ACMC News
‘பிறைந்துரைச்சேனை வட்டாரத்தில் அரசியலிலே புதுமுகம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளோம்’ பிரதி அமைச்சர் அமீர் அலி!
-முர்ஷித் வாழைச்சேனை- அரசியலிலே புது முகம் ஒன்றை பிறைந்துரைச்சேனை வட்டாரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளோம். அவரை வெற்றிபெறச் செய்தால் இப்பிரதேசத்தில் நடைபெறும் அபிவிருத்தி திட்டங்களைப் போன்று, அதிகமான அபிவிருத்தி வேலைகள் தொடர்ந்து நடக்கும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். பிறைந்துரைச்சேனை வட்டாரத்தில் கோறளைப்பற்று பிரதேச சபைக்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக, ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடும் ஏ.யூ.நாசரை அறிமுகப்படுத்தும் கூட்டம், பிறைந்துரைச்சேனையில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு…
“மக்கள் காங்கிரஸிலிருந்து ஒரு போதும் வெளியேற மாட்டேன்” சிராஸ் மீராசாஹிப் அறிவிப்பு!
–சிராஸ் மீராசாஹிப்– அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து நான் ஒரு போதுமே வெளியேறப் போவதில்லை. என் மீது அரசியல் காழ்ப்புணர்வு கொண்டவர்களும், வங்குரோத்து அரசியல்வாதிகளுமே வீணான அபாண்டங்களை பரப்பி வருகின்றனர்.எனது அரசியல் வாழ்வை குழி தோண்டி புதைக்க முடியுமென்ற நப்பாசையில் அவர்கள் தினமும் கற்பனைக்கதைகளை சோடித்து வருகின்றனர். சமுதாய நலனில் விருப்பம் கொண்டே கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் கல்முனை மாநகர சபையில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். அதனை தொடர்ந்து மேயராகினேன். இறைவனின் உதவியால் மிகக் குறுகிய காலத்தில் அரசியல்…
மு.கா தனிமனித செல்வாக்கை பயன்படுத்தி தேர்தலை வெற்றிகொள்ள வியூகம் வகுக்கும் நிலையில் உள்ளது!
-துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்- மு.கா என்ற கட்சியில் தும்புத்தடியை நிறுத்தினாலும் அதுவெற்றி பெறும் என்ற ஒரு காலம் இருந்தது. தற்போது அது முற்றுமுழுதாக மாறிவிட்டது என்றே தோன்றுகிறது. முன்னர் போன்றல்லாது மு.காவில் மிக கடுமையான முறையில் வேட்பாளர் தெரிவுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. இதனை சாதாரணமாக அவதானிக்கும் ஒருவராலேயே புரிந்துகொள்ள முடியும். எதிர் வரும் தேர்தலில் சம்மாந்துறையில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மாஹிரும், நிந்தவூரில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீனும் தேர்தல் கேட்கவுள்ளனர். இந்த…
மக்கள் காங்கிரஸின் நிந்தவூர் ஆதரவாளர்களுக்கான 02 ஆம் கட்ட ஒன்றுகூடல்!
-முர்ஷிட் முஹம்மத்- எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிந்தவூர் ஆதரவாளர்களுக்கான இரண்டாம் கட்ட ஒன்றுகூடல், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய சுகாதாரத்துறைப் பொறுப்பாளரும், நிந்தவூர் பிரதேச அமைப்பாளருமான டாக்டர். பரீட் தலைமையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிந்தவூர் மக்கள் பணிமனையான, முன்னாள் அமைச்சர் மர்ஹூம் எம்.எம்.முஸ்தபாவின் இல்லத்தில் நேற்று மாலை (19) நடைபெற்றது. இந்நிகழ்வில் மக்கள் காங்கிரஸின் பொத்துவில் தொகுதி அமைப்பாளரும், கனிமவள கூட்டுத்தாபனத்தின் தலைவருமான எஸ்.எஸ்.பி…
ஐ.தே.க முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் அமைச்சர் ரிஷாட்டுடன் இணைந்து மக்கள் காங்கிரஸில் போட்டி!
-ஊடகப்பிரிவு- கண்டி மாவட்ட உடுநுவர பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான உடையார், நஸார் மற்றும் ஹனீபா ஆகியோர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டனர். இம்மூவரும் உடுநுவர பிரதேச சபையில் போட்டியிடுவதற்கான நியமணப்பத்திரத்தில் இன்று காலை (19) கைச்சாத்திட்டனர். இதன்போது கண்டி மாவட்ட மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் ஹம்ஜாட், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் இணைப்பாளர் றியாஸ் இஸ்ஸதீன் ஆகியோரும் உடன் இருந்தனர்.
மு.கா ஜவாத் அமைச்சர் ரிஷாட்டுடன் இணைந்தமை உணர்வோடு தொடர்புபட்ட “தலைமை” மாற்றம்!
–ஏ.எச்.எம்.பூமுதீன்– கல்முனையை அஷ்ரப் காலம் தொட்டு கோலோச்சி வந்தவர்களில் ஜவாத்துக்கும் முக்கிய பங்குண்டு. கல்முனையில் இன்றுவரை முஸ்லிம் காங்கிரஸ் எனும் நாமம் ஒலிப்பதற்கும் ஜவாத்தின் வகிபாகம் இல்லை என்று எவருமே கூறவும் மாட்டார்கள். அப்படிப்பட்ட முன்னாள் பிரதி மேயர், மாகாண சபை உறுப்பினர் கே.ஏ.ஜவாத் நேற்று முதல், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டமை உணர்வோடு தொடர்பான “தலைமை” மாறலாகவே நோக்கப்பட வேண்டியுள்ளது. “டயஸ்போராவுக்கு துணை போகும் ஹக்கீம்” என்ற ஜவாத்தின் கூற்று, அவர் கட்சிக்காக மாறவில்லை,…
“டயஸ் போராவின் கீழ் இயங்கும் ஹக்கீமுடன் இணைந்திருக்க முடியாது” ரிஷாட் பதியுதீனுடன் இணைந்தார் ஜவாத்!
