Headlines

ad34@hFacMC

பலநோக்குக் கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் – பிரதம அதிதியாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பங்கேற்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் எம்.ஏ.எம்.சுபைரின் (ரம்சி ஹாஜியார்) முயற்சியினால், கொழும்பு, பீர்சாஹிபு வீதியில் அமைக்கப்படவுள்ள, மூன்று மாடிகளைக் கொண்ட பலநோக்குக் கட்டிடம் ஒன்றுக்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தில், பிரதம அதிதியாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார். இன்று முற்பகல் (06) இடம்பெற்ற இந்த நிகழ்வில், கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனாநாயக்க, முன்னாள் எம்.பி முஜிபுர் ரஹ்மான், கொழும்பு மாநகர பிரதி மேயர் எம்.டி.என்.இக்பால்…

Read More

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், புத்தளம், மதவாக்குளம் பிரதேசத்தில் கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீமின் முயற்சியினால், மக்கள் காங்கிரஸின் மதவாக்குள கட்சிக் குழுவின் வேண்டுகோளுக்கிணங்க,  சுமார் 16 இலட்சம் ரூபா பெறுமதியில் அமைக்கப்பட்ட இந்தக் கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம், நேற்று (04) அலி சப்ரி ரஹீமினால் திறந்து வைக்கப்பட்டது. மதவாக்குள பிரதேசத்தின் மிக நீண்டகால தேவைப்பாடாக…

Read More

தர்கா நகர் பெண்கள் தேசிய பாடசாலைக்கு மின்குமிழ்கள் கையளிக்கும் நிகழ்வு

தர்கா நகர் பெண்கள் தேசிய பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினரது வெண்டுகோளிற்கிணங்க, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பேருவளை பிரதேச சபை உறுப்பினர்   ஹஸீப் மரிக்காரினால் பாடசாலைக்கு தேவையான LED மின்குமிழ்கள் பாடசாலை அதிபர் ஜனாப் ஏ.ஏ.எம். பாய்ஸ் இடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பாடசாலை உதவி, பிரதி அதிபர்கள், முன்னால் அதிபர், ஆசிரியர்கள், மற்றும் தர்கா நகர் அல்ஹம்ரா மஹா வித்தியாலய முன்னால் அதிபர் ஜனாப் நயீம் மற்றும் அபிவிருத்தி சங்க உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

Read More

“கொள்கைப் பிடிப்பிலேயே மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டேன்” – மு.காவின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மாஹிர் தெரிவிப்பு!

கொள்கை ரீதியாக அரசியலை செய்ய வேண்டுமென்ற ஒரே காரணத்துக்காகவும் தூயநோக்கிலுமே, ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் தான் இணைந்துகொண்டதாகவும் பதவியை சொகுசுசையும் விரும்பியிருந்தால், கட்சியின் தலைவர் அமைச்சராக இருந்தபோதே, இணைந்திருக்க முடியும் எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தரும் அக்கட்சியின், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான மாஹிர் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்ட பின்னர், கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, “நாங்கள் பல கட்சிகளில் ஒன்றாக அரசியலில்…

Read More

நாவிதன்வெளி பிரதேசத்தை சேர்ந்த 150 பயனாளிகளுக்கு புதிய குடி நீர் இணைப்பு வழங்கும் நிகழ்வு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் முன்னாள் அமைச்சர் கௌரவ ரிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் நாவிதன்வெளி பிரதேசத்தை சேர்ந்த 150 பயனாளிகளுக்கு புதிய குடி நீர் இணைப்பு வழங்கும் நிகழ்வு நாவிதன்வெளி மத்திய குழு தலைவர் மஹ்ரூப் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளரும், கல்முனை மாநகர சபை முன்னாள் முதல்வருமான கலாநிதி. சிராஸ் மீராசாஹிப் கலந்து கொண்டு அம் மக்களுக்கான…

Read More

சீசன் அரசியல்வாதிகளுக்கு வாக்களிக்க குருநாகல் மாவட்ட மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல – முன்னாள் மாகாணசபை உறுப்பினர் நஸீர்

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தாம் களமிறங்குவது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் நஸீர் (MA) தெரிவித்தார். குருநாகல் மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மத்திய குழு கூட்டம் நேற்று (02) நுககஹகெதர நாரம்மலயில் நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில் முஸ்லிம்களின் ஒற்றுமையினாலேயே குருநாகல் மாவட்டத்தில் இரண்டு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொள்ள முடியும் கடந்த காலங்களைப் போன்று பிரிந்து செயற்படுவதனால் நமது சமூகத்தின் உரிமைகள் இழக்கப்பட்டு தொடர்ந்தும்…

