Headlines

ad34@hFacMC

மைத்திரிக்கும், ரணிலுக்கும் பலம் கிடைத்தது

பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்வ கட்சி அரசாங்கத்துக்கு தற்பொழுது கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்பொழுது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பாராளுமன்றத்திலுள்ள அரசாங்க சார்பு உறுப்பினர்கள் 113 ஆக அதிகரித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் 42 உறுப்பினர்களும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 13 உறுப்பினர்களும், ஜனநாயக தேசியக் கட்சியின் 6 உறுப்பினர்களும், தேர்தல் காலத்தில் எதிரணியில் இணைந்து கொண்ட 25 உறுப்பினர்களும், ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் 21 உறுப்பினர்களும் புதிய ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கினர். இதன்…

Read More

சுதந்திர கட்சியின் தலைவர் பதவியை, மைத்திரிற்கு விட்டுக்கொடுக்க மஹிந்த இணக்கம்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் பதவியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு விட்டுக் கொடுக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் இன்றைய தினம் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் இந்த சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Read More

றிஷாத் பதியுதீன் நாளை அமைச்சுக் கடமைகளை பொறுப்பேற்கிறார்

ஊடகப் பிரிவு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,புதிய அரசாங்கத்தில் கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அப்துல் றிசாத் பதியுதீன் நாளை வெள்ளிக்கிழமை(2015.01;.16)  தமது அமைச்சின் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார். கொழும்பு 3 காலி வீதி கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அமைச்சின் கேட்போர் மண்டபத்தில் மாலை 3.00 மணிக்கு இந்த வைபவம் இடம் பெறவுள்ளதாக அமைச்சரின் இணைப்பு செயலாளர் தெரிவித்தார். முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அரசாங்கத்தில் இதே பதவியினை வகித்து வந்த அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு…

Read More

ஜனாதிபதி மைத்திரியுடன் இணைந்து செயலாற்ற தயார் – பிரிட்டன்

இலங்கையின் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து பணியாற்றத் தாம் தயார் என பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. நல்லாட்சி மற்றும் சர்வதேசத்துடன் இணைந்து செயலாற்றுதல் குறித்த புதிய அரசின் அர்ப்பணிப்புக்களையும் அது வரவேற்றுள்ளது. இதேவேளை, வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலகத்திற்கும், அமைச்சரவை அலுவலகத்திற்குமான பிரபுக்கள் சபையின் பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார். மேலும், புதிய அரசு எதிர்காலத்தில் இலங்கை குறித்த ஐ.நா விசாரணைகள் குறித்து தாராள மனப்பான்மையை வெளிப்படுத்தும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Read More

முஸ்லிம்கள் அதிகமாக வாழும் சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் புர்கா அணிய தடை!

முஸ்லிம்கள் அதிகமாக செறிந்து வாழும் சீனாவின் மேற்கு சின்ஜியாங் மாகாணத்தில் முஸ்லிம் பெண்கள் பொதுமக்கள் மத்தியில் பர்க்கா அணியத் தடை விதிக்கும் சட்டத்தை அம்மாகாண சட்ட மன்ற உறுப்பினர்கள் அமுல் படுத்தியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மிக நீண்ட காலமாக இம்மாகணத்தில் பொது இடங்களில் முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி பர்க்கா அணிவதற்கு எதிராக பிரச்சாரங்கள் முன்னெடுக்கப் பட்டிருந்தன. பர்கா அணிவதற்கான இப்புதிய தடைச் சட்டம் கடந்த மாதம் தான் உரும்கியில் உள்ளூர் சட்ட மன்ற…

Read More

மஹிந்தவின் தேர்தல் விளம்பரங்கள்! ரூ. 11 கோடி கட்டணத்தை பெற ஆவன செய்யுமாறு கோரிக்கை!

தேர்தல் காலத்தில் காட்சிப்படுத்திய விளம்பரச் செலவு 11 கோடி ரூபாவாகும். இந் நிதியை அவர்களிடமிருந்து சுயாதீன தொலைக்காட்சிக்கு பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. புதிய ஊடக அமைச்சர் இதனை ஒரு கமிசன் ஒன்றை நியமித்து இந் நிதியைப் பெற்றுத்தரல்வேண்டும். அத்துடன் கால்டன் ஸ்போட் தொலைக்காட்சி சுயாதீன தொலைக்காட்சியில் ஆங்கில தொலைக்காட்சியான “பிரைம் ரீ.வி” என ஆரம்பிக்கப்பட்டது. அத் தொலைக்காட்சி சனலையே முன்னாள் ஜனாதிபதியின் மகன் ஜோசித்த ராஜபக்ச எடுத்து கால்டன் ஸ்போட் சனல் என நடத்துகின்றார். நாட்டின் நாலா…

Read More

தீவிரவாதிகளை அழிக்க வேண்டும் பாகிஸ்தானுக்கு அமெ. அறிவுறை

பாகிஸ்தானில் செயல்படும் அனைத்து தீவிரவாத அமைப்பு களையும் அழிக்க வேண்டும் என்று அந்த நாட்டு அரசுக்கு அமெரிக்கா அறிவுரை வழங்கியுள்ளது. பாகிஸ்தான் சென்றுள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி நேற்று இஸ்லாமாபாதில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பெஷாவர் பள்ளியில் நடத்தப் பட்ட தீவிரவாத தாக்குதல் உலகையே உலுக்கியுள்ளது. இந்த நேரத்தில் பாகிஸ்தான் அரசு விழிப்புடன் செயல்பட வேண்டும். தலிபான், ஹக்கானி நெட் வொர்க், லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள் பாகிஸ்தானுக்கும் அதன்…

Read More

வடமாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் பதவி அ.இ.ம.கா விடம்..???

