கு அமைச்சர் றிஷாட் இந்தப்பணிப்புரையை விடுத்ததுடன், அமைச்சர்களும் எம்பிக்ககளும் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களில் தவறாது பங்பற்றும் போது அதிகாரிகள் அசிரத்தைக் காட்டுவது கண்டனத்துக்குரியதென அமைச்சர் தெரிவித்தார். எதிர்வரும் காலங்களில் கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் தவறாது அழைப்புக்களை வழங்குமாறு அமைச்சர் தெரிவித்தார். அமைச்சின் ஊடகப்பிரிவு.
செட்டிக்குளத்தில் இராணுவம் ஆக்கிரமித்திருக்கும் காணிகள் உடன் விடுவிக்கப்பட வேண்டும் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் காட்டமான தீர்மானம்!!!
அமைச்சின் ஊடகப் பிரவு இராணுவத்தினரால் யுத்த காலத்தில் ஆக்கிரமிக்கபட்டு இன்னும் விடுவிக்கப்படாதிருக்கும் செட்டிகுளப் பிரதேச எல்லைக்குட்பட்ட மக்களின் குடியிருப்பு காணிகளையும், வயற் காணிகளையும் இராணுவம் அவசரமாக விடுவிக்க வேண்டுமெனவும் அது தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் பேச்சுநடத்தி ஆக்கபூர்வமான நடவடிக்கையை எடுப்பதெனவும் பிரதேச ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் இன்று (13.02.2017) ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது. இணைத் தலைவர்களான அமைச்சர் றிஷாட் பதியுதீன், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், மாகாண அமைச்சர் சத்தியலிங்கம், மஸ்தான் எம் பி ஆகியோரின் தலைமையில்…
மூதூர் பிரதேச பிரிவுக்குட்பட்ட வீதிகள் திறந்து வைப்பு
மூதூர் பிரதேச பிரிவுக்குட்பட்ட மார்கட் வீதி மற்றும் ஜூம்ஆ பள்ளிவாயல் வீதி ஆகியன ஆரம்பித்து திறந்து வைக்கப்பட்டது. திருகோணமலை மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்றூப் தலைமையில் நேற்று 12.02.2017 ஆம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின்தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான றிஷாத் பதியுதீனும், விஷேட அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலியும் கலந்து கொண்டார். மேலும், அநுராதபுர மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் இஷ்ஹாக், குருணாகல்…
கந்தலாய் பிரதேசத்தில் ஆடை தொழில் பயிற்ச்சி நிலையம் திறப்பு
நேற்று முன்தினம் 11.02.2017 திருகோணமலை மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்றூப் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கௌரவ கைத்தொழில் வர்த்தக துறை அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றிஷாத், கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.
புல்மோட்டையில் இடம்பெற்ற அ.இ.ம.கா.வின் மக்கள் சந்திப்பு
புல்மோட்டை அன்வாறுல் உலூம் அரபுக் கல்லூரியில் இடம்பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பொதுமக்கள் சந்திப்பில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் கலந்துகொண்டார். இச்சந்திப்பில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி, பாரளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்றூப், பாரளுமன்ற உறுப்பினர் இஷ்ஹாக், டாக்டர் சாபி ஷிஹாப்தீன், தேசிய அமைப்பாளர் டாக்டர் ஹில்மி மற்றும் பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
