Headlines

12 தங்க பதக்கம்பெற்று, முஸ்லிம் மாணவி சாதனை!

லக்னோவிலுள்ள பல்கலைகழகத்தில் பயிலும் முஸ்லிம் மாணவியான சானியா அஹமது பல்வேறு துறைகளில் வெற்றிப்பெற்று சாதனை படைத்து நேற்று(1)  12 தங்க பதக்கம் பெற்றுள்ளார். இஸ்லாம் உடலுக்கு மட்டுமே திரையிடுகிறது அறிவுக்கு அல்ல… சகோதரி சானியா இன்னும் பல்வேறு துறைகளில் சாதனை படைக்க இறைவன் அருள் செய்வானாக..

Read More

விருந்தில் ரசம் இல்லாததால் திருமணத்தை நிறுத்திய மணமகன்

இந்­திய கர்­நா­டக மாநி­லத்தை சேர்ந்த நப­ரொ­ருவர் திரு­ம­ணத்தில் ரசம் இல்­லா­ததால் தனது திரு­ம­ணத்தை நிறுத்­திய சம்­ப­வ­மொன்று இடம்­பெற்­றுள்­ளது. கர்­நா­டக மாநிலம் தும்கூர் மாவட்­டத்தைச் சேர்ந்த குனிக்கல் பகு­தியைச் சேர்ந்த பிர­காசம் – சௌபாக்­கி­யம்மா தம்­பதிகளின் மகள் சௌமியா. இவ­ருக்கும் ஸ்ரீரா­ம­புரம் திம்­மை­யம்மா மகன் ராஜு­வுக்கு குனிக்கல் கிரா­மத்தில் நேற்­று­முன்­தினம் திரு­மணம் நடப்­ப­தாக முடி­வா­னது. திரு­ம­ணத்­துக்கு முதல் நாள் இரவு திரு­மண வர­வேற்பு விருந்து இடம்­பெற்­றுள்­ளது. மண­மகன் ராஜு தனது குடும்­பத்­தி­ன­ருடன் மிக தாம­த­மாக மண்­ட­பத்­துக்கு வந்­துள்­ள­தை­ய­டுத்து உடனே…

Read More

இலங்கை வர முற்பட்ட அகதி கைது

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கடல் மார்க்கமாக தனது உறவினர்களை பார்ப்பதற்காக இலங்கை வர முற்பட்ட நபர் ஒருவரை தமிழக பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறித்த நபர் மட்டக்களப்பு பகுதியை சேர்ந்த நடராஜன் (55) ஆவார். குறித்த நபர் கடந்த 2011 ஆம் ஆண்டில் தமிழகம் சென்று, வெளிப்பதிவு அகதியாக விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் தங்கியிருந்ததோடு, கூலித் தொழில் செய்து வந்தார் என தமிழன ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன. மீனவர்களின் தகவலின்படி தனுஷ்கோடி பொலிஸார், நடராஜனை பிடித்து மேலதிக விசாரனை…

Read More

தர்மங்கள் செய்வதில், முஸ்லிம்கள் முதலிடம்

‘அசீம் பிரேம்ஜி பவுண்டேஷன்’ என்ற பெயரில் அறக்கட்டளை அமைத்து, இந்திய நாடு முழுவதும் 350,000 பள்ளிக்கூடங்களை உருவாக்கி சேவையாற்றி வருவதுடன், தான்-தர்ம காரியங்களில் பணத்தை செலவழிப்பதில் தொடர்ந்து பல ஆண்டுகளாக நாட்டிலேயே முதலிடத்தில் இருந்து வருகிறார், அசீம் ஹாஷிம் பிரேம்ஜி. 2,404 கோடிகளை (இந்திய மதிப்பில்) செலவழித்து, நந்தன் ரோகினி குடும்பம் இரண்டாம் இடத்திலும், 1,322 கோடிகளை வழங்கி நாராயண மூர்த்தி குடும்பத்தினர் 3-ம் இடத்திலும், 1,238 கோடிகளுடன் தினேஷ் குழுமம் 4-ம் இடத்தில் உள்ளது. நாட்டிலேயே…

