Headlines

ad34@hFacMC

நமது வாழ்வாதாரத்தை சீர்குலைப்பதற்கும், நேரத்தை களவாடுவதற்கும், நம்முடைய நல்ல போக்குகளை மாற்றி அமைப்பதற்குமான சவால்கள் இடம்பெறுகின்றது – அமீர் அலி

யுவதிகளிடத்தில் மாற்றங்கள் வரவேண்டும் என்றுதான் நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்று பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள ஒன்பது கிராம சேவகர் பிரிவில் தையல் பயிற்சி நெறியினை நிறைவு செய்த யுவதிகளுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கே.பீ.எஸ்.ஹமீட் அவர்களின் தலைமையில் (4) ம் திகதி வியாழக்கிழமை மீராவோடை அமீர் அலி கேட்போர்…

Read More

பாடசாலைகளுக்குள் கட்சிச்சாயம் வேண்டாம் – சீறியெழுந்தார் இஷாக் எம்.பி

“அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” செயற்றிட்டத்தின் கீழ் கஹட்டகஸ்திகிலிய பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட முக்கிரியாவ அ/முக்கிரியாவ முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 40 மில்லியன் ரூபாய் செலவீட்டில் நிர்மாணிக்கப்பட்ட 2 கட்டிடங்கள் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. பாடசாலை அதிபர் கெ.பி.மொஹம்மது அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் வட மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான சஹீது, கஸ்த்தூரி அனுராத நாயக்க அவர்களும் கஹட்டகஸ்திகிலிய பிரதேச சபையின் உப தவிசாளர் நஜீம்…

Read More

கிண்ணியாவில் பல பகுதிகளில் காபட் வீதிக்கான ஆரம்ப நிகழ்வு

நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சினால் நடை முறைப்படுத்தப்பட்டு வரும்”ரண்மாவத்” நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் காபட் இட்டு அபிவிருத்தி செய்யப்படும் வீதி அங்குரார்ப்பண வைபவம் நாளை (08) ஞாயிற்றுக் கிழமை இடம் பெறவுள்ளது திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் அவர்களினால் கிண்ணியாவில் உள்ள பெரியாற்று முனை வீதி, அம்மன் வீதி, பலாஹ் ஜூம்ஆ பள்ளி முன் வீதி ஆகியன காபட் இடப்படுவதற்கான ஆரம்ப வைபவம் இடம் பெறவுள்ளது நாளைய தினம்…

Read More

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராலய அரசியல் ஆலோசர்கள் அப்துல்லா மஃறூப் எம்.பி யை சந்தித்துப் பேச்சு

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் ஆலோசர்களுக்கும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் ஆகியோர்களுக்குமிடையிலான சந்திப்பு இடம் பெற்றது. குறித்த சந்திப்பானது நேற்று (04) வியாழக் கிழமை மாலை நாடாளுமன்ற உறுப்பினரின் கிண்ணியா அலுவலகத்தில் இடம் பெற்றது. இதில் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராலய  அரசியல் ஆலோசர்களான மேரி ஜோஷ்சே, பீற்றர் பன்டி போன்றோர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதுடன் இலங்கை நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும் தங்களது கட்சிசார்ந்த முன்னெடுப்புக்கள் , முஸ்லிம் அமைச்சர்களின் பதவி இராஜினமா…

Read More

புழியடி வீதி விரைவில் அபிவிருத்தி இஸ்மாயில் எம்.பி.

சம்மாந்துறை செந்நெல் கிராமம் – 2 இல் அமைந்துள்ள புழியடி வீதியின் நிலைமையினை பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் அவர்கள் உள்ளிட்ட குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர். குறித்த வீதியின் அவல நிலையை செவியுற்ற பாராளுமன்ற உறுப்பினர் உடனடியாக குறித்த வீதியின் நிலைமையினை நேரில் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து இன்னும் சில காலங்களில் குறித்த வீதியினை அபிவிருத்தி செய்யவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பிரதேசவாசிகளிடம் உறுதியளித்தமையும் குறிப்பிடத்தக்கது

Read More

குறைந்த வருமானம் பெறுவோருக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு

அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கைத்தொழில், வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சின் கீழான தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் ஊடாக குறைந்த வருமானம் பெறும் 400 இற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் அன்மையில் வழங்கி வைக்கப்பட்டது. இப்பொலோகம பிரதேச சபை உறுப்பினர் நளீம் அவர்களின் தலைமையில் கலாவெவயில் நடைபெற்ற இந்நிகழ்வில் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்…

