Main News
முஸ்லிம்களின் பூர்வீகமான முசலிப் பிரதேசம் தொடர்பில் ஜனாதிபதி சரியான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கத் தவறினால் இப்பிரச்சினையை முஸ்லிம் நாடுகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல நேரிடும் கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்களின் பூர்வீகமான முசலிப் பிரதேசம் தொடர்பில் ஜனாதிபதி சரியான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கத் தவறினால் இப்பிரச்சினையை முஸ்லிம் நாடுகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல நேரிடும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதி தலைவரும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது; “கடந்த மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின்போது சிங்கள பேரின சக்திகளினால் முன்னெடுக்கப்பட்ட முஸ்லிம் விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு தவறியதன் காரணமாகவே அவரை ஆட்சியில்…
வர்த்தமானியை இரத்துச் செய்வது தொடர்பில் நாளை உயர்மட்டக் கூட்டம், ஜனாதிபதி உறுதியளித்ததாக அஸாத் சாலி அறிவிப்பு
சுஐப் எம் காசிம் வில்பத்து புதிய வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக நாளை ஜனாதிபதி உயர்மட்டக் கூட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் ஆசாத் சாலி கொழும்பு ரமதா ஹோட்டலில் இன்று (30) இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்தார். ”முசலி மக்களுக்கு இடம்பெற்றுள்ள அநியாயங்களை ஜனாதிபதியிடம் நான் விரிவாக எடுத்துரைத்தேன். அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் இந்த வர்த்தமானிப் பிரகடனம் தொடர்பில் ஜனாதிபதியுடன் மிகவும் காட்டமாக எடுத்துரைத்துள்ளார். வட மாகாண மக்களின்…
பிரகடனத்தை இரத்துச் செய்யுமாறு சிவில் அமைப்புக்கள் ஜனாதிபதியிடம் அழுத்தம்
சுஐப் எம் காசிம் முசலிப் பிரதேச மக்களின் வாழ்விடங்களையும் அவர்களுக்கு வாழ்வாதாரங்கள் வழங்கும் நிலங்களையும் கபளீகரம் செய்யும் புதிய வர்த்தமானிப் பிரகடனத்தை உடனடியாக இரத்துச் செய்ய வேண்டுமெனவும் இல்லாவிட்டால் நாடளாவிய ரீதியில் பாரியப் போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டி நேரிடுமெனவும் “உள்ளக இடம்பெயர்ந்த மக்களின் சிவில் சமூகக் கூட்டமைப்பு” அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. கொழும்பு ரமதா ஹோட்டலில் இந்தக் கூட்டமைப்பு இன்று (30) மாலை ஏற்பாடு செய்த பத்திரிகையாளர் மாநாட்டில் பங்கேற்ற சிவில் சமூகக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள், புதிய…
முசலிப் மக்களை திறந்த வெளிச்சிறைச்சாலைக்குள் முடக்கும் நல்லாட்சியின் புதிய வர்த்தமானி பிரகடனம்
சுஐப் எம் காசிம் சுமார் 26 ஆண்டுகளுக்கு மேலாக தென்னிலங்கையில் புத்தளம் உட்பட பெரும்பாலான பிரதேசங்களில் அகதிகளாக அவல வாழ்வு வாழ்ந்து மீண்டும் தமது பிரதேசத்தில் அமைதி ஏற்பட்டதனால் சுதந்திரக்காற்றை சுவாசிக்க வந்த முசலி மக்களை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் புதிய வர்த்தமானி பிரகடனம் அவர்களின் சுயாதீன நடவடிக்கைகளை முடக்கியுள்ளது. ‘வில்பத்தை முஸ்லிம்கள் அழிக்கின்றார்கள்;, இயற்கை வளங்களை நாசமாக்குகின்றார்கள்’; என்ற இனவாதிகளினதும் இனவாதச் சூழலியலாளர்களினதும் இனவாத ஊடகங்களினதும் காட்டுக்கூச்சல்களையும் பொய்யான ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களையும் கருத்திற்கெடுத்த ஜனாதிபதி மைத்திரிபால…
ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலக பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டம் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி , பாராளுமன்ற உறுப்பினரஶ்ரீநேசன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.
ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலக பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டம் இன்று 29.03.2017 ஆம் திகதி பிரதேச செயலக மண்டபத்தில் இணைத்தலைமைகளான கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி , பாராளுமன்ற உறுப்பினரஶ்ரீநேசன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது. பிரதேச ஒருங்கிணைப்புக் கூட்டத்திற்கு உதயஶ்ரீ , மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அரச திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
சோறும் சம்பளம் ஒருநேரம் உண்டால் கூட முன்பள்ளி ஆசிரியர்களின் மாதாந்த சம்பளம் போதாது ( றிப்கான் பதியுதீன் )
முன்பள்ளி ஆசிரியர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட உலக மகளீர் தின விழாவானது பல அரசியல் பிரமுகர்கள் மற்றும் உயர் பதவி வகிப்போர் பங்குபற்றலுடன் இடம்பெற்றது இந் நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் இஸ்தாபகத் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் பிரதிநிதியாக வடமாகாண சபை உறுப்பினரும் மாகாண சபை பிரதம எதிர்க்கட்சி கொறடாவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான தேசமானிய றிப்கான் பதியுதீன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்…
வில்பத்துக்கு வடக்கே மேலுமொரு சரணாலயத்துக்கு முஸ்தீபு முசலிப் பிரதேச மக்கள் குற்றச்சாட்டு
சுஐப் எம் காசிம் வில்பத்துக்கு வடக்கே மேலுமொரு வனவிலங்கு சரணாலயமொன்றை அமைப்பதற்கான முஸ்தீபுகள் இடம்பெற்றுவருவதாக முசலிப்பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். தமது பூர்வீகமான குடியிருப்பு நிலங்களையும் விவசாயக் காணிகளையம் மேய்ச்சல் தரைகளையும், மேட்டு நிலக்காணிகளையும் புதிய வர்த்தமானி அறிவித்தல் மூலம் வனபரிபாலன திணைக்களத்துக்கு சொந்தமாக்கப்பட்டதுடன் மாத்திரம் நிறுத்திக்கொள்ளாது அதனை வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு விடுவிப்பதற்கான திரைமறைவில் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கும் பாதிக்கப்பட்டோர்இந்த தகவலை வனபரிபால திணைக்கள அதிகாரிகள் தங்களிடம் இன்று வெளிப்படுத்தியதகவும் கவலையடைந்தனர். புதிய வர்த்தமானி…
நாச்சியாதீவு மக்களின் அச்சத்தை நீக்குமாறு பிரதிப்பொலிஸ்மா அதிபரிம் றிஷாட் கோரிக்கை
அமைச்சின் ஊடகப்பிரிவு அனுராதபுர நாச்சியாதீவில் புத்தர் சிலை ஒன்றை அமைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகளினால் அந்த பிரதேசத்தில் ஏற்பட்டிருக்கும் பதற்றத்தை தணித்து பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கையெடுக்குமாறு அமைச்சர் றிஷாட் பதியுதீன், அந்தப் பகுதிக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வரும் அந்தக் கிராமத்தில் புத்தர் சிலை ஒன்றை அமைப்பதன் மூலம் இன ஐக்கியத்துக்கு பாதமாக அமையுமென தெரிவித்துள்ள அமைச்சர், அதுவும் அங்குள்ள பழைமை வாய்நத பள்ளிவாயல் ஒன்றின் அருகில் இவ்வாறான முயற்சியொன்றை…
தெரிவு செய்யப்பட்ட மதகுரு மார்களுக்கு நீர் இறைக்கும் பம்பி வழங்கிவைப்பு
வடமாகாண சபை உறுப்பினரும் மாகாண சபை பிரதம எதிர்க்கட்சி கொறடாவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும் தேசமானிய றிப்கான் பதியுதீன் அவர்களின் வாழ்வாதார கொடுப்பனவாக வவுனியா மாவட்ட தெரிவு செய்யப்பட்ட மதகுரு மார்களுக்கான வாட்டர் பம்ப் மற்றும் விவசாயத்திற்கு தேவையான சில பொருட்களையும் வழங்கி வைத்தார் வவுனியா மாவட்ட இணைப்பாளரான பாரி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக றிப்கான் பதியுதீன் அவர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது மேலும் நிகழ்வில் உரையாற்றிய…
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி , பாராளுமன்ற உறுப்பினர் ஶ்ரீநேசன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சாள்ஸ் அவர்களினால் இறைவணக்கத்துடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது . மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் இன்று 27.03.2017 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட மாநாட்டு மண்டபத்தில் அரசாங்க இணைத்தலைவர்களான கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி , பாராளுமன்ற உறுப்பினர் ஶ்ரீநேசன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது. மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் மாவட்ட டெங்கு நெளம்பு பரவுவதை தடுப்பது தொடர்பாக பிரதேச சபை செயலாளர்கள் இதற்கு பாரிய பங்களிப்புக்களை…
இனம் மதம் பார்த்து சேவை செய்வதற்கு நாங்கள் இனவாதிகள் அல்ல ( றிப்கான் பதியுதீன் )
நேற்றையதினம் மன்னார் முசலி பிரதேச சபைக்கு உட்பட்ட அளக்கட்டு கிராமத்தில் மீள் குடியேறிய மக்களுடனான சந்திப்பு நிகழ்வு ஒன்று இடம்பெற்றது இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினரும் மாகாண சபை பிரதம எதிர்க்கட்சி கொறடாவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினருமான தேசமானிய றிப்கான் பதியுதீன் அவர்கள் கலந்து சிறப்பித்தார் மீள்குடியேறிய மக்களின் வாழ்வாதார முன்னேற்றம் தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வானது முன்னாள் முசலி பிரதேச சபை வேட்பாளர் ரிபாயி தலைமையில்…
சதொசயின் புதிய கிளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று கொஹுவலையில் திறந்து வைக்கப்பட்டது.
சித்திரைப்புத்தாண்டுக்கு முன்னர் நாடளாவிய ரீதியில் 50 சதொச கிளைகளை நிறுவும் அங்குரார்ப்பண வேலைத்திட்டத்தின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று மாலை( 28/03/2017) கொஹுவலையில் சதொச நிறுவனம் திறந்து வைக்கப்பட்டது. கைதொழில் வர்த்தக அமைச்சர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர்களான ஏ.எச்.எம். பௌசி, பாரளுமன்ற உறுப்பினர் மரைக்கார் உட்பட சதொச உயர் அதிகாரிகள் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்
