ACMC News
தலைவர் றிஷாத் பதியுதீன் ஆற்றியுள்ள பணிகளை எவரும் குறைத்து மதிப்பிட முடியாது -சுபைர்
அரசாங்கத்தின் நுாறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் ஆற்றியுள்ள பணிகளை எவரும் குறைத்து மதிப்பிட முடியாது என தெரிவித்துள்ள கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபையிர் இந்த அரசாங்கத்தினை அமைப்பதற்கு தம்மையே அர்ப்பணம் செய்த தலைவர் றிசாத் பதியுதீன் என்றும் கூறினார். புதிய அரசாங்கத்தின் 100 வது நாள் தொடர்பில் இடம் பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் அவர் தமதுரையில்…
பரந்தன் கெமிகல்ஸ் கொம்பனி லிமிடட் நிறுவன பணிப்பாளர் சபை உறுப்பினராக முகம்மது அலி றயிசுதீன்…
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீனால் பரந்தன் கெமிகல்ஸ் கொம்பனி லிமிடட் நிறுவன பணிப்பாளர் சபை உறுப்பினராக சமூக சேவையாளரும்,வர்த்தகருமான முகம்மது அலி றயிசுதீன் (ஸலபி) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மன்னார் கொன்டச்சியை பிறப்பிடமாக கொண்டவர். அவருக்கான நியமன கடிதத்தை கைத்தொழி்ல் மற்றும் வர்த்தக அமைச்சருமான றிஷாத் பதியுதீனால் வழங்கப்பட்டது
சதோச பணிப்பாளர் சபை உறுப்பினராக சப்ராஸ் ஹம்சா நியமனம்; நியமன கடிதத்தை அமைச்சர் றிஷாத் வழங்கி வைத்தார்
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீனால் இலங்கை சதோச பணிப்பாளர் சபை உறுப்பினராக சப்ராஸ் ஹம்சா நியமிக்கப்பட்டுள்ளார்,அவருக்கான நியமன கடிதத்தை அமைச்சர் றிஷாத் வழங்கி வைத்தார்.
கனியவள திணைக்கள பணிப்பாளர் சபை உறுப்பினராக – முஹம்மது ஜூனைஸ் நியமனம்
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீனால் இலங்கை கனியவள திணைக்கள பணிப்பாளர் சபை உறுப்பினராக மன்னாரை பிறப்பிடமாக கொண்ட முஹம்மது ஜூனைஸ் நியமிக்கப்பட்டுள்ளார்,அவருக்கான நியமன கடிதத்தை கைத்தொழி்ல் மற்றும் வர்த்தக அமைச்சருமான றிஷாத் பதியுதீனால் வழங்கப்பட்டது.
ஒரு சமூகத்திற்கு மட்டும் இந்த நியமனத்தை வழங்குவதாக பிரசாரங்களை செய்தனர் -றிஷாத் பதியுதீன்
எமது மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்து அபிவிருத்தி திட்ங்கள் தொடர்பிலும் சகல சமூகங்களின் பிரதி நிதிகளுடன் கலந்துரையாடியே அதனை செய்கின்றோம்.நாம் இவ்வாறான வெளிப்படைத்தன்மையினை பேனுவது எம்மில் இனவாத கொள்கையின்மையே ஆனால் சில அரசியல் கட்சிகள் அவர்கள் சார்ந்த மக்களை மட்டும் அழைத்து கலந்துரையாடுவதையும் எம்மால் அவதானிக்க முடிகின்றது என தெரிவித்துள்ள வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் இந்த அரசாங்கத்தின் உருவாக்கத்தின் பின்னணியில் வடக்கு மக்களின் புரந் தியாகங்கள் இருப்பதாகவும் கூறினார். மன்னார்…
சேவையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு
அகில இலங்கை இன நல்லுறவு ஒன்றியத்தினால் ஏற்பபாடு செய்யப்பட்டிருந்த வடமாகாணத்தில் பல்துறைகளில் மக்கள் சேவையாற்றிய மற்றும் ஆற்றிவரும் பிரமுகர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (2015-04-18) வவுனியா நகர மண்டபத்தில் இடம் பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவருமான அமைச்சர் றிஷாத் பதியுதீன் பிரதம அதிதியாகவும்,வீடமைப்பு,சமுர்த்தி பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டு இந்த கௌரவப்பட்டங்களை வழங்கி வைத்தனர்..
