Headlines

ad34@hFacMC

மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

புத்தளம் நகரசபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தருமான அலி சப்ரி ரஹீமினால், பாடசாலை மாணவர்கள் பத்தாயிரம் பேருக்கு கற்றல் உபகரணங்கள்  வழங்கி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேலதிக தேவை உடையோர் 3000 பேரை இனங்கண்டு, புத்தளம் மாவட்டத்தின் புளிச்சாக்குளம் மற்றும் கனமூலை பிரதேச மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.  புளிச்சாக்குளம், உமர் பாரூக் பாடசாலை அதிபரின் வேண்டுகோளின் பெயரில், பிரதேச சபை உறுப்பினர் நிஜாமுதீனின் சிபாரிசில் 200 மாணவர்களுக்கும், கனமுலை பிரதேசத்தைச் சேர்ந்த…

Read More

பொத்துவில் ஐ.தே.க முக்கியஸ்தர்கள் மக்கள் காங்கிரஸில் இணைவு!

பொத்துவில் பிரதேச ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் சிலர், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்துகொண்டனர். பொத்துவில் ஐ.தே.க அமைப்பாளர் யு.எல்.எம். நியாஸ் தலைமையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – 2018 இல் போட்டியிட்ட ராபி, முகைதீன் பாவா, தாஜூதீன், கோமாரி ஐ.தே.க அமைப்பாளரும், வேட்பாளருமான ராஜீ, அரபா சமூக சேவை அமைப்பின் தலைவர் தஸ்லீம் மற்றும் அஸ்மி, தொர ஆகியோர், கட்சித் தலைவர் ரிஷாட் பதியுதீன் முன்னிலையில்…

Read More

தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் பிரத்தியேக வகுப்பு நிலைய ஒழுங்கமைப்பு தொடர்பான கலந்துரையாடல்!

நிந்தவூர் பிரதேசத்தில் காணப்படும் தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் பிரத்தியேக வகுப்பு நிலையங்களை ஒழுங்கமைப்புக்குள் கொண்டுவரும் நோக்குடனான சந்திப்பொன்று அண்மையில், நிந்தவூர் பிரதேச சபையில், தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் தலைமையில் நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது, தனியார் மற்றும் பிரத்தியேக கல்வி நிறுவனங்களில் காணப்பட வேண்டிய சுற்றுச்சூழல், பெளதீக கட்டமைப்பு, நேர அட்டவணை மற்றும் மாணவ மாணவிகளின் ஒழுக்க செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக, விரிவாக கலந்தாலோசனை செய்யப்பட்டன. இதன்போது, ஏற்கனவே பிரதேச சபையால் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு…

Read More

பாராளுமன்ற பொதுத் தேர்தல் – 2020 – வேட்பாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்…!

பாராளுமன்றப் பொதுத் தேர்தல் – 2020 வேட்பாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்…! அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) எதிர்வரும் 2020 – ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில், எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி, “ஐக்கிய மக்கள் சக்தி” கூட்டமைப்புடன் கூட்டுச்சேர்ந்து, நாடுதழுவிய ரீதியில் வேட்பாளர்களை நியமிக்கவுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட எதிர்பார்க்கும் ஆர்வமுள்ள வேட்பாளர்கள், தாங்கள் போட்டியிட விரும்பும் மாவட்டத்தைக் குறிப்பிட்டு, தங்களது பூரண…

Read More

முஸ்லிம் காங்கிரஸும் மக்கள் காங்கிரஸும் இணைந்து, புத்தளத்தில் பொதுச்சின்னத்தில் களமிறங்க முடிவு!

புத்தளம் மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து, பொதுச்சின்னத்தில் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று இரவு (11) மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான குழுவுக்கும், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழுவுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர், இந்த முடிவு எடுக்கப்பட்டது. புத்தளத்தில் நீண்டகாலமாக பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாத குறை தொடர்பில், அங்குள்ள பள்ளிவாசல் சம்மேளனம், பொதுநல அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இந்த…

Read More

‘மாவட்டப் பிரதிநிதித்துவத்தை வென்றெடுப்பதற்காக, இணைந்து பயணிக்குமாறு மக்கள் வலியுறுத்துகின்றனர்’ – ஆப்தீன் எஹியா!