வடமாகாணசபையின் எதிர்க்கட்சத் தலைவர் பதவியினையும் ஈபிடிபி இழக்கிறதா? தற்போது ஈ.பி.டி.பியைச் சேர்ந்த தவராஜாவே அப்பதவியை வகிக்கிறார். ஏற்கனவே இந்த பதவி வகித்த கமல் கொலைக் குற்றச்சாட்டில் சிறை சென்றதால் பதவியிழந்ததை தொடர்ந்து, தவராஜா இந்தப்பதவிக்கு தேர்வானார். இப்பொழுது, ஈ.பி.டி.பி கட்சியிடமிருந்தே எதிர்க்கட்சி தலைமை பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது எதிர்க்கட்சி தரப்பில் ஈ.பி.டி.பியில் இருவரும், சுதந்திரக்கட்சி தரப்பில் போட்டியிட்ட சிங்கள உறுப்பினர்கள் இருவரும், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மூவரும் உள்ளனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்…

Read More

தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்

அஸ்ரப் ஏ சமத் உலக வாழ் இந்துக்கள் உழவர் திருநாளாம் தைப்பொங்கள் திருநாளை இன்று (15) மிகவும் சிறப்பாக கொண்டாடுகின்றனர் . இந்த வகையில் குறிப்பாக கொழும்பு வாழ் இந்து மக்கள் தமது வீடுகளையும் ஆலயங்களையும் மாவிலை தோரணங்களால் அலங்கரித்து அதிகாலையிலேயே எழுந்து நீராடி புத்தாடை அணிந்து பட்டாசு கொழுத்தி வீடுகளிலும், ஆலயங்களிலும் சக்கரைப் பொங்கள் பொங்கி சூரிய பகவானுக்கு படைத்து குடும்பத்தாருடன் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளதைக் காணக்கூடியதாக இருந்தது. தை பிறந்தால் வழிபிறக்கும் என்பதற்கு ஒப்பாக தை…

Read More

ITN தொலைக்காட்சியில் மகிந்தவின் ஊழல் வெளிச்சத்துக்கு

அஸ்ரப் ஏ சமத் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் விளம்பரங்கள் ; ஒன்றரை மாதமாக சுயாதீன தொலைக்காட்சியில் கட்டணம் செலுத்தாமலே காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக சுயாதீன தொலைக்காட்சியின் ஜ.தே.கட்சி ஊழியர்கள் தொழிற் சங்கம் தெரிவிக்கின்றது. தேர்தல் காலத்தில் காட்சிப்படுத்திய விளம்பரச் செலவு 11 கோடி ருபாவாகும். இந் நிதியை அவர்களிடமிருந்து சுயாதீன தொலைக்காட்சிக்கு பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. புதிய ஊடக அமைச்சர் இதனை ஒரு கமிசன் ஒன்றை நியமித்து இந் நிதியைப் பெற்றுத்தரல்வேண்டும். அத்துடன் கால்டன் ஸ்போட் தொலைக்காட்சி…

Read More

ஐக்கியத்தை வெளிப்படுத்துவதே தைப்பொங்கல் பண்டிகை: ஜனாதிபதி மைத்திரிபால வாழ்த்து!

மனிதர்களுக்கும் இயற்கைக்குமிடையில் பலமான பிணைப்பை ஏற்படுத்த தெய்வ வழிபாடுகளில் மக்கள் சமூகங்களின் ஐக்கியத்தை வெளிப்படுத்துவதே தைப்பொங்கல் பண்டிகை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இலங்கை வாழ் இந்துக்கள் உலகில் வாழும் தமது தமிழ் சமயத்தவர்களோடு இணைந்து இன்று தமது சமயப் பஞ்சாங்கத்தில் மிக விசேட மான பண்டிகையான தைப்பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். தை மாதத்தின் முதல் தினத்தைக் குறித்து நிற்கும் இவ்விசேட…

Read More

இடைக்கால வரவு – செலவுத் திட்டம் ஜனவரி 29 இல் சமர்ப்பிக்கப்படவுள்ளது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசின் இடைக்கால வரவு – செலவுத் திட்டம் ஜனவரி 29 ம் திகித நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். தனது அமைச்சின் கடமைகளை இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதன்பின்னர் கருத்துத் தெரிவிக்கும்போது, புதிய அரசாங்கத்தின் பிரதான நோக்கம் நாட்டு மக்களின் நலனில் அக்கறையுடன் செயற்படுவதுடன் அவர்களது அபிலாஷைகளை நிறைவேற்றுவதே. வெளிநாட்டு முதலீடுகள், வரி வருமானங்கள் மூலம் முறையான நிர்வாகத்தைச் செயற்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதே அரசின் முக்கிய குறிக்கோள். திறந்த…

Read More