Headlines

கிண்ணியா, மூதூர் மு.கா உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மக்கள் காங்கிரஸில் இணைவு!

கிண்ணியா நகரசபையின் பிரதித் தவிசாளர் ஐ.சப்ரீன் (ஐயூப் நளீம்), மூதூர் பிரதேச சபையின் உறுப்பினர் தானீஸ் ஆகியோர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் முன்னிலையில், இன்று (08) கட்சியில் உத்தியோகபூர்வமாக இணைந்துகொண்டனர். கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நகரசபை, பிரதேசபை உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள்  உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Read More

பலநோக்குக் கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் – பிரதம அதிதியாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பங்கேற்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் எம்.ஏ.எம்.சுபைரின் (ரம்சி ஹாஜியார்) முயற்சியினால், கொழும்பு, பீர்சாஹிபு வீதியில் அமைக்கப்படவுள்ள, மூன்று மாடிகளைக் கொண்ட பலநோக்குக் கட்டிடம் ஒன்றுக்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தில், பிரதம அதிதியாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார். இன்று முற்பகல் (06) இடம்பெற்ற இந்த நிகழ்வில், கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனாநாயக்க, முன்னாள் எம்.பி முஜிபுர் ரஹ்மான், கொழும்பு மாநகர பிரதி மேயர் எம்.டி.என்.இக்பால்…

Read More

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், புத்தளம், மதவாக்குளம் பிரதேசத்தில் கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீமின் முயற்சியினால், மக்கள் காங்கிரஸின் மதவாக்குள கட்சிக் குழுவின் வேண்டுகோளுக்கிணங்க,  சுமார் 16 இலட்சம் ரூபா பெறுமதியில் அமைக்கப்பட்ட இந்தக் கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம், நேற்று (04) அலி சப்ரி ரஹீமினால் திறந்து வைக்கப்பட்டது. மதவாக்குள பிரதேசத்தின் மிக நீண்டகால தேவைப்பாடாக…

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் றிஷாட் பதியுதீன் அவர்களின் வேண்டுகோளுனங்க  விளையாட்டு மைதான புனரமைப்புப்பணிகள் ஆரம்பம்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னால் அமைச்சருமான அல் ஹாஜ் ரிஷாட் பதியுதீன் அவர்களின் வேண்டுகோளுக்கினங்க வெள்ளிமலை பொது விளையாட்டு மைதானத்தை செப்பணிடும் பணி நேற்று (06) பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம் ரஸ்மின் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் போது பொது விளையாட்டு மைதானம், உள்ளக வீதி மற்றும் கரப்பந்தாட்ட மைதானம் என்பன செப்பணிடப்பட்டது.

Read More

தமிழ் பேசுவோர் தமிழ் மொழியிலேயே தேசிய கீதத்தை பாடுவோம்,அரசாங்கம் மொழி உரிமையை மறுக்கடிக்கிறது!!!

தமிழ் பேசும் நாம் தமிழ் மொழியில் தான் தேசிய கீதத்தை பாடுவோம் இதனையே தமிழ் பேசும் மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள் இதனை இந் நாட்டு அரசாங்கம் உணரவில்லை அடிப்படை உரிமைகளே இவ்வாறு மறுக்கப்படுகிறது என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார். தம்பலகாமம் அல் ஹிக்மா பாடசாலையில் இன்று (06)இடம் பெற்ற பல்கலைக்கழகம்,கல்வியல் கல்லூரிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவ மாணவிகளை கௌரவித்து மற்றும் பாடசாலைக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு…

Read More

மூதூர் இக்பால் நகர் விளையாட்டு மைதானம் அங்குரார்ப்பண நிகழ்வு

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஃறூப் அவர்களின்  நிதியொதுக்கீட்டின் கீழ்  புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மூதூர் இக்பால் நகர்  மைதானம் விளையாட்டு கழகங்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று (02) ஜாயா வட்டார அமைப்பாளர் லாபிர் தலைமையில் இடம்பெற்றது சுமார் 30 இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட இம் மைதானம் அப்பகுதி விளையாட்டு வீரர்கள் கழகங்கள் இணைந்து விடுத்த கோரிக்கைக்கு அமைய இது நிருமானிக்கப்பட்டது. இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஃறூப் அவர்கள் கலந்து திறந்து வைத்தார்….

Read More

“பரிதவித்த மக்களுக்கு வாழ்க்கை வசதிகளை ஏற்படுத்தவே முல்லைத்தீவில் கால் பதித்தோம்’ மக்கள் பணிமனை திறப்புவிழாவில் ரிஷாட்!!!

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு அனைத்தையும் இழந்து, பரிதவிப்புடன் வாழ்ந்த முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்காகவே முதன்முதலில் நாங்கள் அந்தப் பிரதேசத்தில் கால்பதித்தோம் எனவும் அப்போது, அரசியல் சார்ந்த எந்த நோக்கமும் இருக்கவில்லை எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். முல்லைத்தீவில் இன்று காலை (27) இடம்பெற்ற மக்கள் பணிமனை திறப்பு விழாவில் அவர் உரையாற்றினார். அவர் அங்கு கூறியதாவது, “மோசமாக பாதிக்கப்பட்ட இந்த மாவட்டத்துக்கு நாம் வந்தபோது, வாகனங்களும்…

Read More

மாவடிப்பள்ளி அல் அஷ்ரப் மகா வித்தியாலயத்திற்கு மக்கள் காங்கிரசின் தலைவரின் நிதி ஒதுக்கீட்டில் 5 இலட்சம் ரூபா பெறுமதியான தளபாடங்கள் வழங்கிவைப்பு..!