புத்தளம் தொகுதியில் நாம் இழந்து நிற்கும் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ளும் தூய எண்ணத்திலேயே, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீனின் பணிப்புரைக்கமைய, நாம் புத்தளம் மாவட்டத்தின் அனைத்து கட்சிகளினதும் உயர்பீட உறுப்பினர்களை, அவர்களின் இல்லங்களுக்கும் அலுவலகங்களுக்கும் சென்று, சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினோம் எனவும் எதிர்வரும் பொதுத்தேர்தலில் கூட்டணியாக களமிறங்குவதையே மக்களும் எதிர்பார்க்கின்றனர் என்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆப்தீன் எஹியா தெரிவித்தார். நேற்று முன்தினம் (08) இடம்பெற்ற, கரம்பை வட்டார இளைஞர் அமைப்பினருடனான…

Read More

‘மட்டக்களப்பு கெம்பஸ் விவகாரம்; சிறுபான்மை சமூகத்தை பழிவாங்கும் நோக்கில் மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கையாக இருக்கலாம்’ – தவிசாளர் அமீர் அலி!

மட்டக்களப்பு கெம்பசை “கொரோனா வைரஸ்” தடுப்பு முகாமாக மாற்றியிருப்பதானது, சிறுபான்மைச் சமூகத்தை பழிவாங்கும் நோக்கில் மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கையாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக, மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு கெம்பசை கொரோனா வைரஸ் தடுப்பு முகாமாக மாற்றியிருப்பது குறித்து , ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், “மட்டக்களப்பு கெம்பசை, கொரோனா வைரஸ் தடுப்பு முகாமாக மாற்றியிருப்பதானது…

Read More

ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்ற சரண்யாவிற்கு முன்னாள் அமைச்சர் ரிஷாட் வாழ்த்து!

1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட சசிகுமார் சரண்யாவிற்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் இன்று (08) தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். தேசிய இளைஞர் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 31வது தேசிய விளையாட்டு நிகழ்வில், 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், பெண்கள் பிரிவில் முதலிடத்தைப் பெற்ற முல்லைத்தீவு, துணுக்காயைச் சேர்ந்த சசிகுமார் சரண்யாவுக்கு, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதுடன், பரிசுகளையும் வழங்கி வைத்தார்.

Read More

அபிவிருத்தி செய்யப்பட்ட கதிரானவத்தை பிரதேச வீதி மக்கள் பாவனைக்கு கையளிப்பு!

கொழும்பு – 15, மட்டக்குளி, கதிரானவத்தை பிரதேச மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்  ரபீக்கின் வேண்டுகோளுக்கிணங்க, புதிதாக அபிவிருத்தி செய்யப்பட்ட கதிரானவத்தை பிரதேச வீதியை மக்கள் பாவனைக்காகக் கையளிக்கும் நிகழ்வு, முன்னாள் எம்.பி முஜிபுர் ரஹ்மானின் பங்கேற்பில் இடம்பெற்றது. இன்று காலை (08) இடம்பெற்ற இந்த நிகழ்வில், மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளரும் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினருமான பாயிஸ் மற்றும் கட்சியின் உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்.  

Read More

நாகவில்லு பிரதேச முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல்!

புத்தளம் பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் ரிஜாஜின் ஏற்பாட்டில், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆப்தீன் எஹியாவின் தலைமையில், நாகவில்லு பிரதேச மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல் நேற்று (07) இடம்பெற்றது. எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் ஆராயப்பட்ட இந்தக் கலந்துரையாடலில், புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ரிபாஸ், கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்களான ஆஷிக், பைசர் மரிக்கார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Read More

கிண்ணியா, மூதூர் மு.கா உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மக்கள் காங்கிரஸில் இணைவு!

கிண்ணியா நகரசபையின் பிரதித் தவிசாளர் ஐ.சப்ரீன் (ஐயூப் நளீம்), மூதூர் பிரதேச சபையின் உறுப்பினர் தானீஸ் ஆகியோர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் முன்னிலையில், இன்று (08) கட்சியில் உத்தியோகபூர்வமாக இணைந்துகொண்டனர். கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நகரசபை, பிரதேசபை உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள்  உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Read More

‘சமூகத்தின் உரிமைகளையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்தக் கூடிய தலைமைகளை நாடாளுமன்றம் அனுப்புங்கள்’ – முன்னாள் எம்.பி அப்துல்லா மஃறூப்!

சமூகத்தின் உரிமைகளையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்தக் கூடியவர்களை இம்முறை பாராளுமன்றத்துக்கு அனுப்புங்கள் என திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார். தம்பலகாமப் பகுதியில், இன்று (06) இடம்பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடலின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்துரைக்கையில், “ஒன்பதாவது பாராளுமன்றத் தேர்தலில் இம்முறை ஜனாதிபதி சொல்வதைப் போன்று 150 ஆசனங்களையோ, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சொல்வதைப் போன்று 113 ஆசனங்களையோ எந்தப் பெரும்பான்மை…

Read More