-ஏ.எச்.சித்தீக் காரியப்பர்- கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தருமான ஜவாத் மு.காவிலிருந்து வெளியேறி, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டார். “டயஸ் போராவின் கீழ் இயங்கும் முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்துடன் தொடர்ந்தும் இணைந்து என்னால் செயற்பட முடியாது. இதுவே நான் கட்சியிலிருந்து விலகுவதற்கான காரணம் ஆகும்” என அவர் தெரிவித்தார். “கல்முனையில் இப்போதுள்ள சூழ்நிலைக்கும், எதிர்கால சூழ்நிலைக்கும் ஏற்ற ஒருவராக, நான் அமைச்சர் ரிஷாத்…
தொழிலதிபர் ஹனீப் தலைமையிலான சுயேச்சைக்குழு அமைச்சர் ரிஷாட்டுடன் இணைந்தது!
-ஊடகப்பிரிவு- உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பாத்ததும்பர பிரதேச சபைக்கு, சுயேச்சையாக போட்டியிடவிருந்த பிரபல தொழிலதிபர் அல்ஹாஜ் ஹனீப் தலைமயிலான சுயேச்சை குழு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டது. கடந்த வாரம் கண்டி மாவட்டத்தின் பாத்ததும்பர பிரதேச சபையில் சுயேச்சையாக போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியிருந்த நிலையிலேயே இந்தக் குழு, எதிர்வரும் தேர்தலில் பாத்ததும்பர பிரதேச சபையில் மக்கள் காங்கிரஸுடன் இணைந்து மயில் சின்னத்தில் போட்டியிடவுள்ளது. குறித்த சுயேச்சை குழுவின் தலைவரான தொழிலதிபர் ஹனீப், மடவளை பசாரின்…
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு!
-ஊடகப்பிரிவு- ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைக்கமைய பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அத்தியாவசியப் பொருட்களுக்கு விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு சதொச லொறிகள் மூலம் ஆரம்பித்துள்ள நடமாடும் விற்பனை நிலையங்களை, இன்று (18) வட மாகாணத்தின் பல பிரதேசங்களில்; கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆரம்பித்து வைத்தார். வவுனியாவில் இடம்பெற்ற இந்நிகழ்வின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இவ்வாறு குறிப்பிட்டார். தற்போது 65 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் வௌ்ளைப் பச்சை அரசியை…
“மக்கள் காங்கிரஸ் கொழும்பில் தனது பலத்தை நிரூபிக்கும்” மாகாண சபை உறுப்பினர் பாயிஸ்..
-ஊடகப்பிரிவு- கொழும்பு மாவட்டத்தில் கொழும்பு மாநகர சபை, கொலொன்னாவை பிரதேச சபை, கொட்டிகஹவத்த – முல்லேரியா பிரதேச சபை ஆகியவற்றில், மக்கள் காங்கிரஸ் மயில் சின்னத்தில் தனித்துக் களமிறங்குவதற்கான கட்டுப்பணத்தை இன்று மாலை (18) செலுத்தியது. மேல்மாகாண சபை உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளருமான ஏ.ஜே.எம். பாயிஸ் தலைமையில், குறிப்பிட்ட உள்ளூராட்சி சபைகளுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டதாக சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் தெரிவித்தார். கட்டுப்பணம் செலுத்தியதன் பின்னர் மாகாணசபை உறுப்பினர் பாயிஸ்…
குருநாகல் மாவட்டத்தில் மக்கள் காங்கிரஸ் மயில் சின்னத்திலேயே களமிறங்குகின்றது!
-ஊடகப்பிரிவு- குருநாகல் மாவட்டத்தின் குருநாகல் மாநகர சபை, குளியாப்பிட்டிய பிரதேச சபை, ரிதீகம பிரதேச சபை, நாரம்மல பிரதேச சபை, பொல்கஹவெல பிரதேச சபை ஆகிய ஐந்து உள்ளூராட்சி சபைகளில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்துக் களமிறங்குவதற்கான கட்டுப்பணத்தை இன்று மாலை (18) செலுத்தியது. வடமேல் மாகாணசபை முன்னாள் உறுப்பினரும், கட்சியின் முக்கியஸ்தருமான எம்.என்.நசீர் தலைமையில், மாவட்ட செயலகத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது. இதன்போது, குருநாகல் மாநகர சபை தலைமை வேட்பாளர் அசார்தீன் மொய்னுதீன், குளியாப்பிட்டிய பிரதேச…
மன்னார், வவுனியா, முல்லைத்தீவில் மக்கள் காங்கிரஸ் யானை சின்னத்தில் போட்டி!
-ஊடகப்பிரிவு – வன்னி தேர்தல் மாவட்டத்தின் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து யானை சின்னத்தில் போட்டியிடுகின்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் செயலாளர் கபீர் ஹாஷிம் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர், ஏற்பட்ட புரிந்துணர்வின் அடிப்படையில், யானை சின்னத்தில் போட்டியிடுகின்றது. மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகரசபை,…
