Headlines

இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கொழும்பு பிரதேச மக்களுக்கு முன்னாள் மேல்மாகாணசபை உறுப்பினர் பாயிஸினால் உதவிகள்.

இன்று நள்ளிரவு திடீரென கொழும்பு பகுதியில் வீசிய கடுமையான புயல் காற்றின் காரணமாக அப்பகுதியிலுள்ள பல வீடுகளுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளது அந்த இடத்திற்கு விஜயம் மேற்கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கொழும்பு மாவட்ட அமைபாளரும் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் கௌரவ பாயிஸ் அவர்களின் சொந்த நிதியில் பாதிக்கப்பட்ட வீட்டு மக்களுக்கு சீட் வழங்கி வைத்தார்.

Read More

கல்முனை பிரதேச செயலக விவகாரம்; அமைச்சர் றிஷாட்டை ஹரீஸ் எம்.பி  மற்றும் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சந்தித்து பேச்சு!

கல்முனை பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனை பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ், கல்முனை ஜூம்ஆ பள்ளிவாசல்,வர்த்தக சங்கம் மற்றும் சிவில் அமைப்புக்களின்  பிரதிநிதிகள்   சந்தித்து பேசினர். நேற்று இரவு (05) கொழும்பில் நடந்த இந்த சந்திப்பில் கல்முனை ஜூம்ஆ பள்ளி தலைவர் டாக்டர் அஸீஸ் , வர்த்தக சங்க தலைவர் சித்தீக் ஹாஜியார்,ஆகியோர் உட்பட கல்முனை முக்கியஸ்தர்களும்  கலந்து கொண்டனர்.இந்த சந்திப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின்…

Read More

தேர்தல்களை இலக்காகக் கொண்டே தன் மீது தொடர்ந்தேர்ச்சியான குற்றச்சாட்டுக்கள்   – பதவிப் பெறுப்பேற்பு நிகழ்வில் அமைச்சர் ரிஷாத் உரை

தேர்தல்களை இலக்காக கொண்டும், அரசியல் அதிகாரத்தை மீண்டும் பெற்றுக்கொள்ளும் நோக்கிலும்  இனவாதக் கூட்டம் என் மீது தொடர்ச்சியான குற்றாச்சாட்டுக்களை சுமத்தி, தாம் அரசியல் ஆதாயம் பெற முயல்வதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்த பின்னர் இன்று (30) காலை கொள்ளுப்பிட்டியில் உள்ள அமைச்சு அலுவலகத்தில் கடமைகளை பெறுப்பேற்ற பின்னர் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  அவர் அங்கு மேலும் கூறியதாவது, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் என்னை தொடர்புபடுத்தி சில இனவாதிகள் பல்வேறு…

Read More

அமைச்சு பதவிகளை மீண்டும் பொறுப்பேற்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அதிகார பீடம் அங்கீகாரம் – செயலாளர் சுபைதீன் அறிக்கை

அமைச்சு பதவிகளை துறந்த அகில இலங்கை மக்கள் காங்கிர்ஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் தமது பதவிகளை பொறுப்பேற்பதற்கு கட்சியின் அதிகார பீடம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக செயலாளர் எஸ். சுபைதீன் தெரிவித்தார். அதிகாரபீடக் கூட்டம் நேற்று (28) இரவு கட்சியின் தலைவர் ரிஷாத் பதியுதீன் தலைமையில் கொழும்பில் இடம்பெற்ற போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லிம் சமூகத்தின் மீது சுமத்தப்பட்ட வீண் பழிகள் மற்றும் எமது தலைவர்…

Read More

திருகோணமலையில் இருமாதிரிக் கிராமங்கள் மக்களிடம் கையளிப்பு

திருகோணமலையிலுள்ளா குச்சவெளி பிரதேச செயலகம்,திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகம் ஆகிய இரு பிரதேச செயலக பிரிவுகளையும் உள்ளிட்ட  கன்னியா மாங்காயுற்று, தொல்காப்பிய நகர்  பெரிய குளம் பகுதியில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட  வீடமைப்பு கிராமம்  இன்று (25) வியாழக்கிழமை வீடமைப்பு நிர்மாணத் துறை அமைச்சர் சஜீத் பிரேமதாச அவர்களினால்   மக்களிடம் கையளிக்கப்பட்டன. இந்நிகழ்வில்  வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசா பிரதம அதிதியாக கலந்து கொண்டு  பயனாளிகளிடம்   “பாவநாசம் 225வது கிராமம்”  கையளிக்கப்பட்டது.இங்கு…

Read More

கந்தளாவில் நெசவுக் கைத்தெறி நிலையம் அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியால் திறந்து வைப்பு

