Headlines

“சிறுபான்மை மக்கள் மனக்கிலேசம் கொள்ளவேண்டியதில்லை” வவுனியாவில் அமைச்சர் றிஷாட்-

சிறுபான்மை மக்களையும் அரவணைத்து செல்கின்ற,நல்ல ஒரு தலைவரை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளில் சிறுபான்மை கட்சிகளின் தலைவர்கள்  அனைவரும்  ஒருமித்து உழைத்துவருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா மாங்குளம் ஹாமிய மகா வித்தியாலயத்தில் ஆரம்பப்பிரிவு கற்றல்வள நிலைய திறப்புவிழாவில் (20) பிரதம விருந்தினராக  அவர் கலந்துகொண்டார் பாடசாலை அதிபர் எஸ்.நிசார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய அவர் கூறியதாவது, தேசிய ரீதியில்  பல்வேறு சவால்களுக்கு நாடு முகம்கொடுக்கும் இந்த நெருக்கடியான அரசியல்…

Read More

இலங்கை வந்துள்ள இந்திய முதலீட்டாளர்களை சந்தித்த அமைச்சர் றிஷாட் பதியுதீன்

இந்திய நாட்டு முதலீட்டாளர்களுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில் வாணிப அலுவல்கள், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சருமான ரிஷாட் பதியுதீனுக்குமிடையிலான சந்திப்பு திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பில் இரு நாட்டு வர்த்தக உறவுகள் மற்றும் முதலீட்டு நடவடிக்கை தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

Read More

கிளிநொச்சி ஜேர்மன் பயிற்சி நிறுவனத்துக்கு 110 மில்லியன் நவீன உபகரணங்கள்.

ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தினால் ரூபா 110 மில்லியன் பெறுமதியான நவீன பயிற்சி உபகரணங்களை இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில் (18) நடைபெற்றது. கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை ஜேர்மன் பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் நிதியமைச்சர் மங்கள சமரவீர, இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஜோன் ரூட் ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தின் உயரதிகாரிகள், நிதியமைச்சின் உயரதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read More

சிறிய நடுத்தர தொழிற்துறையினரின் பொதியிடல் முயற்சிகளுக்கு அரசாங்கம் நேரடி உதவி. – அமைச்சர் ரிஷாட்.

‘உலகளாவிய ஈ-கொமர்ஸ் பொதியிடலில் முன்னணி சந்தையாக ஆசிய-பசிபிக் மாறியுள்ளது. இது இலங்கையின் பொதியிடல் துறைக்கு புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது. இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி அவற்றில் முதலீடு செய்வதற்கு எங்கள் தொழில்துறையை நான் அழைக்கிறேன்’  அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ‘லங்காபக் ‘; (Lankapak) சர்வதேச கண்காட்சி தொடரின் 38 வது ஆண்டு விழாவின் ஆரம்ப நிகழ்வில் கலந்துககொண்டு உரையாற்றுகைளிலேயே அமைச்சர் ரிஷாட் இதனை தெரிவித்தார். கடந்த வாரம் சர்வதேச பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற (14) இந்நிகழ்வில்…

Read More

இலவச கல்வியின் தந்தை கன்னங்கராவின் நோக்கத்தை தற்போதைய அரசு சரிவர நிறைவேற்ற பாடுபடுகின்றது. எருக்கலம்பிட்டி மத்தியகல்லூரி விழாவில் பிரதமர் ரணில் தெரிவிப்பு..

கடந்தகால யுத்தத்தினால் கல்விக்கான நிதி ஒதுக்கீடுகள் குறைந்ததாக தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அதன் பிற்பாடு கல்வி வளர்ச்சிக்கு அதிகமான நிதியினை ஒதுக்கிய அரசாங்கத்தின் பிரதமராக தான் இருப்பது பெரும் மகிழ்ச்சிக்குரியதாகும் என்றும் கூறினார். மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தின் 75 வது ஆண்டு பவள விழா நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரைாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். பாடசாலை அதிபர் எம்.ஷாபி தலைமையில் இ்டம் பெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர்…

Read More

“கிராமத்தின் வளர்ச்சியும் பொருளாதார எழுச்சியும் கல்வியின் முன்னேற்றத்திலேயே தங்கியுள்ளது”. எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய கல்லூரி நிகழ்வில் அமைச்சர் றிஷாட்.

ஒரு கிராமத்தின் வளர்ச்சியும்,பொருளாதார எழுச்சியும், செழுமையும் அந்த கிராமத்தின் கல்வி முன்னேற்றத்திலே தான் தங்கியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய மகாவித்தியாலயத்தின் 75வது வருட பவளவிழாவும் நூர்தீன் மஷூர் பார்வையாளர் அரங்கு அங்குரார்ப்பணமும் இன்று காலை (12) இடம்பெற்றபோது விசேட அதிதியாக அமைச்சர் கலந்துகொண்டார். பாடசாலை அதிபர் முஹமட் ஷாபி தலைமையிலான இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பங்கேற்றார். அமைச்சர்…

Read More

இலங்கை அரச கூட்டுத்தாபனத்தில் “வாகன சக்கரம் மாற்றுதல் மற்றும் சக்கர சீரமைப்பு மையம்” அமைச்சர் ரிஷாட் பதியுதீனால் இன்று திறந்துவைப்பு…