Read More

தாருல் உலூம் வித்தியாலய மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு

ஓட்டமாவடி தாருல் உலூம் வித்தியாலயத்தில் 2018, 2019 ஆம் ஆண்டுகளில் தரம் – 5 புலமைப் பரிசில் பரீட்சை எழுதி சித்தியடைந்த மற்றும் சிறப்புப் புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு சனிக்கிழமை (29) பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் எம்.எல்.எம். பைசல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டதோடு ஏனைய அதிதிகளாக  மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி, மட்டக்களப்பு மத்தி…

Read More

அஹமட் ஹிராஸ் வித்தியாலயத்தின் 07 வது வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி

ஜெயர்தியாய அஹமட் ஹிராஸ் வித்தியாலயத்தின் 07 வது வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி 26.02.2020 வியாழக்கிழமை அதிபர் செயினுல் ஆப்தீன் தலைமையில் பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டு சிறப்பித்தார். பிரதி கல்விப் பணிப்பாளர் தாஜ்ஜுநிஸா, உதவி கல்விப் பணிப்பாளர்களான கலீல் றகுமான் இஸ்மாயில், அதிபர்கள்  மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர் களும் கலந்து சிறப்பித்தனர்.

Read More

ஒட்டமாவடி ஹிஜ்ரா வித்தியாலயத்தின் 02 வது வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி

ஒட்டமாவடி ஹிஜ்ரா வித்தியாலயத்தின் 02 வது வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி 27.02.2020 வெள்ளிக்கிழமை அதிபர் சாபிர் தலைமையில் பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்வுக்கு பிரதி கல்விப் பணிப்பாளர் தாஜ்ஜுநிஸா, ஓய்வு பெற்ற உதவி கல்விப் பணிப்பாளர் காதர், பிரதேச சபை தவிசாளர் அஸ்மி, ஓய்வு பெற்ற அதிபர் முஹம்மட், உதவிக் கலவிப்பணிப்பாளர் ஜாபீர் கரீம், முன்னாள் அதிபர் திருமதி ஹமீட்,…

Read More

‘அபிவிருத்தி செயற்பாடுகளை மக்கள் மனங்களிலிருந்து அழித்துவிடமுடியாது’

நாம் கடந்த காலங்களில் மேற்கொண்ட அபிவிருத்தித் திட்டங்களையும் நல்வாழ்வுப் பணிகளையும் மறைத்துவிட முடியுமென சிலர் சூழ்ச்சி செய்தாலும் மக்கள் மனங்களிலிருந்து, அவற்றை ஒருபோதும் அழித்துவிட முடியாதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அபிவிருத்திச் செயற்பாடுகளின் அங்குரார்ப்பண வைபவம் மற்றும் திறப்புவிழாக்களை தடுப்பதன் மூலம், மக்களிடமிருந்து எம்மை அந்நியப்படுத்த முடியுமென இன்று, நேற்று முளைத்த அரசியல்வாதிகள் கனவு காண்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். எருக்கலம்பிட்டி மகளிர் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல…

Read More

“வில்பத்து தொடர்பிலான உண்மையை வெளிப்படுத்த எந்த அரசியல் தலைமையும் முன்வரவில்லை”

வில்பத்து” விவகாரம் தொடர்பில், பேரினவாதிகள் தன்மீது தொடர்ச்சியான பொய்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றபோதும், எந்த ஓர் அரசியல் தலைமையும் இந்தக் குற்றச்சாட்டில் உண்மை இல்லையெனத் தெரிந்திருந்தும், அதனை வெளிப்படையாகச் சொல்வதற்கு தயங்குகின்றனர் என்று பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார், முசலியில் நேற்று முன்தினம் (29) இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று, உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது, “இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக மக்கள் வாழாத பிரதேசம் காடுகளால் சூழப்பட்டு, கண்ணிவெடிகள் விதைக்கப்பட்டிருந்த வேளைதான்,…

Read More

’ஐக்கிய மக்கள் சக்தி” கூட்டணி உதயம்

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று (02) கைச்சாத்திடப்பட்டன.

Read More