மாவடிப்பள்ளியில் அமைந்துள்ள ஒரேயொரு பாடசாலை கமு/அல் – அஷ்ரப் மகா வித்தியாலயமாகும்.இங்கு தரம் ஒன்று தொடக்கம் சாதாரண தரம் வரையான வகுப்புக்களுக்கான கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகிறது. இப்பாடசாலையில் கல்வி கற்ற பல மாணவ மாணவிகள் வைத்தியர்களாகவும், பொறியியலாளர்களாகவும், ஆசிரியர்களாகவும், சமூகத்தில் உயர் அரச பதவிகளிலும் வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அது மாத்திரமின்றி இப்பாடசாலை மாணவர்கள் அகில இலங்கை ரீதியிலும், மாகாண மட்ட ரீதியிலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று ஊருக்கும், பாடசாலைக்கும் பெறுமைபெற்றுத்தந்துள்ளனர். இருந்த போதிலும்…

Read More

பம்பைமடு குப்பைமேட்டுப் பிரச்சினைக்கு உடன் தீர்வுகாணுமாறு முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை!!!

வவுனியா, பம்பைமடு குப்பைமேட்டுப் பிரச்சினைக்கு அவசரமாகத் தீர்வுகண்டு, சாளம்பைக்குளம் உட்பட சுற்றுச்சூழவுள்ள பிரதேசங்களில் வாழ்கின்ற மக்களின் சுக வாழ்வுக்கு நடவடிக்கை எடுக்குமாறு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது, “இந்தப் பிரச்சினை, தீர்வுகாணப்படாமல் நீண்டகாலமாக இழுத்தடிக்கப்படுகின்றது. பிரதேச மக்கள் குப்பைமேட்டுப் பிரச்சினைக்குத் தீர்வுகண்டு, மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடந்தகாலங்களிலும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்த போது, அதிகாரிகள் உறுதிமொழிகளை வழங்கி,…

Read More

ஜிப்ரியின் மறைவு வருத்தம் தருகின்றது றிஷாட் பதியுதீன்!!!

சிரேஷ்ட அறிவிப்பாளரும் சிம்மக்குரலோனுமாகிய ஏ.ஆர்.எம்.ஜிப்ரியின் மறைவு, ஊடக உலகில் பாரிய இடைவெளியை ஏற்படுத்தியுள்ளதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் அனுதாபம் தெரிவித்துள்ளார். ஜிப்ரியின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட்பதியுதீன் தெரிவித்துள்ளதாவது; மரணத்தின் விதிக்கு உட்படாத ஆத்மாக்கள் எதுவும் உலகில் பிறப்பதில்லை. இறைவனின் இந்த விதிக்கு இலக்காகி இன்று ஜிப்ரி அவர்கள் இறையடி சேர்ந்துவிட்டார். எமது கட்சியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளராகச் செயற்பட்ட அவர், பன்முக…

Read More

‘சிறுபான்மை சமூகத்தின் தயவின்றி ஆட்சியமைக்க முஸ்தீபு; வாக்குகளை செல்லாக்காசாக்க இடமளிக்க வேண்டாம்’ – அக்கரைப்பற்றில் ரிஷாட்!

சிறுபான்மை சமூகத்தின் ஆதரவின்றி அரசாங்கத்தை உருவாக்கி, அதன்மூலம் சிறுபான்மை மக்களை மலினப்படுத்தும் பேரினவாதிகளின் திட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நமது மக்களின் வாக்குகளை செல்லாக்காசாக்கும் சதி முயற்சிகள் குறித்து விழிப்பாக இருக்குமாறும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தருமான ஹனீபா மதனி தலைமையில், அக்கரைப்பற்றில் நேற்று மாலை (18) இடம்பெற்ற நிகழ்வில் அவர் உரையாற்றினார். இந்த நிகழ்வில் நிந்தவூர்…

Read More

கட்சிப்பற்றாளர்களை இனங்காண்பதற்கான பொன்னான சந்தர்ப்பம். -மன்னார், மாந்தையில் மக்கள் காங்கிரஸ் தலைவர்!

கட்சிப்  பற்றாளர்களையும் உண்மையான தொண்டர்களையும் இனங்காண்கின்ற பொன்னான சந்தர்ப்பமாகவே இந்தக்  காலகட்டத்தை நாம் பார்க்கவேண்டி இருக்கின்றதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மாந்தை மேற்கு பிரதேசபைக்குட்பட்ட கட்சியின் ஆதரவாளர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேற்று (16) மாலை நடந்த இந்த சந்திப்பின்போது மாந்தை மேற்கு பிரதேசபை தவிசாளர் செல்லத்தம்பு,மன்னார் பிரதேசபை தவிசாளர் முஜாஹிர், கட்சியின் முக்கியஸ்தரான  அமீன் உட்பட பல பிரமுகர்கள் உடனிருந்தனர். அதிகாரத்தோடும் பதவியோடும் இருக்கின்றபோது எம்முடன்…

Read More