முஸ்லிம் காங்கிரசின் கோட்டையான அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செல்வாக்கு அதிகரித்துள்ளது
-கல்முனை சமீம்- நாட்டில் எந்த நேரத்திலும் பொதுத் தேர்தல் நடைபெறலாம் என்ற நம்பிக்கையில் நாட்டின் அனைத்து பாகங்களிலும் உள்ள அரசியல் கட்சிகள் தங்களது கட்சி நடவடிக்கைகளை விரிவுபடு;த்துவதிலும் புதிய கட்டமைப்புகளை ஏற்படுத்துவதிலும் கூடிய கரிசணை காட்டி வருகின்றன. இந்நிலையானது கிழக்கில் சற்று சூடு பிடித்துள்ளது. இம் மாகாணத்தில் செல்வாக்கு செலுத்தி வருகின்ற முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் ஆகிய முஸ்லிம் கட்சிகள் தற்போதிருந்து தங்களது கட்சிகளின் தொகுதி மற்றும் மாவட்ட, பிரதேச மத்திய குழுக்களை…
அபிவிருத்தி இணைப்புக் குழுவின் இணைத்தலைவராக றிஷாத் பதியதீன் ஜனாதிபதியால் நியமனம்
மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களின் அபிவிருத்தி இணைப்புக் குழுவின் இணைத்தலைவராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும், கைத்தொழில் வணிகத்துறை அமைச்சருமான றிஷாத் பதியுதீன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவால் நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்டங்களின் அபிவிருத்திக்கான திட்டங்களை வகுத்தல், அசாங்கத்தினாலும் அரச சார்பற்ற நிறுவனங்களினாலும், இந்த மூன்று மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தித் திட்டங்களை ஒழுங்குபடுத்தல், அவதானித்தல் மற்றும் பணிகளுக்கான அனுமதியை வழங்கல் என்பன இந்தத் தலைமைத்துவத்தின் பணிகளாகும் என ஜனாதிபதி வழங்கியுள்ள இந்த நியமனக் கடிதத்தில்…
கருத்து முரண்பாடுகள் ஏற்படுகின்ற போது அவற்றை பேசி தீர்த்துக்கொள்வதே சிறுபான்மை சமூகமாகிய எமக்கு நன்மை பயக்கும் – றிஷாத் பதியுதீன்
கருத்து முரண்பாடுகள் ஏற்படுகின்ற போது அவற்றை பேசி தீர்த்துக்கொள்வதே சிறுபான்மை சமூகமாகிய எமக்கு நன்மை பயக்கும் என தெரிவித்துள்ள வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சரும்.தமிழ் மக்கள் எம்மோடு இருக்கின்றார்கள் என்பதை தாங்கிக் கொள்ளமுடியாதவர்கள் இன ரீதியான சாயத்தை எம்மீது பூசுகின்றனர் என்றும் கூறினார். வவுனியா வெளிக்குளம் கிருபை இல்லத்தில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போத அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு உரையாற்றுகையில் –…
தேர்தல் காலம் வந்ததும் கட்சி பாடலை போட்டு கல்குடா மக்களை ஏமாற்றுகின்றனர் -பிரதி அமைச்சர் அமீர் அலி
ஓட்டமாவடி அஹமட் இர்சாட் மொஹமட் புஹாரி ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் காலங்களில் கல்குடாவுக்குள் பிரவேசித்து கட்சி பாடல்களை போட்டு பிரதேசத்தில் இருக்கின்ற அரசியல் தரகர்களின் உதவியுடன் கல்குடா மக்களை ஏமாற்றிச் செல்கின்றனர் என சமுர்த்தி வீடமைப்பு பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி நேற்று வெள்ளிக்கிழ்மை ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகாவித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் கல்குடா பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நடாத்திய 2011,2012,2013ம் ஆண்டுகளுக்காக கல்குடாவிலிருந்து பல்கலைக் கழகத்துக்கு தெரிவான மாணவ, மாணவிகளை கெளரவிக்கும் நிகழ்வில்…
(UCTS) பல்கலைக்கழக முகாமைத்துவ குழுவினர் றிஷாத் பதியுதீனுடன் சந்திப்பு
இர்ஷாத் றஹ்மத்துல்லாஹ் மலேசியாவை தலைமையகமாகக் கொண்டு இயங்கும்(UCTS) பல்கலைக்கழக முகாமைத்துவ குழுவினர் இன்று கைத்தொழில்,வணிகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீனை அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினர். மலேசிய குழுவிற்.கு இந்தியா ETA நிறுவனத்தின் பொது முகமையாளர் அகமத் றிபாய் தலைமை தாங்கினார். மலேசியாவில் இயங்கிவரும் University College Of Teechnology Sarawak பல்கலைக்கழகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரம் கல்வி செயற்பாடு தொடர்பில் அமைச்சருக்கு பிரதி நிதிகள் எடுத்துரைத்தனர்.அதே வேளை உயர்கல்வி தொடர்பில் இலங்கை மாணவர்களை உள்வாங்குவதற்கு இந்த பல்கலைக்கழகம் தயாராகவுள்ளதாக அமைச்சரிடத்தில பல்கலைக்கழக…
மரணிக்கும் வரையிலும் கல்வியைப் பற்றிப் பேசுகின்ற ஒரு அரசியல்வாதியாக நான் இருக்க ஆசைப்டுகின்றேன்: பிரதியமைச்சர் அமீர் அலி
அப்துல்லாஹ் மரணிக்கும் வரையிலும் கல்வியைப் பற்றிப் பேசுகின்ற ஒரு அரசியல்வாதியாக நான் இருக்க ஆசைப்டுகின்றேன் என வீடமைப்பு மற்றும் சமூர்த்திப் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் நகரில் இன்று இடம்பெற்ற கல்விப் புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வில் அவர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு 35 மாணவர்களுக்கு கல்விக்கான புலமைப் பரிசில் நிதியை வழங்கி வைத்து உரையாற்றினார். தொடர்ந்து அங்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர் முன்னிலையில் பேசிய அவர், “கடந்த காலத்திலும்…