Read More

சட்டம் அனுமதித்தால் பாலியல் துஷ்பிரயோக குற்றவாளிகளை சுட்டே கொல்வேன்

இந்­தியச் சட்டம் அனு­ம­தி­ய­ளித்தால் பாலியல் துஷ்­பி­ர­யோக குற்­ற­வா­ளி­களை சம்­பவ இடத்­தி­லேயே சுட்­டுக்­கொல்வேன் என்று டில்லி பொலிஸ் ஆணை­யாளர் பி.எஸ்.பஸ்ஸி தெரி­வித்­துள்ளார். அவர் இது தொடர்பில் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது, பெண்கள் பாது­காப்பு குறித்து நாங்கள் எப்­போதும் கவ­லைப்­ப­டு­கிறோம். பாலியல் துஷ்­பி­ர­யோகம் உட்­பட பெண்­க­ளுக்கு எதி­ரான குற்­றங்­களில் ஈடு­ப­டு­வோரை, சட்டம் அனு­ம­தித்தால், சம்­பவ இடத்­தி­லேயே துப்­பாக்­கியால் சுடவோ, தூக்­கி­லி­டவோ விரும்­பு­கிறோம். அத்­த­கைய அதி­கா­ரத்தை பயன்­ப­டுத்த டில்லி பொலிஸ் தயங்­காது. பெண்கள் தங்­களைத் தாங்­களே தற்­காத்­துக்­கொள்­வது நல்­லது. அதற்­காக நாங்கள் பொறுப்பை…

Read More

சாரதி உறக்கம்: விமானத்துடன் மோதிய பஸ்

நிறுத்­தி­வைக்­கப்­பட்­டி­ருந்த விமா­ன­மொன்­றுடன் பஸ் ஒன்று மோதிய சம்­பவம் கொல்­கத்­தாவில் நேற்று இடம்­பெற்­றது. கொல்­கத்­தா­வி­லுள்ள நேதாஜி சுபாஸ் சந்­தி­ரபோஸ் சர்­வ­தேச விமான நிலை­யத்தில் நிறுத்­தி­வைக்­கப்­பட்­டி­ருந்த எயார் இந்­தியா நிறு­வ­னத்­துக்குச் சொந்­த­மான விமானம் ஒன்றின் மீது, விமான நிலை­யத்­திற்குள் பயன்­ப­டுத்­தப்­பட்டு வந்த ஜெட் எயார் வேஸ் நிறு­வ­னத்தின் பஸ் ஒன்று மோதி­யது. நேற்று (4) அதி­காலை 5.25 மணி­ய­ளவில் இச்­சம்­பவம் இடம்­பெற்­றது. அஸாம் மாநி­லத்­தி­லுள்ள சில்சார் நக­ருக்குப் புறப்­ப­ட­வி­ருந்த விமா­னமே இவ்­வாறு சேத­ம­டைந்­ததுள்ளது. மேற்­படி பஸ்ஸின் சாரதி அதி­கா­ரி­களால் விசா­ரிக்­கப்­பட்­ட­போது,…

Read More

நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் இறுதி நாள்

விமான விபத்தை சந்திப்பதற்கு முந்தைய நாளில் நேதாஜியின் பயணம் பற்றிய ரகசிய ஆவணங்களை இங்கிலாந்து இணையதளம் வெளியிட்டுள்ளது. இந்திய சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், 1945-ம் ஆண்டு ஆகஸ்டு 18-ந்தேதி தைவானில் நடந்த விமான விபத்தில் சிக்கினார். அதில் அவர் இறந்து விட்டதாக கூறப்பட்ட போதிலும், அதை ஒருதரப்பினர் மறுத்து வருகிறார்கள். அதனால், நேதாஜி பற்றிய மர்மம் இன்னும் நீடித்து வருகிறது. இதுபற்றிய ரகசிய ஆவணங்கள் இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை. இந்நிலையில், விமான விபத்தை…

Read More

தவ்ஹீத் ஜமாஅத்திடம் நாங்கள், படிப்பினை பெற வேண்டும் – வை.கோ.