கைத்தொழில் வாணிப அலுவல்கள், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் கீழான இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள வாகன சக்கரம் மாற்றுதல் மற்றும் சக்கர சீரமைப்பு மையம் இன்று (11) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. நிறுவனத்தின் தலைவர் ஹுசைன் பைலா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் புத்திக பத்திரன, நிறுவனத்தின் பணிப்பாளர் ரியாஸ்…

Read More

சிறந்த கல்விச் சமூகத்தை உருவாக்குவதன் மூலமே நாளைய தலைவர்களை எதிர்பார்க்கலாம்

நாட்டில் இருக்கின்ற கல்வித் திட்டங்களில் பல கொள்கைகள் காணப்பட்டாலும் கல்விக்கான அதிமான நிதியை ஒதுக்கீடு செய்து சிறந்த கல்விச் சமூகத்தை உருவாக்குவதன் மூலமே நாளைய தலைவர்களை எதிர்பார்க்கலாம் என துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார். குச்சவெளியில் நேற்று (09) திங்கட் கிழமை அந்நூரியா மகாவித்தியாலயத்தில் இடம் பெற்ற” அண்மையில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” எனும் தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் ஆசிரியர் விடுதிக்கான நிர்மாணிக்கப்பட்ட கட்டிடத்தை திறந்து வைத்து…

Read More

மன்/அடம்பன் மத்திய மஹா வித்தியாலயத்திற்கான 20 மில்லியன் பெறுமதியான இரண்டு மாடிக் கட்டிக் கட்டிடத்திற்க்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு!!!

மன் \ அடம்பன் மத்திய மஹா வித்தியாலயத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுத்தீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட உள்ள இரண்டு மாடிக் கட்டிடத்திற்கான அடிகல் நாட்டு நிகழ்வு இன்று(2019.09.10) பாடசாலையின் அதிபர் தலைமையில் நடைபெற்றது. அமைச்சரின் பிரத்தியோக செயலாளரும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினருமான றிப்கான் பதியுதீன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். மேலும் சிறப்பு விருந்தினர்களாக மடு பிரதேச கல்விப் பணிப்பாளர், மாந்தை பிரதேச சபை தவிசாளர் சந்தியோகு…

Read More

வெளிமாகாணங்களில் நியமனம் பெற்ற கல்வியல் கல்லூரி ஆசிரிய ஆசிரியைகளை சொந்த மாவட்டங்களில் நியமிக்க பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அகிலவிராஜிடம் வேண்டுகோள்.

வெளி மாவட்டங்களுக்குள் வழங்கப்பட்ட கல்வியல் கல்லூரி ஆசிரிய நியமனங்களை தங்களுடைய சொந்த பிரதேசங்களுக்குள் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் கோரிக்கை விடுத்துள்ளார். அண்மையில் வழங்கப்பட்ட கல்வியல் கல்லூரி ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வெளிமாவட்டங்களுக்குள் வழங்கப்பட்டுள்ளது இது தொடர்பில் பிரதியமைச்சரிடத்தில் வெளிமாவட்டங்களில் நியமனக் கடிதங்களை பெற்ற ஆசிரிய  ஆசிரியைகள் தங்களை சொந்த மாவட்டங்களில் பணியாற்றுவதற்கான நடவடிக்கைகளை செய்து தருமாறு கோரியிருந்தனர் .இது தொடர்பில் கல்வி அமைச்சர் அகிலோஇராஜ் காரியவசமிடத்தில் இன்று (10) பிரதியமைச்சரினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விசேட…

Read More

பேசாலை பத்திமா ம.வி யின் அதிபர்விடுதி அமைச்சர் றிஷாட்டினால் திறந்துவைப்பு.

கல்வி அமைச்சின் “அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” தேசிய வேலைத்திட்டத்தின் ஊடாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மன்னார் பேசாலை பத்திமா மகா வித்தியாலயத்துக்கான அதிபர் விடுதி (09) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதினால் திறந்துவைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பாடசாலையின் அதிபர் ஜி.மெரில் குரோஸ் மன்னார் பிரதேசபை தவிசாளர் முஜாஹிர் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான றிப்கான் பதியுதீன்,அலிகான் ஷரீப், மன்னார் பிரதேசபை உறுப்பினர் டிப்னா குரோஸ் வலயக்கல்விப்பணிப்பாளர் பிரட்லி உட்பட கல்வி அதிகாரிகளும் கலந்துகொண்டனர்….

Read More

நெல் உற்பத்தி வீழ்ச்சியடைந்ததால் அரிசி இறக்குமதிகளுக்கு அனுமதி!!!

தரம் பரீட்சிக்கப்பட்டு 109,000 மெ.தொ. தருவிப்பு நாட்டின் நிலவிய மோச மான காலநிலை காரணமாக நெல் உற்பத்தியில் ஏற்பட்ட தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டே அரிசி இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டது. தருவிக்கப்பட்ட அரிசி யாவும் உரிய அனுமதியைப் பெற்றே, நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்பட்டதாக வர்த்தக மற்றும் கைத்தொழில்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். சிறிய மற்றும் நடுத்தர அரிசியாலை உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரே ரணை மீதான விவாதத்தில் பதிலளித்து உரையாற்றும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்….

Read More