திருகோணமலை கந்தளாய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இரண்டாம் கொலனி பகுதியில் கைத்தெறி நிலையம் ஒன்று திறந்து வைக்கப்பட்டன. பசுமைப் பெண்கள் அமைப்பு மற்றும் ஒஸ்லோ பெண்கள் சிறு குழு ஆகிய இரு பெண்கள் அமைப்பும் இணைந்து எம்.ஜே எனும் நெசவுக் கைத்தெறி நிலையம் இன்று (21) திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் அவர்களால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. பெண்கள் அமைப்பின் தலைவிகளான திருமதி.ஜெரா அருளானந்தம், திருமதி நைரூஸ் ஆகியோர்களது தலைமையில் இடம் பெற்ற இவ்…

Read More

350 இற்கும் அதிகமான குடும்பங்களுக்கு சுயதொழில் உபகரணங்கள் வழங்கி வைப்பு

அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், கைத்தொழில் வர்த்தக அமைச்சின் முன்னாள் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் அவர்களின் நிதியொதுக்கீட்டின் கீழ் அனுராதபுரம் கஹட்டகஸ்திகிலிய பிரதேச செயலக பிரிவில் வசிக்கும் குறைந்த வருமானங்களை பெறும் 500 இற்கும் அதிகமான குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக சுய தொழில் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. கஹட்டகஸ்திகிலிய பிரதேச சபையின் அபேட்சகர் நளீம் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வில்…

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் நிந்தவூர் பிரதேச கட்சி முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின்  நிந்தவூர் பிரதேச கட்சி முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை (19) இரவு  இடம் பெற்றது. கட்சியின் தேசிய அமைப்பாளரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஃறூப் தலைமையில் நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில்   இடம்பெற்ற நிகழ்வில் பிரதேச அபிவிருத்திகள்  குறைபாடுகள் மற்றும் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது. கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கு எதிர்வரும் வாரங்களில் கட்சியின் தலைவர் றிசாத் பதியுதீன் அவர்களின் வருகை…

Read More

இனவாதிகளின் அச்சுறுத்தலுக்கு அடிபணியமாட்டேன்- முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்.

முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அட்டகாசங்கள், அவர்களுடைய தனித்துவத்துக்கு விடுக்கப்பட்டிருக்கின்ற சவால்களுக்கு எதிரான எந்தவொரு விட்டுக் கொடுப்பும் இல்லாமல் நியாயத்துக்காக போராடிவருகின்றோம். நியாயம் கிடைக்கும்வரை அரசியலமைப்புக்கு உட்பட்டு போராடுவோம். தேவைப்பட்டால் ஜனநாயக ரீதியான போராட்டங்களையும் முன்னெடுப்போம் என்று தெரிவித்த அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன், இந்த நாட்டை அமைதியற்ற  சூழலில் வைத்திருக்க எண்ணும் இனவாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு அடிபணிய வேண்டிய தேவை எமக்கு இல்லை என்றும் தெரிவித்தார்….

Read More

நாட்டின் ஜனாதிபதியை தீர்மானிக்கும் வல்லமை படைத்த மாவட்டம் திருகோணமலை என்பதை கடந்த தேர்தலில் புரிய வைத்துள்ளோம்- முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியை தீர்மானித்த மாவட்டமாக திருகோணமலை இருந்துள்ளது என்பதை கடந்த கால வாக்குப் பதிவுகள் கூறுகின்றன. என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளருமான அப்துல்லா மஃறூப் தெரிவித்தார். தம்பலகாமம் மீரா நகர் பொது விளையாட்டு மைதானத்தில் இன்று(17)  மாலை இடம் பெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாக  கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர்…

Read More

நம்பிக்கையில்லா பிரேரனை மீண்டும் தோற்கடிக்கப்பட்டு கட்சி பேதமற்ற ஒற்றுமையை அரசுக்கு வழங்கியுள்ளோம்- முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப்.

அரசாங்கத்து எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரனையை கட்சி பேதமற்ற முறையில் மீண்டும் தோற்கடித்து சிறுபான்மை கட்சிகளின் பலத்தை காட்டியுள்ளோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஃறூப் தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (14) திருகோணமலை மக்கேய்சர் மைதானத்தில் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இதில் காணி அமைச்சர் கயந்த கருணாதிலக, நாடாளுமன்ற…

Read More

வாக்குகளுக்காக இன வாதத்தை தூண்டி இன நல்லுறவை சீர்குலைக்க வேண்டாம். -முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப்.

வாக்குகளுக்காக இன வாதத்தை தூண்டி இன, நல்லுறவை சீர்குலைக்க வேண்டாம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான  அப்துல்லா மஃறூப் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது இன்று (12) விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது சிலர் உயர்ந்த சபையில் இனவாத பேச்சுக்களை பேசி இனவாதத்தை கக்கும் சக தமிழ் பேசும் உறுப்பினர்கள் காணப்படுகிறார்கள். சஹ்ரானின் பெயரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் இருப்பதாகவும்…

Read More