Read More

கல்முனை மாநகர சபை உறுப்பினராக தொழிலதிபர் .நெய்னா முகம்மட் JP பதவியேற்கும் நிகழ்வு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மருதமுனை மத்திய குழுவின் ஏற்பாட்டில் கல்முனை மாநகர சபையின் இரண்டாம் வட்டார வேட்பாளர் ஏ.நெய்னா முகம்மட் புதிய உறுப்பினராகச் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு புதன்கிழமை(03-07-2019)இரவு மருதமுனை மத்திய குழுவின் தலைவர் கலீல் முஸ்தபா தலைமையில் மருதமுனை பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது. இங்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளரும்,முன்னாள் இராஜங்க அமைச்சரும்,நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டதரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டு சத்தியப்பிமான நிகழ்வை நடாத்தி வைத்தார். ஏ.நெய்னா…

Read More

மூதூர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆசாத் நகர் தாருஸ் ஸலாம் அறபிக் கல்லூரிக்கான புதிய கட்டிடத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு!!!

மூதூர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆசாத் நகர் தாருஸ் ஸலாம் அறபிக் கல்லூரிக்கான  புதிய கட்டிடத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இடம் பெற்றது கல்லூரியின் அதிபர் எம்.ஜரீஸ் முப்தி தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் அவர்கள் அடிக்கல்லினை நட்டி அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் அவர்களின்  நிதி ஒதுக்கீட்டின் கீழ் மீள்குடியேற்ற செயலணி திட்டத்தின் ஊடாக சுமார் 25 இலட்சம் ரூபா செலவில் இக்…

Read More

கிழக்கிஸ்தான் தரவேண்டுமென கோர நாங்கள் தயாரில்லை முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி !!!

எங்களுக்கு கிழக்கிஸ்தான் தர வேண்டும் என்று நாங்கள் கோர தயாரில்லை என்பதை சிங்கள அரசியல் தலைவர்களிடத்தில் சொல்லிக் கொள்கின்றேன் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவில் இருந்து சமுர்த்தி முத்திரை பெறுவதற்கு தெரிவானவர்களுக்கான உரித்துப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வு மீராவோடை அமீர் அலி மண்டபத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற போது கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்- நாங்கள் சண்டை பிடிக்க வேண்டும்,…

Read More

மைதான சுற்றுவேலிக்கான அடிக்கல் நடும் அங்குரார்ப்பண நிகழ்வு!!!

தி/மூதூர் மத்திய கல்லூரி பாடசாலையின் மைதான சுற்றுவேலி அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று (02) இடம் பெற்றது. திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கம்பரெலிய வேலைத் திட்டத்தின் ஊடாக இக் கட்டிட நிர்மாண நடவடிக்கைகள் சுமார் பத்து இலட்சம் ரூபா செலவில் மேற்கொள்ளப்படவுள்ளது. இவ் நிகழ்வில் பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள், மாணவர்கள், மூதூர் பிரதேச சபையின் உறுப்பினர் திருமதி  அகீதா நஸார் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Read More

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் 7324 குடும்பங்களுக்கு புதிய சமுர்த்தி உறுதிப் பத்திரங்கள்

மூதூர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ளவர்களுக்கான புதிதாக தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கான சமுர்த்தி நிவாரண உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன. சமூக நலன் புரி மற்றும் ஆரம்ப கைத்தொழில் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வரும் இக் குறித்த நிகழ்வு நேற்று (02) மூதூர் பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உறுதிப் பத்திரங்களை வழங்கி வைத்தார் மொத்தமாக சுமார் 7324 புதிய சமுர்த்தி பயனாளிகளுக்கான…

Read More

மனச்சாட்சியின் விளிம்பில் விழும் நீதியின் நிழல்கள்!!!

மனச்சாட்சிகளின் கண்களைத் திறந்த பாராளுமன்றத் தெரிவுக்குழு விசாரணைகள், முடிந்த பின்னும் சிலரின் மனநிலைகள், பழைய பிடிவாதத்திலிருந்து தளர மறுக்கின்றன. இல்லாத குற்றங்களுக்காக எவரையும் தண்டிக்க முடியாது. நாட்டின் எதிர்காலம் சிங்களவர்களுக்கு மட்டுமே என்ற நிலைப் பாட்டில் உள்ளோரே ,அப்பாவிகளைக் காப்பாற்றும் இந்த தர்மத்தைத் தகர்த்தெறியப் புறப்பட்டுள்ளனர், உளவுத்துறை, பாதுகாப்புத் துறை,சட்டத்துறை உள்ளிட்ட நாட்டின் சகல துறைகளிலும் இவர்களின் சந்தேகப் பார்வைகள் நுழைந்துள்ளதால், அரச இயந்திரத்தை முன்னெடுத்துச் செல்வதில் பெரும் சிக்கலைத் தோற்றுவித்துள்ளது. எத்தனை தடவைகள் எடுத்துச் சொன்னாலும்…

Read More