குறிப்பிட்ட சமூகம் மட்டுமே குப்பைகளை அள்ள வேண்டும் என்ற நிலையை உடைத்து அனைவரும் சமம் என்ற நிலையை உருவாக்கிய தவ்ஹீத் ஜமாஅத்தின் பணி பாராட்டுக்குரியது. நாங்கள் படிப்பினை பெறுகிறோம். – வைகோ, பொதுச்செயலாளர், மதிமுக

Read More

உலகம் முழுவதுமுள்ள முஸ்லிம்களுக்கு, நாம் ஆதரவு தர வேண்டும் – கூகுள்

முஸ்லிம்கள், சிறுபான்மையினருக்குத் தனது ஆதரவைத் தெரிவித்து கருத்து வெளியிட்டிருக்கிறார் கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை. சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது: அச்ச உணர்வு நமது மதிப்பீடுகளைத் தோற்கடிக்க அனுமதிக்கக் கூடாது. அமெரிக்கா மட்டுமல்லாமல், உலகம் முழுவதுமுள்ள முஸ்லிம்கள், பிற சிறுபான்மையினருக்கு நாம் ஆதரவு தர வேண்டும். பல்வேறு பின்னணி, கருத்துகள், அனுபவங்களால்தான் அனைவருக்கும் பயன்படும் சிறந்த செயல்கள், முடிவுகள் கிடைக்கும். அனைவருக்கும் தங்களின் கருத்துகளை வெளியிடும் உரிமை உண்டு. ஆனால், சிலர்…

Read More

இலங்கையில் சடலமாக மீட்கப்பட்டவர் இந்தியாவில் உயிருடன் இருக்கின்றார்

இலங்கையில் சடலமாக மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட சென்னை டாக்ஸி சாரதி இந்தியாவில் உயிருடன் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. பூமிதுரை எனப்படும் டாக்ஸி சாரதியின் சடலம் அண்மையில் இலங்கைக் கடற்பரப்பில் மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது. குறித்த சடலத்துடன் காணப்பட்ட அடையாள அட்டையின் அடிப்படையில் தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தது. எனினும், 41 வயதான குறித்த சாரதி உயிருடன் இருப்பதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. உயிரிழந்த நபர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்பு இல்லை எனவும் இராமேஸ்வரத்தில் உயிரிழந்த நபரின் சடலம், இலங்கைக் கடலுக்கு அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம்…

Read More

2050-க்குள் உலகில் அதிக முஸ்லிம்கள் கொண்ட நாடாக இந்தியா மாறும்

2050-ம் ஆண்டிற்குள் உலக அளவில் அதிக முஸ்லீம்கள் கொண்ட நாடாக இந்தியா மாறும் என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பியு ஆராய்ச்சி மையம் இந்த கருத்தினை தெரிவித்துள்ளது. அதேபோல், 2050-ம் ஆண்டிற்குள் ஐரோப்பிய மக்கள் தொகையில் முஸ்லீம்கள் 10 சதவீதம் இருப்பார்கள் என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. தற்போதையை நிலவரப்படி உலக அளவில் அதிக முஸ்லீம்கள் வாழும் நாடாக இந்தோனேசியா உள்ளது. அதற்கு அடுத்தபடியாக முஸ்லீம்கள் அதிகம் வாழும் இரண்டாவது நாடாக இந்தியா உள்ளது….

Read More

சென்னையில் மீண்டும் கச்சேரியை தொடங்கிய மழை

சென்னையில் நேற்று பின்னிரவில் இருந்து லேசாக வெளுக்கத் தொடங்கிய வானம், இன்று பிற்பகலில் இருந்து மேகப்போர்வையை போர்த்திக் கொண்டது. சுமார் ஒருவாரத்துக்குப் பிறகு பல இடங்களில் வெள்ளநீர் வடிந்து வருவதையும், பஸ், ரெயில் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து ஆங்காங்கே இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருப்பதையும் கண்டு மகிழ்ச்சியடைந்த மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக இன்று பிற்பகல் 3 மணியளவில் சென்னையில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. குறிப்பாக, எழும்பூர், மைலாப்பூர், தேனாம்பேட்டை, விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் அடர்த்தியான…

Read More